பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 22, 2013

'மட்டும்' போஸ்ட்


இந்தியாவின் பிரபலமான தெஹெல்கா பத்திரிகை ஆசிரியரான தருண் தேஜ்பால் அவர்கள் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டை அடுத்து தற்காலிகமாக பதவி விலகியிருக்கிறார். - செய்தி

விகடனில் ஏதாவது பிரச்சனை என்றால் அதை குமுதம் ரிப்போட்டர் கண்டுக்கொள்ளாது. அதே போல குமுதம் பத்திரிகையில் ஏதாவது பிரச்சனை என்றால் ஜுவி கண்டுக்கொள்ளாது. இதே போல தான் மற்ற பத்திரிகைகளும். ஒரு பெண்ணை இழுவு படுத்திவிட்டு சாதாரணமாக 6 மாச லீவில் போகிறேன் என்பதற்கு எந்த பத்திரிகையும் பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை குறிப்பாக கண்டிக்கவும் இல்லை. ஞாநி கூட வருத்தப்படிகிறார், கண்டிக்கவில்லை. ஆனால் நித்தியானந்தா செய்த செயலுக்கு எல்லா பத்திரிகையும் செய்த ஆர்பாட்டம் பற்றி நினைத்து பார்க்க வேண்டும்.

இது தான் பத்திரிக்கை தர்மம். இந்த தர்மம் பத்திரிகையில் மட்டும் தான் நிகழும்.


முதல்வர் ஜெயலலிதாவை நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில், 'துக்ளக்' பத்திரிகை ஆசிரியர் சோ சந்தித்து, தன் மகனின் திருமண அழைப்பிதழை வழங்கினார். நேற்று காலை, 11:15 மணிக்கு கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை, சோ சந்தித்தார். இருவரின் சந்திப்பு, 15 நிமிடம் நீடித்தது. சந்திப்பின்போது சோ, தன் மகனின் திருமண அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினார். -தமிழகத்தில் இப்படி ஒரு செயலை செய்ய கூடிய ஒரே மனிதர் சோ மட்டும் தான் என்று நினைக்கிறேன்.

10 Comments:

Anonymous said...

cho's son!!!

chennaivaasi said...

To talk about Dharma, Congress said we don't talk about deals made by "Ranjan Bhattacharya" son in law of Vajpayee so they don't talk about Vadra.

Congress raised hue and cry about Modi spying on a woman but didn't move their finger about this incident. Tehelka is considered as pro-congress and anti-bjp

சிந்திப்பவன் said...

இந்த இரண்டு செய்திகளையும் அழகாக இணைத்து பதிவு செய்யும் blog இட்லி வடை "மட்டும்"தான் என்பது எங்கள் எண்ணம்.

pandiyan k said...

no there are some others also can do like that... RAJNI KAMAL PRABHU SURYA etc.

R. J. said...

Tejpal affair is like so many such affairs reporte and left unreported. It is always said that many women go through this in their working career. As the news is public, we can only blame Tejpal for his mean character. If the lady concerned chooses not to file a case, is there any justification for the police / gove to make a case? Can the agencies handle all such reported cases if the
parties are not famous?

Remember some years back Sun TV was after a top Dinamalar person of similar misbehaviour and Dinamalar used its clout to suppress the issue.

Karuna will have to find out when will Jaya attend the wedding to plan his visit to the wedding hall!

-R. J.


வவ்வால் said...

தருண் தேஜ்பால் மேட்டரில்,ஞாநி கூட கண்டிக்கலைனு நீங்க வருத்தப்படுவதும் நியாயமே.

ஆனால் அதுக்குனு துக்ளக்கை ஒரு பத்திரிக்கையாக மதிக்காமலும், சோ அவர்களை பத்திரிக்கையாளராக மதிக்காமலும் அவமானப்படுத்தலாமா?

ஒரு பத்திரிக்கையாக துக்ளக்கில் என்ன எழுதினார்கள்,பத்திரிக்கையாளராக சோ என்ன கண்டித்தாருன்னும் கேள்வி கேட்டு , துக்ளக் மற்றும் சோ அவர்களையும் பத்திரிக்கை உலகை சேர்ந்தவர்கள் தான்னு மரியாதை படுத்தவும்...அவ்வ்!

Anonymous said...

Iyyans meet ....nothing to say....

murali

சிவ.சரவணக்குமார் said...

இதனால் சகலவிதமானவர்களுக்கும் அறிவிக்கப்படுவ்து என்னவென்றால் , ஒரு பெண்ணை கெடுத்துவிட்டால், நீங்கள் செய்யும் வேலையில் இருந்து ஆறுமாதம் விடுமுறை எடுத்துக்கொண்டால் போதுமானது.......

Anonymous said...

இதனால் சகலவிதமானவர்களுக்கும்அறிவிக்கப்படுவ்து என்னவென்றால் நீங்கள் எந்த பெண்ணை வேண்டுமானால் எப்படி வேண்டுமானாலும் வேவு பார்க்காலாம். ஆறு மாதம் விடுமுறை குட எடுத்து கொள்ள வேண்டியதில்லை.

Anonymous said...

tarun tejpal/thelka is one of the unauthorized wings of congress.
it is said, goa film event was arranged by tarun tejpal; distributing award to waheeda rahman.
all four top english channels are pro congress.
tarun tejpal will come out with clean chit, as entire UPA is behind him. if a congress supporter is not having that much liberty, what is the use of supporting UPA?