பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 04, 2013

ஏன் இந்த பழக்கம் ?

திருமணமான பெண்கள், கணவன் சாப்பிட்ட பின் அதே தட்டிலோ அல்லது இலையிலோ உண்ணுவார்கள். அது ஏன் என்று யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். ( தற்போது இந்த வழக்கம் அவ்வளவாக இல்லை ! )

பெண்களும் பதில் சொல்லலாம் !

27 Comments:

Vijayashankar said...

Just to make sure the spouse (either) gets used to the germs of the better half. Medical Miracle.... to get used to in a married life.

Anonymous said...

1) கணவன் எதை எதை எல்லாம் இலையில் மிச்சம் வைத்திருக்கிறாரோ அவையெல்லாம் அவருக்குப் பிடிக்காதவையா அல்லது அவற்றை தான் நன்றாகச் சமைக்கவில்லையா என்பதை அறிவது ஒரு காரணம்.

2) அவ்வாறு கணவனின் எச்சில் இலையில் உண்டால் தனக்கு ஆயுள் கூடும் என்ற (மூட) நம்பிக்கை.

3)கணவனில் பாதி மனைவி என்பதால் அதை உறுதிப்படுத்த.

இன்னும் “சூட்சுமமான” சில காரணங்கள் இருக்கக் கூடும். பாட்டியிடம் கேட்டுச் சொல்கிறேன்.

பேராண்டி பெருமாள்ராசு

Anonymous said...

கணவன், மனைவிக்கு சாப்பாடு கொஞ்சம் மிச்சம் வைத்து விட்டுப் போகும் வாய்ப்பு.

நம்பாதவர்கள், ஒரு தேக்கரண்டி சோற்றை மட்டும் 'மாற்றுப்பெண்ணு'க்கு இரவுச்சாப்பாட்டுக்கு வைத்து விட்டுப்போகும் மாமியார் பெற்ற மைந்தனுக்கு வாழ்க்கைப்படவும்.

இப்படிக்கு,
'பட்டவர்'.

Anonymous said...

Those days there won't be enough food for everyone, and the men used to eat first. This practice was to ensure that the womenfolk had enough food...this was told by my grand mom..

-priya

Anonymous said...

may be to avoid cleaning two plates

Anonymous said...

இலையில் மீதம் இருப்பதைக்கொண்டு கணவனுக்கு பிடித்தது, பிடிக்காததை தெரிந்து கொள்வதர்காக என்று எங்கோ படித்த ஞாபகம்!

- Ananth

dr_senthil said...

புதிதாக மணமான தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் புரிதலுக்கான முதல் படி. தன் கணவருக்கு எந்த உணவு பிடிக்கும் எதை அவர் அதிகம் மீதி வைக்கிறார் என்பதை பேசி கொள்ளாமல் "இலை" அறிந்து புரிந்து கொள்ள இது அமைகிறது. கூட்டு குடும்பகளில் தன் மனைவிக்கு சமைத்த உணவில் தேவையான அளவு கிடைக்கவும் கணவன் அதிகம் கேட்டு வாங்கி மீதி வைத்து செல்வதுண்டு.

Suresh said...

Not sure if this is the reason. But I heard it from a Elderly person. "It's because of the Extended family. Since there are lot of people in a family and only the Males in the whole family eat first. So the husbands take extra food / sides. They will leave this as a backup for their Spouses who can get at least some (Poriyal / Kuttu, etc...)

Raja said...

Illaikku Panjamaa Irukkum :)

லோகு said...

just to know which item husband likes more..... so that they can make that item frequently

Anonymous said...

selavu micham....

மகேந்திரன்.ந said...

உறுதியாக தெரியாது. பட், சொல்லப் படுவது என்னவென்றால், கணவன் எதை விரும்பி சாப்பிடுகிறான், எதை மீதம் வைக்கிறான் என்பதை தெரிந்து கொண்டு அடுத்த முறை அவனுக்கு பிடித்த மாதிரி சமைப்பதற்காம்.

ஃபன்னி.

Anonymous said...

Just to avoid cleaning two seperate plates..:)

Avinash Srinivasan said...

யாரோ சொல்லி கேள்விப்பட்டது...

கணவன் சாப்பிட்ட இலை/தட்டில் மனைவி சாப்பிடும் போது, அவர் சாப்பிட்ட/மிச்சம் வைத்த உணவு வகைகளிலிருந்து அவருடைய விருப்பு வெறுப்புகளை எளிதாக அறியலாம்.

Akilan said...

To Avoid cleaning two seperate plates...:)

D. Chandramouli said...

"Or Uyir, Eerudal"?

poornam said...

ஓரே பாட்டிலில் ரெண்டு ஸ்ட்ரா போட்டுக்குடிக்கிற பழக்கத்தின் முன்னோடி. அதன் நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க வடிவம்.

சிந்திப்பவன் said...

இரட்டை இலை கூடாதென்பதால்..

அப்படியே "மனிதர்கள் ஏன் இலைதழைகளை உடுத்துவதை விடுத்து போத்திஸ்,சென்னை சில்க்ஸ் க்கு மாறினர்?" என்று கூட ஒரு சர்வே நடத்தலாமே!

Anonymous said...

என்ன ஒரு பத்தாம் பசலித்தனமான கேள்வி என்று ஒருத்தர் கூட கண்டிக்கவில்லை. பிற்போக்குத்தனம் என்று சாடவில்லை. ஆச்சர்யமாக இருக்கிறது.

இதே பதிவை , செஸ் பற்றி எளிய தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் எழுதும் ஒரே எழுத்தாளரும் கிரிக்கெட் பதிவுகளின் முடிசூடா மன்னன், பார் போற்றும் எங்கள் அண்ணன் எ.அ.பா எழுதி இருந்தால் இவ்வளவு நேரத்திற்கு பதிவுலகமே சுனாமி போல எழுந்திருக்கும்.

எல்லாம் நேரம்.....

சபாபதி

ஜெ. said...

ஒரு பின்னூட்டம் எழுதியவர் - ‘பட்டவர்’. மனசு வலித்தது. - ஜெ.

அரவிந்த் said...

இலை மிச்சம். தட்டுனா, ஒரு தட்டு கழுவுற வேலை மிச்சம்.
சமைச்சது ஒத்துக்குமா இல்லையான்னு சோதிக்க..

Anonymous said...

Male chauvinism of yester years. Dont seek deeper meanings!

இராஜராஜேஸ்வரி said...

கணவர் சாப்பிட்ட உடனே மனைவி வேலை என்று சாப்பிட நேரமில்லாமல் இருப்பாள்..

இலை காய்ந்துவிடாமல் உடனே சாப்பிட உதவ ..

மனைவியை மனதில் சாப்பிடும் போதாவது நினைக்கவைக்கும் ...!

Anonymous said...

Don't agree with comments about finding husband's preferences. If that is the case why would they need to do that their entire life? I would say purely "male chauvinism" so that the women folk get to eat only if something remains. --Ravi.

Erode Nagaraj... said...

கணவனுக்கு எது பிடிக்கும் பிடிக்காதுன்னு தெரிஞ்சுக்க, இலையைப் பார்த்தால் போதாதா, அதிலேயே சாப்பிடணுமா? கடைசியாக மோர் சாதம் - ஊறுகாய் மீதமுள்ள அடையாளத்தை வைத்து, நம்ம புருசன் ஒரு சாம்பார் குடியன்னு முடிவு பண்ணுவாளா? :)

மனைவிக்கு எதெல்லாம் பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள கணவர் இதேபோல் எதேனும் முயற்சி செய்வாரா?

இருவரும் தங்களுக்குள் எச்சில் பார்ப்பதில்லை என்பதே விஷயம். இலைக்குப் பதிலாக ஐஸ்க்ரீம் ஸ்பூன், கப், இளநீர் என்று மாறலாம். எல்லாரும் பார்க்கவா நான்கு சுவற்றுக்குள்ளா என்பதில் இருக்கு விஷயம்.

Anonymous said...

Ours is a extended family and some times my wife used to eat in plate. As mentioned in the other posts, my wife will sense that good things will be exhausted when her turn comes, she will add more to y plate, when I say that is too much, her reply will be, leave it for me.
Dev

Anonymous said...

So, the widows don't have that advantage!!