பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 05, 2013

கருத்து கணிப்பு - தமிழக அரசியல் கணக்கு

டில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதில் எந்த ஆச்சரியமும் இல்ல. காங்கிரஸ் ஒழிந்தால் போதும் என்ற மக்கள் எண்ணமும் மோடி போன்ற ஒருவர் பிரதமராக வந்தால் நன்றாக இருக்கும் என்ற ஆசையும் தான் இதற்கு காரணம். டில்லியில் பலர் க்யூவில் நின்று ஓட்டு போட்டு காங்கிரஸை வெளியே தள்ள முடிவு செய்துள்ளார்கள். வாழ்த்துகள்.

இதனால் தமிழகத்துக்கு என்ன லாபம் வர போகிறது என்று பார்க்கலாம். இந்த தேர்தல் வெற்றி 2014ல் வரும் தேர்தலுக்கு டிரைலர் மாதிரி என்று பலர் சொல்லுகிறார்கள். அது உண்மை தான். தமிழக தலைவர்கள் இதை பார்த்து தான் கூட்டணி கணக்கை போட ஆரம்பிப்பார்கள். அம்மா பற்றி தெரியாது ஆனால் கலைஞர் நிச்சயம் போட ஆரம்பித்திருப்பார்.

சோவின் மகன் திருமண விழாவில், மோடி மற்றும் கலைஞர் பங்கேற்க வாய்ப்புள்ளது என்றும், இந்த இரு தலைவர்களின் சந்திப்பு, திமுக.,பாஜ., கூட்டணிக்கு ஒரு பாலமாக அமையும் என்று ஒரு வதந்தி வந்துக்கொண்டு இருக்கிறது. ஜெயலலிதா மோடியை இதுவரை சந்திக்காமல் நழுவிவருகிறார் அதனால் பா.ஜ + திமுக கூட்டணி அமைந்தாலும் அமையலாம்.

இயற்கையான கூட்டணி என்று அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை மக்கள் நம்பினார்கள், ஆனால் மோடி, பிரதமர் வேட்பாளர் என, அறிவிக்கப்பட்ட பின், அம்மா தான் பிரதமர் என்று ஒரு குழு உசுப்பேற்றி 3வது அணி என்ற பேச்சு வர தொடங்கியது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணியுடன் போட்டி என்று முடிவு செய்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு இருக்க முடியாது. பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட பின் மோடியை பற்றியும், பா.ஜ., பற்றியும் விமர்சிப்பதை கலைஞர் தவிர்த்து வருகிறார் என்பதையும் பலர் கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

பா.ஜ + திமுக கூட்டணி அமைந்தால் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் ?

14 Comments:

Arun Ambie said...

பா.ஜ + திமுக கூட்டணி அமைந்தால் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் ?

நான் 49ஓ போடுவேன்...

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

எம் வரையில் மோடிக்காக மக்கள் இந்த கூட்டணிக்கு ஓட்டளிக்க அதிக வாய்ப்புள்ளது.

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

எம் வரையில் மக்கள் மோடிக்காக இந்த கூட்டணிக்கு ஓட்டளிக்க அதிக வாய்ப்புள்ளது.

Nanban said...

I agree with Arun, I am for 49O, if DMK has a alliance with BJP or the other way...

பொன்.முத்துக்குமார் said...

பா.ஜ.க நிற்கும் தொகுதிகளில் மட்டும் பா.ஜ.க-வுக்கும் தி.மு.க நிற்கும் தொகுதிகளில் எதிர்கட்சிக்கும் வாக்களிக்கப்படவேண்டும்.

தமிழகத்தில் தி.மு.க-வும் மத்தியில் காங்கிரஸும் குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று தேர்தல்களில் தலை எடுக்கமுடியாதபடி செய்யவேண்டும்.

Anonymous said...

//பா.ஜ + திமுக கூட்டணி அமைந்தால் தமிழ் நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போடுவார்கள் ?//

பா.ஜ.க நிற்கும் தொகுதிகளில் அதற்கும், மீதி தொகுதிகளில் எல்லாம் அதிமுகவிற்கும் ஓட்டுப் போட்டு. தேர்தலுக்குப் பின் அதிமுக + பாஜக கூட்டணியை உருவாக்கி மோடியை பிரதமராக்குவோம். திமுக, காங்கிரஸ் கூட்டணியை இல்லாமல் செய்வோம்.

அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் பாஜக + திமுக (ஸ்டாலின் அணி)க்கு ஓட்டுப் போட்டு ஸ்டாலினை முதல்வராக்குவோம்.

Anonymous said...

I agree with Pon. Muthukumar

kg gouthaman said...

பா ஜ க, தமிழகத்தைப் பொறுத்தவரை, ஐந்து அல்லது ஆறு தொகுதிகளில் மட்டும் போட்டியிட்டு, மற்ற தொகுதிகளில், காங்கிரஸ் / அதன் தோழமை கட்சிகளை (அப்படி யாரேனும் இருந்தால்) எதிர்த்து நிற்கின்ற வலுவான வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். பா ஜ க வைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவசியம் என்றால், கம்யூனிஸ்டுகள் தவிர்த்து மற்றவர்கள் ஆதரவு கொடுக்கத் தயங்கமாட்டார்கள்.
மத்தியில் காங்கிரசை வீழ்த்த, இதுதான் சரியான வியூகம் என்று நான் நினைக்கின்றேன்.

BalajiS said...

BJP should ally with vaiko and vijaykanth.

2G fame DMK alliance with BJP means Modi - not corrupt argument will be punctured.

Atlease Vaiko wont demand Telecom and pressurize BJP if they come to power.

Nilofer Anbarasu said...

M.D.M.K

Anonymous said...

if MODI+MK joins( like Cong (O) joined MK in 1977 to defeat Congress) same logic adopted in 1977 election to be tired.
To BJP candidates wherever they are contesting and in other places for a strong person who can defeat Congress.
if TINA opt for 49(O)

வெங்கி said...

பா.ஜ.க + தி மு க = ப ஜ கவுக்கு இருக்குற கொஞ்ச நஞ்சமும் ஒரேடியா போயிடும். 49 ஒ தான்...

Anony8 said...

Even if Jaya wants to ally with BJP, her DA case in Congress' State Karnataka holds her back.

Anonymous said...

It is good to vote to

If ADMK stands alone & BJP/DMK combines
---------------------------
ADMK - 40 seats ( TN + Pondi ) so that Madam Jaya can support BJP after elections

*******
IF ADMK + BJP + MDMK joins then they get all votes.

DMK Lost its credit due to false actions in EELAM WAR

DMK could have stopped the killings..they simply kept quiet.
-------------------------------


தமிழகத்தில் தி.மு.க-வும் மத்தியில் காங்கிரஸும் குறைந்தது இன்னும் இரண்டு அல்லது மூன்று தேர்தல்களில் தலை எடுக்கமுடியாதபடி செய்யவேண்டும்.
----------------------------------

VAIKO + BJP + ADMK is GOOD CHOICE