பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 12, 2014

இன்று முட்டாள்கள் தினம்

வழக்கமாக ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்று கொண்டாடப்படுகிறது, ஆனால் டெல்லியை பொறுத்தமட்டில் இன்றைய நாளை அவர்கள் முட்டாள் தினமாக கொண்டாடலாம். செய்தி இது தான்.

டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்போது ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்தினர். காங்கிரஸில் ஆதரவில் அந்த கட்சி ஆட்சி அமைத்து தினமும் ஏதாவது செய்துக்கொண்டு யாராவது ஆட்சியை கலைப்பார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதன் வரிசையில் இன்று ஒரு புதிய அறிவிப்பை கெஜ்ரிவால் அரசு வெளியிட்டுள்ளது. அதில் டெல்லியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2012 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் மின் கட்டணம் செலுத்தாமல் போராட்டம் நடத்தியவர்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளதாக கெஜ்ரிவால் அரசு அறிவித்துள்ளது. மேலும், அபராதம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி அறிவிப்பின் மூலம் அரசு ரூ. 6 கோடி அளிக்க வேண்டும்.

ஒழுங்காக சட்டத்தை மதித்து மின்சாரக் கட்டணம் செலுத்தியவர்கள் முட்டாள்கள், சட்டத்தை மதிக்காதவர்களுக்கு பரிசு. சினிமாவில் நடக்கும் ஸ்டண்டை விட இவர்கள் செய்யும் ஸ்டண்ட் பிரமாதம். 6 கோடி யார் வீட்டு பணம் ?


படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நம்பிக்கை போய்விட்டது!

10 Comments:

Prabu said...

பாவம் டெல்லி மக்கள்,

இதற்க்கு நம்ம லல்லு தேவல.

Anonymous said...

Very correct...

R. J. said...

This is emotional politics. Don't expect too much to happen. Something is better than nothing - that's all. If the current lot of politicians / govt servants and the PUBLIC have all behaved well, there would not have been AAP / Kejriwal. - R. J.

Sethuraman said...

In what way is this "Waiver of electricity charges and penalty charges" different from the so called "waiver of loan and interest for farmers", which is provided by the congress and the ADMK /DMK governments before and after every election ?.... In case of farmers' loans also, some people would have paid their dues. Is the government repaying them ?

If the 2nd one is justified, the 1st one is also justified.

Anonymous said...

மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் 60 கோடி செலவாகிறதாமே

The Grinch... said...

How about money spent by Amma on free items...How about amount spent by MODI for every pre election rally...Kooti kaluchu paarunga Idly vadai...

Alex said...

இதெல்லாம் தப்புன்னு எடுத்துச்சொல்ல ஒருத்தர் கூடவா AAP-ல் இல்லை?

முஹம்மது யாஸிர் said...

அப்படியவது கொஞ்சம் பணம் அரசுக்கு கிடச்சிடாதா என்ற நப்பாசை தான் சகோதரா. அப்படிபார்த்தால், தமிழ்நாட்டுக்கு 365 தினங்களும் முட்டாள் தினம் தான்.

முஹம்மது யாஸிர் said...

அப்படியவது கொஞ்சம் பணம் அரசுக்கு கிடச்சிடாதா என்ற நப்பாசை தான் சகோதரா. அப்படிபார்த்தால், தமிழ்நாட்டுக்கு 365 தினங்களும் முட்டாள் தினம் தான்.

s suresh said...

அடக் கொடுமையே! அவங்க சின்னத்தாலேயே அவங்களை அடித்து விரட்ட வேண்டும்!