பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 02, 2014

தேவ்யானி கோப்ரகாடே கதை - எ.அ.பாலா

இந்திய நியூஸ் மீடியாவும் (பொதுவாக) அரசியல்வாதிகளும் தேவ்யானியின் கைதை ஒரு தேசிய அவமானமாக உருவாக்கி, பொதுமக்களின் நாட்டுப்பற்றை வெளிக்கொணர்ந்து, ரத்தத்தை சூடாக்கி குளிர்காய்ந்த நிலையில், வெகு சிலரே பொதுப்புத்திக்கு எதிராக கருத்துகளை முன் வைத்துள்ளனர். சுவாரசியமான கோப்ரகாடே கதையில், சில புள்ளிகளைத் தொடுவோம். டிவிட்டரில் இது குறித்து ஏற்கனவே கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

IMF நிறுவனத்தின் தலைவராக இருந்த (பிரதமராக வாய்ப்பிருந்த) பிரென்ச் நாட்டு ஸ்ட்ராஸ் கானை, சாதாரண ஒரு ஓட்டல் சிப்பந்தியின் சாதாரணப் புகாரின் பேரில், விமானத்திலிருந்து இறக்கி, பொது இடத்தில் விலங்கு மாட்டி கூட்டிச் சென்றதும் இதே அமெரிக்காவில் தான் நிகழ்ந்தது. இந்தியாவில் ஒவ்வொரு sexual harassment கேஸிலும், பல நாட்கள்/வாரங்கள் கழித்து, மீடியா கூத்துகளின் முடிவில் தான் சம்பந்தப்பட்ட நபர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும்! எ.கா: தருண் தேஜ்பால். அமெரிக்காவில், ஒரு இல்லினாயி கவர்னர், ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஜூனியர், மைக்கல் டக்லஸ் மகன் என்று பல விவிஐபிகள், நம்மூர் லெவலில் ”சின்ன” குற்றங்களுக்காக சிறையில் காலம் தள்ளுகிறார்கள். இது போன்றதை இந்தியாவில் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது, ஒன்றிரண்டு exceptions இருக்கும் போதிலும்! தேவ்யானி கைது நடவடிக்கையால், இங்கு சிலபலரின் ரத்தம் கொதிப்பதற்கு இது தான் முக்கியக் காரணம்.தேவ்யானியின் Diplomatic Immunity பற்றிப் பேசும் இந்திய அரசு, பாலியல் குற்றத்துக்காக, ப்ரென்ச் தூதரக அதிகாரி பாஸ்கலை, நிர்வாணச் சோதனைக்கு உள்ளாக்கி, ஜெயிலில் போட்டது. இத்தாலியத் தூதரை வீட்டுக்காவலில் வைத்து நாட்டை விட்டு நகரக்கூடாது என்று கட்டளையிட்டது! அதாவது, (அந்தந்த நாட்டில்) தீவிரமாக கருதப்படும் குற்றங்களை மனதில் வைத்து Diplomatic Immunity-ஐ பார்க்க வேண்டும். அமெரிக்க நீதிமன்றங்கள், தொழிலாளர் ஊதிய முறைகேடுகள் சார்ந்த குற்றங்களை தீவிரமானதாக பார்க்கின்றன. அடுத்து, சி.ஐ.ஏ ஏஜெண்ட் ரேமாண்ட் டேவிஸ் 2 பாகிஸ்தானியர்களை சுட்டுக் கொன்றதைச் சுட்டிக்காட்டி, அமெரிக்காவின் இரட்டை வேடத்தை தோலுரித்ததாக சிலர் கூறுவதையும் தமாஷாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானிய சட்டப்படி, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பிளட் மனி (Blood money) வழங்கப்பட்டதின் தொடர்ச்சியாகத் தான் டேவிஸ் தண்டனையிலிருந்து தப்ப முடிந்தது.

தேவ்யானி கேஸின், அமெரிக்க பப்ளிக் பிராசிக்யூட்டர் ப்ரீத் பராரா மேல் கொதித்தெழுந்து வசை பாடும் பலர், அதே ஆள் தான், மில்லியன்களைச் சுருட்டிய கள்ளப் பேர்வழிகள் ராஜரத்னத்தையும், ரஜத் குப்தாவையும் உள்ளே தள்ள காரண கர்த்தாவாக இருந்த நேர்மையாளர் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அதே போல, அழுக்கு ஆதர்ஷ் கட்டடத்தில் (தகிடுதத்தம் பண்ணி வாங்கிய) ஒரு ஃப்ளாட் வைத்திருக்கும் தேவ்யானி, தனது பணியாளர் சங்கீதாவை ஏமாற்றி அமெரிக்காவுக்கு வீட்டு வேலைக்கு அழைத்து வந்திருக்க வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும்! அதோடு, தேவ்யானி தலித் என்பதால் தான், இந்திய அரசு (இன்னும்) அதி விரைவாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்படவில்லை என்று மாயாவதி கூறியிருப்பதை வடிவேலு காமடியாக மட்டுமே பார்க்க வேண்டும் :)

சங்கீதாவுக்கான இலவச தங்கும் இடம், விமான கட்டணம் ஆகிய செலவுகளையும் அவரது ஊதியத்தின் ஒரு பகுதியாக பார்க்கவேண்டும் என்று சில புத்திசாலிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பிரச்சினை அது அல்ல. தெரிந்தே சட்டத்துக்கு முறைகேடாக ஒரு தூதரக அதிகாரி நடந்து கொண்டது தான் பிரச்சினை. இதற்கு முன்னும், பணியாளர் ஊதியம் தொடர்பாக 2 இந்திய தூதரக அதிகாரிகள் மீது புகார் எழுந்தும், பிரச்சினை பெரிதாகவில்லை. சங்கீதாவின் குடும்பத்துக்கு விசா, டிக்கெட் வாங்கிக் கொடுத்து, அவர்கள் அமெரிக்கா சென்ற பின் தான், தேவ்யானி கைது நிகழ்ந்தது என்று ஒரு குற்றச்சாட்டு! ஆமாம், திட்டம் போட்டுத் தான் அமெரிக்கர்கள் செய்துள்ளனர். ஏனெனில், இந்திய சட்டத்தையும் வளைக்க முடியும், ஓட்டைகளும் உள்ளன.


முக்கால்வாசி வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்ட முக்கியமான ஒருவரே, சாட்சிக்கு வேண்டி அப்ரூவர் ஆகி விடுவது தொன்று தொட்டு ஒரு வழக்கமாக இங்கு நிலவுகிறது! பணம், பதவி பலத்தினால் சங்கீதாவின் குடும்பம் இங்கே அலைக்கழிக்கப்படக்கூடாது என்பதற்காகத் தான் அவர்களை அப்புறப்படுத்த வேண்டியிருந்தது. சாட்சி பாதுகாப்பு (Witness protection) என்பதை அமெரிக்கா தீவிரமாக கடைபிடிக்கும் ஒரு நாடு. தேவ்யானியை நிர்வாணச் சோதனைக்கு உட்படுத்தியது 100% உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், இந்தியாவில், யாரை (விஐபிகள் தவிர்த்து!) வேண்டுமானாலும், சந்தேகத்தின் பேரில், போலீஸ் தொட்டுச் சோதனை இடுவதும், கடுமையாகப் பேசுவதும் சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்! அமெரிக்க ஹிப்பக்ரஸி பற்றி பேசுவதற்கு முன் இந்திய ஹிப்பக்ரஸிகளையும் (இவற்றை அலசினால் விடிந்து விடும்!) நினைத்துப்பார்த்தல் நலம் பயக்கும்! தேவ்யானி கைதுக்கு எதிராக, அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அரண்களை நீக்கியது போன்றவை இந்தியாவுக்கு மரியாதை தரும் விஷயங்கள் அல்ல.

தன் மேல் அமெரிக்க நடவடிக்கையை தடுக்கும் விதமாக (நினைத்துக் கொண்டு!) தேவ்யானி, இந்திய நீதிமன்றத்தில் சங்கீதாவுக்கு எதிராக வழக்கொன்றை பதிவு செய்து வைத்தார். ஆனால், கைதை எதிர்பார்க்கவில்லை! அது தான் உண்மை. தற்போதைய சூழலில், நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொண்டு,தேவ்யானி அமெரிக்காவிலிருந்து வெளியேறுவது தான் பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வர உதவும்.

இப்போது தேவ்யானிக்கும் முன்னால் ஷாருக் கானுக்கும் ஆதரவாக கொடி பிடித்த இந்திய அரசு, அதே அளவுக்கு அப்துல் கலாம் விஷயத்தில் நடந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு இந்திய மீனவர் துபாய் அருகில் அமெரிக்க கடற்படையினரால் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டபோது இந்தியா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இறுதியாக, தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு பல ஆண்டுகளாக செய்யும் கொடுமைகளை இந்திய அரசோ, பிற இந்தியர்களோ வலிமையாக தட்டிக்கேட்டதே கிடையாது என்று தாராளமாகக் கூறலாம்! அமெரிக்கா போல இலங்கை, இந்தியாவின் மிக முக்கியமான ராணுவ / தொழில் கூட்டாளி நாடு இல்லை என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்!

எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ், Rediff.com
prima facie, it appears that the officer violated the law...prime face, top people including Modi just supported her :-)

34 Comments:

Alex said...

அந்தப் பெரியவரைப் பார்த்தால்தான் பாவமாயிருக்கின்றது...

Anonymous said...

hats off for a balanced article.
ALLMOST ALL OUR DIPLOMATIC STAFF INDULGE IN THIS SERVANT GAME IN ALL COUNTRIES OTHER THAN ASIAN COUNTRIES WHERE LOCAL LABOUR IS CHEAP.
MOST OF THE SOUTH INDIAN DIPLOMATS DONT DO THIS SINCE THEIR WIVES ARE ACCUSTOMED TO WORK.
IN FACT AS A NATION WE ARE OVER REACTING TO THIS INCIDENT.
OUR DIPLOMATS HAVE BEEN EVEN BEATEN IN PAKISTAN. AT THAT TIME THERE WAS NO SUCH HUE AND CRY.
PRESENT PERSON IS WELL CONNECTED AND MOST POLITICIANS SEE AN OPPORTUNITY FOR US BAITING.
AS A PROTEST ALL POLITICIANS CAN STOP EDUCATING THEIR CHILDREN IN US. MAXIMUM US GOVT. SCHOLORSHIPS ARE ENJOYED BY POLITICIAN/DIPLOMAT CHILDREN ONLY.
WILL THEY ALL SURRENDER SUCH GOVT. SCHOLORSHIPS AS A MARK OF PROTEST?

எ.அ.பாலா பறக்கும் படை said...

இந்த மஞ்சள் கமெண்ட் இட்லிவடையா போட்டார்கள்? நம்பவே முடியவில்லையே, நரநாராயணா...

Unknown said...

Its a stupid law. Sangeetha should have been paid $4500 per month when Devyani was earning only $6500 per month. Now how is this possible?

Unknown said...

For follow up comments

Anonymous said...

Blogger K Selvan said...
Its a stupid law. Sangeetha should have been paid $4500 per month when Devyani was earning only $6500 per month. Now how is this possible?

Yes, It is possible, Devyani also knew that, why she bring her to US?very very top officials only have Govt paid maid? If maid for helping Devyani offical work, let govt pay the salary, why is paying?

Nagaraj Venkatesan said...

@K Selvan, If you live overseas you understand that a person earning 6500$ can never ever have a maid. That's the way it works in US, Europe, Singapore or Australia. There is nothing stupid about the law. Maids are expensive.period

Anonymous said...

First understand these.
1. This is the first incident where a diplomat was strip searched. (She had full immunity at the time of arrest as an adviser to UN)
2. Maid's family was illegally evacuated from India without India's knowlegde (IS India an enemy country of US to do this behind the back?)
3. Disrespect Indian diplomats has been on the rise with similar incidents (Kritika Biswas)
4. US never dares to do this to russian, chinese, or saudi arabian diplomats/consulers). They always negotiate with those countries before arresting)

So US is clearly wrong. India has every right to be outraged.

Anonymous said...

I agree with the theme of the article. Looks like some of the inspirations came from http://contrarianworld.blogspot.in/2013/12/grow-up-india-law-is-law.html

Maybe it is coincidental.

முரளி இராமச்சந்திரன் said...

First, I am not sure why someone writes comments under the Anonymous (not the first comment but the last one with 4 points) name and gets heated up while discussing something.

I am not the US official but living in US for while so know some of the practices here.
1. Mrs. Devyani was not strip searched while she was appointed as adviser to UN, that came in later to protect her from arrested again on further charges.
2. What do you mean by illegally evacuating the maid's family. For example you get a H1B visa or L1 or B1 will you go ahead and ask the US employer or US Home Land security to seek permission of Govt India before you get your visa stamped and leave India? If for argument sake they have not taken them out of India, the chances are they would have been kidnapped and tortured to get the case withdrawn by the maid, as Devyani and her family has deep links with the ruling party in India.
3. Kritika Biswas - Valid point but you fail to see that Devyani looks like violated a law here. Handling of the case may be same like Kritika B but the situation is totally different here.
4. Do you have any evidence on this point. Not questioning you, but just curious.

In this case, US is not at all wrong. Devyani looks like violated the maid pay law here and visa law. If she has not, she can prove the US Govt wrong in the court of law. Arresting, hand cuffing, strip searching are common to all the the violators who are arrested here in US. US Govt released a statement that she was not hand cuffed, she was arrested as they cannot arrest her in her office. She was allowed to make as many calls as she needs to make arrangements to baby sit her kids, calling her friends, relatives, office, lawyers, her parents in India. She was allowed to be seated in the car, offered refreshments etc. Usually, the first thing they take from you if you are arrested is your cell phone, hand cuff you behind and put you in the car, take you to the PS, retain you in the common cell where several others will be there, which might include drug peddlers, pick pockets, DUI etc. Just because you are rich and working in consulate office doesn't mean you will be given A class prison right away. That comes after the judge refuses your bail plea and puts you in Police Custody. This is not India where any one gets arrested just calls his uncle, vattam, Maa vattam, etc and comes out of the police station in few mts or as in Calcutta Mamta, the CM herself went to the Police Station and releases her folks. Here they don't care about these politics.

Mr. K. Selvan had asked if Devyani's salary is 6500$ how can she pay the maid Sangeetha $4500. No one forced Devyani to bring a maid on a false promise. If you cannot afford it don't get it. If you cannot afford a house costing million dollars, buy only what you can afford.

Finally, folks try not to approach this with sentiments, if cannot avoid, there is nothing any one can do. Also remember, she and her father are one of the main culprits in the Adarsh Flat scam too, so her back ground is also some what tainted here in India.

Again, you are now open to bash me or bash Idly Vadai for this article.

Happy New Year to you all.

Murali. R

nprasanna said...

Why did you post kirthika kaswas photo instead of devyani khobragade's photo ?

Anonymous said...

Its a stupid law. Sangeetha should have been paid $4500 per month when Devyani was earning only $6500 per month. Now how is this possible?
6500 IT IS ONLY FOREIGN AIIOWANCE. HOUSING IS FREE. CHILDREN'S EDUCATION IN INTERNATIONAL SCHOOL WILL BE PAID BY GOVT.OF INDIA.
IN ADDITION INDIAN SALARY WILL BE PAID.
IF OVERSEAS POSTING IS NOT THAT ATTRACTIVE ALL FOREIGN SERVICE PEOPLE WILL NOT CRAVE FOR IT.
EVEN Devyani WORKED HARD AND USED ALL HER INFLUENCE FOR A US POSTING
NO BODY IN FOREIGN SERVICE WANTS AN INDIAN POSTING WHICH MOSTLY WILL BE IN DELHI WITH ALLTROUBLES INCLUDING POLITICAL.
FOREGIN POSTING IS FUN. PARTIES.ETC ETC
THE PROBLEM WITH DEVYANI WAS SHE MISTOOK US GOVT. AS INDIAN GOVT.AND THOUGHT SHE CAN GET AWAY WITH ALL WRONG THINS WITH INFLUENCE AND MONEY.
முரளி இராமச்சந்திரன் COMMENTS ARE CORRECT AND WELL STUDIED.
HAND CUFFING IS VERY ROUTINE AND COMMON IN US. EVEN FOR TRAFFIC VIOLATIONS THEY WILL HAND CUFF.WE ONLY ATTACH TOO MUCH IMPORTANCE TO HAND CUFFING IN INDIA.

DEVYANI SHOULD HAVE BEEN AWARE OF THIS. THEN WHY DID SHE VIOLATE US LAWS.
IN FACT GOVT. OF INDIA/ FOREIGN MINISTRY MUST TAKE ACTION AGAINST HER FOR BRINGING DISGRACE TO THE COUNTRY.

R. J. said...

It will be interesting to see how this issue will end ultimately as the U.S. govt has said that they have acted correctly and law will take its course. Our PM, Salman Kurshid and others will have no face to show after the latter has stated that he will not return to Parliament without getting an apology from the U.S.govt.! Whatever said and done, the case reads clearly against Khobragade and the Indian govt has reacted hastily without being informed of what really happened. And the intriguing part is the silence of Indian govt on the maid and the U.S. action to take the maid's family in a hurry; this alone may indicate that the U.S. wanted to show India that they can do what they want and India will not be able to reciprocate. It is pertinent to note that a majority of 'U.S. Indians' are against Khobragade and the embassy staff. - R. J.

Unknown said...

அமெரிக்க தூதரகத்தில் செக்யூரிட்டி ஏஜெண்டாக பணிபுரிந்த ரேமண்ட் டேவிஸ் பாகிஸ்தானில் 2 கொலைகளை செய்தபோது "டிப்ளமமாடிக் இம்யூனிட்டி" என அலறியது அமெரிக்கா. ஒபாமவே கொலை செய்ய டிப்ளமாடிக் இம்யூனிட்டி இருப்பதாக சொன்னார். பாகிஸ்தானில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு எற்படவே அவரை விடுதலை செய்யாமல் ஜெயிலில் வைத்திருந்தது பாகிஸ்தான். அப்புறம் பிளட் மணி கொடுப்பதாக சொல்லி அவரை விடுவித்துவிடார்கள். கொல்லபட்ட இருவர் குடும்பத்தையும் இரு நாட்டு அரசுகளும் திரைக்கு பின் என்ன செய்து வழிக்கு கொண்டுவந்தார்கள் என யாருக்கும் தெரியாது. ஆக தன் நாட்டு தூதரக காவலாளர் கொலையே செய்தால் டிப்ளமாடிக் இம்யூனிட்டி என அலறுவதும், மினிமம் வேஜ் பிரச்சனைக்கு இன்னொரு நாட்டு தூதரக அதிகாரிக்கு டிப்ளமாடிக் இம்யூனிட்டி கிடையாது என்பதும் அவர்கள் வாடிக்கை


மற்றபடி தேவயானிக்கு சம்பளம் $6500 என்கையில் $4500 பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிட்டு $2000ல் நியூயார்க்கில் குடும்பம் நடத்த முடியாது. மினிமம் வேஜ் சட்டத்தை மீறியது குற்றம் தான். ஆனால் சங்கீதா ஏதோ பாதிக்கபட்ட அபலைபெண் போலவும், தெவயானி கொடுமைகாரர் போல் சித்தரிப்பதும் சரியல்ல. இருவரும் முன்பே பேசி மினிமம் வேஜ் கொடுக்காமல் பிராடுதனம் செய்ய ஒத்துகொண்டார்கள். சங்கீதா தனக்கு மினிமம் வேஜ் கிடைப்பதால பொய் சொல்லி விசா வாங்கி அமெரிக்கா செல்கிறார். அங்கே போய் மினிமம் வேஜ் கொடுக்கலைனா லட்சகணக்கான டாலர் டேமேஜ் வாங்கலாம் என தெரிந்து பிளாக்மெயுலுக்காக வழக்கு போடுகிறார். இதில் சட்டத்தை மீறியது குற்றம் என்றால் தூதரக நடைமுறைப்படி தேவயானி, சங்கீதா இருவரையும் அமெரிக்கா கைது செய்து டிபோர்ட் செய்து இந்திய அரசிடம் புகார் கொடுத்திருக்க வேண்டும். சங்கீதாவுக்கு டிப்ளமடிக் இம்யூனிட்டி இல்லை என்பதால் அவரை தூக்கி ஜெயிலில் வைத்திருக்க வேண்டும்

இப்படி பணிப்பெண்ணுக்கு $4500 சம்பளம் கொடுக்கவேன்டும் என்பதே முதலில் முட்டாள்தனமான சட்டம். சட்டம் முட்டாள்தனமா இருக்கையில் மக்கள் அதை மீறதான் செய்வார்கள். மாட்டிக்காதவன் புத்திசாலி, மாட்டிகொண்டவன் குற்ரவாளி அவ்ளோதான்

Unknown said...

அமெரிக்க தூதரகத்தில் செக்யூரிட்டி ஏஜெண்டாக பணிபுரிந்த ரேமண்ட் டேவிஸ் பாகிஸ்தானில் 2 கொலைகளை செய்தபோது "டிப்ளமமாடிக் இம்யூனிட்டி" என அலறியது அமெரிக்கா. ஒபாமவே கொலை செய்ய டிப்ளமாடிக் இம்யூனிட்டி இருப்பதாக சொன்னார். பாகிஸ்தானில் மக்களிடையே கடும் கொந்தளிப்பு எற்படவே அவரை விடுதலை செய்யாமல் ஜெயிலில் வைத்திருந்தது பாகிஸ்தான். அப்புறம் பிளட் மணி கொடுப்பதாக சொல்லி அவரை விடுவித்துவிடார்கள். கொல்லபட்ட இருவர் குடும்பத்தையும் இரு நாட்டு அரசுகளும் திரைக்கு பின் என்ன செய்து வழிக்கு கொண்டுவந்தார்கள் என யாருக்கும் தெரியாது. ஆக தன் நாட்டு தூதரக காவலாளர் கொலையே செய்தால் டிப்ளமாடிக் இம்யூனிட்டி என அலறுவதும், மினிமம் வேஜ் பிரச்சனைக்கு இன்னொரு நாட்டு தூதரக அதிகாரிக்கு டிப்ளமாடிக் இம்யூனிட்டி கிடையாது என்பதும் அவர்கள் வாடிக்கை


மற்றபடி தேவயானிக்கு சம்பளம் $6500 என்கையில் $4500 பணிப்பெண்ணுக்கு கொடுத்துவிட்டு $2000ல் நியூயார்க்கில் குடும்பம் நடத்த முடியாது. மினிமம் வேஜ் சட்டத்தை மீறியது குற்றம் தான். ஆனால் சங்கீதா ஏதோ பாதிக்கபட்ட அபலைபெண் போலவும், தெவயானி கொடுமைகாரர் போல் சித்தரிப்பதும் சரியல்ல. இருவரும் முன்பே பேசி மினிமம் வேஜ் கொடுக்காமல் பிராடுதனம் செய்ய ஒத்துகொண்டார்கள். சங்கீதா தனக்கு மினிமம் வேஜ் கிடைப்பதால பொய் சொல்லி விசா வாங்கி அமெரிக்கா செல்கிறார். அங்கே போய் மினிமம் வேஜ் கொடுக்கலைனா லட்சகணக்கான டாலர் டேமேஜ் வாங்கலாம் என தெரிந்து பிளாக்மெயுலுக்காக வழக்கு போடுகிறார். இதில் சட்டத்தை மீறியது குற்றம் என்றால் தூதரக நடைமுறைப்படி தேவயானி, சங்கீதா இருவரையும் அமெரிக்கா கைது செய்து டிபோர்ட் செய்து இந்திய அரசிடம் புகார் கொடுத்திருக்க வேண்டும். சங்கீதாவுக்கு டிப்ளமடிக் இம்யூனிட்டி இல்லை என்பதால் அவரை தூக்கி ஜெயிலில் வைத்திருக்க வேண்டும்

இப்படி பணிப்பெண்ணுக்கு $4500 சம்பளம் கொடுக்கவேன்டும் என்பதே முதலில் முட்டாள்தனமான சட்டம். சட்டம் முட்டாள்தனமா இருக்கையில் மக்கள் அதை மீறதான் செய்வார்கள். மாட்டிக்காதவன் புத்திசாலி, மாட்டிகொண்டவன் குற்ரவாளி அவ்ளோதான்

Anonymous said...

//Anonymous Anonymous said...
I agree with the theme of the article. Looks like some of the inspirations came from http://contrarianworld.blogspot.in/2013/12/grow-up-india-law-is-law.html

Maybe it is coincidental.//

இந்த அனானிகளுக்கு இதே வேலையா போச்சு.

எப்ப எங்க அண்ணன் என்னத்தை எழுதுவாரு அவரை எப்படி நோகடிக்கலாம்னே சுத்தி திரியறது!

இந்தியத் தூதரகத்திற்கு முன் இருந்த பார்கிங்களை ப்ளிக் பார்க்கிங் ஆக சமீபத்தில் மாற்றியதற்கு பதிலடியாக அடியாக இதை செய்ய இருந்த நேரத்தில் ”கோபர்”கடை விவகாரம் நடுவில் வந்து விட்டதாக செய்தி வந்ததே அதை அண்ணன் படிக்கவில்லையா என்று அறிவிலிகள் யாரும் கேட்கக்கூடாது, அண்ணன் வியாழக்கிழமைகளில் பேப்பர் படிப்பதில்லை, அன்று மூளைக்கு ஓய்வுநாள்.

அண்ணா செஸ் பத்தி எழுதுங்க... படிக்க படபடப்போட இருக்கோம்.

பொற்கைப்பாண்டியன்
எ.அ.பா சதுரங்க கழகம்

Anonymous said...

//Anonymous Anonymous said...
I agree with the theme of the article. Looks like some of the inspirations came from http://contrarianworld.blogspot.in/2013/12/grow-up-india-law-is-law.html

Maybe it is coincidental.//

இந்த அனானிகளுக்கு இதே வேலையா போச்சு.

எப்ப எங்க அண்ணன் என்னத்தை எழுதுவாரு அவரை எப்படி நோகடிக்கலாம்னே சுத்தி திரியறது!

இந்தியத் தூதரகத்திற்கு முன் இருந்த பார்கிங்களை ப்ளிக் பார்க்கிங் ஆக சமீபத்தில் மாற்றியதற்கு பதிலடியாக அடியாக இதை செய்ய இருந்த நேரத்தில் ”கோபர்”கடை விவகாரம் நடுவில் வந்து விட்டதாக செய்தி வந்ததே அதை அண்ணன் படிக்கவில்லையா என்று அறிவிலிகள் யாரும் கேட்கக்கூடாது, அண்ணன் வியாழக்கிழமைகளில் பேப்பர் படிப்பதில்லை, அன்று மூளைக்கு ஓய்வுநாள்.

அண்ணா செஸ் பத்தி எழுதுங்க... படிக்க படபடப்போட இருக்கோம்.

பொற்கைப்பாண்டியன்
எ.அ.பா சதுரங்க கழகம்

Unknown said...

//K Selvan, If you live overseas you understand that a person earning 6500$ can never ever have a maid. That's the way it works in US, Europe, Singapore or Australia. There is nothing stupid about the law. Maids are expensive.period//

Maids are not expensive, Government makes them expensive. Why should a government bureaucrat determine the price of a service? Let free market determine it

kothandapani said...

to know more about devyani and her fathers political background you can visit savukku.com

Dhas said...

This is BS.

All said and done... If some kind FORM filling goof-up happened for our beloved ABDUL KALAM and if US authorities made him NAKED / FRISK / JAILED, will you write a post like this?

The outrage of the MEA is only because that this was kind of LAST STRAW on the back of a CAMEL!

PERIOD

Raman Kutty said...

The photo that shocked me above the article...

Anonymous said...

பொது மக்களின் ஏகோபித்த ஆதரவால் அண்ணன் எஅபாவின் இடுகை பாப்புலர் போஸ்ட் ஹிட் போஸ்ட் என்று இரண்டிலும் முதல் இடத்துக்கு போய் விட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

பித்தளைக்கைப் பாண்டியன்
எ.அ.பா சதுரங்க கழகம்

enRenRum-anbudan.BALA said...

K Selvan
//Maids are not expensive, Government makes them expensive. Why should a government bureaucrat determine the price of a service? Let free market determine it
//
Your argument has no substance. Many countries have passed minimum wage laws. Free market can't be allowed to decide everything in an economy. That will lead to chaos and you need to be aware of that basic fact.

This $4500 as mentioned in Devyani related articles, could be as specified in the Devyani-Sangeetha wage contract. But The highest minimum wage requirement in US now is $9.32 per hour. So, if the maid is asked to work for even 10 hours a day, her monthly wage would work out to approx $2800 only. This is the minimum to be paid, violation of which will invite criminal action against the employer.

Please refer these:
http://en.wikipedia.org/wiki/Minimum_wage_in_the_United_States
http://en.wikipedia.org/wiki/Minimum_wage_law

எ.அ.பாலா

Anonymous said...

மும்பையில் பஹ்ரைன் தூதர் ஒருவர் பெண்ணைத்தாக்கிய வழக்கில் , இந்தியா பஹ்ரைனிடம் முறையிட்டு, அவர் திருப்பி அழைக்கப்பட்டிருக்கிறார். இந்திய சட்டப்படி கைது செய்யப்படவில்லை.

அமெரிக்காவிற்கு சாப்ட்வேர் சேவகம் செய்பவர்களும் அங்கே குப்பை கொட்டுபவர்களும் எங்கே தங்கள் வசதி போய்விடுமோ என்று பயந்து அலறுவது புரிந்து கொள்ளக் கூடியதே.

கோபர்கடே எவ்வளவு தப்பானாவரா இருந்தாலும் இந்தியாவில் தான் தண்டவை கிடைக்கனும். வேற நாட்டில் இல்லை.

சமீபத்தில் கொடிய குற்றம் புரிந்த (ஹெல்த் கேர்) ரஷ்யர்களை ( டிப்ளமாடிக் இப்யூனிட்டி இல்லாத) சத்தமில்லாமல் பின் வாசல் வழியே அனுப்பியது தான் உங்கள் அமெரிக்கா.

அடிமைகளாய் இருப்பதும் சிலருக்கு சுகமாகத் தான் இருக்கும்.

அடிமை அனானி said...

///////////////////
அடிமைகளாய் இருப்பதும் சிலருக்கு சுகமாகத் தான் இருக்கும்.
///////////////
சொந்த நாட்டில் பல கோடி ஏழைகள் ஒரு வித அடிமைகளாக இருக்கும் நாட்டிலுள்ள.... அது குறித்து வெட்கமில்லாத ஒரு அடிமை, பிற அடிமைகள் குறித்து பேசுவது தகாது ;-)

k.rahman said...

ok. how about joshua walde. joshua killed an innocent man in kenya by his speeding car and escaped from the scene. the very next day US govt evacuated joshua and his family from nairobi. reports indicate not even financial compensation was given to that deceased man's family who happens to be sold bread winner for his family.

and as far as raymond davis case goes even though blood money is acceptable in pakistan why did US claimed that he is a diplomat when infact he is only a CIA contractor. and what about the fuss US made when an american national was caught stealing in singapore?

what's sauce for the goose is sauce for the gander.

Unknown said...

என்றென்றும் அன்புடன் பாலா,

மினிமம் வேஜின் விளைவு வேலைவாய்ப்பின்மை. இதோ இந்த வழக்கின் விளைவால் இனி பல என்.ஆர்.ஐகளும் குழந்தைகளை பார்த்துகொள்ள இந்தியாவில் இருந்து தாதிகளை வராவ்ழைக்க யோசிப்பார்கள். தாதிகளுக்கு மாதம் ஆயிரம் டாலர் (அறுபது ஆயிரம்) இந்திய ரூபாயில் சம்பளம் கொடுத்து சோறும், இருப்பிடமும் கொடுத்தால் மினிமம் வேஜ் சட்டபடி குற்றம். ஆனால் ஆறு மாதத்தில் 3.6 லட்சம் சம்பாதித்துக்கொண்டு அந்த தாதிகள் இந்தியா திரும்புவார்கள். ஒரு குடும்பமே வறுமையில் இருந்து மீட்கபடும்.

இப்படிப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களின் விளைவாக இனிமேல் அந்த வேலைகள் காலி. தாதிகளுக்கு வேலை இல்லை, தாய்களுக்கு பிள்ளைகளை பார்த்துகொள்ள தாதிகள் இல்லை. டே கேரில் குழந்தைகளை விட்டு மாதம் ஆயிரகணக்கில் கட்டிகொண்டிருக்க வேண்டும்.

சரி..ஆறுமாதம் பாரின் போய் 3.6 லட்சம் சம்பாதித்து வருவதற்கு பெயர் சுரண்டுதலா? ஆப்பர்சுனிட்டியா? இதில் சங்கீதாவுக்கு பாதிப்பு எனில் அவர் அந்த வேலையை வேண்டாம் என மறுத்து இருக்கலாமே? அந்த சம்பளத்துக்கு ஒத்துக்கொண்டு வேலைக்கு போய்விட்டு வழக்கு போடுவது எதற்கு? பிளாக்மெயிலை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

Unknown said...

என்றென்றும் அன்புடன் பாலா,

மினிமம் வேஜின் விளைவு வேலைவாய்ப்பின்மை. இதோ இந்த வழக்கின் விளைவால் இனி பல என்.ஆர்.ஐகளும் குழந்தைகளை பார்த்துகொள்ள இந்தியாவில் இருந்து தாதிகளை வராவ்ழைக்க யோசிப்பார்கள். தாதிகளுக்கு மாதம் ஆயிரம் டாலர் (அறுபது ஆயிரம்) இந்திய ரூபாயில் சம்பளம் கொடுத்து சோறும், இருப்பிடமும் கொடுத்தால் மினிமம் வேஜ் சட்டபடி குற்றம். ஆனால் ஆறு மாதத்தில் 3.6 லட்சம் சம்பாதித்துக்கொண்டு அந்த தாதிகள் இந்தியா திரும்புவார்கள். ஒரு குடும்பமே வறுமையில் இருந்து மீட்கபடும்.

இப்படிப்பட்ட முட்டாள்தனமான சட்டங்களின் விளைவாக இனிமேல் அந்த வேலைகள் காலி. தாதிகளுக்கு வேலை இல்லை, தாய்களுக்கு பிள்ளைகளை பார்த்துகொள்ள தாதிகள் இல்லை. டே கேரில் குழந்தைகளை விட்டு மாதம் ஆயிரகணக்கில் கட்டிகொண்டிருக்க வேண்டும்.

சரி..ஆறுமாதம் பாரின் போய் 3.6 லட்சம் சம்பாதித்து வருவதற்கு பெயர் சுரண்டுதலா? ஆப்பர்சுனிட்டியா? இதில் சங்கீதாவுக்கு பாதிப்பு எனில் அவர் அந்த வேலையை வேண்டாம் என மறுத்து இருக்கலாமே? அந்த சம்பளத்துக்கு ஒத்துக்கொண்டு வேலைக்கு போய்விட்டு வழக்கு போடுவது எதற்கு? பிளாக்மெயிலை தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

Unknown said...

//This $4500 as mentioned in Devyani related articles, could be as specified in the Devyani-Sangeetha wage contract. But The highest minimum wage requirement in US now is $9.32 per hour. So, if the maid is asked to work for even 10 hours a day, her monthly wage would work out to approx $2800 only. This is the minimum to be paid, violation of which will invite criminal action against the employer.//

Its not as simple as $9.32 times 10 hours a day. Over time for saturday, sunday, night shift, working more than 8 hours a day all amount to more than $4150 per month. I got that figure from a news paper

Anonymous said...

// அடிமை அனானி said...
///////////////////
அடிமைகளாய் இருப்பதும் சிலருக்கு சுகமாகத் தான் இருக்கும்.
///////////////
சொந்த நாட்டில் பல கோடி ஏழைகள் ஒரு வித அடிமைகளாக இருக்கும் நாட்டிலுள்ள.... அது குறித்து வெட்கமில்லாத ஒரு அடிமை, பிற அடிமைகள் குறித்து பேசுவது தகாது ;-)//


ஆப்பிள் தம்பி,

அமெரிக்காவில் ப்ளாட்பார்மில் தூங்குபவர்கள் கணக்கை எடுத்துப் பார். அன்னதானக் கூடங்களில் அண்டுபவர்கள் பற்றி ஞானி எழுதிய பயணக்கட்டுரையைப் படித்துப்பார்.

ஏழையப் பத்தி பேசுபவர்கள் ஒட்டுக்கூடப் போட்டிருக்க மாட்டார்கள். கடமையைச் செய்ய மாட்டார்கள், வாய் சொல்லில் வடை சுட எந்தத் தயக்கமும் இல்லை.

எளியவர்களுக்கு எந்த வகையிலாவது உதவியாய் இருந்திருக்காயா என்று எண்ணிப்பார். கண்டிப்பா துரும்பைக் கூட கிள்ளிப் போட்டிருக்க மாட்டாய்.

அதற்கு பிராயச்சித்தமாக எ.அ.பாவின் எல்லா பதிவுகளையும் படிக்கவும். அவராவது மூன்று சக்கர சைக்கிள் அது இதுன்னு எதுனா செஞ்சுகினுகீரார்.


எ.அ.பா அன்பர் படை
அமராவதிபுதூர்

Anonymous said...

A new convert is more likely to be an extremist. Bharara kind of people are 'new Americans'.

It is interesting to read views by American-Indians and (home based) Indians,
each trying to defend their land's action in Devyani's case.
Apparently the friends in the west are blinded by the imbibed
ego of the land and are seeing only the US version.
The false superiorrity complex feeds their inflated
ego while wrongly bashing indian judicial system.
They should 'Google' the wrong doings by the American system
and the administration. How come they have forgotten, among others,
the Guantanamo bay prison human rights violoation time and again.
To my friends in the west, I should affirm that typically the US
lawyers have been money-siphoning crooks and the doctors the leeches,
long before these creeped into the Indian system.. So our western friends should
stop singing praise despite many idiotic things that US has done over the years..
It would be wise if they delve into the real details of Devyani's case and respect the
legal course that was initiated in New Delhi much before the the US ployed due to
whatever vested inetersts it had.

அண்ணன் பானியில் ஒரு கட் அண்ட் பேஸ்ட்.
நன்றி டைம்ஸ் ஆப் இந்தியா

நர நாராயணஸ்வாமி

Anonymous said...

கோபர்கடே- அமெரிக்க ஸ்டேட் டிபார்மெண்ட் -இடையிலான இமெயில் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா சட்டம் எல்லாம் வளையவே வளையாது என்று ஜல்லியடித்த கிரீன்கார்ட் ஆசாமிகள் எங்கே ?

எ.அ.பா(எதற்கும் அடங்காத பாலா) கொஞ்சம் மூஞ்சிய காமிங்க.....

அங்கமுத்து

Venkatramanan said...

Friend(s)

Can you please publish the following thuglak article on Devyani Khobragade?

அமெரிக்காவில் கைதான தேவயானி – உண்மையில் நடந்தது என்ன?

​This is the only mainstream media /print article which I had seen boldly points her wrong of having a servant maid with very minimal wages.​
​That is the main reason I am requesting you.​

​Regards
Venkat​

Venkatramanan said...

Team!

Can you please update from http://thuglak.com/thuglak/main.php?x=curissue/prakash_26_12_2013.php ?

Regards
Venkat