பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 15, 2014

துண்டு செய்யும் மாயம்

தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த தேமுதிகவின் செயல் அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜ பொறுப்பாளர் முரளிதரராவ் கூறினார். யாருக்கு எவ்வளவு சீட் என்று முடிவு செய்துவிட்டார்கள் ஆனால் எந்த தொகுதி என்பதில் தான் பிரச்சனை. இன்று மாலைக்குள் தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் அடுத்த கட்ட முடிவு குறித்து அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நரேந்திர மோடி அலை இருக்கிறதா என்று தெரியாது ஆனால் தேமுதிக இல்லாமல் அந்த கூட்டணி வலிமையான கூட்டணியாக இருக்காது. பிஜேபி பேசாமல் பாமக போன்ற ஒரு ஜாதி வெறி பிடித்த கட்சியை கழற்றிவிட வேண்டும்.

நேற்று பிரச்சாரத்தை ஆரம்பித்த கேப்டன், பிஜேபி பற்றியும் மோடி பற்றியும் ஒரு வார்த்தை பேசவில்லை. அதனால் பிஜேபியுடன் கூட்டணி இன்னும் முடிவாகவில்லை என்று தெரிகிறது. நேற்றி தன் பேச்சை ஆரம்பித்த கேப்டன் “என்னுடைய பேச்சு முன்ன பின்ன இருக்கும்...” என்றார்.

போக போக இன்னும் காமெடியாக இருக்க போகிறது.


ஞாநி நேற்று புதிய தலைமுறை ”நேர்படப்பேசு (மோடிக்கு ஆதரவாக ஊடகங்கள் பிரசாரம் : கெஜ்ரிவால் புகார் - உள்நோக்கம் - உண்மையானது) ” நிகழ்ச்சியில் நிறைய ஜோபி வைத்த கருப்பு சட்டைக்காரர், ஒரு பத்திரிகையாளருடன் கலந்துக்கொண்டார் ஞாநி. ஆம் ஆத்மி என்ற ஒரு அரசியல் துண்டை போட்ட பிறகு ஞாநி கூட அரசியல்வாதி போல பேச ஆரம்பித்துவிட்டது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு மேல் துண்டுக்கு ஒருக்கும் சக்தியை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. இனி ஞாநி பேச்சு கூட விஜயகாந்த் பேச்சு போல ’ முன்ன பின்ன இருக்கும்’ போல

1 Comment:

ஜெ. said...

ஒரு கட்சியில் சேர்ந்தால் நடு நிலைமை அடிபட்டுத் தான் போகும், வேறு வழியில்லை. கெஜ்ரிவாலை விமரிசிக்க முடியாது என்பதைத் தவிர ஞானிக்கு வேறு பிரச்சபனை இல்லை. - ஜெ.