பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, November 05, 2013

இன்று விண்ணில் ஏவப்படுகிறது மங்கள்யான்

பி.எஸ்.எல்.வி சி-25 என்ற ராக்கெட் மூலம் இன்று பிற்பகல் 2 மணி 38 நிமிடங்களுக்கு விண்ணில் ஏவப்படும் மங்கள்யான் செயற்கைகோள், 40 நிமிடங்களில் பூமியின் சுற்றுப்பாதையில் இணையும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் 20 முதல் 25 நாட்களுக்கு சுற்றியபின் செவ்வாய் கோளுக்கு டிசம்பர் 1-ஆம் தேதி பயணத்தை தொடங்கும் எனவும், அதன் சுற்றுப்பாதையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி இணையும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியைத் தவிர வேறு ஏதேனும் கோள்களில் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பதை அறியும் முயற்சியாக செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கைக் கோளை இந்தியா அனுப்புகிறது.
- செய்தி
படம் உதவி : விகடன்
படத்துக்கும் செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை...

6 Comments:

kothandapani said...

படத்துக்கம் செய்திக்கும் தொடர்பு எதுவும் இல்லை.......... எத்தனை தடவை சொன்னாலும் உமக்கு புரியவே புரியாதா ... நீர் போட்ற படத்திற்க்கும் செய்திக்கும் எப்போதுமே தொடர்பு எதுவும் இருந்ததே இல்லையே..

Anonymous said...

மற்ற மாநிலங்களில் கிடைக்கும் இந்த கோடிகள் இல்லாமல், குஜராத்தை முன்னேற்றி இருப்பதும் மோடியின் சாதனைதானே

dr_senthil said...

இலவசங்களை நிறுத்தினால் குடியினால் ஏற்படும் இழப்புகளை/ இறப்புகளை நிறுத்தலாம்.

poornam said...

மங்கள்யான் கிளம்பியாச்சு....
- செவ்வாய்க்கிழமை ராகுகாலத்துக்கு முன்.
(பகுத்தறிவாளர்கள் மன்னிக்கவும்.)

ஜெ. said...

ராகு காலம் நம்பிக்கை சார்ந்தது, ராதாகிருஷ்ணன் திருப்பதியில் பிரார்த்தனையும் செய்தார் - அவருக்கு முன்னவரான மாதவன் நாயரைப் போல - செய்தி.

அதை விடுங்கள், செவ்வாயில் உயிரினம் இருந்ததா என்று பார்க்க மீதேன் வாயு இருக்கிறதா என்று செக் செய்யப் போகிறார்கள். எப்படி சம்பந்தம் என்று இ.வ. வாசகர்கள் தெளிவு படுத்த முடியுமா?

மேலும், இதற்கு முன்பே 4 நாடுகள் செவ்வாய் பயணத்தில் முன்னோடிகள், அவர்கள் இதை கண்டுபிடிக்கவில்லையா?

-ஜெ.

Anonymous said...

ரொம்ப துளிர் விட்டுடுச்சோ. ஒரு அவதூறு வழக்கு போட்டா தான் அடங்குவிங்க போல. நான் விகடன சொன்னேன்.