பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, March 16, 2014

திரும்பவும் சிக்கல்


ஒருவழியாக தொகுதிகளின் எண்ணிக்கையை பிஜேபி கூட்டணி நேற்று உறுதி செய்தனர். அதன்படி தே.மு.தி.க.–14, பா.ஜனதா–8, பா.ம.க.–8, ம.தி.மு.க.–7, ஐ.ஜே.கே.–1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி–1 என்று உறுதி செய்யப்பட்டது. இன்று கூட்டணி தலைவர் என்ற முறையில் விஜயகாந்தை பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், நரேந்திரமோடி, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விஜயகாந்தை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

பேச்சு வார்த்தை போது இரவு பகல் பாராமல் காபி, பிஸ்கெட் வேர்கடலை என்று சாப்பிட்டுவந்த தலைவர்களுக்கு இந்த கூட்டணி பேச்சு வார்த்தை முடிவுக்கு வந்தது பெரிய ஆறுதலாக இருந்தது. சரி இனி கூட்டணி கட்சி தொண்டர்கள் கட்சி தொண்டர்கள் ஒருங்கிணைந்து உடனடியாக தேர்தல் பணியை தொடங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று இந்த தொகுதி உடன்பாட்டை ஏற்க பா.ம.க. மறுத்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி உடன்பாட்டில் நேரடியாக தலையிடாமல் இருந்து வரும் அன்புமணி மேற்கண்ட முடிவுகளை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த கடுமையான குழப்பத்தில் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா? என்று ஆலோசித்து வருகிறார்கள் என்று செய்தி வருகிறது.

நேற்று பா.ம.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளான ஆரணி, அரக்கோணம் தொகுதிகளில் பிரசாரம் செய்த விஜயகாந்த் பா.ம.க. வேட்பாளர்கள் பற்றி குறிப்பிடாததும் பா.ம.க.வினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் அன்புமணி போட்டியிட உள்ளார். இங்கு வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

அதற்கு முன்பாக தர்மபுரியில் மாலை 5 மணிக்கு டாக்டர் ராமதாஸ் கூட்டணி நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில் அன்புமணி, ஜெ.குரு, ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், கேட்ட தொகுதி கிடைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை ராமதாஸ் எடுப்பார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். மீண்டும் ஏற்பட்டுள்ள சிக்கல் பா.ஜனதா தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

பிகு: தே.மு.தி.க., பா.ம.க., தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி என்ற செய்தியும் வருகிறது.


1 Comment:

Mahadevan BR said...

ஒரே தொகுதியில பாமகவும் தேமுதிகவும் நிக்கணும்னு ஆசப்பட்டா நிக்கட்டுமே. ரெண்டு பேருக்கும் கிடைக்கறதை கூட்டி அதை பிஜேபிக்குன்னு அறிவிச்சிட்டாப் போச்சு... இதைச் சொன்னா நம்மள ஒரு மாதிரி பாக்கறானுங்க...