பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, January 29, 2014

டி.ஆர்ர்ர்ர்ர்ர்

டிசம்பர் செய்தி:
வெள்ளிக்கிழமை காலை தி.மு.க-வின் முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி என்னை சந்தித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதி என்னைச் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அழைப்பை ஏற்று நான் கருணாநிதியைச் சந்தித்தேன்.

என்னிடம் மனம் விட்டு அவர் பேசினார். தன் கூடவே இருக்க வேண்டுமென்று அன்பு கட்டளையிட்டார். உன் லட்சியமே தி.மு.க.வில் இருப்பதுதான். ஆகவே, தி.மு.க-வில்தான் நீ இருக்க வேண்டும் என்று கூறினார். நான் அவரைத் தவிர யாரையும் தலைவராக ஏற்றுக்கொண்டதில்லை. இப்போது அவரின் வார்த்தையை மீறும் சக்தி எனக்கு இல்லை.

சிறு வயதில் நிலவைக் காட்டி குழந்தைகளை வளர்ப்பதைப் போல, கருணாநிதியைக் காட்டிதான் என்னை எனது பெற்றோர் வளர்த்தனர். அரசியல் உட்பட எல்லாத் துறைகளிலும் கருணாநிதிதான் எனது குரு. ஆகவே, தி.மு.க-வில் நான் சேர வேண்டும் என்ற அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டேன்.

மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது பற்றி கட்சியின் தலைவரான கருணாநிதிதான் முடிவு செய்வார். எனது பிரசாரம் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிராக இருக்குமா அல்லது பா.ஜ.க-வுக்கு எதிராக இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் இப்போது எந்த முடிவும் செய்யவில்லை'

ஜனவரி செய்தி:
கேள்வி:– கருணாநிதியை சந்தித்தீர்களே? தி.மு.க.வில் சேர்ந்து விட்டீர்களா?

பதில்:– கலைஞரை நான் சந்தித்தது ஒரு காட்சி. அதன் பிறகு நடப்பதற்கு பல காட்சிகள் உள்ளன. எல்லா காட்சிகளையும் இப்போதே சொல்லி விட முடியாது. மூன்று ரூபாய் கொடுத்து தி.மு.க. அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை என்பதற்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன். அந்த அட்டையை வாங்கினால்தான் தி.மு.க.வில் சேர்ந்ததாக அர்த்தம்.

பாரதீய ஜனதா கட்சியில் சேர என்னை அழைத்தனர். நான் மறுத்து விட்டேன் என் அரசியல் குரு ஆற்காடு வீராசாமி கையை பிடித்து அழைத்து போய் கலைஞரை சந்திக்க வைத்தார். காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்ததால் நானும் போனேன்.

இரண்டு படங்களுக்கும் குறைந்தது 10 வித்தியாசம் இருக்கிறது. அது என்ன ?

6 Comments:

Anonymous said...

ஊர் இரண்டு பட்டால் யாருக்கு சந்தோஷமோ இல்லையோ இட்லி வடைக்கு தினம் ஒரு பதிவு போட அவல் கிடைத்து விடுகிறது.

Bagawanjee KA said...

படத்தில் மட்டுமா வித்தியாசம் ?டி.ஆரின் கருத்திலும் தானே ?

Alex said...

காட்சிகள் மாறும் என்பதால் பரிசு எதுவும் முன்கூட்டியே அறிவிக்காதவரை இந்த மாதிரி போட்டியில் எல்லாம் கலந்து கொள்வதாயில்லை...

Anonymous said...

//கருணாநிதியைக் காட்டிதான் என்னை எனது பெற்றோர் வளர்த்தனர். //

Exposure to 'evils' too, in early days of his life. How lucky he was....

kari kalan said...

என்னை கூட, சின்ன வய்தில் சாப்பிட அல்லது வேறு எதற்கோ அடம் பிடித்தால் 'அஞ்சு கண்ணன்' வரான் என்பது போல் ஏதாவது ஒன்று காட்டியே என்னை வளர்த்தனர் ;))

Anonymous said...

padamum vishayamum rnakku onrai theriya paduthukiradhu. idlyvadaikkum oru TR undu.
adhu yaar endru solbavarkku oru chess board(!) parisu....