பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 17, 2013

அப்பாடா !

கேள்வி:– பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி கிடையாது என்று பொதுக்குழுவில் கூறப்பட்டதே? அப்படி என்றால் தி.மு.க. தனித்து போட்டியிடுமா?

கலைஞர் பதில்:– ஆமாம். தி.மு.க. தனித்து போட்டியிடும்.


கச்சேரியில் தனி ஆரம்பிக்கும் போது மக்கள் எழுந்து போவார்கள். அதே போல தான் இங்கே நடக்க போகிறது.


கேள்வி:– தி.மு.க. தலைமையில் 3–ம் அணி உருவாவது போல் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர்மொய்தீன் கூறியுள்ளாரே?

கலைஞர் பதில்:– அவர் சொன்னதற்கு மகிழ்ச்சி. 3–வது அணி அமைய வாய்ப்பு உள்ளது.

சும்மா ஒரு சால்வையை போர்த்திவிட்டு இப்படி பேசியதற்கு இவருக்கு ஒரு சீட்டு உண்டு, இல்லை என்றால் இதயத்தில் நிச்சயமாக !


3 Comments:

Anonymous said...

உதய ’சூரியனு’க்கு, எப்போதுமே ‘சந்திரன்’ எட்டாம் இடம். பாவம்.முதலில்
எம் ஜி ராமச்சந்திரன், முக்கியமான தருணத்தில் கே கே எஸ் ராமச்சந்திரன். இப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் இடைத்தேர்தல் என்னும் குண்டைப் போட்டுவிட்டார்! -மணா

பெசொவி said...


' மோடி நல்ல மனிதர் '- கருணாநிதி பாராட்டு
http://www.dinamalar.com/news_detail.asp?id=877450

Gopal said...

திமுக 10 இடங்களில் வெற்றி பெற்றால் பெரிய விஷயம் என்று சொல்லி எஙகளை பதற வைக்கலாமா? என் இந்த கொலைவெறி ?