பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 03, 2013

அப்படியா ?

‘நேருவுக்குப் பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் நாட்டின் தலையெழுத்து மாறியிருக்கும்’ என்று மோடி பேசியதை விமர்சித்து, ‘மறக்கப்பட்ட வாக்குறுதி’ என்ற கட்டுரையை எழுதினார் ‘ஹிந்து’ பத்திரிகையாளர் வித்யா சுப்பிரமணியம். அந்தக் கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விமர்சித்து பட்டேல் எழுதிய கடிதத்தைப் பற்றி ஆதாரபூர்வமாகக் குறிப்பிட்டிருந்தார். இதனால் கடுப்படைந்த சங்கக் குடும்பத்தினர் பத்திரிகையாளருக்கு அலைபேசி மூலமாக அசிங்கமாகப் பேசி கொலை மிரட்டலும் விட்டிருக்கின்றனர். வித்யா காவல்துறையில் புகார் செய்ய தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. எந்தெந்த நம்பர்களில் இருந்து மிரட்டல் வந்தது என்று பார்க்கும்போது பெரும்பாலான அழைப்புகள், தமிழ் நாட்டிலிருந்து அதுவும் கோவையிலிருந்து வந்திருப்பது தெரியவந்தது. இதுபற்றிய விவரங்களை தில்லி காவல்துறை தமிழக அரசுக்கு அனுப்பியிருந்தும் கோவை காவல்துறை இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்வதில் ஆர்வம் காட்டாமல் சுணக்கம் காட்டுகிறது என்கிறார்கள். இது என்ன அரசியலோ?

நன்றி: கல்கி

'சமூக வலைதளங்களை இளைஞர்கள் சரியான விதத்தில் கையாளுகிறார்களா?''

'' 'பெரும்பாலும் இல்லை’ என்கிறார்கள் என் நண்பர்கள். வியாபாரத்துக்கு உரியதாக அது மாறிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். எனக்கென்று ஒரு தளம் இருக்கிறது. www.prapanchan.in - முடிந்தால் பாருங்கள். பயப்பட வேண்டாம். நான் உதவி கேட்பது இல்லை!''


''தமிழ்ச் சூழலில் முழுநேர எழுத்தாளராக இருப்பது சரியா... தவறா?''

''அது ஒரு தற்கொலை முயற்சி! மக்கள், இன்னும் இலக்கியத்தையும் இலக்கிய ஆசிரியரையும் அடையாளம் காணவில்லை. நாலாம் தரங்களில் அவர்கள் திருப்தி காண்கிறார்கள். அவர்களின் சேகரிப்பில் பாரதி, புதுமைப்பித்தன் முதல் இன்றைய நல்ல எழுத்தாளர்கள் இல்லை. என்னிடம் வருகிற இளைஞர்கள் பலரை ஊருக்கு அனுப்பி இருக்கிறேன். 'அவமானப்படாமல், சோற்றுக்கும் ஒரு கூரைக்கும் ஏதோ ஒரு வேலையைச் செய்துகொண்டு, பிறகு இலக்கியம் படையுங்கள்’ என்றே சொல்கிறேன். வாழ்க்கைக்கு உத்தரவாதம் தேடிக்கொள்ளாதவர்கள், நல்ல இலக்கியத்தைக் குறைவாகவே படைக்க முடியும். எதன் பொருட்டு பட்டினியையும் அவமானத்தையும் எழுத்தாளன் ஏற்கிறானோ, அந்தப் படைப்புக் காரியமே சாத்தியமாகாமல் போகும். முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது; பசியோடு காதலிக்கவும் முடியாது.

ஒரு நல்ல எழுத்தாளன், பட்டினியால் சாவது இல்லை; அவமானத்தால் சாகடிக்கப்படுகிறான். தமிழ்ச் சூழல் இப்போது பயங்கரமானதாக மாறிக்கொண்டிருக்கிறது. சாதி, குழு மனப்பான்மை, துரோகம், புறக்கணிப்பு போன்றவை, படைப்புலகில் இன்று கொசுக்கள் போல அடர்ந்து இருக்கின்றன. கவசங்களோடும் ஆயுதங்களோடும் வாழவேண்டிய காலம் சமீபத்துக் கொண்டிருக்கிறது!''

நன்றி: ஆனந்த விகடன், பிரபஞ்சன் பதில்கள்.


2 Comments:

Anonymous said...

mrs. vidya suramanyan, the hindu, congress and all intelluctuals have conveniently forgotten Mahatma gandhi's advice to congress to dissolve congress party.
congress is stiil ruling the country in a corrupt manner.
WHY THIS DOUBLE STANDARDS.
SO MUCH FOR OUR SENSE OF FAIR PLAY AND NEUTRALITY.

Anonymous said...

appadi podu...... anony comment superuuu...