பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 24, 2014

அழகிரி - வீரமணி
கலைஞர் கைது போது வீரமணி என்ன சொன்னார் யாருக்காவது தெரியுமா ?

5 Comments:

Anonymous said...

Sir.. Video is not rendering. :(

Anonymous said...

கலைஞர் கைது போது வீரமணி என்ன சொன்னார் யாருக்காவது தெரியுமா ?

தெரிந்து கொள்ள இங்கே சொல்லவும்.. கலைஞர் கருணாநிதியின் நள்ளிரவு கைதை வரவேற்ற வீரமணி

Anonymous said...

புதிய பராசக்தி by அழகிரி

இந்தக் கட்சி விசித்திரம் நிறைந்த பல பிரச்சனைகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இந்தப் பிரச்சனை விசித்திரமல்ல, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.

கட்சியிலே குழப்பம் விளைவித்தேன். தலைவரைத் திட்டினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கட்சியிலே குழப்பம் விளைவித்தேன். கட்சி கூடாது என்பதற்காக அல்ல. கட்சி கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. தலைவரைத் திட்டினேன். அவர் தலைவர் என்பதற்காக அல்ல. கொள்கை பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.

உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் - அதைப் போல.

என்னைக் குற்றவாளி, குழப்பவாதி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! மக்களே! தீர்ப்பை நம்புவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.

தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு ஊர்; பிழைக்க ஒரு ஊர். தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? மதுரை! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. ஓய்வில் இருந்த என் தந்தையைக் காண வந்தேன். பதவியைப் பறிகொடுத்தேன். வெறுப்பால் நலிந்தேன்; மெலிந்தேன்! கோபக்காரனாக மாறினேன்.

ஓடினேன்.. ஓடினேன். வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன்.. என்னையும் என் மகனையும் கைது செய்து விடுவார்களோ என்று பயந்து அமெரிக்கா, ஹாங்காக், மலேசியா என்று வெளிநாடுகளுக்கெல்லாம் ஓடினேன். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என்னை, என் மகனை?

நான் மட்டும் விட்டுக் கொடுத்திருந்தால், மாற்றுக் கட்சித் தலைவியிடம் எல்லாம் விஷயங்களையும் ஒப்புக் கொண்டிருந்தால் அந்தக் கட்சியில் கொபசெ ஆகி ஆடி காருடன் மாளிகை வாசத்தோடு ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த மக்கள் மன்றம் விரும்புகிறது?

கட்சியை அழிக்க எண்ணிய மாபாவிகளுக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கட்சிக்காரர் தற்கொலை செய்துகொண்டது ஒரு குற்றம். என் அபிமானிகள் எல்லாரையும் கட்சியை விட்டு நீக்கியது ஒரு குற்றம். நான் தலைவரைத் திட்டியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? எனக்கு தலைமைப் பதவி தராமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா?

பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? ஊழலின் குற்றமா? அல்லது ஊழலைப் பற்றிச் சொல்லி பிளாக் மெயில் செய்யும் வஞ்சகர்களின் குற்றமா?

கட்சி பெயரால் ஊழல் லீலைகள் செய்யும் போலி அரசியல்வாதிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? தலைவரின் குற்றமா? அல்லது தலைவரின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா?

இக்குற்றங்கள் களையப்படும் வரை அழகிரிகளும் கிருட்டிணன்களும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்...

*********************

Anonymous said...

link is here

http://www.puthiyathalaimurai.tv/azhagiri-reaction-on-dmk-actions-111274.html

Anonymous said...

புதிய பராசக்தி by அழகிரி சூப்பர். இதை தனிப் பதிவாகவே போடலாமே இட்லி வடை. சும்மா ‘நச்’னு இருக்குதுபா.