பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 02, 2014

தேமுதிக, பிஜேபி கூட்டணி

அழகிரி விஜயகாந்த் பற்றி பேச உடனே தன் பிள்ளை என்று கூட பார்க்காமல் ஸ்டாலின், கலைஞர் வீதிக்கு வர, அவர்கள் கட்சி, குடும்ப நாடகம் ஒரு சேனலில் போய்க்கொண்டு இருக்க, கேப்டன் சேனலில் “வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் கருணாநிதியும் அழகிரியும் பேசுகின்றனர். திமுக-வின் கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை” என்று விஜய்காந்த் மனைவி பிரேமலதா கூறிய போது திமுக-விஜயகாந்த் கூட்டணி இல்லை என்று தெரிந்துவிட்டது. திமுக நிலமை பாவமாக இருக்கிறது. நிற்க.

விஜயகாந்த் கூட்டணி இல்லை என்று கட்சி தொடங்கினாலும், அவர் எந்த கூட்டணிக்கு போவார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக தற்போது ஆகிவிட்டது. அவருக்கு என்ன ஆப்ஷன் இருக்கிறது ? காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் எல்லோரும் சிரிப்பார்கள். அதனால் அவருக்கு இப்போ இருப்பது ஒரே ஒரு ஆப்ஷன் தான் - பிஜேபி. தற்போது மோடி அலையில் சேர்ந்து கரை சேர முடியுமா என்று யோஜிப்பார் என்று நினைக்கிறேன்.

பா.ம.கவும் தற்போது பிஜேபி என்று முடிவு செய்துவிட்டால் அங்கே கேப்டனுடன் எப்படி சகித்துக்கொண்டு போகிறார்கள் என்று பார்க்க வேண்டும். கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் மட்டும் மண்ணைக் கவ்வ வேண்டும். முரசு கொட்டி புலிகள் அனுதாபிகள் பாஜகவுடன் சேர்ந்தால் சுப்பிரமணியன் ஸ்வாமி நிலைமை பாவம்தான்.


வடிவேலு எங்கே இருக்கிறார் ?

10 Comments:

R. J. said...

DMDK+BJP+PMK+MDMK equal to some 10% to 12% votes and how do we expect them to secure sizable seats barring may be an exceptional one or two? Without DMK or ADMK, no other combination will have any standing in TN. - R. J.

Anonymous said...

vijaya kanth will finally go to DMK only. Advance amount might have been paid in Malesia.
vijaya kanth is having no guts to face the election alone.

kothandapani said...

தமிழக மக்களக்கு வேறு மாற்று இல்லாததால் DMK அல்லது ADMK மட்டுமே வோட்டு போட்டு வந்தார்கள்.

எப்படி டெல்லியில் ஒரு மாற்று கிடைத்தவுடன் காங்கிரஸ் பி ஜே பி யை தூக்கி அடித்தார்களோ அப்படி இங்கும் நடை பெறலாம். BJP தலைமையில் ஒரு மாற்று அணி அமைவது நல்ல தொடக்கமே. இந்த கூட்டணி உடனடியாக வெற்றி பெறாவிட்டாலும் நிச்சையமாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியே தீரும்.DMDK

PMK MDMK போன்ற கட்சிகளை ஒரே அணியில் கொண்டு வருவதே பெரிய காரியம். இது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி தான். கூட்டணிகளே அப்படிதானே தற்போது. நீங்கள் ஏற்று கொண்டாலும் இல்லாவிட்டாலும் DMK

ADMK கட்சிகளுக்கு அடுத்து இங்கு அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி DMDK தான். அதனால் DMK ADMK வால்

ஓரங்கட்ட பட்ட காங்கிரசோ பி ஜே பி யோ DMDK வை தேடி அலைகின்றன.

Anonymous said...

சிவனேசச் செல்வன் , கோவையிலிருந்து ;;
தே.மு.தி.க.+ பிஜேபி +மதிமுக +பாம்க = 28 : அதிமுக+சிபிஎம் +சிபிஐ = 8 -10 ;
திமுக +காங் +திருமா + முஸ்லிம்= 2-
ஆ ஆ பா = 0

kg gouthaman said...

It must be either BJP or Congress at the center. TN people to vote accordingly during the Loksabha elections. That is, to vote in favor of any one of these 2 parties or regional parties supporting any of these two.
Don't confuse the issues, by bringing into picture things which are not related to this option.

V.J. said...

@above
vote-share calculation wrong.
try nagerkoil, kanyakumari, viruthunagar and few seats in north TN. This combo has >25% voteshare in these constituencies.

V.J. said...

my comment was for R.J.

Anonymous said...

சிவனேசச் செல்வன் , கோவையிலிருந்து ;;
தே.மு.தி.க.+ பிஜேபி +மதிமுக +பாம்க = 28 : அதிமுக+சிபிஎம் +சிபிஐ = 8 -10 ;
திமுக +காங் +திருமா + முஸ்லிம்= 2-
ஆ ஆ பா = 0

அப்பா அனானி இதை சோ நம்புவது இருக்கட்டும் IV யாவது நம்புமா

R. J. said...

VJ, I still feel with DMK or ADMK as a partner the DMDK-BJP-MDMK-PDMK combo cannot get a majority in any seat. At best they will pull down DMK in certain places and ADMK in others. ie, they will be the spoilers. I cannot imagine DMDK combo will succeed like AAP did in Delhi. Having said these, my personal wish is Congress shall be shown the door this time and BJP has a working majority to spend 5 years without daily scares by partners. ADMK will be a dangerous partner to any one. - R. J.

Anonymous said...

Kothandapani's analysis makes sense. There should be an alternative front that should replace the DMK and ADMK fronts. Then only TN will have a chance to prosper. Till then TN will be in dark. Clearly DMK is becoming yesterday's PMK whom nobody wants to alliance with.