பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 07, 2013

ஒரு கட்டுரையும் எதிர்வினையும் - காமெடி பீஸ்


தி.இந்துவில் வந்த எதிர்வினையாம்...

கண்கொள்ளாக் காட்சி அது. பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோரும் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகத்துக்கு நேற்று வந்தார்கள். ஜெயமோகன் எழுதிய ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ கட்டுரைக்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வந்த அவர்கள், எதிர்வினையாகக் கையெழுத்திட்டுக் கொடுத்த கண்டன அறிக்கை இது.மனக்குமுறலோடு ஒரு மடல்

‘‘வணக்கம், இந்த மடலின் இறுதியில் கையொப்பமிட்டுள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களும், தமிழ் உணர்வாளர்களுமாகிய நாங்கள் ‘தி இந்து’நாளிதழில் (4.11.13) வெளியாகியுள்ள எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ என்னும் கட்டுரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

உலகெங்கும் வாழும் பல கோடித் தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்திலும் ஒட்டுமொத்தத் தமிழ் இனத்தை இழிவுபடுத்தும் விதத்திலும் எழுதப்பட்டுள்ளது. ‘எழுத்தாகிய உடல் இல்லையேல், மொழியாகிய உயிர் அழியும்’என்பார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். இப்போது தமிழ் மொழியின் உடலை அழிக்கும் முயற்சியில் ஒரு ‘மாமேதை’இறங்கியுள்ளார். அதற்கு ‘தி இந்து’நாளிதழ் துணைபோகலமா?

தன்னை ஒரு நாயர் என்று பெருமையாகக் கூறிக்கொள்ளும் அவர், மலையாள மண்ணின் மீது மாறாத பற்றுடையவர் என்பதை அறிவோம். அந்த மலையாள மண்ணில் மாற்றங்களை எல்லாம் செய்துமுடித்துவிட்டு, தமிழ் எழுத்து வடிவத்தை அழிக்க ஜெயமோகன் புறப்படட்டும்.

மலாயுடன் ஒப்பிடலாமா?

மலாய் மொழியைத் தமிழுக்கு ஒப்பிட்டுக்காட்டுவது எவ்வகையில் பொருந்தும்? தங்களுக்கென்று தனி வரிவடிவம் இல்லாத நேரத்தில், பிற வரிவடிவங்களைக் கையாள்வது இயல்புதான். மலாய் மொழி ஆங்கில எழுத்துருவுக்கு வந்திருப்பதாகக் கட்டுரையாளர் சொல்கிறார். அது லத்தீன் எழுத்துருவிலும், சுமத்ரா பகுதியில் அரபு எழுத்துருவிலும்கூட எழுதப்படுகிறது என்பதை அவர் அறிவாரா?

தமிழ் எழுத்துகளின் மூல எழுத்து ‘பிராமி’என்பது தவறான கருத்து என்பதை மொழியியலாளர்களே இன்று ஏற்கின்றனர். அதனால்தான், ‘தமிழ் பிராமி’என அழைக்கத் தொடங்கியுள்ளனர். இதனை எல்லாம் மொழியியல் மேதை ஜெயமோகன் அறிவாரா?

எழுத்துருவை மாற்றும்போது (உச்சரிப்பு) ஒலிப்பு முறை முற்றிலும் மாறிவிடாதா? தமிழ் நூல்களின் எழுத்துரு அனைத்தையும், ஒரு தலைமுறைக் காலத்தில் முற்றிலுமாக மாற்றிவிட வேண்டும் என்று ஜெயமோகன் துடியாய்த் துடிக்கிறார். தமிழின் சுவடுகள்கூட இல்லாமல் அதனை அழித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தின் வெளிப்பாடுதானே இது? கனத்த நெஞ்சுடன், மீண்டும் எங்களின் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.’’

கையெழுத்திட்டவர்கள்

தொல்.திருமாவளவன், கலி.பூங்குன்றன், சுப.வீரபாண்டியன், தியாகு, பேராசிரியர் மு.பி.பாலசுப்பிரமணியன், க.திருநாவுக்கரசு, சைதை க.வ.சிவா, மே.ப.காமராஜ், கி.த.பச்சையப்பன், வா.மு.சே.திருவள்ளுவர், பா.இறையெழிலன், கோ.பாவேந்தன், தமிழ்மகன், உதயன், முத்தையா குமரன், கோவேந்தன்.

கருத்துகளை மதிக்கிறோம்

தமிழ்ச் சூழலில், ஒரு புதிய விவாதக் களத்தை ‘தி இந்து’ தொடங்கிவைத்திருக்கிறது. மிகக் குறுகிய காலத்தில் அது பெரும் வீச்சை உருவாக்க ஆரம்பித்திருக்கிறது. ‘கருத்துப் பேழை’ மற்றும் ‘அரசியல் கள’த்தைத் தாங்கிவரும் நம்முடைய நடுப்பக்கங்கள் வெவ்வேறு குரல்களின் கருத்துகளை முன்வைக்கும் தளமாகவே வருகின்றன. கட்டுரையாளர்கள் அல்லது பேட்டியாளர்களின் கருத்துகள் நம்முடையவை அல்ல. அதே சமயம், எல்லா விதமான கருத்துகளும் சங்கமிப்பதே ஜனநாயகத்தின் அடிப்படை என்று நாம் நம்புகிறோம். எதிர்வினைகளுக்கும் நாம் இடம் அளிக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று முதல் வாசகர் கடிதங்களுக்கான இடத்தையும் கூடுதலாக்குகிறோம். தமிழால் இணைவோம்!

- ஆசிரியர்வந்தவர்களுக்கு ஒரு கப் காபி செலவில் தி.இந்து பல காப்பிகளை விற்றுவிட்டது என்று நினைக்கிறேன்.

"தி.இந்து" - ஆங்கில சொல்லை தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவது தவறா ? சிந்தியுங்கள்

15 Comments:

Anonymous said...

//"தி.இந்து" //
இந்து - Tamil word is written in English and translated back to tamil.

Anonymous said...

தமிழ் அறியாத நடிகர் நடிகையர் பாடகர் பாடகிகள் திரையில் பேசுகையில் பாடுகையில் முதற்கண் அவர்கள் அதை தனது மொழியில் எழுதி படிப்பது தான் இருந்து வருகிறது.

ஆயினும் நாளாக ஆக மொழியைக் கற்றுக்கொண்டு விடுகின்றனர்.

தமிழ் உரு கடந்த 100 ஆண்டுகட்கு முன்னால் இருந்த வடிவம் அறிந்த ஒன்றாகும். அதை எடுத்துரைக்க வேண்டிய தேவை இல்லை.

இருப்பினும் இன்றைய நிலையில் தமிழ் உரு தமிழ் மக்கள் அனைவருக்கும் எளிதாக ஒரு முழுமையாக இருக்கிறது. அதை மாற்ற வேண்டும் என்ற நிலை இல்லை.

இரண்டாவது, மலையாளம் திராவிட மொழியாக கருதப்பட்டாலும் ஏரத்தாழ ஒரு எழுபது விழுக்காடு சொற்கள் வடமொழி சொற்கள். தெலுங்கு மொழியிலும் வடமொழி சொற்கள் அதிகம். இவையோடு தமிழை ஒப்பிடுதல் சரியாகாது.

இன்னொரு கோணத்தில் பார்க்கப்போனால், சம்ஸ்க்ருதம் இன்றைய கால கட்டத்தில் மக்கள் மொழியாக இல்லாது போனதற்கோ உரு காரணம் இல்லை. அதன் இலக்கணம் தான்.

தமிழ் இலக்கணம் முழுமையாகக் கல்லாதவரும் தமிழைச் சரிவர சுத்தமாக எழுத இயலும்.

ஜெயமோகன் வாதங்கள் பொருத்தமாக இல்லை.

இன்னும் ஒரு கருத்து.

ஜெயமோகன் அவர்களது தமிழ் நடை வலிந்து எழுதப்படும் நடை.
அதில் இயல்புத்தன்மை இல்லை.

இவரை ஒரு பொருட்டாக தமிழ் மக்கள் மதித்துக் கருத்திட வேண்டிய அளவுக்கு இவரது கடிதத்தில் ஆழமும் இல்லை.

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ.,

- 'The Hindu' என்ற ஆங்கிலச் சொல்லைத் தமிழில் 'தி.இந்து" என்று எழுதும் போது தமிழ் மொழி 10% அழிகிறது என்று (சுமாராக ) வைத்துக் கொண்டால் (ஜெ .மோ. சொல்வது போல) 'இட்லி வடை' என்பதை 'Idly Vadai' என்றே தமிழில் (கவனிக்கவும்: ஆங்கிலத்தில் அல்ல) எழுத ஆரம்பித்தால், தமிழ் கிட்டத்தட்ட 60% அழியும்! அதன் பிறகு 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்றெல்லாம் சொல்ல வேண்டிய அவசியமே இருக்காது!சுத்தம்!

நன்றி!

சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.in

Anonymous said...

இந்த வினைக்கு எதிர்வினை ஆற்ற இத்தனை பேர் வாராங்களா ? அப்ப நம்ம ”எ.அ.பா” கிரிக்கெட் கட்டுரை எதாகிலும் இந்துவில் எழுதினால் இந்து தாங்குமா ?

சோமசேகர்

Anonymous said...

TO DAY IS THE BIRTH DAY OF SIR. C.V. RAMAN THE FIRST TAMILIAN TO GET NOBEL PRIZE.
NONE OF OUR MEDIA (PRINT OR VISUAL)HAS GIVEN ADEQUATE COVERAGE.
HE STUDIED ONLY IN TAMIL MEDIUM UPTO HIGH SCHOOL AND DID HIS RESEARCH WITH PRIMITIVE EQUIPMENTS.
HIS CONTRIBUTION TO SCIENCE IS STILL RESEARCHED.
TAMIL AND TAMILIANS WILL GROW IF WE REMEMBER OUR GREAT MEN INSTEAD OF CONCENTRATING ON SUCH TRIVIAL ISSUES.
THE COMMENT MAY BE IRRELAVANT TO THE ISSUE BUT I WANTED IDLY VADAI READERS TO REMMEMBER A REALLY GREAT MAN.

Anonymous said...

அன்புள்ள இ.வ.,

http://balaji_ammu.blogspot.com/2013/11/vs-2013.html --- தீயா வேல செய்யணும், ஆனந்து! விஷி ஆனந்த் vs கார்ல்ஸன் - செஸ் 2013

--- எ.அ.பா செஸ் பத்தி இங்க எழுதப் போறது இல்லையா?

சோமசேகர்

kothandapani said...

அவனவன் செவ்வாய் கிரகத்திற்க்கு ராகெட் விட்டிண்டு இருக்கான். இவனுக ஒரு க்ரூப் தமிழை அழிக்கின்றேன் என்றும் இன்னொரு க்ரூப் தமிழை காப்பாததிரேன் என்றும் கிளம்பிட்டாங்க ...

இவங்களால தமிழை காப்பாத்தவும் முடியாது.. அழிக்கவும் முடியாது. .... குஷ்பூ பேசியே அழியாத தமிழ் எங்கள் தமிழ்....

Anonymous said...

தி.இந்து" - ஆங்கில சொல்லை தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவது தவறா ? சிந்தியுங்கள்

"IDLY IYYANAR" what you said is somewhat par to VEERAMANI'S statement about krishna jayanthi "KRISHNANAKU JAYANTHI THAYVAIYA, SINDHIPIR" ....

Murali

Anonymous said...

நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இந்த ஆளுங்களுக்கு வேலை கொடுங்க - அதுவும் அந்த மீசை அங்கல்ஸ் சுபவி மற்றும் திருமால்வளவனுக்கும். ஏதோ ஒரு ஆஃபீஸர் லஞ்சம் வாங்கினருணு செய்தி போட்டு, அந்த டேப் வார கடைசில வெளியிடாறோம்னு சொன்னாங்க. அந்தாளு ஆப்பிஸேலேயே தூக்கு போட்டுகிட்டாரு. சாவோட தொடங்கினது இந்த தமிழ் ஹிந்து. இன்னும் எத்தன பேற எழுதி கொல்ல போறாங்களோ தெரியல. - ஸ்ரீராம்

ரமேஷ் said...

ஆங்கில சொல்லை தமிழில் எழுதும் போது தமிழ் எழுத்தை ஆங்கிலத்தில் எழுதுவது தவறா ? ///
.
.
Porkalam என்பது பொற்காலமா?போர்க்களமா?போர்காலமா?பொற்களமா? அய்யா இட்லி வடை தெளிவு படுத்தினால் நன்று ..ஒரு வார்த்தைக்கே இவ்வளவு குழப்பம்.மொத்தமாக ஒரு பதிவை அதற்கு மேல் ஒரு புத்தகம் எழுதினால் என்னாகும் நிலைமை?

sidtharth said...

நஸ்ரியாவின் "தொப்புள்" விவகாரம் படம் ஓடுவதற்காக டைரக்டர் உடன் சேர்ந்து செய்த பரபரப்பு என்று குற்றச்சாட்டு - செய்தி

இந்த செய்திக்கும், மேலே உள்ள கட்டுரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ...

ஆ.. பக்கங்கள் said...

இதே கருத்தை தாகூர், பெரியார் சொன்னால் சரியா? அது பகுத்தறிவு போல ..

Lalitha said...

Idlyvadai - back to the form!-HAPPY!!

Instead of writing tamil in 'hexa' form comprising of 6 letters, why not we write in 'binary'form comprising 2 letters only? Human & Computer language - same.

Think Mr.Jayamohan!!

010111001101101010110100110000100 011010 0110001 011001110 110 10110 10110 011110 10110 110111000 1101001 101100000000001 1111110010110 0101001 010101001 0101 0100101010 1010101101 10101 1011011 01111 1100110 10110 01101 01001010010001 0100011010101111000 1010101 011110 110101010 011011101 011010 011010110110 101010 1010101 01101 0111010 10110111 011111110 0110010110 111000 0110110101010 1011 1011011011 01100000 10111111 01110 0111011000000 10000 101110 011 111100 001110 1101000010010 0110110 10111101 010010 0110 100 11011 100000010010!

பாலாஜி said...

இட்லிவடை பழமொழி புதிர் இடுகைய பாத்து Connexion ன்னு ஒரு ப்ரொக்ராம் விஐய்ல போடறான்... http://idlyvadai.blogspot.in/2013/08/blog-post_13.html …... what a tragedy saravana

Anonymous said...

In 1960s, sri. c. cubramaniyam told, devanagari libi could be used for all indian languages.
all matriculation, CBSE students
are learning hindi. so , devanagari libi will be easy for most of the students. Still it appears a good suggestion.If somebody asks, without knowing hindi, Alagiri became central minister, so what is the use of hindi, i have no answer for this.
But, if any foreigner,(white skin) changes our tamil libi, we will accept it. We will wait for his arrival.