பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 06, 2013

ஏ.கே. கங்குலி

தினமும் டீசல், பெட்ரோல் விலை உயர்வு என்ற செய்திகள் மாதிரி பாலியல் குற்றமும் இப்போது அடிக்கடி வருகிறது.

இணைய தள பிளாக்கில் அவர் எழுதிய கட்டுரையில் நீதிபதியின் பெயரை குறிப்பிடாமல் அவர் இந்த சம்பவம் பற்றி எழுதியது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட குழுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் அமைத்தார்.

அந்த குழு பெண் பயிற்சி வழக்குரைஞரிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே. கங்குலி நடந்துகொண்ட விதம் பாலியல் ரீதியானதுதான் என உச்ச நீதிமன்ற விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

சில கேள்விகள்:
1. சட்டம் படித்த அந்த பெண் ஏன் போலீஸுக்கு போகாமல் இதை முதலில் பிளாகில் எழுதினார் என்று தெரியவில்லை.
2. சம்பவம் நடந்தபோது, முன்னாள் நீதிபதியும் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு எந்த நடவடிக்கையையும் எடுக்க வேண்டியதில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றம் நடந்தது என்று தெரிந்தால் ஏன் அவர்களே போலீஸுக்கு 'suo moto' FIR பதிவு செய்ய சிபாரிசு செய்யக்கூடாது ? குற்றம் நடந்த போது அவர் உச்ச நீதிமன்ற பணியில் இல்லை என்றால் ஏன் விசாரணைக் குழு மாட்டும் அமைக்க வேண்டும் ?
3. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முன்னாள் இது Trial by Media மாதிரி இருக்கிறது. 2G கேஸுக்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா ?
4. இதே மாதிரி எல்லா வழக்குகளுக்கும் சீக்கிரம் தீர்ப்பு வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ?


எல்லோரும் அவர்களுடைய கிரகங்கள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

7 Comments:

Anonymous said...

adhukku thaaney idlyvadaiyil aasthaana jothidar(PERUNkulam) vaithu irukireerkal.... avarai vaithu idlyvadaiyin jaathagathai alasi oru pathivu ezhudhalaamey....

Anonymous said...

கோவையிலிருந்து சிவனேச செல்வன் :: சம்பவம் 2012-ம் ஆண்டு டிசம்பர் 24-ந் தேதியில் நடந்தது என்று புகார்தாரர் சொல்கிறார். பின் ஏன் ஒரு வருஷ கால தாமதம் ரிப்போர்ட் செய்ய ? ஒரு வருஷமாக என்ன செய்து கொண்டிருந்தார் ? ஒண்ணுமே புரியல !

Anonymous said...

சிவனேச செல்வன் கோவையிலிருந்து : சம்பவம் 2012 டிசம்பர் 24ல் நடந்தது என புகார்தாரர் தெரிவிக்கிறார். ஆனாலும் இதை தெரிவிக்க ஒரு முழு வருஷம் எடுத்து கொண்டுள்ளார். ஏன் / புகார் தெரிவிக்க ஒரு வருஷம் தேவையா ? எங்கேயோ இடிக்கிறதே !

Anonymous said...

Oru ponnu complaint panninal, udane FIR podanuma? oru vellai athu poiyaga irrundal?

R. J. said...

//4. இதே மாதிரி எல்லா வழக்குகளுக்கும் சீக்கிரம் தீர்ப்பு வந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் ?
// ithey maathiri vazakku vanthaal vijaarikka maattom enru S.C. judge thiirppu vazhangivittare!

2. ....அவர் உச்ச நீதிமன்ற பணியில் இல்லை என்றால் ஏன் விசாரணைக் குழு மாட்டும் அமைக்க வேண்டும் ? // athu ullangai (athaanga kai, kai) nellikkani - theriyavillayaa?

-R. J.

Anonymous said...


சட்டம் படித்த அந்த பெண் ஏன் போலீஸுக்கு போகாமல் இதை முதலில் பிளாகில் எழுதினார் //

அடங்கப்பா லோகத்துல நடக்குற எல்லா விஷயத்தையும் எழுதற இவ'க்கு இது தெரியலயாமா? போலிஸ் ஸ்டேசன்ல போய் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜையை விடுங்கள்... லோக்கல் மாஜிஸ்ரேட்டை பற்றி கேசு கொடுத்து பாருங்கள்... என்ன நடக்குதுன்னு தெரியும்.

எனக்கு தெரிந்த ஒரு பேராசிரியர் உடல் ஊனமுற்ற பெண் உட்பட பல பெண்களிடமும் தவறாக நடந்தது கொண்டான். M.tech படித்த வடஇந்திய பெண் ஒருவர் புகார் செய்தும் ஒரு மண்ணு நடவடிக்கையும் இல்லை. சென்னையில் அந்த ஆள் ஒரு வருடம் துணைவேந்தராகவே குப்பை கொட்டிவிட்டு ஓய்ந்து விட்டான். இந்த மாதிரி பெண்கள் பிளாக்கு ஆரம்பித்து புலம்பதான் முடியும்!

இதுக்கு ஒரே வழி சுப்ரீம் கோர்ட் சிபிஐ வைத்து கங்குலிஐ அல்லது அந்த பெண் - இருவரில் பொய் சொல்பவரை களி தின்க வைக்க வேண்டும். ஆனால் நம்ம நாட்டு வழக்கப்படி வழக்கை ஊத்தி மூடுகிறார்கள். பெண்களிடம் தப்பா நடந்தால் ஒண்ணும் ஆகாது, என்ஜாய் என பெரிய மனிசர்களுக்கு குறிப்பால் உணர்த்துகிறார்கள்!

Anonymous said...

சில மாதங்களுக்குமுன் சட்டை கையை மடித்துக்கொண்டு ஒரு வக்கீலுக்கு நீதிபதி பதவி வாங்கிகொடுக்க டிவியில் தினமும் தோன்றும் பேச்சாளர் சாகசித்திற்கு தயாராவது படக்காட்சி ஒளிபரப்பட்டது.அந்த வக்கீல் அல்லது நீதிபதி இப்போது புகார் கொடுத்தால் என்ன ஆகும்?