பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 28, 2014

மஹாபாரத சீசன்இது மஹாபாரத சீசன் என்று நினைக்கிறேன். விஜய் டிவியில் மஹாபாரதம் புதிதாக வருகிறது. சன் டிவியிலும் வருகிறது என்று நினைக்கிறேன். ஜெயமோகன் 10 வருஷத்துக்குத் தொடர் ஆரம்பித்துள்ளார்...... ஆனால் இதை எல்லாம் கோபாலபுரத்து மஹாபாரதம் தூக்கி சாப்பிட்டுவிடும் என்று நினைக்கிறேன்.

இன்றைய அத்தியாயத்தில் அழகிரி சொன்ன வார்த்தைகள் தந்தையை மிகவும் நொந்து போகச் செய்துள்ளது. கலைஞருக்குப் பல சந்தர்ப்பங்கள் கிடைத்து. போன தேர்தலில் ஸ்டாலினை முன்நிறுத்தியிக்கலாம் செய்யவில்லை. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு, அழகிரிக்கு டெல்லி என்று பிரித்துப் பார்த்தார். முடியவில்லை.

ஞாநி கலைஞர் ஒய்வு எடுக்க வேண்டும் என்று எழுதிய போது “பூணூல் ஆசாமி” என்று மைக் பிடித்து வசைப்பாடினார்கள். அப்போது கூட்டத்தில் கலந்துக்கொண்டு வசைப்பாடினவர்கள் இன்று சின்னதாக ஃபேஸ்புக் ஸ்டேடஸ் ஒன்று போட்டுவிட்டு நகர்ந்துவிட்டார்கள்.

அழகிரி ஸ்டாலின் பற்றி அப்படிச் சொன்னாரா என்று தெரியாது. ஆனால் அப்படியே சொல்லியிருந்தாலும், அதைப் பொதுவில் போட்டு கலைஞர் உடைத்திருக்க வேண்டாம். குடும்பச் சண்டையை ஏன் பொதுவில் சொல்ல வேண்டும்? உணர்ச்சிவசப்படும் பலர் ஏன் அவர் பொதுவில் போட்டு உடைத்தார் என்று யோசிக்கவில்லை. நிச்சயம் வரும் நாளில் ஏதோ ஒரு முக்கிய அறிவிப்பு வர போகிறது என்று மட்டும் ஊகிக்கலாம். இப்போது ஸ்டாலினிடம் பதவியை கொடுத்தால் தொண்டர்கள் அனுதாபத்தால் கேள்வி கேட்க மாட்டார்கள்.

போகிற போக்கைப் பார்த்தால், வரும் தேர்தலில் அதிமுக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று தோன்றுகிறது. திமுக ஸ்டாலின் தலைமையில் திரும்ப ஒரு ரவுண்ட் வர (வருமா?) இன்னும் ஒரு மாமாங்கம் ஆகலாம். எதுக்கும் அதுக்கும் இப்பவே வாழ்த்துகள் சொல்லிவைக்கலாம்.
படங்கள்(பழசு): நன்றி கூகிள்.

3 Comments:

Rajagopalan Subramanian said...

good

Anonymous said...

பூணூல் பற்றி யார் சொன்னாலும் இட்லிவடை மறப்பதேயில்லை!!

Alex said...

எது எப்படியோ... பத்திரிக்கைகளுக்கும் மக்களுக்கும் பொழுது போகின்றது...