பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 11, 2013

நான்கு மாநிலத் தேர்தல்களும் தமிழ் நாட்டுக் கூட்டணியும் - 3 - விஸ்வாமித்ரா


இந்த வெற்றிகளுடன் மட்டுமே மோடியை பிரதமராக்க வேண்டிய நாட்டை ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து விடுவித்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டிய் நீண்ட பணி முடிந்து விடவில்லை. அவர்களின் கடுமையான உண்மையான சவாலான பயணம் இனிதான் துவங்கவிருக்கிறது அதற்கு இந்த வெற்றிகள் ஒரு கிரியாவூக்கியாக இருக்கும். மோடியின் அயராத உழைப்பினாலும் அபாரமான பேச்சாற்றலினாலும் மக்களுடன் தன்னை தொடர்பு படுத்திக் கொள்ளும் திறமையினாலும் குஜராத்தில் அவரது சாதனைகளினாலும் பெரும்பாலான இந்திய மக்களிடம் அவர் நெருக்கமாகச் சென்றடைந்திருக்கிறார் என்பதை இந்த வெற்றிகளும் அவருக்குத் தொடர்ந்து கூடி வரும் பிருமாண்டமான கூட்டங்களும் உணர்த்துகின்றன.

மூன்று மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்து டெல்லியில் ஆட்சியை பிடிக்க வாய்ப்புகளுடன் முன்ணணியில் இருக்கும் பி ஜே பி செய்ய வேண்டியது என்ன?ஆனால் அவரது அயராத அதி சக்தி பிரசாரங்கள் மட்டுமே பி ஜே பி க்கு வெற்றியைப் பெற்றுத் தந்து விட முடியாது என்பதை டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஏற்படுத்திய தடையினாலும் சட்டிஸ்கரில் அனுதாப அலை உருவாக்கிய எதிர்ப்பினாலும் பி ஜே பி உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் செல்ல வேண்டிய கடினமான சவால்கள் நிறைந்த பாதை இனிமேல்தான் துவங்கவிருக்கிறது.இந்த நான்கு மாநிலங்களின் லோக்சபா சீட்டுக்கள் மூலமாகவும் தேர்தலின் பொழுது மோடி அலை உருவாக்கவிருக்கும் எதிர்பார்ப்பு காரணமாகவும் பி ஜே பி க்கு கிட்டத்தட்ட ஒரு 60 இடங்கள் வரை இந்த வெற்றிகளின் மூலமாக இப்பொழுது உறுதி செய்யப் பட்டுள்ளன என்று இந்தத் தேர்தல்களின் முடிவுகள் உணர்த்துகின்றன. ஆனால் அவர்கள் இன்னும் 200 சீட்டுகளுக்கு வழி கண்டு பிடிக்காதவரை வெற்றி அருகில் கிடையாது என்பதை உணர வேண்டும்.

1. ஏற்கனவே ஜெயித்த இந்த 3 மாநிலங்களிலும் மிகச் சிறப்பான ஆட்சியை தொடர்ந்து வழங்க வேண்டும். எந்தவிதமான பிரச்சினைகளிலும் அதன் மந்திரிகள் சிக்கிக் கொள்ளக் கூடாது. ம பி, ராஜஸ்தான், சட்டிஸ்கர் டெல்லியில் மத்தியிலும் பி ஜே பி ஆட்சிக்கு வர நீங்கள் ஆதரவளித்தால் மட்டுமே மாநிலங்களில் எங்களால் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்பதை மக்களிடம் தொடர்ந்து சொல்லி அவர்கள் அனைவரும் பெரும் அளவில் மத்தியில் மோடிக்கு ஆதரவளிக்கும் விதமாக தயார் செய்து வர வேண்டும். அது முதல் படி.

2. இந்தத் தேர்தல்களில் ஏற்கனவே குறைந்த வித்தியாசங்களில் தோற்ற பாராளுமன்றத் தொகுதிகளை அடையாளம் கண்டு அங்கு நல்ல வேட்ப்பளர்களை நிறுத்த வேண்டும். அந்தத் தொகுதிகளின் குறைகளை உடனடியாக நீக்கி அந்த மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முனைப்பாக முயல வேண்டும் இது இரண்டாவது படி.

3. வட மாநிலங்களான டெல்லி, குஜராத், ராஜஸ்தான், ம பி,பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே பி ஜே பி ஓரளவுக்கு வலுவான நிலையில் உள்ளன. அந்த மாநிலங்களின் முழு இடங்களையும் வெற்றி பெற தீவீரமாக முயல வேண்டும்.


4. உ பி, பீஹார், ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ஜார்க்காண்ட் ஆகிய பிற வட மாநிலங்களில் பி ஜே பி யின் பெரும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இவற்றைச் செய்து விட்டால் அனேகமாக மத்தியில் ஆட்சியை மோடி பிடிப்பது உறுதி செய்யப் பட்டு விடும். உ பி யிலும் பீஹாரிலும் சேர்த்து மொத்தம் 120 இடங்கள் உள்ளன. அவற்றில் 60 இடங்களில் வெற்றி பெறுவதன் மூலமாக தென்னாட்டில் ஏற்படவிருக்கும் இழப்பைச் சரிக் கட்டலாம். மோடிக்கு இரு மாநிலங்களிலும் கூடும் கூட்டங்களையும் ஆதரவையும் கணக்கில் எடுக்கும் பொழுது 60 இடங்களில் வெற்றி என்பது சாத்தியம் என்றே தோன்றுகிறது.


5. மஹாராஷ்ட்ராவில் நிலவும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தி அலையைப் பயன் படுத்திக் கொள்வதுடன் சிவசேனாக் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலமாக கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது. அதற்காக மோடி சிவசேனா கட்சிகளை இணைப்பதில் தன் முழு சக்தியையும் பயன் படுத்த வேண்டும். மஹாராஷ்ட்ராவில் முழு வெற்றி சிவசேனா இணைப்பின் மூலமாகவே சாத்தியம்.


6. அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பி ஜே பி யின் எண்ணிக்கையை அதிகரிக்க முயல வேண்டும். அதுவும் சாத்தியமானதே அங்கும் மோடி அலை வீசத் துவங்கியுள்ளது. இரு மாநிலங்களிலும் குறைந்த பட்சம் ஒரு 10 இடங்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது


7. ஒடிசா, ஆந்திரா, தமிழ் நாடு, கேரளா, மே வங்கம், வட கிழக்கு மாநிலங்களில் பி ஜே பி அதிகமாகச் செய்யக் கூடியது எதுவும் இல்லை. அங்கு ஏதேனும் இடங்கள் கிடைக்குமானால் அவற்றை போனசாகக் கருதிக் கொள்ளலாம். முக்கியமாக உ பி மற்றும் பீஹாரில் மோடிக்குக் கிடைக்கும் ஆதரவே பி ஜே பியின் வெற்றியை உறுதி செய்யப் போகிறது.

8. கர்நாடகாவில் எடியூரப்பாவை சில நிபந்தனைகளுடன் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது அவசரமாகச் செய்ய வேண்டியது. டெல்லியில் ஹர்ஷ வர்த்தனை அறிவிக்க தாமதம் செய்தது போல கர்நாடகத்தில் வீணடிக்க முடியாது. கர்நாடகத்தின் 20 இடங்கள் அதன் மூலமாக மட்டுமே உறுதி செய்யப் படும். எடியூரப்பா மீதான வழக்குகள் முடியும் வரையில் அவருக்கு பதவிகள் ஏதும் இருக்காது என்ற நிபந்தனையின் பேரில் அவரை மீண்டும் இணைக்க வேண்டியது கர்நாடகத்தில் 20 இடங்களை வெல்லுவதற்கு அவசியமான ஒன்று. அவரைத் தொடர்ந்து அவமானப் படுத்தி ஒதுக்கி வைப்பது தேவையற்றது. ராஜ்நாத் சிங்கும் மோடியும் இந்த விஷயத்தில் உறுதியான நிலைப்பாட்டை உடனடியாக எடுக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லாவிட்டால் 20 இடங்களில் 5 மட்டுமே சாத்தியமாகும்.


9. ஆந்திராவில் உள்ள குழப்பமான சூழலில் நாயுடுவுடன் கூட்டணி வைத்தாலும் கூட பி ஜே பி க்கு அதிக பட்சமாக ஒரு 20 இடங்கள் பெறும் சாத்தியம் உள்ளன. அதற்கான கூட்டணியை வலுப்படுத்த வேண்டும்

9. கேரளத்தில் ஒரு இடம் கிடைத்தால் அதை போனசாகக் கருதிக் கொள்ள வேண்டும்

தமிழ் நாட்டைப் பொருத்தவரை நகர்ப்புறங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு அலை ஒன்று மறைமுகமாக உருவாகி வருகிறது. கிராமப் புறங்களிலும் அவரது பெயர் தெரியத் துவங்கியுள்ளது. ஆனால் அவற்றை ஓட்டுக்களாக மாற்றக் கூடிய தொண்டர் கட்டுமானம் பி ஜே பிக்கு அவ்வளவாக இல்லை. தமிழ் நாட்டின் இன்று முக்கியமான பிரச்சினைகள் மின்சாரமின்மை, தென் மாவட்டங்களில் தொழில்கள் இன்மை, ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியின்மை, நீர் பிரச்சினைகள் ஆகியவை. இந்த அனைத்து விஷயங்களிலும் எப்படி குஜராத்தில் மோடி மகத்தான வளர்ச்சியை சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதை தமிழ் நாட்டு பி ஜே பி தொண்டர்கள் தமிழ் நாட்டு மக்களிடம் எடுத்துச் சென்று சினிமாக்களாகவும் குறும் படங்களாகவும் பிரசார கையேடுகளாகவும் கொண்டு சேர்ப்பிக்க வேண்டு. மக்களைப் புரிய வைக்க வேண்டும்

மேற்கண்ட மாநிலங்களின் நிலமைகளை வரும் நாட்களில் விரிவாகக் காணலாம்.

தமிழ் நாட்டில் பி ஜே பியின் நிலை என்ன? யாருடன் கூட்டணி?


இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் பி ஜே பியுடன் சேர வை கோவின் கட்சியும், பா ம க வும் மட்டுமே தயாராக உள்ளன. தமிழ் நாட்டில் யாருடன் கூட்டணி என்பதை பி ஜே பி முடிவு செய்யும் இடத்தில் இல்லை. தி மு க பி ஜே பியுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருக்கிறது. தி மு க எப்பொழுதுமே மூழ்கும் கப்பலில் இருந்து குதித்து அடுத்தக் கப்பலில் தொற்றிக் கொள்வதையே தொழிலாகக் கொண்ட ஒரு குடும்பக் கட்சி. அதனுடன் சேர்வது பா ஜ க வின் ஒரு சில தலைவர்களுக்கு உவப்பானதாக இருந்தாலும் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பொது மக்களிடம் இன்று மோடி அலை காரணமாக தமிழ் நாட்டில் பி ஜே பி மீது உருவாகி வரும் ஆதரவு அனைத்தும் அது தி மு க வுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் ஒரே நாளில் மறைந்து விடும். மேலும் அகில இந்திய அளவிலும் பி ஜே பி தி மு க கூட்டணி கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தி மோடியின் ஆதரவில் ஓட்டை விழச் செய்து விடும். இதையெல்லாம் தமிழ் நாட்டு பி ஜே பி தலைவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பது தெரியவில்லை. அவர்கள் பி ஜே பி தொண்டர்கள் ஃபேஸ்புக்குகளில் செய்யும் குமுறல்களை படிக்கிறார்களா? கணக்கில் கொள்கிறார்களா என்பது தெரியவில்லை. ஒரு வேளை தமிழ் நாட்டில் பி ஜே பி தி மு கவுடன் கூட்டணி வைக்கும் பட்சத்தில் அது தற்கொலை முடிவாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுக்கு வளர்ந்து வரும் ஆதரவு அனைத்தும் பொசுங்கி அழிந்து விடும் சொந்தக் கட்சிக்காரர்கள் கூட ஓட்டுப் போட முன் வர மாட்டார்கள். ஆகவே பி ஜே பி மிகுந்த எச்சரிக்கையுடன் கூட்டணியை கையாள வேண்டிய நேரம் இது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தி மு கவுடன் கூட்டணி வைத்துத் தாழியை அவர்கள் உடைத்து விடக் கூடாது. நாலாறு மாதமாய் மோடி என்னும் குயவனைத் தேடிக் கொண்டு வந்த ஆதரவுப் பானையை தி மு கவுடன் கூட்டணி வைத்துப் போட்டுடைத்து விட முடியாது. இதை தமிழ் நாட்டு பி ஜே பி தலைவர்கள் உணர வேண்டும்.


தமிழ் நாட்டில் இயல்பான கூட்டணியாக அதிமுகவும் பா ஜ கவுமே இருக்க முடியும். மத வன்முறை மசோதா எதிர்ப்பு, ராமர் சேது திட்ட எதிர்ப்பு போன்ற பல் விஷயங்களில் இரு கட்சிகளும் ஒத்த கொள்கை கொண்டுள்ளன. வேறு பெரிய கொள்கை வித்தியாசங்கள் ஏதும் இரு கட்சிகளிடமும் கிடையாது. ஆகவே அ தி மு கவுடனான கூட்டணியே 40 இடங்களையும் வெல்லக் கூடிய வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.

ஆனால் ஜெயலலிதா எப்பொழுதுமே மத்திய அரசியலில் புத்திசாலித்தனமாக முடிவு எடுத்தவர் அல்லர். சோனியாவுடன் சேர்ந்து வாஜ்பாய் ஆட்சியைக் கவிழ்த்தது முதல் இன்றைக்கு 40 இடங்களைப் பெறக் கூடிய ஒரு அரிய வாய்ப்பையும் சில முட்டாள்த்தனமான முடிவுகளினாலும் தவற விட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய அரசியலில் அவர் எடுக்கும் தவறான முடிவுகளினாலேயே அவர் பல வருடங்களாக மத்திய அரசில் இடம் பெற முடியாமல் போனது. இந்த முறையும் அவர் அதே தவறைச் செய்கிறார்.


அதிமுக தனியாக நின்றால் ஒரு 27 இடங்களில் அதிக பட்சமாக ஜெயிக்க முடியும். ஆனால் ஜெயலலிதா தன்னால் தனியாக நின்று 40 இடங்களையும் ஜெயித்து விட முடியும் என்று கனவு காண்கிறார். அப்படி ஒரு 35 இடங்களையாவது ஜெயிக்கும் பட்சத்தில் மத்திய அரசில் முக்கியமான கட்சியாக வந்து எந்தக் கட்சிக்கும் மெஜாரிடி இல்லாத சூழலில் பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்ற கனவில் ஆழ்ந்திருக்கிறார். கனவு காண்பது அவர் உரிமை. ஆனால் கனவுகளில் மிதந்து கொண்டு யதார்த்தத்தை தவற விட்டுக் கொண்டிருக்கிறார்.

இன்று தமிழ் நாட்டில் மோடிக்கு வளர்ந்து வரும் ஆதரவை அவர் சரியாக கணிக்கத் தவறி வருகிறார். மோடியுடனான கூட்டணி நிச்சயமாக 40 இடங்களையும் அவருக்கு பெற்றுத் தரும். பி ஜே பி க்கு ஒரு 5 இடங்களை ஒதுக்கினாலும் கூட அவ்ருக்கு தனியாக அதே 35 இடங்களும் மத்திய ஆளும் கட்சியில் ஒரு முக்கியமான இடமும் கிடைக்கும். அவர் தனியாக நின்று பெறும் இடங்களை விட அதிகமான இடங்களை பி ஜே பி யுடனான கூட்டணியின் மூலமாக அவரால் பெற முடியும் என்பதே இன்றைய யதார்த்த நிலை. ஆனால் அவர் எப்பொழுதும் போலவே நிதர்சனத்தைக் கணிக்கத் தவறி தவறான முடிவு எடுத்து வருகிறார். நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளைக் கண்டும் அவர் இன்னமும் தனது தப்புக் கணக்கை மாற்றிக் கொண்டதாகத் தெரியவில்லை.

பி ஜே பி யுடன் கூட்டணி வைக்கத் தவறி ஒரு 27 இடங்களைப் பெறும் பட்சத்தில் மத்தியில் பி ஜே பி அரசு அமையும் பட்சத்தில் ஜெயலலிதாவும் தமிழ் நாடும் மீண்டும் மத்திய ஆட்சியில் இருந்து விலகி நிற்க நேரிட்டு தமிழ் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும். மீண்டும் மீண்டும் தன்னை மத்திய அரசியலில் இருந்து அந்நியப் படுத்திக் கொள்ளும் தற்கொலை முடிவுகளையே ஜெயலலிதா எடுத்து வருகிறார்.


பா ஜ க வுடன் கூட்டணி வைத்து மோடி அலையைப் பயன் படுத்திக் கொண்டு ஜெயலலிதா 40 இடங்களை வெல்லும் பட்சத்தில் மத்திய அரசில் முக்கியமான கூட்டணி கட்சியாக இடம் பிடித்து முக்கியமான துறைகளை பெறும் அரியதொரு வாய்ப்பை தன் கனவுகளினால் தவற விட்டு வருகிறார். கூட்டணி வைப்பதன் மூலமாக 35 இடங்களில் வெற்றி பெற்று முக்கியமாக ரெயில்வே, நீர் பாசானம் போன்ற துறைகளைப் பெறுவதன் மூலமாக தமிழ் நாட்டிற்கு பெரும் நிதி ஒதுக்கீடுகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பெற்றுத் தரலாம்.

இன்று தமிழ் நாட்டில் ரயில் திட்டங்களுக்காகவும் நதி நீர் இணைப்புத் திட்டங்களுக்காகவும் முறையான நிதி ஒதுக்கீடு செய்யப் படுவதில்லை. தொடர்ந்து காங்கிரஸ் அரசாங்கம் தமிழ் நாட்டை பழி வாங்கியே வருகிறது. மின்சாரத்தில் தமிழ் நாடும் ஒரு இருண்ட மாநிலமாக இருக்கிறது. விவசாயத்திற்குத் தேவையான நதி நீர் கிடைப்பதில்லை. எந்தவொரு முக்கியமான ரெயில்வே திட்டமும் தமிழ் நாட்டில் நிறைவேற்றப் படுவதேயில்லை. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஜெயலலிதா ,முன் உள்ள ஒரே வழி பி ஜே பியுடன் கூட்டணி வைப்பது மட்டுமே. இந்த நான்கு மாநிலங்கள் சொல்லும் செய்தியை அவர் புரிந்து கொள்ளத் தவறி தனது பிரதமர் கனவில் மிதப்பார் என்றால் உள்ளதும் போய் மீண்டும் மத்திய அரசில் இருந்து விலகி தன்னையும் தன் மாநிலத்தையும் துயரத்துக்குள்ளாக்கி விடுவார். இதைத் த்விர்க்கும் வல்லமை ஜெயலலிதா ஒருவரிடம் ம்ட்டுமே உள்ளது.

ஆனால் அவர் மத்திய அரசியலில் இதுவரை தன் ஆணவத்தினாலும் தவறான கனவுகளினாலும் தனக்கும் மாநிலத்திற்கும் பெரும் அழிவையே தேடித் தந்திருக்கிறார். ஊழல் குடும்பத்தை பி ஜே பி யின் அருகே நெருங்க விடாமல் தடுத்து அடுத்து வரவிருக்கும் பி ஜே பி ஆட்சியில் ஒரு பலமான இடத்தைப் பெறும் சக்தி அவரிடம் மட்டுமே உண்டு. பி ஜே பி உடனான கூட்டணி மட்டுமே அவருக்கும் தமிழ் நாட்டுக்கும் நன்மைகளைக் கொண்ர முடியும் என்பதை அவருக்கு யாராவது எடுத்துச் சொல்ல வேண்டும். சோ சொல்லியிருந்திருப்பார். ஆனால் கேடு காலம் வரும் பொழுது நல்ல அறிவுரைகள் எவர் காதிலும் ஏறுவதில்லை. மீறி அவர் புரிந்து கொண்டு கூட்டணி வைத்தால் அவருக்கும் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெரும் நன்மைகள் விளைவிக்கும்.

மத்தியில் பி ஜே பி மெஜாரிட்டிக்குத் தேவையான இடங்கள் குறையும் பொழுது தான் பேரம் பேசி அப்பொழுது தனக்கு உதவி பிரதமர் பதவி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவருக்கு இருப்பதாகத் தெரிகிறது. ஒரு வேளை பி ஜே பி தனியாகவே 280 இடங்களைப் பெற்று விட்டால் (அதற்கான சாத்தியங்கள் பலமாக உள்ளன) அவர் கனவில் மண் விழுவதுடன் தமிழ் நாட்டு நலன்களும் பாதிக்கப் படும் என்பதை அவர் உணர வேண்டும். தேர்தலுக்கு முன்பாக பி ஜே பியுடன் வைக்கும் கூட்டணியன்றி தேர்தலுக்குப் பின்னால் எதிர்பார்க்கும் கூட்டணிக்கு வைப்பது அவருக்கோ தமிழ் நாட்டுக்கோ எந்தவொரு நன்மையையும் பெற்றுத் தரப் போவதில்லை என்பதை யாராவது அவருக்கு உணர்த்த வேண்டும். தமிழ் நாட்டில் திறமையான மந்திரிகளைத் தேர்ந்தெடுத்து நிர்வாகம் செய்யத் தடுமாறுவது போலவே மத்திய அரசில் இடம் பெறும் வாய்ப்பையும் தன் தடுமாற்றத்தினால் தவற விட்டு வருகிறார்.


அப்படி தமிழ் நாட்டில் பி ஜே பி தனித்து விடப் பட்டு வை கோபாலசாமி மற்றும் ராமதாஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால் 2 அல்லது 3 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் அதிக பட்சம் 5 இடங்கள் கிடைக்கும். ஆக தமிழ் நாட்டில் பி ஜே பி இழக்கப் போவது அதிகமில்லை மாறாக கூட்டணி வைக்காமல் போனால் ஜெயலலிதாவும் தமிழ் நாடும் இழக்கப் போவதுதான் அதிகம். ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்தால் பி ஜே பி பெறப் போவது அதிகம் ஏதுமில்லை மாறாக ஜெயலலிதாவுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெரும் நன்மைகள் காத்திருக்கின்றன. ஆகவே பா ஜ க வுடன் கூட்டணி வைக்காமல் போவதினால் ஏற்படும் இழப்பு பி ஜே பி க்கு அல்ல. ஆனால் அதே பி ஜே பி தி மு கவுடன் கூட்டணி வைக்கும் தவறான முடிவை எடுக்கும் பட்சத்தில் தமிழ் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவில் ஏற்பட்டுள்ள மோடி அலையில் மிகப் பெரிய ஓட்டையை உருவாக்கி அகில இந்திய அளவில் பெரும் ஓட்டு இழப்புக்கு இட்டுச் சென்று வாராது வந்த மாமணியைத் தோற்கும் நிலைக்குத் தள்ளி விடும். அப்படி மோடிக்கு இருக்கும் வாய்ப்பை தவறான கூட்டணி முடிவுகள் மூலமாக தமிழ் நாட்டு பி ஜே பி தலைவர்கள் துரோகம் செய்து விட மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

அதிமுக பி ஜே பியுடன் கூட்டணி வைக்கத் தவறும் பட்சத்தில் பி ஜே பி முன்னால் உள்ள ஒரே தேர்வு தி முக தவிர்த்த பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு டெல்லியில் ஆம் ஆத்மி தனியாக துணிவுடன் எதிர் கொண்டது போல தமிழ் நாட்டு மக்களை எதிர் கொள்வது ஒன்று மட்டுமே. அப்படி தனியாக நிற்கும் பட்சத்தில் தமிழ் நாட்டு மக்கள் நிச்சயமாக ஒரு ஐந்து தொகுதிகளிலாவது வெற்றியை அளிப்பார்கள் என்பது உறுதி. மாறாக ஒரு 10 சீட்டுகளுக்கு ஆசைப் பட்டு தி மு கவுடன் கூடா நட்பை மேற் கொண்டால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பெரும் சரிவை பி ஜே பி சந்திக்கு அபாயம் உள்ளது.

பிற மாநில நிலவரங்கள் குறித்து வரும் மாதங்களில் விரிவாகப் பார்க்கலாம்

விஸ்வாமித்ரா

19 Comments:

kg gouthaman said...

நல்ல கருத்துகள், அலசல்கள் நிறைந்த கட்டுரை. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பி ஜே பி தலைமைக்கு அனுப்பிவைக்கலாம். யதார்த்த நிலையை அவர்கள் உணர உதவும்.

Anonymous said...

அருமை

Anonymous said...

oru copy apidiyae namma tamilnadu c.m ukku.

V. Srikumar- rajapalayam

Anonymous said...

CONGRESS, DMK, DDMK, VC, MANIDA NEYA KATCHI, MOSLEM LEAGUE, KRISHNASAMY, MOOVENDHAR KATCHI WILL BE A STRONG ALLIANCE. THEY WILL GET MORE THAN 35 SEATS.
BJP, MDMK ZERO. JAYA CAN GET 5.
IF PMK ALSO JOINS WITH CONGRESS, ALMOST 40 FOR DMK/CONGRESS ALLIANCE.

Anonymous said...

DMK IS NOT IN A POSITION TO DECIDE ABOUT CONGRESS ALLIANCE. IT IS JUST LIKE SLAVE TO CONGRESS. MAXIMUM, IT CAN RAISE IT'S VOICE LIKE JPC/2G. ANNAI WILL NOT ALLOW MORE THAN THAT. CONGRESS ONLY CAN DECIDE WHETHER IT CAN TAKE DMK AS PARTNER OR NOT.

Anonymous said...


Without ADMK alliance BJP will not be able to win even 3 seats. When BJP goes with PMK or DMK it would be a suicidal attempt. We want a strong PM from Tamilnadu. When an ordinary CM from gujrat wants to be PM why cant amma? Amma will definitely become PM...........

Murugavel S said...

நல்ல கருத்துகள், அலசல்கள் நிறைந்த கட்டுரை. ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பி ஜே பி தலைமைக்கு அனுப்பிவைக்கலாம். யதார்த்த நிலையை அவர்கள் உணர உதவும்///இது பல ஆங்கில பத்திரிக்கைகளில் வந்த செய்திகளின் தொகுப்பே அதை அவர்கள் படித்திருப்பார்கள். தமிழ் நாட்டை பற்றிய, தமிழக கூட்டணி பற்றிய செய்திகள் தவிர, அது கட்டுரையாளரின் எதிர்பார்ப்பு, நிதர்சனமல்ல, தனியா 27 கூட்டணியாக 40 எனபது, ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்படும், தூண்டிலில் கோர்க்கப்படும், பெரியமீனை பிடிக்க, மாட்டப்படும் சிறிய மீன். n

Subrah said...

கூடா நட்பு ..

எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு ..

Anonymous said...

// கனவு காண்பது அவர் உரிமை. ஆனால் கனவுகளில் மிதந்து கொண்டு யதார்த்தத்தை தவற விட்டுக் கொண்டிருக்கிறார். //

absolutely true !!

Anonymous said...

யாராவது இத ஜே-க்கு அனுப்பி வைங்கப்பா!!

Mariappan Sarawanan said...

ஏம்பா கோப்ரா போஸ்ட்டின் ஆப்ரேஷன் ப்லூ வைரசில் இட்லிவடையின் விஸ்வாமித்திரன் பேரக் காணோம்!

Anonymous said...

our madam Jay's ego and lack political adjustment lead to DMK huge growth since 1998 ( both party/money/ministry etc). if madam has handled with long term vision in mind -both for the country and Tamilnadu have enjoyed better development under Shri Vajpayeeji govt -1998-2004- but ego and in in congruent /indifferent approach made party suffer and Mr MK and family enjoyed power and money since 1999 till date.hope as she herself said in one interview she has had matured enough to reap the benefit- if fails it will be repeat of history 79-80-89-91-96-98-Cong will force another mid term election by 2016 and pom pom saying it can only give stable and corrupt govt and MrMk will join the chorus and tomtom Neruvin Pethieye Varuga nilayana/nimmdahiyana( uzhal puriya) attchi tharuga
Let us pray to almighty for blessing India with good government minus congress for next 10 years

Shrek said...

it is our fate that we are blessed with leaders like jj and modi.

Anonymous said...

எதற்கு இந்த லபோதிபோ? தமிழ்நாட்டில் தனித்து நின்று 1 சீட்கூடப் பெற முடியாத கட்சி மத்தியில் ஆட்சிக்கு வருவது தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய துரதிர்ஷ்டமாகவே இருக்கும். வட மாநிலங்களுக்காக நாம் நமக்கு அந்தியமான கட்சியையும், பிரதமரையும் சகித்துக்கொள்ள வேண்டுமா?

சரவணன்

senthilkumar said...

நன்றி கட்டுரையாளர் அவர்களுக்கு உண்மையான உங்கள் வரிகள் உரியவர்களுக்கு எட்ட வைக்க நம்மால் முடிந்த ஒரு வழி முக நூல் பகிர்வு அதை நான் முன்னெடுக்கிறேன்.

பெசொவி said...

//அதிமுக தனியாக நின்றால் ஒரு 27 இடங்களில் அதிக பட்சமாக ஜெயிக்க முடியும். ஆனால் ஜெயலலிதா தன்னால் தனியாக நின்று 40 இடங்களையும் ஜெயித்து விட முடியும் என்று கனவு காண்கிறார். அப்படி ஒரு 35 இடங்களையாவது ஜெயிக்கும் பட்சத்தில் மத்திய அரசில் முக்கியமான கட்சியாக வந்து எந்தக் கட்சிக்கும் மெஜாரிடி இல்லாத சூழலில் பிரதமர் பதவியை அடைந்து விடலாம் என்ற கனவில் ஆழ்ந்திருக்கிறார். கனவு காண்பது அவர் உரிமை. ஆனால் கனவுகளில் மிதந்து கொண்டு யதார்த்தத்தை தவற விட்டுக் கொண்டிருக்கிறார்.
//
True lines!

Nanban said...

A BITTER TRUTH

South Indians are never considered for PM post. We saw it in case of Deva Gowda (forget about his performance) and it's a curse that all south Indian leaders are looked down.

If amma becomes PM based on her plans, it will be short lived and will end up with re-election soon...

D. Chandramouli said...

Agree with all points, except the need for BJP to take back Yeddyurappa - that will surely bring down BJP's image.

ஈஸ்வரன் said...

தங்களது கருத்துக்கள் என்னைப் போல மோடி அவர்களை விரும்பும் தேச பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கையை உருவாக்குகிறது.தாங்கள் அ தி மு க கூட்டணிக்காக மிகவும் மெனக் கெடுவதும் புரிந்து கொள்ளக் கூடியதே.அதை அந்த அம்மையார் உணர்ந்து கொண்டால் அவருக்கும் இந்த மாநிலத்துக்கும் ஏன் இந்த தேசத்துக்கே மிகவும் நல்லது.தி மு க வுடன் உறவு கூடாது என்று நீங்கள் பதறுவது என்னைப் போல பலரும் நினைப்பதுதான்.இதை தமிழக நிர்வாகிகள் புரிந்து கொள்ள வேண்டும்.உண்மையைக் கொஞ்சம் ஓவராகச் சொல்லியுள்ளீர்கள் .
தாமரை,பழனி.