பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 20, 2014

துன்பியல் சம்பவம்

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். உடனே டிவிட்டர், ஃபேஸ்புக் என்று எல்லாவற்றிலும் அதை பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள். குற்றம் புரிந்தவர் தமிழர், அவருக்கு விடுதலை என்றால் உடனே தமிழ் பாசம் என்று பொங்குவது ஃபேஸ்புக் மக்களுக்கு சரியாக இருக்கலாம் ஆனால், அரசு அப்படி செய்வது எப்படி சரியாக இருக்கும்.

தேவை இல்லாத தாமதம் காரணமாக உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது சரி என்றாலும், ஒரு தீவிரவாதி கூட்டத்துக்கு, அதுவும் ‘அமைதிப் பூங்கா’ என்று பேர் எடுத்த தமிழகத்தில் முன்னாள் பிரதமர், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என்று காவு வாங்கிய கூட்டத்தை விடுதலை செய்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

நாளை ஒருவர் தண்டனைக்கு உள்ளானால், மத்திய அரசு. ஜனாதிபதி, வக்கீல்கள் இழுத்தடித்தால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மாநில அரசு நினைத்தால் அவருக்கு விடுதலை கிடைக்கும் என்ற மோசமான முன் உதாரணமாக இது அமையக் கூடும். அதோடு இல்லாமல், இந்தியாவில் தீவிரவாதிகள் குண்டு வைத்து மாட்டிக்கொண்டால் விடுதலை கிடைக்க வாய்ப்பு இருக்கு என்று அகிவிடும். நாட்டின் பாதுகாப்பிற்கே இது ஒரு சவாலாகிவிடும்.
உடனடியாக உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இந்த கூத்தை நிறுத்த வேண்டும்.


ஜெயலலிதாவின் இந்த மூவ் அரசியலில் பலருக்கு ‘செக் மேட்’ வைக்க உதவும், ஆனால் உயர் நீதி மன்றம் முன் இருக்கும் மனுநீதி சோழனுடைய சிலை ஒரு வரலாற்று முரணாகிவிடும்.

34 Comments:

dr_senthil said...

Who is Manu meet hi cholan? Sathyaraj's next movie name?

Anonymous said...

As you said , most of right thinking persons, feel that this could be an intelligent ploy to prevent a DMK - congress alliance for Lok Sabha poll.
A situation is deliberately created where it would be practically impossible for DMK to align with Congress.

politicians go to any extent, as also revealed in the shirtless campaign in UP assembly yesterday.

Statesmen rarely come.

Chandrasekaran Swaminathan said...

There's another angle to this sad saga. What about all the innocent people that were killed along with Rajiv ? Collateral damage ?

Anonymous said...

// What about all the innocent people that were killed along with Rajiv ?//

What about the collateral damages in Lanka?

If Eelam people, their freedom movement, IPKF soldiers snd even Rajeev G can be collaterals for brahminic babudom, Subbu swamy, Sonia & Co, then this is miniscule.

Moreever, how come not even a senior congress party leader were around Rajiv when this happened?

poornam said...

//நாளை ஒருவர் தண்டனைக்கு உள்ளானால், மத்திய அரசு. ஜனாதிபதி, வக்கீல்கள் இழுத்தடித்தால் அவருக்கு ஆயுள் தண்டனையும், மாநில அரசு நினைத்தால் அவருக்கு விடுதலை கிடைக்கும் என்ற மோசமான முன் உதாரணமாக இது அமையக் கூடும்.//
கவலை வேண்டாம். இதுவே வேறொரு மோசமான முன்னுதாரணத்தின் பின் வந்ததீர்ப்புதான். வீரப்பன் கூட்டாளிகள் தூக்கு ரத்து செய்யப்பட்டது இதற்கு முன்னுதாரணம் அமைக்கத்தானே?
இனி என்ன பயம்? வாங்க, வாங்க, எல்லாரும் வரிசைல நின்னா விடுதலை வாங்கிட்டுப் போகலாம்.
குற்றவாளி என்றும் கைதி என்றும் யாருமில்லை பாரதத்தில்
கொலைகாரனோடு பேட்டரி வாங்கித்தந்தவர் யாவருக்கும் விடுதலை! விடுதலை! விடுதலை!
தண்டனை பெற்றவர் என்று யாரும் இந்தியாவில் இல்லையே!

Vinoth Kumar said...

உங்கள் பதிவு உங்களுக்கே முரணாக தெரியவில்லையா..

இல்லை தெரிந்து கொண்டு தெரியாத மாதிரி நடிக்கின்றீர்களா..

http://kannimaralibrary.co.in/?p=1257

இந்த விடுதலை கண்டிப்பக கண்டிக்கபட வெண்டியதே

http://kannimaralibrary.co.in/?p=1223

BalajiS said...

This is the BEST Manjal comment in IdlyVadai History!

We can remove manu neethi cholan from text books and put amma in that place.

sendhil said...

Congress is to be blamed for this situation, what are they doing for the past 9 years. They weren't expecting such a drastic verdict from SC and Jayalalitha used it blow her rivals.

So, don't others for your own fault.

Anonymous said...

/// முன்னாள் பிரதமர், போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் என்று காவு வாங்கிய கூட்டத்தை ///

தற்கொலைக் குண்டுதாரிகள் தனு, சிவராசன், சுபா 3 பேரும் இறந்துவிட்டார்கள்; அவர்களை ஏவிய பிரபாகரனும், பொட்டுவும் கொல்லப்பட்டுவிட்டார்கள். இப்போது சிறையில் இருப்பவர்களுக்கு, படுகொலைத் திட்டம் இருப்பதே தெரியாது என்பதே உண்மை.

**** வக்கீல்கள் இழுத்தடித்தால் *****

கருணை மனு அனுப்ப ப்பட்ட பிறகு அதன்மேல் முடிவெடுப்பதில் வக்கீல்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.

***** உடனடியாக உச்ச நீதிமன்றம் இதில் தலையிட்டு இந்த கூத்தை நிறுத்த வேண்டும். ******

உச்சநீதிமன்றம்தான் தண்டனையைக் குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதை உறுதிப்படுத்தி அதற்கு சிபாரிசும் செய்திருக்கிறது என்பது தெரியாத உளறல்.

சரவணன்

Venky said...

What nonsense are you talking? Being a Damilan, you are talking against the Damils.

And we might even get this statement from Karuna soon "Manu needi cholan was not a Damilan for your information, may be he was an Aaryan!!!"

Anonymous said...

இதில் இருந்து என்ன தெரிகிறது, பெண்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்

Anonymous said...

ONE OF THE MOST TRAGIC AND INHUMAN DECISIONS. IT IS A NATOINAL SHAME.
THE SOULS OF RAJEEV GANDHI,THE POLICEMEN
WHO DIED ALONG WITH HIM AND IPKF SOLDIERS WHO WERE KILLED BY LTTE WILL NOT FORGIVE THIS.
THE WHY DONT NALINI AND MURUGAN GO TO EELAM AND LIVE IF THEY ARE SO PATRIOTIC.
THEY CAN ATLEAST LIVE IN TAMILNADU, THEIR SAVIOURS.
NO. THEY WILL WANT THE LUXURY OF LONDON SAYING THEY WANT TO BE WITH THEIR DAUGHTER.
THEIR DAUGHTER IS 22 YEARS OLD. SHE CAN ALWAYS COME HERE OR GOTO EELAM HER MOTHERLAND.
AFTER ALL SHE IS A PRODUCT OF THE EELAM MOVEMENT.

Anonymous said...

Hats off to Amman....by putting all the seven people in the jail till death, tamilnadu is not going to become Ramraj.......be kind.....and. Human......

Anonymous said...

Hats off to Amman....by putting all the seven people in the jail till death, tamilnadu is not going to become Ramraj.......be kind.....and. Human......

Anonymous said...

mm. onnum solrathukku illai. poor afzal guru.

Anonymous said...

In 2012, the Supreme Court has categorically said that a capital punishment of death when commuted by President is only reduced to a life imprisonment and that life imprisonment is for life and not for 15 years or so, when the local govt.gets an authority to decide on the basis of good conduct etc.
In other countries where there is no capital punishment, life sentence is for life whenever such is decided.
As K has said, the Tamil Nadu Govt, if it were serious, could have recommended release and sent the resolution to Home Ministry. Instead, to declare that they will be released giving a 3 day notice is all jimmicks. It is usurping the Powers of the Parliament.
K is right in saying that Tamil Nadu Govt. has not handled the case properly.

ammu said...

Idly Vaadai is becoming bigger sombu of BJP than Dr.Subramaniya Swami. So whatever BJP opposes, Idli Vaadai also oppose it.

When the complete probe of Rajiv Gandhi's assassination case is itself under suspicion, why should these so-called accused who had limited knowledge on the plot should suffer at Jail?.

The accused are going to be released by a people elected government after 23 years of Jail life.These 23 years of Jail life are sufficient to realise their mistake and the damage done to the society.

Congress and BJP are doing politics in this case and the accused are far better than the escaping Congress men who were involved in 1984 Sikhs killings.

Anonymous said...

O.K. IDLY VADAI IS HAVING A DIFFERENT VERSION.
TODAY THERE IS ONE ARTICLE IN "SAVUKKU", WHICH ANALYSES THE ISSUES MORE CLEARLY THAN IDLY VADAI. IF YOU HAVE POINTS YOU CAN PUT UP YOUR ARGUEMENT.
THE PEOPLE IN JAIL ARE NOT TERRORISTS. STILL WE DO NOT KNOW, WHETHER THEY KNOW FULLY ABOUT THE PLOT. IN MY OPINION, EXCEPT DANU, SIVARASAN AND SUBHA, NO OTHERS ARE ACTIVE MEMBERS IN THE PLOT. THE PEOPLE SHOULD BE RELEASED AS THEY SERVED 23 YEARS OF IMPRISONMENT. STILL THERE MAY BE SO MANY SECRETS IN THAT INCIDENT, WHICH WE DONT KNOW.
CONGRESS MAY BE AFRAID, TRUTH WILL COME OUT IF THESE PEOPLE REVEAL SOMETHING.

Anonymous said...

Idlyvadai,

Well, Since the India Law & Court permits, what is the wrong in releasing them with power of state? That too, they are not released without any punishment right? Being jail in 23 years with death penalty state is not easy path. With power of politics, both state and center played with them so many times. Give capital punishment immediately and show our power but dont play with them.

I'm not supporting Congress MP Rajiv killing & others who lost their valuable life. BTW, Why you are not speaking about the judgement & IPC sections used?

Finally, I strongly condemn the word 'Terrorist'. LTTE Organization is the freedom fighter group. You can argue the way it was delivered.If you are not aware of Tamil history, please read.

R. J. said...

While there can be no two opinions that terrorists - who plan and execute - are to be punished to the maximum, my opinion is that the so called 'accomplices' should be punished only if there is a clear proof that they knew of the terror plot and fully supported it. We hear of a person who just bought a 9V battery and he is punished to die. Was it not possible for the person who made the bomb and who carried it could have bought the battery available in any petty shop? The plotters made use of locals for their own safe movements and might have used some gullible persons. - R. J.

Anonymous said...

ஜெ தன்னுடய அவசரத்தால் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளார் என்பது இன்னும் சில மாதங்களில் தெரியும். புலிகளை எதிர்த்த ஒரே தமிழ் தலைவராக இருந்தவர், இன்று பல்டி அடிப்பது பெரிய அவமானம். முன்பு தான் தந்தையை தூக்கிலீடப்போகும் நேரத்தில் கூட வர மறுத்த ஹரித்திரா இன்று பக்கம் பக்கமாக கடிதம் எழுதும் கூத்து அதை விட கேவலம். வெளியே வந்து இந்த நால்வரும் அடுத்த விமானம் ஏறி யரோப சென்று அங்கிருந்து தான் வேலையை ஆரம்பிப்பார்கள். இவர்களால் தமிழர்களாகிய நமக்கு என்ன பயன்? வெளி உலகத்தில் தமிழன் என்றாலே இலங்கை தமிழன் என்றும், அனைவரும் தீவரவாதத்துக்கு ஆதருவு தெரிவிப்பவர் என்றும் தோற்றத்தை உருவாக்கிய கொடுமயை என்ன்னவென்று சொல்வது. வீரப்பன் கூட்டாளிகள் ஆன் ரெகார்ட் இரநூறு யானைகளை கொன்றவர்கள், இந்த நால்வரும் இந்தியாவின் இறையான்மயை கொன்றவர்கள். சந்தேகத்தின் அடிப்படயில் எந்த ஒரு தூக்கு தண்டனையும் கொடுக்க இயலாது - ஆதலால் இவர்கள் நால்வரும் குற்றவாளிகளே. அவர்களுக்கு வக்காலத்து வாங்குவதும், பெற்ற தாயை சவக்குழியில் தள்ளுவதும் ஒன்றே. ராஜீவ் புத்திசாலி இல்லாவிடிலும், அமைதி வர பாடுபட்டார் என்பது ஏன் மறுக்கப்படுகிறது? இப்க்ஃப் அங்கே போய் சொதப்பினால் இவர் என்ன செய்ய முடியும்? உண்மயாக பார்த்தால் இலங்கை தமிழர்களுக்காக உயிர் துறந்த உன்மயான அரசியல்வாதி ராஜிவை தவிர வேறு யார் இருக்க முடியும்? வெட்டி ஜம்பம் பேசிய அனைத்து கட்சிகளும் அங்கே போய் மான் பிரியாணி சாப்பிட்டு வந்ததோடு சரி. ராஜீவ் கொலை சம்பத்திற்கு தீர்ப்பு கொடுத்த நீதிபதியை விமர்சிக்கும் பலர், ஈந்த நீதிபதி சதாசிவம் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை - தீர்ப்பு நமக்கு சாதகமா வாதததினால்? பதவி எற்பதற்கு முன்பே நீதிபதி நியமனத்தில் இட ஒதுக்கீடு கோரியவர், எப்படி நீதி வழுவாமல் இருக்க முடியும். இவர் இன்னொரு பாலக்ரிஷ்ணனா என்பது போக போக தெரியும். பேஸ் புக்கில் அலறும் பலர், டெல்லி மாணவிக்கு தீங்கிழத்தவர்களுக்கு தூக்கு கோரியது நினைவில் இருக்கட்டும். - Sriram

jaisankar jaganathan said...

//? உண்மயாக பார்த்தால் இலங்கை தமிழர்களுக்காக உயிர் துறந்த உன்மயான அரசியல்வாதி ராஜிவை தவிர வேறு யார் இருக்க முடியும்//

ஈழ தமிழர்களுக்காக இல்லை ஸ்ரீராம். ஈழ மக்களுக்கு பண்ணின துரோகத்தால் உயிர் துறந்த முட்டாள் ராஜீவ் காந்தி.(முதல்ல இந்த பரம்பரைக்கு காந்தி பேர் எப்படி வந்துச்சு. பாக்குறதுக்கு மர்லின் ம்ன்றோ பரம்பரை மாதிரி இருக்குது

Anonymous said...

ஈழ தமிழர்களுக்காக இல்லை ஸ்ரீராம். ஈழ மக்களுக்கு பண்ணின துரோகத்தால் உயிர் துறந்த முட்டாள் ராஜீவ் காந்தி IT WAS RAJEEV WHO REALLY FOUGHT FOR TAMILS.
PLEASE GO THROUGH INDDO-LANKAN ACCORD..HAD IT BEEN IMPLEMENTED CORRECTLY PRABAKARAN WILL BE ALIVE TODAY. ALL TAMIL GROUPS INCLUDING LTTE INITIALLY WELCOMED THE AGREEMENT.
IN FACT LTTE WENT AGAINST IPKF AND MANY TAMILS DID NOT LIKE IT. ONLY THEY WERE AFRAID OF TELLING THIS.
MORE TAMIL LEADER'S WERE KILLED BY LTTE THAN SINHALA ARMY.
AMIRTHALINGAM WAS KILLED IN HIS HOUSE WHILE GIVIG TEA TO LTTE MEN.
IS IT NOT 'DROHAM'. MANY EXAMPLES LIKE THIS CAN BE GIVEN.
PRABAKARAN JOINED HANDS WITH PREMADASA IN HIS FIGHT AGAINST IPKF.
PRABAKARAN WENT TO THE EXTENT OF TELLING THAT SINHALA'S AND TAMILS ARE BROTHERS AND IPKFF/INDIA HAS NO BUSINESS TO STEP IN.
THIS ON RECORD. ANYONE CAN VERIFY.
IS IT NOT 'DROHAM'

THE GOOD THINGS DID BY IPKF IS DELIBERATELY CONCEALED BY ALL.
TO CALL A PRIME MINISER OF A COUNTRY AS "MUTTAL" IS NOT IN GOOD TASTE.
I NEITHER BELONG TO GOVT. OF INDIA NOR ANTI EELAM.
I AM JUST A TAMIL WHO WAS IN LANKA DURING THE THICK OF WAR.
IT WAS LTTE'S WRONG MOVES WHICH DEFEATED OUR CAUSE.
I WANT IDLY VADAI READER'S TOKNOW THE TRUTH.
EVEN NOW IF ALL EXTREME TALKS ARE STOPPED AND GOVT. OF INDIA SERIOUSLY TRIES TAMILS WILL GET A BETTER DEAL.
FOR THIS ALL TAMILS CAN FIGHT.
RAJEEV GANDI'S FATHER'S NAME IS 'FEROZ GANDHI'.
MANY MISTAKE IT FOR A DESCENDENT OF MAHATMA GANDHI.
THEY KNOW IT AND AS SHREWD POLITICIANS THEY TAKE ADVANTAGE OF IT . IT IS OUR FAULT AND NOT THEIRS.
MOREOVER GANDHI IS A CASTE NAME IN GUJARAT. IF YOU GO THERE YOU CAN SEE MANY GANDHIS..

Anonymous said...

The government - Rajiv - might have had good intentions when he sent the IPKF to Srilanka, but the actual force in the field gained notoriety for the harm done to the Tamils at large - not just to LTTE cadre. There have been numerous reports of rapes by IPKF. In fact some of the army personnel were even tried / punished. They were to maintain peace and not to engage in war with LTTE by joining Srilankan government. For one thing, every fighter has his own reasons to fight and will justify his acts - whether it is LTTE or moists or Veerappan. So the governments shall openly declare war against them and eliminate them and not say something as 'Peace' and do something else by eliminating them including innocent or helpless bystanders.

Anonymous said...

இந்த கோழை பிரபாகரன் தமிழர் அனைவரையும் கொன்று குவிதான்- அந்த கூட்டத்துக்கு ஆதரவு தரும் அனைவரும் தீவிரவாதியே. முருகன் திருப்பதி சென்ற பொழுது ஸையநைட் சாப்பிட முடிவு செய்தார் என்று அவரே சொல்லி உள்ளார். சைனைது யார் வைத்து இருப்பார்? ராஜீவை குறை சொல்வது ரொம்பவும் கேவலம். இங்கே இன்னொருவர் குறிப்பிட்டது போல, அமைதி உடன்படிக்கை முடிவாகும் பொழுது, சர்வாதீகாரம் வேண்டும் என்று ஓடிய தீவிரவாதியால் என்ன நன்மை விளையும்? தன்னுடய பாதுகாப்பு பற்றி யோசிக்காமல் மக்கள் தலைவராக இருந்தது தான் ராஜீவ் செய்த பெரிய தவறு. அன்று அவர் இறக்க போகிறார் என்று அவரை தவிர அனைத்து தலைவர்களுக்கும் தெரியும் - பிரதமர் வேட்பாளர் வரும் பொழுது ஒரு மாநில தலைவர், கூட்டணி த்யாலேயிவர் கூட இல்லை. எவ்வளவு சுத்தினாலும், இந்த சம்பவம் தமிழர்கள் அனைவருக்கும் ஒரு நீங்கா வடு. தமிழ்நாட்டுக்கு வந்த ஈழ தமிழர்களுக்கு நாம் என்ன செய்தோம்? சண்டை முடிந்தவுடன் அவரவர் ஊர் திரும்பி விட்டனர் அல்லது வெளி நாடுகளுக்கு சென்று விட்டனர். எதுக்கெடுத்தாலும் ராஜீவை குறை சொன்னால்? - sriram

Alex said...

//MOREOVER GANDHI IS A CASTE NAME IN GUJARAT. IF YOU GO THERE YOU CAN SEE MANY GANDHIS..// ராஜீவ் காந்தியின் தந்தையின் உண்மையான பெயர் 'Feroz Ghandhe' என்றும் 'காந்தி'க்கும் 'காந்தே' க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று படித்தாக ஞாபகம்....

poornam said...

நன்றி anonymous (February 23, 2014 7:15 PM)நான் சொல்ல நினைத்தவற்றை நீங்களே சொல்லிவிட்டீர்கள். இன்றைக்கு இணையத்தில் தப்பும் தவறுமாகத் தமிங்கிலத்தில் தட்டச்சுகிற வீரர்கள் பலருக்கு ஐபிகேஎஃப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது. நாம் ஏதாவது சொன்னால் இணையத்திலேயே ஏதாவது சுட்டிகளைக் கொடுத்துவிட்டு உலக வரலாற்றையே கரைத்துக் குடித்தமாதிரி பில்ட்அப் செய்துகொள்வார்கள். உண்மை என்னவெனில் ஈழத்துக்காக உயிர் துறந்த உண்மையான தமிழர் ராஜீவ்தான்.
ராஜீவ்தான் மனிதவெடிகுண்டாகி தனுவைக் கொன்றார் என்று எந்த பிரஹஸ்பதியும் உளறவில்லையே, அத்துடன் நாம் திருப்திப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
நீங்கள் சொல்வதுபோல தமிழ்நாட்டு உளறுவாய்கள் சும்மா இருந்தால் இனிமேலாவது ஈழத் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும். ஈழத்தமிழர்கள் வேறு, புலிகள் வேறு என்பதைத் தட்டச்சு வீரர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

Anonymous said...

வட சென்னை: வெங்கடேஷ் பாபு,
மத்திய சென்னை- விஜயகுமார்,
தென்சென்னை- ஜெயவர்த்தன்,
விழுப்புரம்- ராஜேந்திரன்,
கள்ளக்குறிச்சி- காமராஜ்,
காஞ்சிபுரம்- மரகதம் குமாரவேல்,
ஸ்ரீபெரும்புதூர்-ராமச்சந்திரன்,
பெரம்பலூர்- மருதையாராஜ் என்ற மருதராஜன்,
திருவள்ளூர் - வேணுகோபால்,
கிருஷ்ணகிரி-அசோகன்,
அரக்கோணம் - அரி, வேணுகோபால்,
ஆரணி- செஞ்சிசேவல் எழுமலை,
நாமக்கல்- சுந்தரம்,
தர்மபுரி- மோகன்,
ஈரோடு- செல்வகுமார்,
கோவை- நாகராஜன்,
பொள்ளாச்சி- மகேந்திரன்,
திருவண்ணாமலை- வனரோஜா,
கரூர்- தம்பித்துரை,
சேலம்- பன்னீர்செல்வம்,
திண்டுக்கல்- உதயகுமார்,
நீலகிரி- கோபால்,
திருப்பூர்- சத்தியபாபாமா,
திருச்சி- பா.குமார்,
கடலூர்- அருண்மொழித்தேவன்,
சிதம்பரம்-சந்திரகாசி,
மயிலாடுதுறை- பாரதிமோகன்,
வேலூர்- செங்குட்டுவன்,
நாகை- கோபால்,
தஞ்சாவூர்- பரசுராமன்,
சிவகங்கை- செந்தில்நாதன்,
மதுரை- கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்),
தேனி- பார்த்திபன்-
விருதுநகர்-ராதாகிருஷ்ணன்,
ராமநாதபுரம்- அன்வர்ராஜா,
தூத்துக்குடி- ஜெயசீலி தியாகராஜ்,
தென்காசி- வசந்தி முருகேசன்,
திருநெல்வேலி- பிரபாகர்,
கன்னியாகுமரி- ஜான்தங்கம்,
புதுச்சேரி -ஓமலிங்கம்.

Anonymous said...

வட சென்னை: வெங்கடேஷ் பாபு,
மத்திய சென்னை- விஜயகுமார்,
தென்சென்னை- ஜெயவர்த்தன்,
விழுப்புரம்- ராஜேந்திரன்,
கள்ளக்குறிச்சி- காமராஜ்,
காஞ்சிபுரம்- மரகதம் குமாரவேல்,
ஸ்ரீபெரும்புதூர்-ராமச்சந்திரன்,
பெரம்பலூர்- மருதையாராஜ் என்ற மருதராஜன்,
திருவள்ளூர் - வேணுகோபால்,
கிருஷ்ணகிரி-அசோகன்,
அரக்கோணம் - அரி, வேணுகோபால்,
ஆரணி- செஞ்சிசேவல் எழுமலை,
நாமக்கல்- சுந்தரம்,
தர்மபுரி- மோகன்,
ஈரோடு- செல்வகுமார்,
கோவை- நாகராஜன்,
பொள்ளாச்சி- மகேந்திரன்,
திருவண்ணாமலை- வனரோஜா,
கரூர்- தம்பித்துரை,
சேலம்- பன்னீர்செல்வம்,
திண்டுக்கல்- உதயகுமார்,
நீலகிரி- கோபால்,
திருப்பூர்- சத்தியபாபாமா,
திருச்சி- பா.குமார்,
கடலூர்- அருண்மொழித்தேவன்,
சிதம்பரம்-சந்திரகாசி,
மயிலாடுதுறை- பாரதிமோகன்,
வேலூர்- செங்குட்டுவன்,
நாகை- கோபால்,
தஞ்சாவூர்- பரசுராமன்,
சிவகங்கை- செந்தில்நாதன்,
மதுரை- கோபாலகிருஷ்ணன் (மதுரை மாநகராட்சி துணை மேயர்),
தேனி- பார்த்திபன்-
விருதுநகர்-ராதாகிருஷ்ணன்,
ராமநாதபுரம்- அன்வர்ராஜா,
தூத்துக்குடி- ஜெயசீலி தியாகராஜ்,
தென்காசி- வசந்தி முருகேசன்,
திருநெல்வேலி- பிரபாகர்,
கன்னியாகுமரி- ஜான்தங்கம்,
புதுச்சேரி -ஓமலிங்கம்.

Anonymous said...

ராஜீவ் காந்தியின் தந்தையின் உண்மையான பெயர் 'Feroz Ghandhe' என்றும் 'காந்தி'க்கும் 'காந்தே' க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று படித்தாக ஞாபகம்....

THE FULL NAME OF RAJEEV'S FATHER IS "FEROZE JEHANGIR GANDHI'.
IT IS A PARSI NAME. THIS CAN BE VERIFIED BY ALL.
WHAT I MEANT BY SAYING GANDHI IS A CASTE NAME IN GUJARAT WAS JUST TO HIGHLIGHT IT IS A COMMON SURNAME IN GUJARAT.
LIKE THIS SOMANY PATELS ARE THERE IN GUJARAT.
EVERYONE IS NOT A IRONMAN.

kothandapani said...

ராஜீவ் கொலையாளிகள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்தான், ஆனால் அவர்கள் தண்டனையில் இருந்து தப்பிக்க காரணம் என்ன . பதினாரு ஆண்டுகளாக அவர்களின் கருணை மனுவை நிறுத்தி வைத்தது யார் . இன்று கூப்பாடு போதும் ராகுல் அதிகாரத்திற்க்கு வந்த உடனே தூக்கு தண்டனை நிறைவேற்றவேண்டும் என்று ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து இருக்க முடியாதா . ஆட்சியில் இருக்கும் போது காமன் வெல்த் கொள்ளை 2G கொள்ளை சுரங்க கொள்ளை ஹெலிகாப்டேர் கொள்ளை என்று busy ஆக இருந்து விட்டு இன்று அலறுவது ஏன். எந்த ஆட்சியை ராஜீவ் கொலைக்காக கலைய்த்தார்களோ அவர்களோடே மீண்டும் கூட்டணி வைத்தது ராஜீவுக்கு செய்த துரோகமில்லையா . அதிகாரம் தான் முக்கியம் என்று காங்கிரசே இருக்கும்போது , எதிர் கட்சிகளை நிலை குலையாவைக்கும் ஒரு வாய்ப்பை ஜயா விட்டு விடுவார் என்று எதிர்பார்ப்பது வாடி கட்டின முட்டாள்தனம். இதில் மனுநீதி சோழன் எங்கு வந்தார்.

ராமகிருஷ்ணன் said...

என்னவோ இந்த நாட்டில் எல்லா வழக்குகளும் எள்ளளவும் பிசகாமல் விசாரணை செய்யப்பட்டு ஆய்ந்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதுபோலவும் இப்போது மட்டுமே தீர்ப்பு தவறி வந்துவிட்டது போலவும் துடிக்கிறீர்கள்.
எந்த வழக்கில் குற்றவாளிகள் உண்மையாகவே கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்கள்?
இன்றுவரை அரசியல் மற்றும் அதிகாரவர்க்க குற்றவாளிகள் எந்த வழக்கிலும் தப்பியதே இல்லையா?
ராஜீவ் வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் காவல்துறை, நீதித்துறை அதிகாரிகள் எல்லோரும் சிறிதளவுகூட தவறே செய்யாத உத்தமர்கள்தானா...?
இட்லிவடையும் அதன் கூப்பாடிகளும் யோக்கிய சிகாமணிகளா...? இந்த நாட்டில் யோக்கியம் பேசும் அத்துணைபேரும் அப்பழுக்கற்ற ஒழுக்கசீலர்களா...?
இந்நாட்டு மக்கள் எல்லா அலங்கோலங்கங்களையும் கண்டு சகித்து வருபவர்கள்தான்.
இந்த தீர்ப்பின்படி குற்றவாளிகள் என சித்தரிக்கப்பட்ட ஏழு பேரை விடுவித்தால் மட்டும் ஒன்றும் நிகழ்ந்துவிடாது. இதையும் மீறி அவர்கள் விடுவித்தால் என பயப்படுவீர்களானால், இந்திய பேரரரசின் அத்தனைவகை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் போர் படைகளின்மீதே உங்களை போன்றவர்களுக்கு நம்பிக்கையில்லை போல.
ராஜீவின் பிராந்திய அதிகார பேராசையால் இன்றளவும் பாதிக்கப்பட்டது நீங்களோ, நானோ அல்ல. லட்சோப லட்சம் ஈழ தமிழ் மக்கள். முடிந்து போன துயரங்களை பேசி இப்போது ஒன்றும் ஆகப்போவதில்லை.
ஒன்று மட்டும் நிச்சயம்: எந்த காரணமும் இல்லாமல் யாரும் யாரையும் கொன்று விடமாட்டார்கள். பழிக்குப்பழி என்பது மனிதனின் இயல்பான சுபாவமே. இது இப்போது மட்டும் தொடரலாமா...?
இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒற்றை கொலைக்கு குற்றவாளிகளை தண்டித்த உண்மையான நடுநிலையான நீதிமன்றம், இப்போது நடந்த ரெண்டு இலட்சம் மக்கள் படுகொலைக்கு காரணமானவர்களை தண்டித்து தூக்கில் ஏற்றுமா...? அப்படி ஏற்றட்டும்... ராஜீவ் கொலைகளுக்கு காரணமானவர்களை தாரளமாக அப்போது தூக்கில் இடட்டும்.
[ பின்குறிப்பு: ஒவ்வொருவர் முதுகிலும் ஓராயிரம் குற்றங்களை வைத்துக்கொண்டு இவடையின் ஊசிப்போன கருத்துக்களுக்கு ஒத்து ஊதுபவர்கள் யாரும் புத்த பிரானின் வாரிசுகள் அல்ல. சுரேஷ் கல்மாடியிலிருந்து மதுகோடா, ஜிப் ஓப்பனர் அசோக்சிங்க்வி முதல் ஜெயேந்திரன் வரை வெளியில் நடமாடிகொண்டிருக்கும் லட்சோப லட்ச அயோக்கியர்கள் அத்துணை போரையும் வாழ அனுமதித்துகொண்டிருக்கும் நம்மை யார் தூக்கிலிடுவது.....?]

Anonymous said...

Rajive Gandhi's father was Feroze Khan.
When it was clear that Nehru would become Prime Minister, He wanted to change his son-in-law's name so that our people will accept him and not go against him.
It was also time of partition and Nehru was sure, the name Khan will bring trouble.

Nehru asked MK Gandhi to 'adopt' Feroze and give his surname to him.

This is the story behind the Gandhi surname used by Nehru's descendants. He would never have imagined how this will continue to fool people and help the family.

-Rudra

Anonymous said...

"இட்லிவடையும் அதன் கூப்பாடிகளும் யோக்கிய சிகாமணிகளா..." நிச்சயமாக. குண்டு வைத்து கொல்லும் அளவிற்கு இங்கு யாரும் இல்லை. நீங்களோ நானோ இல்லை நடுத்தர வர்கத்தினர் யாருக்கும் குற்றம் செய்யும் தயிரியம் கிடயாது, இல்லை அவர்கள் மனசாட்சி அவர்களை கொன்று விடும். ஏன் ஸர் ஒரு கொலைகார கூட்டத்தோட நம்மளை அளவீட்டு தாழ்த்திக்கனும். அரசு என்பது பொது மக்களின் நன்மைக்கு என்ன செய்யவேண்டுமோ அதை செய்தது - புலிகளை ஒழித்தது. புலிகள் கூட்டதிருக்கு நேர்மைyo மக்கள் நலனோ துளி கூட இல்லை am- அதான் மண்ணாகி விட்டது. தான் சாவதில்லாம் அப்பாவிகள் உயிரையும் சேர்த்து காவு வாங்கியது. இங்கு வெட்டி கூச்சல் அங்கு உள்ள மற்ற தமிழர் நலனயும் பாதிக்கும். - sriram