பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 04, 2013

நூலகங்கள், பதிப்பகங்கள் - பிரபஞ்சன்

'நூலகங்களுக்கு தமிழ் நூல்கள் வாங்கப்படுவது இல்லை என்று பதிப்பகங்கள் சார்பில் அறிக்கைகள் வருகின்றன. நூலகங்களை நம்பித்தான் பதிப்பகங்கள் செயல்பட வேண்டுமா? வேறு வழி இல்லையா?''

''அரசு நூலகங்களை நம்பியே பதிப்பகங்கள் வாழ்வது ஓர் அவலம். இங்கு மக்கள் இன்னும் புத்தகங்களோடு சேர்ந்து வாழும் நிலை உருவாகவில்லை. புத்தகத்தின் வெகுமதி உணரப்படவில்லை. இது ஒரு பக்கம். தமக்குரிய நூல்களைத் தேர்ந்து வாசிக்கும் பயிற்சி, வாசகர்களுக்குப் போதவில்லை. சமையல், வாஸ்து, அழகுக் குறிப்புகள், ஆண்மை விருத்தி, பத்து நாட்களில் பணக்காரர் ஆகும் வழி முதலானவைகூட இங்கு புத்தகம் என்றே அழைக்கப்படுகின்றன. வங்க நாவலாசிரியர் விபூதி பூஷண் (பதேர் பாஞ்சாலி நாவல் ஆசிரியர்) எழுதிய வங்க நாவல் 'வனவாசி’யை சாகித்ய அகாதமி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற, நேர்மை மிகுந்த டி.என்.குமார சாமி-டி.என்.சேனாபதி சகோதரர்கள் வங்க மொழி பயின்று வங்க மொழியிலிருந்து மொழியாக்கம் செய்த சில அரிய படைப்புகளில் ஒன்று 'வனவாசி’. இது 'ஆரண்யம்’ என்ற பெயரில் மொழிபெயர்ப்பாளர் பெயர் இல்லாமல், அநாதையாக இப்போது வெளியாகி இருக்கிறது. இதையும் காசு கொடுத்து, நூலகத் துறை வாங்கும்.

பதிப்பாளர்கள் சிலர், எழுத்தாளர்களுக்கு ராயல்ட்டி கொடுக்காமல் பட்டினி போட்டுச் சாகடிக்கிற தமிழ்த் தொண்டு செய்கிறார்கள். என்றாலும், பதிப்பாளர்களுக்கு அரசியல், கட்சி முதலான காரணங்களால் அவர்கள் உரிமை பறிக்கப்படும்போது நாம் அவர்கள் பக்கமே நிற்க வேண்டும். அதே சமயம், பாதிக்கப்படுகிற எழுத்தாளர் பக்கமும்தான்!''

நன்றி: விகடன் மேடை - பிரபஞ்சன் பதில்கள்

சென்னையில் பெரும் ஆங்கிலப் புத்தகக் கடையொன்றில் ஓர் அறிவிப்பைப் பார்த்தேன். அன்று வந்துசேர்ந்த ஆங்கில நூல் ஒன்று 2,000 பிரதிகள் விற்றிருக்கிறது என்று சொன்னது அது. பரபரப்பாக விற்கும் ஒரு தமிழ் நூல் வருடம் 2,000 பிரதிகள்தான் விற்கும். அதில் 1,500 பிரதிகள் நூலகத்துக்கு வாங்கப்படுபவை. தமிழகம் முழுக்க 500 பிரதிகள் வாசகர்களிடம் விற்கப்பட்டால் அது ஒரு சாதனை! - ஜெயமோகன் - தி.இந்து கட்டுரையில்..

ஆங்கிலத்தில் புத்தகத்தை நம்பி வாங்கலாம். தமிழில் ?

1 Comment:

Anonymous said...

ஆவியில் கருத்து என்ற பெயரில் அள்ளி விட்டிருக்கிறார். அவனவனுக்கு என்ன புத்தகம் தேவையோ அதை தான் வாங்குவான். நீங்க போனி ஆகலைனு வாசகரையும், பதிப்பாளரயும் கண்டபடி திட்டுவது அபத்தம். இவர் கதை என்ற பெயரில், முன்னோடி கருத்து என்ற போர்வையில் நம்முடய பண்பாட்டையும், நம்பிக்கையும் சீர் குலைக்க முயற்சி செய்து தோத்து போனவர். மஞ்சள் கமெண்ட் தான் இவருக்கான பதில். - Sriram