பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 01, 2013

ஆரம்பம் - FIR

ஆரம்பம் என்ற தலைப்புக்கு ஏற்றவாறு படம் நன்றாக ஆரம்பிக்கிறது. தமிழ் பட ஃபார்முலாவின்படி முதலில் ஹீரோவின் கால்களை காட்டுகிறார்கள். பிறகு 'தல' மூஞ்சியை காட்டும் இடங்களில் பலத்த கைத்தட்டல். காரை ஓட்டிக்கொண்டு மூன்று இடங்களில் வெடிகுண்டு வைக்கும் போது அட ஆரம்பமே அசத்தலாக இருக்கே முன் சீட்டில் உட்கார வைக்கிறது.

சரி இவர் செய்யும் காரியங்களுக்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் இருக்கும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சொல்லுவார்கள் என்று நாம் காத்துக்கொண்டு இருக்கும் போது ஆர்யா வருகிறார். கூடவே நயன்... ஆனால் ஹீரோ மாதிரி இல்லாமல், இவர் கால்களை (துடையுடன்) காட்டும் போது மக்கள் கைத்தட்டுகிறார்கள்!.

ஆரியா ஒரு கம்யூட்டர் ஹேக்கர் என்பதால் எப்போது கீபோர்ட்டை தட்டிக்கொண்டே இருக்கிறார். ஜி, Chief என்று அஜித்துக்கு எடுபிடியாக இருக்கிறார். டாப்ஸி இவருக்கு எடுபிடியாக இருக்கிறார்.

இடைவேளை வரை நல்ல திரைக்கதையுடன் விறுவிறு என்று போகும் படம்.... இடைவேளைக்கு பிறகு சராசரி தமிழ் படம் போல. எப்படா ஆரம்பித்ததை முடிக்க போகிறீர்கள் என்று கேட்க வைக்கிறது. தயவு தாட்சண்யமின்றி பல காட்சிகளை வெட்டியிருக்கலாம். பலருடைய முகங்களை க்ளோசப்பில் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. டான்ஸ் ஆடும் போது அஜித்தின் தொப்பை குலுங்குவது என்று கேமரா தன் வேலையை செய்திருக்கிறது. யுவன் இசை பாடல்கள் ஏதோ சுமார் ரகம்.

படத்தில் என்ன தான் டெக்னாலஜி இம்ப்ரூவ் ஆனாலும் கடைசியில கைநாட்டு தான் என்று அஜித் ஒரு இடத்தில் வசனம் பேசுவார். என்ன தான் அஜித் நடித்தாலும் கடைசியில் கார், பைக், படகு என்று சேசிங் சீன்களும்....இந்தியா எல்லையில் தீவிரவாதிகள் என்று விஜயகாந்த், அர்ஜூன், சரத்குமார் படங்களை போல ஆகிவிட்டதே என்று நமக்கு தோன்றுகிறது.


இட்லிவடை மார்க் 6/10
முதல் பாதி நல்ல ஆரம்பம். பிற்பாதி நல்ல ரம்பம்


0 Comments: