பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 17, 2014

பிஜேபியின் தமிழ்நாட்டுக்கூட்டணி சொதப்பல் - எ,அ.பாலா

ஆரம்பத்திலிருந்தே இந்தக் கூட்டணி குழப்பத்திற்கு முக்கியக்காரணம், பிஜேபி பிராந்தியக் கட்சிகளான பா.ம.க, தே.மு.தி.க போன்ற கட்சிகளை மிகப்பெரிய செல்வாகுள்ள கட்சிகள் போல பாவித்து அவற்றை ஏற்றி விட்டது தான்! பிஜேபிக்கு தமிழ்நாட்டில் பெரிய அளவு செல்வாகு இல்லாதபோதிலும், ஒரு தேசியக்கட்சி என்ற முறையில் (ஜூனியர் பார்ட்னர் போல அல்லாமல்) கூட்டணி பேச்சு வார்த்தையை ஆரம்பத்திலிருந்தே அணுகியிருக்க வேண்டும். திமுக அல்லது அதிமுக என்ற 2 பெரிய கட்சிகளைத் தவிர வேறு யாருடன் கூட்டு சேர்ந்தாலும், பிஜேபிக்கு 2, மற்றவைக்கு 4 (அதிகபட்சம்) என்ற அளவில் தான் வெற்றி வாய்ப்பு (தேர்தலுக்குப் பின் பாமக ஆதரவு தருவது கூட ஸ்திரமான ஒன்று அல்ல!) என்ற நிலையில் (Nothing to Lose), மோடியால் சற்றே வாய்ப்பு கூடிய நிலையில், பேச்சு வார்த்தையில் உறுதியில்லாமல் ஈடுபட்டது மோசமான அணுகுமுறையே!

பிஜேபி தொண்டர்கள் சரியான கடுப்பில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஏதோ “மோடி அலை” என்று சொல்லப்படுவதின் மூலம் கிடைத்த அனுகூலமும் போய்விட்டது போலத் தெரிகிறது. ஒப்புக்குச் சப்பாணி கட்சிகளிடம் ஒப்புக்குச் சப்பாணி ஆட்டம் ஆட வேண்டிய அவசியமே பிஜேபிக்கு இல்லை! ஒரு தேசியக்கட்சிக்கு தெளிவு தேவை, தமிழக பிஜேபி தலைவர்கள் எப்படியாவது கூட்டணி ஏற்பட்டு தாங்கள் தமதமது தொகுதிகளில் வென்று, தில்லிக்குச் செல்வதில் குறியாக இருந்தனர் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. பிஜேபி தனக்கு வேண்டிய சீட்களில் (5-6) உறுதியாக இருந்திருக்க வேண்டும். இவற்றில் திருச்சி, சேலம் முக்கியமானவை.

பா.ம.கவும் தே.மு.தி.கவும் ஆரம்பத்திலிருந்தே பூனையும் எலியும் என்ற நிலையில், இத்தனை இழுத்தடிக்காமல், மதிமுக கூட்டணி போல தே.மு.தி.கவுடன் கூட்டணியை பேசி முடித்திருக்க வேண்டும். பா.ம.க கூட்டணியில் இல்லாவிட்டால் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை! பேச்சு வார்த்தை நடத்தியவர்களுக்கு அனுபவம் குறைவு என்று ஒரு சீனியர் பிஜேபி தலைவர் (?) கூறுகிறார்.

கடைசியில் நிலைமையைப் பாருங்கள்! பா,ம,க சேலம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை தொகுதிகளுக்கு (தேமுதிகவுக்கு கூட்டணியில் தரப்பட்டவை) தன்னிச்சையாக வேட்பாளர்களை இன்று அறிவித்து விட்டது. இந்தக் குழப்பம் போதாதென்று, கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக மிரட்டல் விடுத்துள்ளது! அடுத்து, இந்த (மறைந்து கொண்டிருக்கின்ற) வானவில் கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்ட தமிழருவி மணியன், தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். அவருக்கு என்ன ஊடலோ?!? பாமகவுக்கு தர்மபுரி (அன்புமணி ராமதாஸ்) ஒதுக்கப்பட்டது தெரிந்தும், விஜய்காந்த், நேற்றைய பிரச்சாரக் கூட்டத்தில், பிஜேபி தர்மபுரி தொகுதியை யாருக்கும் இன்னும் ஒதுக்கவில்லை என்கிறார்!

என்ன கொடுமை இது மோடிஜி!

---எ.அ.பாலா
மோடி வண்டி ஓட்டுகிறார் என்றால் இன்னும் எவ்வளவு பேர் ஏறிக்கொள்வார்களோ. ஓட்டுவதற்கு முன் ஸ்டாண்ட் எடுக்க வேண்டும்.. எடுப்பார்களா ?

2 Comments:

Prabu said...

தொன்டர்கள் சரக்கு குடிப்பவர்களாகத்தான் கேள்விப்பட்டுள்ளேன், யாரோ தீ குடித்தாராமே؟ உன்மையா؟

Anonymous said...

வர வர தமிழ்நாட்டில் அதி புத்திசாலிகள் யாரு என்றால், பத்திரிக்கையில் எழுதுபவன்தான்! பெருமாலே வந்தாலும் , இப்படியா கிரீடம் , காலத்திற்க்கு எத்த மாதிரி ஜீந்ஸ்ல் வரவேண்டாமா என்று ஒரு 1000 பக்கம் எழுதி தள்ளுவான்கள். காலத்தின் கோலம்.