பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 20, 2013

நாக்கு முக்க..! நாக்கு முக்க.!

கப்பல் முழுகும் போது முதலில் தப்பிப்பது அதில் உள்ள எலிகள்தான் என்று கூறுவார்கள். திமுக இனி காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்று சொன்னபோது இது தான் நினைவுக்கு வந்தது.

இதை ஏன் இவ்வளவு தாமதமாக அதுவும் இன்னும் தேர்தலுக்கு 100 நாட்களே இருக்கும் போது இதை கலைஞர் அறிவித்தார் என்று பார்த்தால் ஒரு வாரத்துக்கு முன்தான் தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்ற நியூஸ் வந்தது.

சரி பிஜேபிக்குத் தாவலாம் என்றால் அங்கே வாஜ்பாயி இல்லையே என்று தவிக்கும் கலைஞர் தற்போது மோடி ரொம்ப நல்லவர் வல்லவர் என்று ஆங்கில தினசரிக்கு பேட்டி கொடுத்துவிட்டு மாலையே பிஜேபியுடன் கூட்டணி கிடையாது என்றும் அறிவித்துவிட்டு முஸ்லீம் ஓட்டுக்களைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்துள்ளார். இலங்கை பிரச்சனை, சேது பிரச்சனைக்கு பாலுவை டெல்லிக்கு அனுப்பிவிட்டு கனிமொழி பிரச்சனைக்கு தானே டெல்லிக்கு சென்று சோனியாகாந்திக்கு மலர் கொத்து கொடுத்தார்!

இலங்கை பிரச்சனை, கனிமொழி, ராசா கைது என்று பல பிரச்சனைகளை அடுக்கிவிட்டு இனிமேல் உங்களுடன் உறவு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார். கொஞ்ச நாளைக்கு முன் கனிமொழிக்கு எம்.பி பதவி கிடைக்க வேண்டும் என்று மணிமேகலையை அசிங்கப்படுத்தினார். அவரும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஐந்து பேரை திமுகவிற்கு ஓட்டுப் போட்டு விஜயகாந்தைக் கழட்டிவிட்டார்.

தற்போது அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகளும் காங்கிரஸ், பிஜேபியுடன் கூட்டணி இல்லை என்ற நிலையில் பின்னவர்கள் இருவரும் கேப்டன் பக்கம் சாய முல்வார்கள். அதிமுகவிற்கு அம்மா தான் எல்லாம், அவர் தான் இந்தியாவின் பிரதமர் ஏன் அமெரிக்காவின் பிரதமர் கூட என்று சொல்லிடுவார்கள்.

தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் அதிமுக கடைசி நிமிடத்தில் பிஜேபியுடன் கூட்டணி என்று அறிவித்து அதிகபட்சமாக 8 சீட்களைக் கொடுத்தாலும் கொடுப்பார்கள். இன்றைய நிலைமையில் கூட்டணியோ தனித்தோ எப்டிப் போட்டி போட்டாலும் திமுக 10 இடங்களில் வெற்றி பெற்றால் பெரிய விஷயம். அதற்கு கீழே கிடைத்தால் பொது மக்களாகிய நாம் நிச்சயம் பரம ஸந்தோஷப்பட வேண்டும்.


தற்போது நிம்மதியாக இருக்கும் ஒரே நபர் பிரணாப் முகர்ஜி தான். நல்ல வேளை ஜனாதிபதியாக்கி விட்டார்கள். இல்லையென்றால், இப்போ மெட்ராஸ் வரும் போது கோபாலபுரத்திலோ சிஐடி காலனியிலோ கலைஞரைத் தாஜா செய்ய வேண்டியிருந்திருக்கும். தப்பித்தார்.

6 Comments:

kothandapani said...

கலைஞர் எடுத்துள்ள முடிவு அவர் எப்பேர்பட்ட ராஜதந்திரி என்று காட்டுகின்றது. அதனால் தான் மக்கள் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும் . மத்தியிலோ மாநிலத்திலோ ஆட்சியில் தொடர்ச்சியாக உள்ளார்.வரட்டு கொள்கை என்று சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்காது போனால் கட்சியை மதிமுகாவோடு இணைத்து விடலாம். (மூழ்கின்ற நிலையில் இருக்கும் திமுக தப்பிக்க பார்க்கின்றதே என்ற உங்கள் ஆதங்கம் புரிகின்றது)ஆமாம் ஊழலுக்கு எதிராக கூப்பாடு போடும் பிஜேபி யேய் என்ன சொல்லுது..

DMK வோடு கூட்டு இல்லை என்றா ... DMK கூட்டணிக்கு வந்தால் consider பண்ணுவோம் என்றுதானே.

DMK வின் வெற்றி தோல்வி அம்மா கையில்தான் உள்ளது . DMK வை வளர விடாமல் அவர்கள் ஓய மாட்டார்கள் போல் உள்ளது.

Anonymous said...

எப்புடி இருந்த திமுக இப்படி ஆயிடுத்து எப்புடி இருந்த இட்லி வடை இப்படி ஆளில்லாத டீக்கடையா மாறிடுத்து

லோகத்தில எல்லாத்துக்கும் ஒரு நேரம் தான்

vaidya said...

Unless either stalin or Azhagiri take the Flag from Kalignar, there is no furture for DMK or its members.and other DMK x union minsiters somehow settled in their life.

vaidya said...

Left over the DMK< is only Stalin for Part of tamilnadu in chennai and Azhagiri balance part of Tamilnadu from Madurai who have save DMK from furrher fall.

Anonymous said...

@Vaidya.

1.2016 தேர்தலில் அம்மாவின் "நல்லாட்சி"காரணமாக தான் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையில் உள்ள கருணா அதுவரை திண்ணையை காலி செய்ய மாட்டார்.

2.அவர் இருப்பதால்தான் அம்மா ஓரளவு ஜனநாயக கோட்பாடுகளை பின்பற்றுகிறார்.அவர் இல்லையென்றால் அம்மாவின் உண்மையான சொரூபம் மக்களுக்கு தெரிய வரும்..தாங்க மாட்டார்கள்.

3.கருணா மக்களுக்கு எதிரி என்றால் அம்மா ஜனநாயகத்திற்கு எதிரி,இவர்கள் இருவருமற்ற ஆட்சி தமிழகத்தில் என்று அமைகிறதோ அன்றே தமிழகம் பிழைக்கும்.

Anonymous said...

This article is more of speculation for hatching ADMK - BJP alliance. JJ is not a fool to give 8 seats to BJP when the BJP has just 2% vote share in Tamilnadu. She knows BJP's strengh very well since, she only introduced BJP to the deep pockets of Tamilnadu in 1998 and in return BJP had not honoured their commitment to her. First of all, BJP shouldn't had announced its PM candidate before forming the alliance.