பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 10, 2013

நான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 2 - விஸ்வாமித்ரா

நான்கு மாநிலத் தேர்தல்களிலும் பி ஜே பி யின் வெற்றி மோடி உருவாக்கிய உணர்வலைகளின், எழுச்சியின் விளைவே. மோடியின் தனிப்பட்ட ஆளுமயினால் மட்டுமே ம பி யில் 8% அதிக ஓட்டுக்களும் ராஜஸ்தானில் 12% அதிக ஓட்டுக்களும் சட்டிஸ்கரில் 2% அதிக ஓட்டுக்களும் பெற்று பி ஜே பி வெற்றி பெற்றது. டெல்லியில் பி ஜே பி யின் சதவிகிதம் 2% குறைந்து போனதாகச் சொல்லப் பட்டாலும் மிக அதிக அளவில் 70% வாக்காளர்கள் ஓட்டுப் போட வெளி வந்தது இதுவே முதல் முறை. அது பெரும்பாலும் மோடியால் ஈர்க்கப் பட்ட வாக்கு வங்கியே. ஆனால் இந்தியாவின் ஆங்கில ஊடகங்கள் அனைத்தும் மோடியின் இந்த மாபெரும் சாதனையை, அலையை மறுக்கவே முயன்று கொண்டிருந்தன. மோடி மீதான ஆழமான வெறுப்பு அவர்களது நிகழ்ச்சிகளில் எதிரொலித்தது. மோடியின் தாக்கம் முற்றிலுமாக மறைக்கப் பட்டு தேவையற்ற ஒளி வெள்ளம் ஆம் ஆத்மி மீது மீடியாக்களினால் செலுத்தப் பட்டது. மோடியின் சக்தி ஏற்படுத்திய விளைவுகளை விடவும் அதிகமாக ஊடகங்களினால் கொண்டாடப் பட்டது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியும் வெற்றியும் மட்டுமே. பி ஜே பி இரு பெரிய மாநிலங்களில் மிகப் பிரமிப்பான வெற்றியை மோடியின் சக்தியினால் பெற்றுள்ளது. ஆனால் அதைப் பற்றி பேச எந்தவொரு பீசெக்குலார் மீடியாவும் திட்டமிட்டு மறந்து விட்டன. அதை ஒரு பெரிய சாதனையாக அவர்கள் கருதாமல் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி குறித்தே முக்கியத்துவம் அளித்தார்கள். ஆம் ஆத்மி கட்சியின் மீதான பாசத்தால் அதை ஊடகங்கள் செய்யவில்லை. மாறாக மோடியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் விதமாக மட்டுமே ராஜஸ்தான், ம பி வெற்றிகளைப் பற்றி விரிவாக எந்தவொரு சேனலும் பத்திரிகையும் அலசாமல் தவிர்த்து தன்களது காங்கிரஸ் விசுவாசத்தை காட்டிக் கொண்டனர். மோடியின் தாக்கத்தினால் ஏற்பட்ட பி ஜே பி யின் ஓட்டு வளர்ச்சியைப் பற்றி பேசாத அதே ராஜ்தீப்பும், கோஸ்வாமியும், ப்ரோக்கர் பரக்கா தத்தும் காங்கிரஸ் தோல்விக்கு ராகுலைப் பொறுப்பாக்காமல் அவரை பத்திரமாக பாதுகாத்து அவர் மீது எந்தவிதமான விமர்சனங்களும் எழாமல் பாதுகாத்தனர். மொத்தத்தில் மீடியாக்கள் இந்த தேர்தல் முடிவுகளை மிகவும் கேவலமாகவும் ஒரு தலைப் ப்ட்சமாகவும் மோடி எதிர்ப்பாகவும் கையாண்டனர். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும் என்று நினைத்துச் செயல் பட்டனர்.ஆம் ஆத்மி கட்சியின் தற்காலிக வெற்றியை பி ஜே பி உட்பட எந்தவொரு கட்சியும் சரியாக கணிக்கவில்லை என்பதே உண்மை. மோடி மட்டும் டெல்லியில் பிரசாரம் செய்து அதற்கு அணை போட்டிருக்காவிட்டால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கூடப் பிடித்திருக்கக் கூடும். ஆம் ஆத்மி கட்சிக்கான அடித்தளத்தை ஏற்கனவே அன்னா ஹசாரே பலமாக எழுப்பி வைத்து விட்டுப் போயிருக்கிறார். அவர் ஏற்படுத்திய அடித்தளத்தில் இன்று இந்தக் கட்சியை வலுவாக கேஜ்ரிவால் உருவாக்கிக் கட்டியெழுப்பியுள்ளார். ஆனால் இது இந்திய அரசியலில் முதன் முறை அல்ல. ஏற்கனவே அஸ்ஸாம் கணசங் பரிஷத், வி பி சிங் போன்று ஊழல்களை எதிர்க்கக் கிளம்பி ஊழல் அரசியலிலும் பிரிவினைவாத அரசியலிலும் மூழ்கிப் போன கட்சிகளை இந்தியா பல முறை கண்டுள்ளது. இந்தக் கட்சியும் அப்படி மாறுவதற்கான அறிகுறிகள் இப்பொழுதே தோன்றுகின்றன.

ஆம் ஆத்மி கட்சி தன்னை தூய்மையான கட்சி என்றும் பொது வாழ்வில் நேர்மை, வெளிப்படையான நிலைப்பாடு ஆகியவற்றை போற்றும் கட்சி என்றும் விளம்பரப் படுத்துகிறது. ஆனால் அது பெற்ற நன்கொடைகளுக்கான முறையான கணக்கு வழக்குகளை அது வெளிப்படையாகச் சொல்ல மறுக்கிறது. பாக்கிஸ்தான் உட்பட பல நாடுகளில் இருந்தும் அதற்கு நிதி வந்துள்ளது. முக்கியமாக பிற நாடுகளில் புரட்சியைத் தூண்டி விடும் அமைப்புகள் அதற்கு நிதி அளித்துள்ளன. அன்னா ஹசாரேவும் தன் போராட்டத்தில் திரட்டப் பட்ட நிதியை கேஜ்ரிவால் திருடிக் கொண்டு விட்டதாக புகார் சொல்லியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி வெளிப்படையாகவே சிறுபான்மையினருக்கு சலுகை அளிக்கும், இஸ்லாமிய பயங்கரவாதிகளை ஆதரிக்கும் மதவாத அரசியலைச் செய்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ், கம்னியுஸ்டு கட்சிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் எந்தவொரு வித்தியாசமும் கிடையாது. காங்கிரஸ் போலவே இஸ்லாமிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் உறவை வைத்துக் கொண்டுள்ளது அவர்களது ஆதரவைக் கோரியுள்ளது. மதவாத அரசியலில் வேறு எந்தவொரு கட்சியைப் போலவே ஈடுபட்டு வருகிறது ஆம் ஆத்மி கட்சி. ஓட்டுக்காக சிறுபான்மையோருக்கு மட்டும் சலுகை அளிக்கும் அரசியலைச் செய்யும் எந்தவொரு கட்சியும் இறுதியில் ஊழல் கட்சியாக முடிவதே இந்தியாவின் அரசியல் வரலாறு. அதற்கு இந்தக் கட்சியும் விதி விலக்கல்ல என்றே அதன் நடவடிக்கைகளைக் காணும் பொழுது தோன்றுகிறது.

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரான பிரசாந்த் பூஷன் காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு அளிக்க வேண்டும் என்று பேசி வருபவர். ஹைதராபாத் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்காக ஆஜராகி அவர்களை விடுவிக்கப் போராடி வருபவர். பயங்கரவாதிகளின் வழக்குகளில் ஆஜராவது மூலமாக இஸ்லாமிய ஓட்டுக்களைப் பெற முயற்சிக்கிறார்கள். மேலும் பல்வேறு சந்தேகமான குற்றசாட்டுகளுக்கு உள்ளானவர். மாவோயிஸ்ட்களுடனும் ஆம் ஆத்மி கட்சி தொடர்பு கொண்டு அவர்களது ஆதரவையும் பெற்று வருகிறது இந்த ஆம் ஆத்மி கட்சி. சிறையில் உள்ள இஸ்லாமியக் குற்றவாளிகளை மட்டும் விடுதலை செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சர் உத்தரவிட்ட பொழுது அது குறித்து தன் கருத்தைச் சொல்ல கேஜ்ரிவால் மறுத்து அது போன்ற ஒரு மதவாத உத்தரவுக்கு ஆதரவாகச் செயல் பட்டிருக்கிறார். ஊழல் ஒழிப்பை விட மக்களின் அடிப்படை பாதுகாப்பு முக்கியமானது என்பதை இந்த கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆக வெளிநாடுகளில் இருந்து சந்தேகமான முறைகளில் நிதி திரட்டுதல். மைனாரிடிகளை மட்டுமே தாஜா செய்யும் அரசியல், இந்திய விரோதப் போக்கு. மாவோயிச ஆதரவு என்று அபாயகரமான ஒரு கட்சியாக ஆம் ஆத்மி கட்சி ஆரம்பம் முதலாகவே வளர்ந்து வருகிறது. இதன் வளர்ச்சி இப்பொழுது டெல்லிக்கும் நாளைய இந்தியாவுக்கும் அபாயகரமானதாகவே முடியும். நேபாளத்தின் மாவோயிஸ்டுகளின் வளர்ச்சிக்கும், அஸ்ஸாமில் ஊழல் கட்சியாக முடிந்த அஸ்ஸாம் கணசங் கட்சிக்கும் இந்தக் கட்சிக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

டெல்லியின் படித்த நடுத்தர வர்க்க மக்கள் ஊழல் எதிர்ப்பு ஒன்றை மட்டுமே பிரதானமாகக் கருதி இந்தக் கட்சியை வளர்த்து விடுகிறார்கள். பெரும்பாலான படித்த நடுத்தரவர்க்கத்தினரிடமும் இடது சாரி கொள்கைகளினால் மூளைச் செய்யப் பட்டு மனநோயாளிகளாக மாறியவர்களிடமும் பி ஜே பி மீது ஒரு விதமான ஆழமான வெறுப்பை நம் ஊடகங்கள் உருவாக்கியுள்ளன. அப்படியான வாக்காளர்களுக்கு இந்த ஆம் ஆத்மி கட்சி ஒரு மதவாதம் இல்லாத நேர்மையான கட்சியாகவும் தங்களின் கவுரவத்திற்கு ஏற்றவொரு கட்சியாகவும் தோற்றமளித்து கவர்ந்து விட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கவர்ச்சியை அதனால் அதிக நாட்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்பதையே அதன் சந்தேகமான நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. ஊழலில்லாத நேர்மையான ஆட்சி ஒரு நாட்டிற்கும் மாநிலத்திற்கும் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களும் மிக முக்கியமானவை. ஆனால் போராட்டங்களுக்கும் ஊழல் ஒழிப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஆம் ஆத்மி கட்சி டெல்லிக்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்து எதையும் அதிகமாகப் பேசவில்லை. டெல்லியின் மாபெரும் சாக்கடையாக மாறி விட்ட யமுனை நதியைச் சுத்தப் படுத்துவது குறித்தோ அதன் சேரிப் பகுதிகளை சீரமைப்பது குறித்தோ அதன் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்தோ அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை.

ஆகவே ஆம் ஆத்மி கட்சியின் இந்த வளர்ச்சி ஒரு தற்காலிகமான நீர்க்குமிழி வளர்சியாக மட்டுமே இருக்கப் போகிறது. டெல்லி பெரும்பாலும் படித்த நகர்ப்புற வாக்களர்களினால் ஆன ஒரு மாநிலம். ஆனால் இந்தியாவின் பிற மாநிலங்கள் அனைத்து பெரும்பாலும் கிராமப் புறங்களினால் ஆனவை. அங்கு கட்சியைக் கட்டி எழுப்பக் கூடிய அடிப்படை தொண்டர்களும் கட்டுமானங்களும் இந்த ஆம் ஆத்மி கட்சியிடம் கிடையாது. டெல்லி போன்ற ஒரு சில நகர்ப்புறங்களில் சில தாக்கங்களை இந்தக் கட்சியினால் எழுப்ப முடியும். நகர்ப்புற வாக்காளர்களின் பொதுப் புத்தியைப் பயன் படுத்தி 28 இடங்களில் ஜெயித்தும் விட்டிருக்கிறார்கள். அவர்கள் உண்மையாகவே நாட்டின் மீது அக்கறை உள்ளவர்களான ஒரு கட்சி என்றால் அவர்கள் செய்ய வேண்டியதும் கூடியதும் என்னவாக இருக்க வேண்டும்?

டெல்லில் ஏற்கனவே பா ஜ க அதிக இடங்களைப் பெற்று 32 சீட்டுகளுடன் முன்ணணியில் இருக்கின்றது. அது மக்கள் அளித்துள்ள தீர்ப்பு. மேலும் ஒரு 7 இடங்களில் நூறு ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆகவே மக்களின் ஆதரவினைப் பெற்ற கட்சியும் ஆட்சி அமைக்க அருகதையுள்ள கட்சியாகவும் பி ஜே பி வந்துள்ளது. அப்படியானவொரு நிலையில் ஆம் ஆத்மி கட்சி பி ஜே பி கட்சியை ஆட்சி அமைக்க அனுமதிப்பதே டெல்லியின் மீது அக்கறையுள்ள ஒரு கட்சி செய்யும் செயலாக இருக்க முடியும்.

மாறாக பி ஜே பி ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி அனுமதிக்க மறுக்குமானால் எந்தவொரு கட்சியும் ஆட்சியை பிடிக்க முடியாத நிலை ஏற்படும். அதன் விளைவாக டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி கொணரப் படும். ஜனாதிபதி ஆட்சி என்பது டெல்லியின் லெஃப்டினண்ட் கவர்னரின் தலைமையில் மத்திய அரசை ஆட்சி செய்யும் காங்கிரஸின் நேரடி ஆட்சியாகவே இருக்கும். ஆக மக்களால் அனேகமாக பெருவாரியான இடங்களில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள ஒரு கட்சியின் உரிமையை மறுப்பதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சி கொல்லைப் புற வழியாக காங்கிரஸ் ஆட்சிக்கே வழி வகுக்கிறது. இது ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸின் முகமூடி கட்சி., பினாமி கட்சி என்ற குற்றசாட்டை வலுவாக்குகிறது.

ஆம் ஆத்மி கட்சியின் இந்த பிடிவாதத்தினால் ஆறு மாதங்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்ய இடம் ஏற்படுத்தித் தந்து மறைமுகமாக காங்கிரஸ் கட்சிக்கு உதவி செய்கிறது. மேலும் மறு தேர்தல் நடத்துவதன் மூலமாக பல கோடி வீண் செலவுக்கு நிர்பந்திக்கிறது. ஊழலை ஒழிப்பதற்காகக் கிளம்பிய கட்சி பொது மக்களின் வரிப்பணத்தை வீணாகச் செலவு செய்ய கட்டாயப் படுத்துகிறது. வீணாக ஒரு தேர்தல் நடத்தக் கட்டாயப் படுத்துவதும் ஒரு வகையில் பொது ம்க்களின் வரிப்பணத்தின் மீதான அநாவசிய செலவுதானே? ஊழலினால் விரையமாகும் வரிப்பணத்திற்கும் இதற்கு என்ன வித்தியாசம் ? இதுதான் நேர்மையான ஆட்சியைத் தரப் போகும் கட்சியின் லட்சணமா?


ஆம் ஆத்மியின் தலைவர் கேஜ்ரிவால் 100 கோடிகள் செலவானாலும் பரவாயில்லை மறு தேர்தல் நடத்தப் பட வேண்டும் என்று எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் பேசியுள்ளார். சரி மறு தேர்தல் நடத்தி அதன் முடிவுகளும் இது போலவே வந்தால் மீண்டும் ஒரு தேர்தலைக் கோருவாரா? இவர் ஊழல் ஒழிப்பின் மூலமாகச் சேமிக்கப் போகும் பணத்தை விட இந்த தேர்தல் செலவு பெரும் விரயம் அல்லவா? இன்று 100 கோடி செலவு ஒரு பொருட்டில்லை என்று சொல்பவர் தன் வெற்றிக்காக எதையுமே ஒரு பொருட்டாக மதிக்காமல் போகலாம் அல்லவா? ஆணவத்தின் உச்சமான பேச்சு அது.


டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி என்ன செய்திருக்க வேண்டும்?


உண்மையாகவே பொது மக்களின் வரிப்பணத்தின் மீது அக்கறையுள்ள கட்சியாக ஆம் ஆத்மி கட்சி இருக்குமானால் அது ஏற்கனவே ஒரு சீட் குறைவாக இருக்கும் பா ஜ க வை ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். அதன் பின்னால் தங்களது கொள்கைகளை பா ஜ க மூலமாக நிறைவேற்ற முயல வேண்டும். ஒரு வேளை பா ஜ க ஊழல் செய்தாலோ தவறிழைத்தாலோ ஆம் ஆத்மி கட்சியின் பிரதான நியாயமான கொள்கைகளை செயல் படுத்த மறுத்தாலோ அப்பொழுது அதன் ஆதரவை விலக்கிக் கொள்வதே நேர்மையான யோக்கியமான மக்கள் நலனில் அக்கறையுள்ள ஊழலை எதிர்க்கும் ஒரு கட்சியின் செயல்பாடாக இருக்கும். ஆனால் அதையெல்லாம் பயங்கரவாதிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டு வெளிநாடுகளில் நிதி திரட்டும் ஒரு கட்சியிடம் நாம் எதிர்பார்க்க முடியாது.

மறு தேர்தல் நடத்தும் நிலைக்கு ஆம் ஆத்மி கட்சி தள்ளியுள்ளது. இதனால் ஏற்படப் போகும் பல நூறு கோடிகளுக்கான செலவுக்கும் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். மேலும் இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸின் ஊழல் ஆட்சி தொடரப் போகிறது அதற்கான விலையையும் இந்த ஆம் ஆத்மி கட்சியே கொடுக்க வேண்டி வரும். ஆகவே இப்பொழுதைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியின் சதியாலோசனைகளின் படி மீண்டும் டெல்லியின் ஆட்சி காங்கிரஸ் கட்சியிடமே ஒப்படைக்கப் படவிருக்கிறது. இது பொறுப்பற்றதனத்தின் உச்சம். மக்களின் தீர்ப்பை மதிக்காத ஆணவப் போக்கு மட்டுமே. மறு தேர்தல் நடத்தி அநாவசிய செலவுகளுக்கு தள்ளிய குற்றத்துக்காகவும் காங்கிரஸுடம் மறைமுக கூட்டணி வைத்துக் கொண்டு மீண்டும் காங்கிரஸ் ஆட்சியையே உப கவர்னர் மூலமாகத் தொடர அனுமதித்த குற்றத்திற்காகவும் அடுத்த ஆறு மாதங்களில் இந்தக் கட்சி கடுமையான விலையைக் கொடுக்கப் போகிறது.

டெல்லியில் பி ஜே பி என்ன செய்ய வேண்டும்?


பி ஜே பிக்கு அதிக எண்ணிக்கையை மக்கள் வழங்கியுள்ளார்கள். அதைக் கொண்டு ஆட்சி அமைக்க உரிமை கோர வேண்டும். அவர்கள் ஆம் ஆத்மி கட்சியால் தோற்கடிக்கப் படுவார்கள். அதன் மூலமாக ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்றத்தனத்தை மக்களிடம் விளக்கலாம். அனுதாப அலையை உருவாக்கலாம். பதவியேற்க முன் வராமல் இருப்பது நல்ல முடிவு அல்ல. ஆம் ஆத்மி கட்சி உண்மையாகவே மாநில நலனுக்கான கட்சி அல்ல அது மறு தேர்தல் மூலம் சில நூறு கோடி செலவுகளை விரயமாக்கப் போகிறது என்பதை வெளிக்காட்ட ஆட்சி அமைக்கக் கோருவது அவசியமானது. இதை பி ஜே பி கவனமாகக் கையாள வேண்டும்.

அடுத்த ஆறு மாதங்களில் தேர்தல் வரும் பொழுது அதற்குள்ளாக பா ஜ க தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல வேட்ப்பாளர்களை நிறுத்த வேண்டும். ஹர்ஷ வர்த்தன் மக்களுடன் தன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மி கட்சியின் மறைமுகமான காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாட்டை மக்களிடம் விளக்க வேண்டும். தோல்வி அடைந்த ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள வாக்காளர்களை நேரடியாக சந்தித்து ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்றதனத்தினால் ஏற்படும் செலவு குறித்தும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வது குறித்தும் விரிவாக விளக்க வேண்டும். ஒவ்வொரு வார்டு வாரியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும். மேலும் மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வரும் பொழுது அதே கட்சி டெல்லி மாநிலத்திலும் இருந்தால் மட்டுமே அதன் முழுமையான வளர்ச்சி சாத்தியம் என்பதை விளக்க வேண்டும். குறைந்த வாக்கு வித்தியாசங்களில் தோற்ற இடங்களில் அதிக பட்ச முனைப்பைக் காட்ட வேண்டும். டெல்லிக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சிக்கு வருவதன் மூலமாக என்னென்னெ திட்டங்களைச் செய்யப் போகிறோம் என்பதை பவர் பாய்ண்ட் பிரசெண்ட்டேஷன் மூலமாக தெருமுனைகளில் விளக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஆறு மாதம் கழித்து வரவிருக்கும் மறு தேர்தலில் பி ஜே பி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடிக்க வழியிருக்கிறது. இந்தத் தேர்தலில் பி ஜே பி பல தவறுகளைச் செய்திருக்கிறது. மோடி அலை மட்டும் இல்லாமல் போயிருந்தால் 20 சீட்டுக்களைக் கூட அது பெற்றிருந்திருக்காது. சரியான வேட்ப்பாளர்களை தேர்வு செய்யவில்லை.முதல்வர் வேட்ப்பாளரை முன் கூட்டியே அறிவிக்கவில்லை. டெல்லி தலைவர்கள் முழு முனைப்புடன் வேலை செய்யவில்லை. இந்த்க் குறைகளையெல்லாம் அடுத்த ஆறு மாதங்களில் களைந்து கொண்டால் நிச்சயமாக 50 இடங்களுக்கும் மேலாக பெற்று பெரு வெற்றி அடைய முடியும். அந்த இலக்கு நோக்கி அவர்கள் நகர இந்த கால அவகாசம் உறுதுணையாக இருக்கும். அது வரை ஆம் ஆத்மி கட்சியின் மறைமுக ஒத்துழைப்புடனும் துரோகத்துடனும் காங்கிரஸ் கட்சியே டெல்லியில் தன் ஆட்சியைத் தொடரப் போகிறது. அதற்கான முழு பொறுப்பும் ஆம் ஆத்மி கட்சியையே சாரும். மக்கள் நலனில் அக்க்றையுள்ள உழல் காங்கிரஸ் கட்சியை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு கட்சி செய்யக் கூடிய காரியம் அல்ல அது.

மேலும் 6 மாதங்களுக்குப் பிறகு மத்திய தேர்தலுடன் மாநில தேர்தல் நடைபெறும் பொழுது மக்கள் மோடிக்கான ஆதரவுடன் பி ஜே பி யை முழு மெஜாரிட்டியுடன் டெல்லியில் ஆட்சியில் அமர்த்துவார்கள். அதுவரை ஆம் ஆத்மி கட்சி காங்கிரஸுடனான தன் கள்ளக் காதலைத் தொடரட்டும் அதை பி ஜே பி மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டட்டும்.12 Comments:

முரளி இராமச்சந்திரன் said...

அருமையான பதிவு. பின்னிட்டீங்க.

முரளி.

Anonymous said...

fully biased article... if u say those parties who give reservations for the minorities involve in corruption .. didn't BJP involve in corruption .. even in the military coffin they did .. look at karnataka ... if u say Bhusan is appearing for the terrorists.. how do u declare them terrorist even before the judgement is given ???

Gopal said...

Aam aadmi party is certainly is going to be a xerox of Congress soon. The will learn all the vices and indulge in all the scandals very soon. Today a newly-elected Aam Aadmi Party legislator has been booked for allegedly molesting a family member of his Congress opponent . So they have opened their account. They will neither live nor let others live. Delhi citizens deserve this for giving a fractured verdict.

Anonymous said...

God save India from these politicians and writers. Please ask modi to proclaim,if he comes to power make "idlyvadai" as our national food or patel statue to hold idly vadai in the hand. ......JAIHIND.....

Murali

Get a Life said...

Thanks Gopal...

People with your attitude is all needed for the development of the country. Congress has been looting us for 60+ years, BJP did its part for 10+ years and the only option Delhiets had was new bud AAP.

AAP has not even sworn in or got a governing post within 2 days of the results here we are criticizing, well done.

We have been cribbing about corruptions for many years, did you or I do anything for it - nothing.

These guys were brave, did something and proved to be success. All we are doing is criticizing them...well done.

If you don't like them, please don't support them atleast refrain being a negative influence with your negative comments.

You don't care about what happens to the country all you want is in future brag that you predicted that AAP was corrupt - statement like "I told you AAP is xerox of congress soon they won" is what you care about...

Get a life mate...

Muralidharan said...

IDLY VADAI become BJP's Ko.Pa.Se ?

Yes all politicians are doing wrong, But we are not sure about how AAP will be, lets we give them a chance and see how they are behaving. Same thing happens with AAP like movie "KO" some one will come there.

_TRM

Anonymous said...

bjp is scared of aap. and thats a good thing.

Anonymous said...

Super article. Also publish the AAP party winning constituent.All are around the Delhi & nesr paces only.
Means, AAP shoud not go outside.

Suresh V Raghav said...

I am a Modi fan but not as you are.
The difference of votes in delhi can be got from http://delhielections2013.com/wp/?page_id=934,
which wont validate your claim. However, it was a competition between BJP and AAP in which both won. But AAP denying to take a claim is really questionable.
There are lot of followers for you here, so please give only accurate details.

Suresh V Raghav said...

I am a Modi fan but not as you are.
The difference of votes in delhi can be got from http://delhielections2013.com/wp/?page_id=934,
which wont validate your claim. However, it was a competition between BJP and AAP in which both won. But AAP denying to take a claim is really questionable.
There are lot of followers for you here, so please give only accurate details.

Anonymous said...

எழுப்பட்டிருக்கும் கேள்விகள் நியாயமானதே. சிறுபான்மையருக்கு சலுகைகள் அளித்தல் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பதும் சரியே. பி.ஜே.பி.ஒன்றும் சலுகைகள் அளிப்பதில் குறைந்தது இல்லை. ஆ.ஆ.கட்சி சிறுபான்மையருடன் உறவு வைத்துக்கொள்வதில் எந்த தவறும் கிடையாது. தனி சலுகை அளித்தால் அன்று கேள்வி கேட்கலாம். எல்லாரும் திண்ணைப் பேச்சு வீரர்களாகவும் எழுத்து வீரர்களாகவும் மட்டுமே காலம் கடத்தும்போது கேஜ்ரிவால் என்கிற நபர் தைரியமாக ஊழலை எதிர்த்து அரசியல் கோதாவில் இறங்கி இருக்கிறார்.மக்கள் மனதில் ஒரு எழுச்சியை/மாற்றத்தை உண்டக்கியிருக்கிறார். அன்று ஹிந்து தெய்வங்களைப்பற்றி கதா காலக்ஷேபம் செய்துக்கொண்டே மாற்று மதங்களை வளர விட்டனர் நமது ஆன்மீக வீரர்கள்/வீணர்கள். அதுபோல் ஊழல் வீரம் பேசி கால நேரத்தை வீணாக்காமல் செயலில் இறங்கியிருக்கும் கேஜிரிவாலை போற்றுவோம். தவறு செய்தால் அதுத்தமுறை காணாமல் போய்விடுவார்.

கிருஷ்ணசாமி

raghs99 said...

BJP is not corruption free party , their corruption in Karnatka dumped bjp into dustbin in the first southern state where they formed a government
BJP's nitin gadkari is another corrupt person
still bjp has lots of corrupt people

AAP will be the good bet to bjp althought they may not be the challengers across india