பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 16, 2013

காங்கிரஸ், பாஜகவுடன் கூட்டணி இல்லை: கருணாநிதி

பொதுக்குழுவில் காலையில் இருந்து பேசிய அனைவரும் நரேந்திர மோடி மீது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர். ஆனால் எனக்கோ (கருணாநிதி), அன்பழகனுக்கோ, ஸ்டாலினுக்கோ அந்த ஈர்ப்பு ஏற்படவில்லை.

நரேந்திர மோடிக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம். அந்த விளம்பரங்களையே பார்த்து நீங்கள் (திமுகவினர்) அதிர்ச்சி அடைந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

வாஜ்பாயோடு முடிந்துவிட்டது: பாஜகவுடன் நாம் கூட்டணி வைக்காதவர்கள் இல்லை. வாஜ்பாய் போன்ற மாபெரும் தலைவர்கள் இருந்தபோது பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். அமைச்சரவையில் இடம்பெற்றோம்.

கன்னியாகுமரியில் காமராஜருக்கு மணிமண்டபம் வைக்க வேண்டும் என்று வாஜ்பாயிடம் கேட்டோம். அப்போது வாஜ்பாய் அருகில் இருந்த அதிகாரிகள், கடற்கரை அருகில் வைப்பதால் இயற்கை சூழல் பாதிக்கப்படும். அதனால் அங்கு வைக்க வேண்டாம் என்று கூறினர்.

ஆனால் காமராஜருக்கு அந்த இடத்தில் வைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினோம். அதை வாஜ்பாய் ஏற்றுக்கொண்டார். அப்போது இருந்தது மனிதாபிமான பாஜக தலைமை. தற்போது அப்படிப்பட்ட பாஜக இல்லை.

ஒரு கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு முன்பு யார் தலைவர் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை வாஜ்பாயோடு பாஜகவின் வரலாறு முடிந்துவிட்டது. பாஜகவுடன் கூட்டணி இல்லை.

நன்றிகெட்ட காங்கிரஸ்: இப்படிக் கூறுவதால் காங்கிரஸýடன் கூட்டணி என்று நினைத்துவிடாதீர்கள். ஜீரோ ஜீரோ என்று ஏகப்பட்ட ஜீரோக்களைப் போட்டு அலைக்கற்றை ஊழலில் திமுக ஈடுபட்டதாக காங்கிரஸ் நம்மைச் சிக்க வைத்தது.

ராசா, கனிமொழி ஆகியோரை சிறையிலடைத்தனர். அந்தக் காயம் நீங்கா வடுவாக நம் மனதில் உள்ளது.

இது தனிப்பட்ட ராசாவுக்கு ஏற்பட்ட காயம் இல்லை. திமுகவுக்கே ஏற்பட்ட காயமாகும்.

சிபிஐ யார் கையில் இருக்கிறது. அதை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்பதையெல்லாம் அறிவோம்.

எனவே, நன்றிகெட்ட காங்கிரúஸாடு மீண்டும் கூட்டணி அமைக்கமாட்டோம். தனித்தே கூட போட்டியிடுவோம். ஆனால் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் தனித்து நின்றாலும் வெற்றிபெற முடியும்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவிடம் உங்கள் (திமுகவினர்) கருத்துகளைத் தெரிவியுங்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதையெல்லாம் அந்தக் குழுவினர் முடிவு செய்து கூறுவர் என்றார் கருணாநிதி.

நன்றி: தினமணி.

நன்றி: கலைஞர்

7 Comments:

Sundupluseli said...

அப்பாடா

Anonymous said...

போடுகிற பதிவுகள் அதற்கு எழுதுகிற கேவலமான மஞ்சள் கமெண்ட்கள் என டெல்லி காங்கிரஸ் மாதிரி தேய்ந்து கொண்டிருக்கிற இட்லியுடன் இனி கூட்டணி வைக்க வாசகர்கள் விரும்புவார்களா ?

மஞ்சள் கமெண்ட்கள் ரொம்ப ரொம்ப மொக்கையா இருக்குது.

Anonymous said...

ராசா, கனிமொழி ஆகியோரை சிறையிலடைத்தனர். அந்தக் காயம் நீங்கா வடுவாக நம் மனதில் உள்ளது.

இது தனிப்பட்ட ராசாவுக்கு ஏற்பட்ட காயம் இல்லை. திமுகவுக்கே ஏற்பட்ட காயமாகும்.
AGREED.
WHERE WAS THIS BRAVDO WHEN HIS OWN SON STALIN WAS BEATEN BLACK AND BLUE IN 1975/76 UNDER MISA. CHITTIBABU LOST HIS LIFE TRYING TO SAVE STALIN.
EVEN BEFORE THE WOUNDS COULD HEAL KARUNANIDHI MADE AN ALLIANCE WITH CONGRESS/INDRA GANDHI IN 1977 TELLING
"NEHRUVIN MAGALE VARUGA; NILAIYANA AATCHI THARUGA"
IF THERE IS ONE SHAMELESS MAN IN INDIAN POLITICS IT IS KARUNANIDHI. FOR THE SAKE OF POWER HE WILL SACRIFICE ANYTHING .
NOW HE IS SEEING CONGRESS FUTURE AS ZERO AFTER THE NORTHERN ELECTIONS.SO ALL THIS TALL TALK.
HAD CONGRESS WON HIS TONE WILL BE DIFFERENT.
HE WOULD HAVE BEGGED HIS WAY FOR AN ALLIANCE FORGETTING TAMILS/SPECTRUM ETC.
EVEN NOW IT IS NOT TOOLATE. KANIMOZHI'S RAJYASABAH SEAT IS A CONGRESS GIFT/CHARITY. SHE CAN RESIGN IT AND TELL CONGRESS WE DONT WANT YOUR CHARITY.
WILL DMK/KARUNANIDHI DO?
WILL DMK/KARUNANIDHI SWEAR THAT THEY WILL NEVER IN FUTURE ALIGN WITH "DROHI" CONGRESS.

ஜெ. said...

கன்யாகுமரியில் குறிப்பிட்ட இடத்தில் சிலை வைப்பது ‘சட்டப்படி, நியாயப் படி சரியில்லை’ (தினமலர்) என்று அதிகாரிகள் சொன்னபின்பும் இந்த மு.க. வாஜ்பேய் அவர்களை நிர்பந்தித்தாராம், அதை நாம் பாராட்ட வேண்டுமாம். இந்த சட்ட மீறல்களை காங்கிரஸ் செய்த வரையில் கூட்டணி, இப்போது வேண்டாம்! - ஜெ.

Anonymous said...

1)
// பொதுக்குழுவில் காலையில் இருந்து பேசிய அனைவரும் நரேந்திர மோடி மீது மக்களுக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.//

//மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும். அந்தக் குழுவிடம் உங்கள் (திமுகவினர்) கருத்துகளைத் தெரிவியுங்கள். எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பதையெல்லாம் அந்தக் குழுவினர் முடிவு செய்து கூறுவர்//

சம்பந்தம், ஏதோ இடிக்குதே.. ..

# நன்றி "அபூர்வ சகோதர்கள் - 1989"
---------------------------------------

2) // அப்போது வாஜ்பாய் அருகில் இருந்த அதிகாரிகள், கடற்கரை அருகில் வைப்பதால் இயற்கை சூழல் பாதிக்கப்படும். அதனால் அங்கு வைக்க வேண்டாம் என்று கூறினர்.

ஆனால் காமராஜருக்கு அந்த இடத்தில் வைப்பதுதான் சிறப்பாக இருக்கும் என்று வலியுறுத்தினோம். //

அதான... இயற்கை கூட நல்லா இருக்க உட்ருவோமா ?

Anonymous said...

Mr Mk had alliance with Indira Congress in 1980 not 1977-In 1977 due to Janata Leaders & to avoid splitting of anti cong votes Janata had a alliance with DMK knowing well it was dismissed for corrupt practices at that time ( veeranam etc-even Mr Mk accepted saying nunikombil then (honey) edukkumbothu muzhangaiyl nakkathan vendum) MGR -Cong alliance
won almost all seats in TN except Chennai central and 1 more

Anonymous said...

இரண்டாயிரத்துப் பதின்மூன்றாம் ஆண்டு ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு, கனிமொழிக்கு, காங்கிரஸ் ஆதரவு கேட்டுப் பெற்றாரே அப்போ காங்கிரசின் துரோகம் நினைவுக்கு வரவில்லையா? மணிமேகலை, மணிமேகலை!