பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 09, 2013

நான்கு மாநிலத் தேர்தல்களும் நாளைய அரசியலும் - 1 - விஸ்வாமித்ரா

கிட்டத்தட்ட ஒரு சாம்ப்பிள் பொதுத் தேர்தல் என்ற அளவில் இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. ஒவ்வொரு முறையும் வரவிருக்கும் பாராளுமன்றப் பொதுத் தேர்தல்களுக்கு ஒரு ஆறு மாதங்களுக்கு முன்னால் சில மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களின் முடிவைக் கணிக்கும் ஒரு முன்னெச்சரிக்கைத் தேர்தல்களாக அமைகின்றன. ஆனால் முந்தயத் தேர்தல்களை விட இந்த முறை இந்த சட்டசபைத் தேர்தல்கள் பெருத்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின. அதன் காரணம் மோடி என்னும் ஒரு விதி சமைப்பவரின் வருகை. இந்தத் தொடரில் நான்கு மாநிலத் தேர்தல்களில் மோடி ஏற்படுத்திய தாக்கம், ஆம் ஆத்மியின் பங்கு, வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த முடிவுகள் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள், தமிழ் நாட்டில் உருவாக வேண்டிய கூட்டணிகள் ஆகியவை குறித்து ஒரு விரிவான பார்வையை இந்த கட்டுரை அளிக்கவுள்ளது


இந்த நான்கு மாநிலத் தேர்தல்களில் பி ஜே பியின் வெற்றியில் மோடியின் பங்கு என்ன?மோடியின் செல்வாக்கு குஜராத்தில் மட்டுமே செல்லுபடியாகும். மோடியினால் குஜராத்துக்கு வெளியே பெருத்த ஆதரவு அலையை பி ஜே பிக்கு உருவாக்க முடியாது. மோடிக்கு எந்தவிதமான செல்வாக்கும் கிடையாது அவர் ஒரு வெத்து வேட்டு மட்டுமே. மோடி சொல்லி பிற மாநில சட்டமன்றத் தேர்தல்களில் எந்தவிதமான மாற்றமும் வந்து விடப் போவதில்லை. மோடி அலை என்று எதுவும் கிடையவே கிடையாது என்று தொடர்ந்து காங்கிரஸின் பிரசார ஏஜெண்டுகளாகச் செயல் பட்டு வரும் ஊடகங்கள் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. மோடி அலை எதுவும் வீசவில்லை என்று மீண்டும் மீண்டும் பொய்களைச் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள் சில அஞ்ஞாநிகள்.

இதற்கு முன்பாக நடந்த பல தேர்தல்களில் மோடி பிரசாரம் செய்தும் பெரிய மாற்றம் எதையும் அவர் ஏற்படுத்தியிராததும் உண்மையே. ஆனால் இப்பொழுது மோடியை பா ஜ க தன் பிரதமர் வேட்ப்பாளராக அறிவித்துள்ள நிலையில் அவர் மீது நாடு முழுவதும் மக்களுக்கு ஆர்வமும் மரியாதையும் பெருத்த அளவில் உருவான நிலையில் இந்த மாநிலத் தேர்த்ல்கள் மிக முக்கியமாக அவதானிக்கப் பட்டன. இந்த மாநிலத் தேர்தல்கள் மோடியின் செல்வாக்கினை கணிக்கும் ஒரு பாரோ மீட்டராகவே கருதப் பட்டது. ஆக வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல்களில் இந்த சட்டசபைத் தேர்தல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை விட மோடி ஏற்படுத்தவிருக்கும் தாக்கத்தை அளவிடும் ஒரு கருவியாகவே இந்தத் தேர்தல்கள் கருதப் பட்டன. மோடிக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அன்னா ஹசாராவினால் ஏற்படுத்தப் பட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் அரசியல் வடிவம் எந்த அளவில் நகர்ப்புற மாநிலமான டெல்லியில் தன் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை அளவிடும் தருணமாகவும் இந்தத் தேர்தல் அமைந்து விட்டபடியால் இந்தத் தேர்தல்கள் ஒரு முக்கியமான அளவீட்டுத் தேர்தலாக மாறி விட்டன.

பல்வேறு விதமான தேர்தல் கணிப்புகளின் படியே முடிவுகளும் வந்துள்ளன. இந்தத் தேர்தல்களில் மோடியின் பங்கும் அவரது பலத்த தாக்கமும் பா ஜ கவின் வெற்றிகளுக்கு ஆதாரமானவையாக இருந்தன. இதை அரசியல் அறிவு இல்லாத மூடர்களினால் மட்டுமே மறுக்க முடியும்.

மோடி அலை உண்மையா?:

இந்தத் தேர்தல்களில் மோடி அலை இருந்ததா? அதனால் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்தனவா? மோடியினால் பா ஜ க வுக்கு பெருத்த ஆதரவினைத் திரட்ட முடிந்ததா?

இந்தக் கேள்விகளுக்கு காங்கிரஸ் ஆதரவு மீடியாக்களும் காங்கிரஸ் இடதுசாரி ஆதரவாளர்களும் ”நிச்சயம் இல்லை” என்று பதில் சொல்கிறார்கள். இது கண் முன்னே வீசிக் கொண்டிருக்கும் ஒரு சுனாமியை அதன் மையத்தில் நின்று கொண்டு காண மறுத்து அப்படி எதுவுமே நடக்கவில்லையென்று சொல்லும் புரட்டு, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் மோசடி மட்டுமே. மோடி விளைவு இந்தத் தேர்தல்களில் பெரும் அளவு இருந்தது என்பதே அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை.

மிசோரம் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களில் மோடி செப்டம்பர் மாதம் துவங்கி தேர்தலுக்கு முதல் நாள் வரை ஓய்வின்றி சூறாவளி பிரசாரங்கள் செய்து வந்தார். டெல்லியில் துவங்கி போபால் ஆஜ்மீர் என்று அவரது ஒவ்வொரு கூட்டங்களுக்கும் லட்சக்கணக்கில் மக்கள் அலை அலையாக வரத் துவங்கினார்கள். டெல்லியில் நடந்த அவரது பிரமாண்டமான கூட்டமும் போபாலில் நடந்த அவரது கின்னஸ் சாதனையேற்படுத்திய கூட்டமுமே வரவிருக்கும் தேர்தல்களின் முடிவினைச் சொல்லி விட்டன. மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் அவருக்கு கூடிய கூட்டங்கள் அங்கு பா ஜ க பெரும் வெற்றியை அசுர வெற்றியை வரலாற்று வெற்றியை பெறப் போகின்றது என்பதை உறுதியாகச் சொல்லின. ஆக மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பா ஜ க பெற்ற வெற்றியின் அளவு மிகப் பிருமாண்டமான வெற்றியின் பின்னால் மோடி என்னும் ஒரு சக்தி இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை

டெல்லியைப் பொருத்தவரை எப்பொழுதுமே பா ஜ க வுக்கு எளிதான வெற்றி அமைந்தது கிடையாது. இழுபறி அல்லது தோல்வி என்பதாகவே இருக்கும். அதிலும் இந்த முறை ஆளும் கட்சியின் மெகா ஊழல்களையும் செயலின்மைகளையும் கற்பழிப்புகளையும் அதனால் மக்களிடம் ஏற்பட்ட கடும் எதிர்ப்பையும் பகிர்ந்து கொள்ள அன்னா ஹசாரே துவக்கிய இயக்கத்தின் அரசியல் பிரிவான ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்திருந்தது. பா ஜ க கட்ச்யின் முதல்வர் வேட்ப்பாளர் யார் என்பதை கடைசி வரையிலும் அந்தக் கட்சி அறிவிக்கவில்லை. உள்கட்சி குழப்பங்கள் நிலவி வந்தன. கிட்டத்தட்ட டெல்லி சட்டசபை தேர்தலை அந்தக் கட்சி கை கழுவி விட்டிருந்த நிலையில் மோடியின் வருகை பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தியது. அதிகம் பிரபலமாகாத முதல்வர் வேட்ப்பாளரும், உரிய முனைப்பும் தயாரிப்பும் இல்லாமையும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு நவீன எதிர்கட்ச்சியையும் மீறி பா ஜ க இந்த அளவு வாக்குகளைப் பெற்று தனிப் பெரும் கட்சியாக உருவானதன் ஒரே காரணம் மோடி ஏற்படுத்திய தாக்கம் மட்டுமே என்பது உறுதி. மோடியின் பிரசாரம் டெல்லியில் இல்லாமல் போயிருக்குமானால் பா ஜ க ஒரு 25 சீட்டுகளுடன் வழக்கம் போலவே தேங்கிப் போயிருந்திருக்கும். மோடியின் அலை அந்தக் கட்சியை அங்கு பிரதான கட்சியாக முன்னிறுத்தியது என்பதே உண்மை நிலவரம். டெல்லியில் ராகுலின் கூட்டத்திற்கு எவரும் வரவில்லை. காசு கொடுத்து அழைத்து வந்தவர்களும் அவர் பேச ஆரம்பித்தவுடன் கலைந்து சென்றனர். மோசமான கூட்டங்களைக் கண்டு சோனியா, ராகுல், மன்மோகன் ஆகியோரது பொதுக் கூட்டங்கள் ரத்து செய்யப் பட்டன. மாறாக அங்கு நடந்த ஒவ்வொரு மோடியின் பொதுக் கூட்டத்திற்கும் மைதானங்கள் நிரம்பி வழிந்தன. முதல் கூட்டத்திலேயே 3 லட்சத்திற்கும் மேலானோர் மோடியைக் கேட்க்கக் கூடினார்கள். டெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்கக் கூட்டங்களுக்குக் கூடிய அளவில் மோடிக்காக மட்டுமே மக்கள் லட்சக்கணக்கில் குவிந்தனர். அப்பொழுதே டெல்லியில் பா ஜ க வின் வெற்றிக்கான அடித்தளம் இடப் பட்டது. இருந்தாலும் அந்த அலை ஆம் ஆத்மி கட்சியின் புது செல்வாக்கால் லேசாக தடுத்து நிறுத்தப் பட்டது. மோடியின் பிரசாரம் இல்லாமல் இருந்திருந்தால் பி ஜே பி தனிப் பட்ட பெரும்பான்மை கட்சியாக அங்கு உருவாகியிருக்காது என்பதே உண்மை நிலவரம்.

அடுத்தாக மத்திய பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் மோடி ஏற்படுத்திய தாக்கம். ராஜஸ்தானைப் பொருத்தவரை அங்கு ஆட்சி செய்த அஷோக் ஜெலோட் மீது பெரிய அளவிலான அதிருப்தி ஏதும் இல்லாமல் இருந்தது. இருந்தாலும் அங்கு வழக்கமாக நிகழும் ஆட்சி மாற்றம் போலவே இந்த முறையும் நிகழ்ந்து பி ஜே பி தான் வழக்கமாகப் பெறும் நூற்றிச் சொச்ச இடங்களைப் பெற்று ஜெயித்திருக்கும். ஆனால் அங்கு மோடிக்குக் கிடைத்த வரவேற்பும் அவர் சென்றவிடமெல்லாம் கூடிய கூட்டமும் ஆரவாரமும் மக்களின் ஏகோபித்த ஆதரவும் அங்கு ஒரு பெரும் மோடி ஆதரவு சூறாவளியை பெரும் ஆழிப் பேரலையை அங்கு உருவாக்கி ராஜஸ்தான் மாநில வரலாற்றில் என்றும் இல்லாத அளவு எந்தவொரு கட்சியும் இது வரைப் பெற்றிராத அளவு 199க்கு 162 இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் ஆக்கியுள்ளது. மோடியின் தொடர் பிரசாரங்களும் அவர் ஏற்படுத்திய கடுமையான தாக்கமும் மட்டுமே பி ஜே பி க்கு இந்த பிருமாண்டமான ஆதரவு அலையை அங்கு உருவாக்கியுள்ளது. இதை வெளிப்படையாக ராஜஸ்தான் முதல்வராகப் போகும் விஜயராஜே சிந்தியா ஒத்துக் கொண்டுள்ளார். ஆக மோடி அலை டெல்லியை விட ராஜஸ்தானில் பெரும் அளவில் வீசியுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி என்னும் தடுப்பையும் மீறி வீசிய அந்த அலை ராஜஸ்தானில் அது போலவே உருவான மீனா மக்களின் கட்சியையும் காங்கிரஸ் கட்சியையும் சுத்தமாகத் துடைத்தழித்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் பா ஜ கவின் வெற்றி அதன் முதல்வரின் ஆளுமையினாலும் அவரது எளிமையான பண்பினாலும் ஓரளவுக்குத் திருப்தியாக அளித்த ஆட்சியினாலும் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவினையும் பெற்று ஏற்கனவே உறுதி செய்யப் பட்டிருந்த ஒன்று. ஆனால் அங்கு போபால் நகரில் மோடியின் பேச்சைக் கேட்ப்பதற்காக கிராமப் புறங்களில் இருந்தெல்லாம் கிளம்பி கிட்ட்டத்தட்ட 7 லட்சம் மக்கள் கூடியிருந்தார்கள். கின்னஸ் சாதனையாக அந்தக் கூட்டம் பேசப் பட்டது. அந்தக் கூட்டத்தில் மோடிக்கு ஏற்பட்ட்ட எழுச்சிமிகு ஆதரவினைக் காணும் பொழுதே இந்த முறை அங்கு பி ஜே பி யின் வெற்றி வழக்கமான சாதாரண வெற்றியாக இருக்கப் போவதில்லை என்பது உறுதி செய்யப் பட்டது. எதிர்பார்த்தது போலவே மோடிப் பேரலை அங்கும் தன் தாக்கத்தை அழுத்தமாகப் பதிவு செய்து மிகப் பெரும் வெற்றியை அங்கு பா ஜ க பெற்றுள்ளது. 230 இடங்களில் 165 இடங்களை பி ஜே பி அங்கு பிடித்துள்ளது. மோடியின் பிரசாரம் அங்கு நடந்திருக்காவிட்டால் குறைந்த அளவிலான ஆளும் கட்சி எதிர்ப்புகளும் பெரும் வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லாமையும் அங்கு பி ஜே பி க்கு வழக்கமான 120 இடங்களைப் பெற்றுத் தந்து ஒரு சாதாரண வெற்றியாக இருந்திருக்கும் ஆனால் அங்கு வீசிய மோடி அலை அந்த வெற்றியை 165 இடங்களுக்குக் கொண்டு சென்றுள்ளது. ஆக மத்தியப் பிரதேசத்திலும் கூட மோடியின் அலை எந்தவிதமான எதிர்ப்பையும் மீறி மிகப் பலமான ஒரு புயலாக வீசியுள்ளது உண்மை.

சட்டிஸ்கர் மாநிலத்தின் நிலவரம் வேறு விதமானது. அங்கு பெரும்பகுதியான தொகுதிகள் பழங்குடியினர்களும், காடுகளுக்குள் மறைந்த தொலைதூர கிராமப்புறங்களினாலனவை. அங்கு மோடி, சோனியா, ராகுல் போன்ற எவரையும் அங்குள்ள கிராமப்புறப் பகுதியினருக்குத் தெரியாது. மாவோயிஸ்டுகளின் ஆக்ரமிப்புகளில் உள்ள பெரும்பாலான தொகுதிகளுக்கு பிரசாரம் செய்யக் கூடச் செல்ல முடியாத சூழல் நிலவும் ஒரு மாநிலம். மாவோயிஸ்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல்களையும் பழங்குடியினரை மதம் மாற்றம் செய்யும் கிறிஸ்துவ மிஷனரிகளின் செல்வாக்க்கையும், சுரங்க மாஃபியாக்களின் அச்சுறுத்தல்களையும், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பையும் மத்திய அரசின் ஆதரவின்மையையும் மீறி ஒரு கடுமையான சூழலில் கடந்த இரு தேர்தல்களில் வென்று தன்னால் இயன்ற வரை கூடுமானவரை நல்லதொரு ஆட்சியை நேர்மையாக வழங்க முயற்சித்து வருகிறார் முதல்வர் ரமன் சிங். அங்கு அவருக்கு காங்கிரஸ் கட்சியும் அதன் ஊழல் மிகுந்த தலைவரான அஜித் ஜோகியும் பெரும் எதிர்ப்பை வழங்கிய எதிர்க்கட்சி என்றால் மறைமுகமாக நான்கு எதிரிகளை அவர் எதிர் கொண்டு ஆட்சி செலுத்த வேண்டிய நிலையில் இருந்து வந்தார். இருந்தாலும் தன் ஆட்சிக்கு உட்பட்டு மக்களுக்குச் செல்ல வேண்டிய பொது வினியோகத்தை ஊழல் இல்லாமல் திறம்பட நிர்வாகித்ததினாலும் நக்சல் பிடிகளில் இல்லாத இடங்களில் ஓரளவு வளர்ச்சிகளை ஏற்படுத்தியதினாலும் தன் செல்வாக்கை தக்க வைத்திருந்தார். ஆனால் மாவோயிஸ்டுகளின் கொடூரமான தாக்குதல்களினால் ஏராளமான காங்கிரஸ்காரர்கள் கொல்லப் பட்டிருந்த நிலையில் அவர் ஏற்கனவே எதிர் கொண்டு வந்த ஐந்து எதிர்ப்பு சக்திகளையும் மீறி ஆறாவதாக காங்கிரஸ் மீதான அனுதாப அலை என்ற ஒரு எதிர் சக்தியையும் எதிர் கொள்ள வேண்டியிருந்தது. அந்த நிலையில் அவருக்குக் கை கொடுத்த ஒரே வெளி ஆதரவு மோடி ஏற்படுத்திய ஆதரவு அலை மட்டுமே. அதுவுமே சட்டிஸ்கரின் சிறு நகரங்களில் மட்டுமே மோடியின் ஆதரவு அலை செல்லுபடியானது. அங்கு மோடியினால் அதிகம் ஊடுருவ முடியவில்லை. இருந்த போதிலும் மோடியின் அலையும் பிரசாரமும் இல்லாமல் போயிருந்தால் அங்கு வீசிய அனுதாப அலையில் காங்கிரஸிடம் ரமன் சிங் தோல்வியைத் தழுவியிருந்திருப்பார். மோடியின் அலை குறைந்த பட்ச தாக்கத்தை ஏற்படுத்தியது சட்டிஸ்கர் மாநிலத்தில் மட்டுமே. ரமன் சிங்கின் நூலிழை வெற்றிக்கு அந்த குறைந்த பட்ச அலை நிச்சயம் உதவியாகவே இருந்தது

டெல்லியில் பி ஜே பி யின் வாக்கு வங்கி 3% குறைந்திருப்பதாக வல்லுனர்கள் சொல்வார்கள். மேலும் பிற மாநிலங்களிலும் வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவில்லையென்றும் ஆதலால் மோடி விளைவு ஏதும் இல்லை என்றும் இந்தக் கணிதப் புலிகள் சாதிப்பார்கள். உண்மை என்னவென்றால் அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுப் போட்டவர்களின் சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு மக்களைப் பெரும் அளவில் வாக்குச் சாவடிகளுக்குக் கொண்டு வந்தது எது என்பதை இவர்கள் பேச மாட்டார்கள். பெரும்பாலும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டுப் போட ஆர்வம் இல்லாத மக்களையும் கூட பெரும் அளவில் நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஓட்டுப் போட வைத்தது மோடி என்னும் மகத்தான ஆளுமையும் அவர் உருவாக்கிய உத்வேகமும் மட்டுமே. மோடி அலை உருவாகாமல் இருந்திருந்தால் அவர் ஏற்படுத்திய மகத்தான எழுச்சி உருவாகாமல் இருந்திருந்தால் 70% அளவுக்கு மக்கள் பெரும் அளவு திரண்டு ஓட்டுப் போட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே வெறும் புள்ளி விபரக் கணக்குகளுடன் நின்று விடாமல் ஒட்டு மொத்த வாக்காளர்களின் சதவிகிதத்தையும் சேர்த்து நோக்க வேண்டும்.

பா ஜ கவுக்கு ஏற்கனவே இருந்த சட்டமன்ற உருப்பினர்கள் 142 பேர்கள். இந்தத் தேர்தல்களில் மூலமாக அதன் எண்ணிக்கை 212 பேர்களாக அதிகரித்துள்ளது. 71 சதவிகிதம் கூடியுள்ளது. இது மோடி அலை இல்லாவிட்டால் எது மோடி அலை? கண்ணிருப்பவர்கள் காணட்டும் காதிருப்பவர்கள் கேட்க்கட்டும் மனம் இருப்பவர்கள் உணரட்டும்

தொடரும்...

8 Comments:

Madhavan Srinivasagopalan said...

Qualitatively this article is Ok... but quantitatively not clear.

For eg.
// பா ஜ கவுக்கு ஏற்கனவே இருந்த சட்டமன்ற உருப்பினர்கள் 142 பேர்கள். இந்தத் தேர்தல்களில் மூலமாக அதன் எண்ணிக்கை 212 பேர்களாக அதிகரித்துள்ளது. 71 சதவிகிதம் கூடியுள்ளது //

Not able to understand both of these lines.. Can anyone explain ?

vv said...

4 States = 142 Seats(Members)(Old)
4 States = 212 Seats(Members)(New)

142 / 4(States) = 35.5
212 / 4(States) = 53

53 - 35.5 = 17.5

17.5 x 4(States) = 70

That's it Mr.Madhav...!!

Anonymous said...

ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை. அம் ஆத்மிக்கு டில்லிக்கு வெளியே ஆதரவிருக்குமா ?

பரமானந்த மாதவன்

G Perumal said...

உங்கள் பதிவு மிகவும் சாமார்த்தியமாக எழுதப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு மக்கள் எதிராக உள்ளார்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால் மோடி அலை வீசுகிறது என்பது பொய். டெல்லியின் முதல்வர் வேட்பாளர் ஹர்சவர்தன் 5வது முறையாக வெற்றி பெறுகிறார். புதியவர் அல்ல. ராஜஸ்தானில் மோடி பிரசாரம் செய்தது 20 தொகுதிகள். அதில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 21ல் 4 தொகுதிகளும் அடங்கும். மோடியை விட சௌகான் சிறந்த ஆட்சியாளர் என்பது மோடியை முன்னிறுத்தும் போதேல்லாம் சொல்லப்பட்டு வந்துள்ளது. சத்திஸ்கரில் இரு கட்சிகளும் ஏறக்குறைய சம நிலையில்தான் இருந்துள்ளன. இப்படி ஏகப்பட்ட கருத்துக்கள் உங்கள் பதிவில் மறைக்கபடுகிறது. காங்கிரஸ் மீதான மக்களின் எதிர்ப்புணர்வை பா.ஜ.க. எப்படி வோட்டாக மாற்றுகிறது என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. பொய்யான பிரசாரம் மக்களுக்கு புரியும். கிழக்கு, வட கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் பா.ஜ.க விற்கு போதிய பலம் இல்லை. அங்கு அதன் தேர்தல் அணுகுமுறை என்னை? என்பதையும் பார்க்க வேண்டும்.

Anonymous said...

நாடு இப்போ உள்ள நிலை அறியாமல் நாம் ராகுல், மோடி, கெஜ்ரிவால் என்றெல்லாம் பேசுவதில் பயனில்லை.மிக ஆபத்தான, சாமர்த்தியமான எதற்கும் துணிந்த ஒரு குழு திரைமறைவில் அனைவரையும் இயக்குகிறது.அவர்கள் போடும் கோட்டைத்தாண்டி யாராலும் போக முடியாது.இதை நம்புவது சற்று கடினம்.ஆனால் தீவிரமாக யோசித்தால் இதில் உள்ள உண்மை புலப்படும்.எனவே யார் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவது சாத்தியம் இல்லை.

Anonymous said...

// பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படுவது சாத்தியம் இல்லை.//

அவநம்பிக்கை ஒரு சத்ரு!

குஜராத்தில் எப்படி மாற்றம் சாத்தியப்பட்டதோ அப்படி மத்தியிலும் மாற்றம் வரும் அதை பார்க்கத்தான் போகிறீர். அது வரை ஆஹே பீச்சே பந்த்கர்கே ஆராம்சே பைட்டோ பாய்

Anonymous said...

if Modi is the reason for the increase in voter turnout, than their Vote % should also increase right?

Anonymous said...

if it was modi wave then, how did AAP got those many seats in Delhi... its just anti-congress ..agree the fact ..... do u think people elected JJ in TN coz she is gud, no .. its coz of anti-DMK ... thats why even captain was able to get 29 seats....