பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, November 17, 2013

பாரத ரத்னா சச்சின் - விஷி ஆனந்த் சாதனையாளர் இல்லையா? - எ.அ.பாலா

சச்சின் ஓய்வு பெற்ற நாளே, 40 வயதிலேயே, அவரது கிரிக்கெட் சாதனைக்காக, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய சிவில் விருதான பாரத ரத்னாவை வழங்கி கௌரவித்துள்ளது. இது சரி தான், இல்லை, நாட்டுக்காக அவர் ஆற்றிய தொண்டு என்ன, நாட்டுக்கு நல்வகையில் பங்களிக்காத அந்த கிரிக்கெட் சாதனைக்கு பாரத ரத்னாவா என்று கேட்டு, இது சரியில்லை என்று இரு தரப்பு வாதங்களை பார்க்க முடிகிறது. ஒப்புக்குச் சப்பாணியாக, அவருக்கு மட்டும் விருது கொடுத்தால் பிரச்சினை வரக்கூடும் என்று கருதி, (எப்போதோ கொடுத்திருக்க வேண்டிய) CNR ராவ்-க்கும் இப்போது சேர்த்து வழங்கியுள்ளது நல்ல நகைச்சுவை.

நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில், கண்கூடாக பலன் தரும் சிலபல சாதனைகளை செய்தவர்களுக்கு மட்டும் தான் விருது என்றால், ஏற்கனவே (சமீப காலகட்டத்தில்) பாரத ரத்னா வழங்கப்பட்டவர்களில் சிலபலர் தேற மாட்டார்கள் என்பதை கவனிக்க வேண்டும். சச்சின் உட்பட இதுவரை 43 நபர்கள் இவ்விருதை பெற்றுள்ளனர். அப்பட்டியலில், 10 தென்னிந்தியர்கள் (அதிலும் முதல் மூவர் 1954-லிலேயே விருது பெற்றவர்கள் என்பதை நினைவு கொள்க!) மட்டுமே இருப்பதில் பெரிய ஆச்சரியம் ஏதும் இல்லை! ’தெற்கு தேய்கிறது, வடக்கு வாழ்கிறது’ என்ற கூற்று இன்று வரை பொருந்துகிறது!

இது போன்ற ஓரவஞ்சனையை காரணம் காட்டியே, பிரபல பாடகி எஸ்.ஜானகி, சென்ற வருடம் பத்மபூஷன் விருதை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் காரணங்களுக்காகவே எம்ஜியாருக்கும், ராஜிவ் காந்திக்கும் பாரத ரத்னா தரப்பட்டது என்ற பேச்சிலும் நியாயமான காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாட்டுக்கு தொண்டு, அதனால் விளைந்த நன்மை ஆகியவை மட்டுமே பாரத ரத்னா விருதுக்கான அளவுகோல்கள் அல்ல. ஒரு மனிதர், ஒரு துறையில் செய்த உயர்ந்த/ஒப்பில்லாத சாதனையை கௌரவப்படுத்தும் விதமாகவும் அது வழங்கப்படுகிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அத்தகைய நோக்கில், சச்சினுக்கு விருது வழங்கப்பட்டது சரியே என்றாலும், அவரை விட விளையாட்டுத் துறையில் அதிகம் சாதித்த, இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர், இந்தியாவின் ஒரே செஸ் வைரம், இந்தியாவின் (ஏன் ஆசியாவின்) ஒரே உலக செஸ் சேம்பியன் (5 முறை பட்டம், கடந்த 6 ஆண்டுகளாக undisputed Chess champion of the World) விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காமல், சச்சினுக்கு மட்டும் வழங்கியதற்கு நியாயமான காரணங்கள் எதுவுமில்லை என்பது நிதர்சனம்!

மேலே குறிப்பிட்டதில், World என்று வலியுறுத்தியதில் ஒரு காரணமுள்ளது. உலகில் 8 (ஒப்புக்குச் சப்பாணி நாடுகளை விட்டு விடலாம்) நாடுகள் மட்டுமே விளையாடும் கிரிக்கெட்டில், ஒரு டீம் விளையாட்டில், சச்சின் சாதித்ததைக் காட்டிலும், 120 நாடுகளில் விளையாடப்படும், அன்றிலிருந்து இன்று வரை கடுமையான போட்டி நிலவி வரும், தனிமனித விளையாட்டான செஸ்ஸில் ஆனந்த் சாதித்தது மிக மிக மிக அதிகம் என்பதை அவர் சாதனைகளை உற்று நோக்கினாலே போதும்.

2012-ல் நான் எழுதிய இடுகையிலிருந்து சில விஷயங்களை பகிர்கிறேன்.”இந்தியாவின் முதல் உலக ஜூனியர் செஸ் சேம்பியன், முதல் கிராண்ட் மாஸ்டர், முதல் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர், துரித ஆட்டம், காய்களை பார்க்காமல் ஆட்டம், மொத்தப் புள்ளிகள் என்ற 3 பிரிவுகளிலும் உலகப் பிரசத்தி பெற்ற ஏம்பர் செஸ் டோர்னமண்ட் பட்டத்தை தனியொருவராக வென்ற முதல் செஸ் ஆட்டக்காரர் என்று பல முதல்கள் ஆனந்தின் செஸ் வாழ்க்கையில் விரவி இருக்கின்றன. அதோடு, இந்தியாவின் ஒரே உலக செஸ் சேம்பியன், கோரஸ் டோர்னமண்ட் பட்டத்தை 5 முறை வென்ற ஒரே மனிதர், மைன்ஸ் செஸ் பட்டத்தை 7 ஆண்டுகள் தொடர்ச்சியாக வென்ற ஒரே ஆட்டக்காரர் என்று நாம் பிரமிக்கத்தக்க “ஒரே” ஒருவர் ஆனந்த் மட்டுமே. மிக உயரிய விருதாக கருதப்படும் செஸ் ஆஸ்கார் பட்டத்தை ஆனந்த் 6 முறை வென்றுள்ளார்.

இந்தியாவின் இரண்டாம் உயரிய விருதான பத்ம விபூஷனையும் ஆனந்த் பெற்றிருக்கும் நிலையில், ஒரு விளையாட்டு வீரருக்கு பாரத் ரத்னா வழங்க வேண்டுமெனில், அதற்கு ஆனந்த் ஒருவரே மிக்க தகுதி படைத்தவர் என்று தாராளமாக சொல்ல முடியும்.”

மேலும், கடந்த 22 ஆண்டுகளாக ஆனந்த் நிகழ்த்தியுள்ள சாதனைகளால் இந்தியாவில் செஸ் விளையாட்டில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஒரு செஸ் புரட்சியே நடந்துள்ளது. இப்போது இந்தியாவில் 34 கிராண்ட் மாஸ்டர்களும், 70-க்கும் மேற்பட்ட இண்டர்நேஷனல் மாஸ்டர்களும் உள்ளனர். பணம் அதிகம் புழங்காத செஸ் விளையாட்டில், இத்தகைய மறுமலர்ச்சியை, ஆனந்த் தனியொரு மனிதராக நிகழ்த்திக் காட்டியுள்ளார் என்றால் அது மிகையில்லை. இதை நிகழ்த்தியும், 27 ஆண்டுகளாக, இன்று வரை (44 வயது வரை) இந்தியாவின் தலை சிறந்த ஆட்டக்காரராக விளங்கி வருகிறார்! இவற்றுக்கும் மேல், ஆனந்த் எவ்வகையான சாதனை செய்து, பாரத ரத்னாவுக்கு ஏற்புடையவராக ஆக முடியும் என்று புரியவில்லை.

சௌரவ் கங்குலி, ஆனந்த் வெளிநாட்டில் (ஸ்பெயின்) அதிகம் தங்கி இருப்பதால், அவருக்கு பாரத ரத்னா வழங்க ஒரு தயக்கமிருக்கலாம் என்று கூறியிருப்பதை ஏற்க இயலாது. வெளி நாட்டவரான நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும்போது, வெளிநாட்டில் தங்கியிருக்கும் “இந்திய” ஆனந்துக்கு வழங்குவதில் என்ன தயக்கம்! ஆனந்த் வட இந்தியராக இருந்திருந்தால், அவரது மகா சாதனைகளுக்கு அவருக்கு இந்நேரம் பாரத ரத்னா வழங்கப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது.

சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதற்கு, கிரிக்கெட் பிரபல விளையாட்டு என்பதனால், என்ற கூற்றை ஓரளவு தான் ஏற்க முடியும். பாரத ரத்னா பீம்சென் ஜோஷி மாமேதை என்பதில் ஐயமே இல்லை. ஆனால், அவரது ஹிந்துஸ்தானி இசையை எத்தனை சாதாரணர்களால் புரிந்து ரசிக்க இயலும். அதனால், பிரபலம் என்பது அளவுகோல் ஆகாது. உண்மை என்னவெனில், ஆனந்த் போல அல்லாமல், சச்சினின் இமேஜ் திறமையாக உருவாக்கப்பட்டு பேணிக் காக்கப்பட்டது. மீடியாவும் அதில் பங்களித்தது.

ஆனந்த், தனது ஒவ்வொரு பெரும் வெற்றிக்குப் பிறகு, மீடியாவில் தோன்றி, அதற்கான அவரது உழைப்பை, சிரமங்களைப் பற்றி பெரிய அளவில் பேசியதில்லை. அதனால், செஸ் விளையாட்டு குறித்து ஓரளவு அறிந்தவர் மட்டுமே, அவரது ஹிமாலய சாதனையின் வீச்சை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், சச்சினுக்கு பல மும்பை (சினிமா, அரசியல், தொழில்துறை) பிரபலங்களின் ஆதரவு சதாசர்வ காலமும் இருந்து வருகிறது. தெற்கில் இருக்கும் பிரபலங்களும், இந்திய செஸ் ஃபெடரேஷனும் இது போன்ற ஒரு status-ஐ ஆனந்துக்கு ஏற்படுத்த தவறி விட்டனர். இதனாலேயே, ’சச்சினுக்கு பாரத ரத்னா’ என்பது கடந்த 2 ஆண்டுகளாக கேட்பது போல ஆனந்துக்கு பாரத ரத்னா என்ற கோரஸ்/கோஷம் எந்த மட்டத்திலும் பெரிதாக கேட்காததற்கு இன்னொரு முக்கியக் காரணம்.

காங்கிரஸ் கட்சி ஏற்கனவே சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக ஆக்கியுள்ளது. இப்போது, சரியான சூழலில், அவருக்கு பாரத ரத்னா வழங்கி அவரை காங்கிரஸ் அனுதாபியாக மாற்றியிருக்கிறது. மெல்ல மெல்ல, அவரை தேர்தல் பிரச்சாரத்துக்கு ஓரளவுக்கு பயன்படுத்திக் கொள்ள ஒரு யுக்தியாக இது இருக்கலாம். நன்றியுணர்ச்சி சச்சினுக்கு மட்டும் இல்லாமல் இருக்குமா?!? இறுதியாக, சச்சினுக்கு பாரத ரத்னா வழங்கக்கூடாது என்பதல்ல வாதம். அவரை விட மகத்தான (விளையாட்டில்) சாதனையாளரான உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்காததில் உள்ள நியாயமின்மையும், அரசியல் சார் ஓரவஞ்சனையும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.இந்த இரண்டு கட்டுரைகளை (ஒன்று ஆனந்த் பற்றி, ஒன்று சச்சின் பற்றி) கட்டாயம் வாசிக்கவும்.

Viswanathan Anand is as precious as Sachin Tendulkar -----
http://www.rediff.com/sports/slide-show/slide-show-1-viswanathan-anand-is-as-precious-as-sachin-tendulkar/20131109.htm#5

Master Blaster or Master Laster: A revisionist look at Sachin Tendulkar’s career -----
http://www.livemint.com/Opinion/PKgPHTk5wKn8DZLRpCtCyK/Master-Blaster-or-Master-Laster-A-revisionist-look-at-Sachi.html

- எ.அ.பாலா

மேலே கையில் ஆனந்த் போட்டோ வரையற அன்னிக்கு ஆனந்துக்கு பாரத ரத்னா. அது வரைக்கும் யாரும் 'கை' கட்சியை திட்டாதீங்க.

30 Comments:

Anonymous said...

மஞ்சள் கமெண்டப்பற்றி: டாஸ் என்று வந்து விட்டால், கண்டிப்பாக சச்சினுககுத்தான் வெற்றி, ஏனெனில் பணம் கொழுத்துக் கிடக்கும் BCCI காசை இறைத்து, Sholay படத்தில் வரும் காசைப் போல இரு பக்கமும் தலை உள்ள coinஐ உருவாக்கி விடும் !!
- கல்யாணராமன் சுப்பிரமணியம்

Elango said...

Excellent article, Bala.

maithriim said...

உங்கள் கருத்தை முழுவதுமாக ஆதரிக்கிறேன். மேலும் ஜனவரயில் அறிவிக்க வேண்டியத்தை சச்சின் ரிடையர் ஆன அன்றே அறிவிக்க வேண்டிய அவசரம் என்ன? அவசியமும் என்ன? விஸ்வநாத ஆனந்த் எல்லா வகையிலும் தகுதி வாய்ந்தவர்.

amas32

Anonymous said...

1. 95% Padma விருதுகள் எல்லாம் அரசியல் காரணங்களுக்காக தரப்படுபவை (politically-motivated). விருதாளிகள் (awardees) பரிந்துரை செய்யப்படும் முறையிலும், தேர்ந்தெடுக்கப்படும் முறையிலும் இது தெள்ளத் தெளிவாக தெரியும். ஒவ்வொரு மாநிலமும் பரிந்துரை செய்வதை, ஒரு மத்தியக் குழு பரிசீலித்து இறுதியாக ஒரு பட்டியலை தயாரித்து மத்திய அரசாங்கத்தின் இறுதி முடிவிற்கு அனுப்பும். மாநில அரசாங்கங்கள் யாரை பரிந்துரை செய்யும் ? அவர்களுக்குப் பிடித்தவர்களை (அவர்களுக்கு, அடி வருடிகள் என்ற இன்னொரு பெயரும் உண்டு! இதை நான் சொல்லவில்லை!!). மத்திய அரசாங்கம் யாரைத் தெரிவு செய்யும்? அவர்களுக்குப் பிடித்த மாநிலங்களின் பரிந்துரையை! இதன்னால் இந்த விருதுகள் வந்தால் பெருமைப் படவும், வரவில்லையென்றால் வருத்தப்படவும் ஒன்றும் இல்லை.

2. மிக சமீபத்தில் வந்த செய்தி: http://timesofindia.indiatimes.com/india/VIPs-nominated-kin-acolytes-for-this-years-Padma-awards/articleshow/25460030.cms; 2013 வருடத்திற்கான பரிந்துரைகளில் Lata Mangeshkar தனது தங்கைக்கும், உஸ்தாத் அம்ஜத் அலி கான் தனது புதல்வர்களுக்கும், மத்திய மந்திரி ராஜீவ் சுக்லா 7 பேர்களுக்கும், காங்கிரஸ் தலைவர் மோதிலால் வோரா 25 பேர்களுக்கும், பண்டிட் ஜஸ்ராஜ் 7 பேர்களுக்கும் பரிந்துரை செய்தது அடங்கும். இப்படி உற்றார், உறவினர் மற்றும் சுற்றம் ஆகியோர்களுக்கு பரிந்துரை செய்து கிடைக்கும் விருதிற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்?

3. ஒவ்வொரு துறைக்கும் தனித் தனியே விருதுகள் இருக்குபோது, அனைத்தையும் கலப்பது ஏற்கனவே மதிப்பில்லாமல் இருக்கும் விருதை மேலும் கீழே தள்ளுவதற்கு வழி வகுக்கும்.

- கல்யாணராமன் சுப்பிரமணியம்

Anonymous said...

சச்சின் ரிடயர் ஆகுறார். அதனால அவருக்கு இப்பவே பாரத் ரத்னா. விஸ் ஆனந்த் எப்போ ரிடயர் ஆவாரு?

enRenRum-anbudan.BALA said...

Superb Yellow comment :)

கானகம் said...

விருதுகள் தகுதியானவர்களுக்கு கிடைக்கும்போது மட்டுமே அவ்விருதுகளுக்கு மதிப்பு. காங்கிரஸின் ஓட்டு அறுவடை திட்டத்தில் இதுவும் ஒன்று, அவ்வளவே. இளைஞர்களைக் கவர்கிறார்களாம். விஸ்வநாதன் ஆனந்துக்கு ஏன் தரவில்லை எனக் கேட்பதுகூட அசிங்கம். என்னைப் பொருத்தவரை பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விவூஷன், பாரத ரத்னா போன்றவைகளை அவர்கள் தகுதியானவர்களுக்கு தராமல் இருப்பதே தகுதியானவர்களுக்கு மரியாதை. விஸ்வநாதன் ஆனந்த் இவ்வளவு பெருமைக்கு தகுதியானவர் என நாம் நினைப்பதைவிடவா அந்த விருது அவருக்கு பெருமை சேர்த்துவிடும். சாகித்ய அகாதமி விருது புவியரசுக்கே கிடைக்கும்போது இதெல்லாம் கிடைக்கவே வேண்டாம் என்பதே எனது நிலை. அவர்கள் யாருக்கு வேண்டுமானலும் கொடுத்துக்கொள்ளட்டும். செஸ் உலகமும், நாமும் அறிவோம், ஆனந்த் யார் என.

#BharatRatnaForAnand said...

2008 மற்றும் 2010-ல் முறையே விளாடிமிர் க்ராம்னிக், டொபோலோவ் ஆகிய 2 ஜாம்பவன்களுக்கு எதிராக ஆடி அவர் வென்றதைப் போன்ற சாதனைகளை இனி ஒரு இந்தியர் அடுத்த 25 ஆண்டுகள் நிகழ்த்தப்போவதில்லை என்று தாராளமாகக் கூற முடியும். தனது 18 வயதிலேயே பத்மஸ்ரீ பட்டம் பெற்றவர் ஆனந்த் ஒருவரே.

Anonymous said...

அவாளுக்கு கொடுக்க முடியுமா?இங்கேதான் பச்சை,சிவப்பு ,கருப்பு ஸெந்தமிழ், புரட்சி தமிழ் உணர்வாளர்கள் விடுவார்களா? துள்ளிகுதித்து வாழ்த்திய தமிழ் காப்பளர்தான் சும்மா இருப்பாரா?

sury siva said...

Tendulkar is a highly talented sportsperson. There can be no second opinion about that.

Equally, Bharath Rathna as we have perceived is awarded to men of outstanding work temperament and service to humanity in general or at least self less service in a field of activity.

Tendulkar has amassed so much of wealth during his career. NO JEALOUSY ABOUT THAT. HE HAS EARNED HIS BY SHEER HARD WORK.

But how much of it has he parted with what he earned? Did he follow the Gandhian concept that one is just a trustee for whatever money one earns.? You see Imran Khan spends a lot of his time and energy and money (he too earned it the hard way) in establishing a hospital for cancer patients.

I would like to be enlightened, whether Tendulkar is known for his philanthropy or a mind set bent towards public service.

Anyone who files an application on RTI may know more details about how Tendulkar in his last twenty four years spent his money time and energy, and what are his present assets and whether he has paid all the taxes due .

THIS IS NOT TO DOUBT THE PATRIOTISM OF TENDULKAR.
THERE IS NO DOUBT ABOUT HIS UNMATCHED CRICKETING CAREER AND HIS RECORDS WHICH CAN NEVER BE EQUALLY NAY BYPASSED AT ANY POINT OF TIME.

THE QUESTION IS PURELY THE GROUNDS ON WHICH THE HIGHEST CIVILIAN AWARD IS GIVEN. WHETHER THE FRUITS OF HIS EFFORTS AND EXPERIENCE OR RECORDS HAVE EVER BEEN DELIVERED OUTSIDE HIS OWN FAMILY CIRCLE.

I MAY BE WRONG. I NEED MORE INFORMATION ON THIS.

I HAVE HIGHEST REGARD FOR TENDULKAR FOR THE EXCELLENT RECORDS, HIS SPORTSMANSHIP.

THE BHARATH RATHNA AWARD IS FOR RECORDS OR EXCELLENCE WHICH COULD DIRECTLY OR INDIRECTLY BENEFIT MANKIND OR AT LEAST A PART OR SECTION OF IT.

THIS IS MY PERCEPTION ABOUT BHARATH RATHNA. IT IS NOT TO VILIFY TENDULKAR. MAY BE SUCH A CLARIFICATION BY GOI BE A FORERUNNER TO FUTURE DECISIONS IN THIS REGARD . A CLARIFICATION ON THE GUIDELINES FOLLOWED BY GOVT IN THIS REGARD MAY ALSO REDUCE IF NOT ELIMINATE AVOIDABLE NOISES.

HAVING SAID ALL THESE , LET ME CONGRATULATE TENDULKAR ONCE AGAIN FOR HIS BRILLIANT SPEECH , HIS UNMATCHED RECORDS.

HAVING SPENT ALL HIS TIME, ENERGY IN THE FIELD OF CRICKET AND CRICKET ALONE, LET ME APPEAL TO HIM TO TURN HIS EYE TOWARDS SUFFERING MASSES FROM WHERE ALSO CAME HIS FANS. I WOULD APPEAL TO HIM TO SPEND WHATEVER HE HAS THAT IS NOT ONLY MONEY BUT TIME AND ENERGY AND TALENTS TOWARDS SERVING THE HUMANITY IN GENERAL OR AT LEAST DO SOME SERVICE TO ANY SECTION OF MANKIND .

AND THIS WOULD BE HIS GRATITUDE TO THE MILLIONS OF FANS HE HAS AND ALSO TO THE GOVERNMENT WHO HAVE GIVEN HIM THE HIGHEST REWARD.


SUBBU THATHA.

sury siva said...

Tendulkar is a highly talented sportsperson. There can be no second opinion about that.

Equally, Bharath Rathna as we have perceived is awarded to men of outstanding work temperament and service to humanity in general or at least self less service in a field of activity.

Tendulkar has amassed so much of wealth during his career. NO JEALOUSY ABOUT THAT. HE HAS EARNED HIS BY SHEER HARD WORK.

But how much of it has he parted with what he earned? Did he follow the Gandhian concept that one is just a trustee for whatever money one earns.? You see Imran Khan spends a lot of his time and energy and money (he too earned it the hard way) in establishing a hospital for cancer patients.

I would like to be enlightened, whether Tendulkar is known for his philanthropy or a mind set bent towards public service.

Anyone who files an application on RTI may know more details about how Tendulkar in his last twenty four years spent his money time and energy, and what are his present assets and whether he has paid all the taxes due .

THIS IS NOT TO DOUBT THE PATRIOTISM OF TENDULKAR.
THERE IS NO DOUBT ABOUT HIS UNMATCHED CRICKETING CAREER AND HIS RECORDS WHICH CAN NEVER BE EQUALLY NAY BYPASSED AT ANY POINT OF TIME.

THE QUESTION IS PURELY THE GROUNDS ON WHICH THE HIGHEST CIVILIAN AWARD IS GIVEN. WHETHER THE FRUITS OF HIS EFFORTS AND EXPERIENCE OR RECORDS HAVE EVER BEEN DELIVERED OUTSIDE HIS OWN FAMILY CIRCLE.

I MAY BE WRONG. I NEED MORE INFORMATION ON THIS.

I HAVE HIGHEST REGARD FOR TENDULKAR FOR THE EXCELLENT RECORDS, HIS SPORTSMANSHIP.

THE BHARATH RATHNA AWARD IS FOR RECORDS OR EXCELLENCE WHICH COULD DIRECTLY OR INDIRECTLY BENEFIT MANKIND OR AT LEAST A PART OR SECTION OF IT.

THIS IS MY PERCEPTION ABOUT BHARATH RATHNA. IT IS NOT TO VILIFY TENDULKAR. MAY BE SUCH A CLARIFICATION BY GOI BE A FORERUNNER TO FUTURE DECISIONS IN THIS REGARD . A CLARIFICATION ON THE GUIDELINES FOLLOWED BY GOVT IN THIS REGARD MAY ALSO REDUCE IF NOT ELIMINATE AVOIDABLE NOISES.

HAVING SAID ALL THESE , LET ME CONGRATULATE TENDULKAR ONCE AGAIN FOR HIS BRILLIANT SPEECH , HIS UNMATCHED RECORDS.

HAVING SPENT ALL HIS TIME, ENERGY IN THE FIELD OF CRICKET AND CRICKET ALONE, LET ME APPEAL TO HIM TO TURN HIS EYE TOWARDS SUFFERING MASSES FROM WHERE ALSO CAME HIS FANS. I WOULD APPEAL TO HIM TO SPEND WHATEVER HE HAS THAT IS NOT ONLY MONEY BUT TIME AND ENERGY AND TALENTS TOWARDS SERVING THE HUMANITY IN GENERAL OR AT LEAST DO SOME SERVICE TO ANY SECTION OF MANKIND .

AND THIS WOULD BE HIS GRATITUDE TO THE MILLIONS OF FANS HE HAS AND ALSO TO THE GOVERNMENT WHO HAVE GIVEN HIM THE HIGHEST REWARD.


SUBBU THATHA.

Venkat said...

We could try to appreciate this moment. For all the joy sachin gave for the last 24 years to almost all the Indians, this is the maximum prize we can give him. But it is no equivalent to the joy he gve us. How cynical have we become as a society. The joy he gave me was beyond any limit. I don't think this award will give him ny joy. It is merely to satisfy ourselves that we gave him something in back. I'm not sure what is the common metric here to compare Anand and Sachin and how did that scale came up to show Anand is greater than Sachin. It is beyond my understanding. But Bharat Ratna here is not to make sachin happy, but a mere show of our gratitude.

dr_senthil said...

மம்மூட்டி நடித்து சமீபத்தில் ஒரு மலையாளம் படம் வந்தது, அதில் எப்படி, எவ்வாறு பத்மா விருதுகள் வழங்க/வாங்க படுகிறது என விரிவாக நகைசுவையுடன் விவரிக்கப்பட்டுள்ளது .
விளையாட்டுக்காக (உண்மையில் ) கொடுக்கப்படும் முதல் பாரத ரத்னா விருது அனைவராலும் /பெரும்பான்மை மக்களால் அங்கரிகபட்ட நபருக்கு கொடுத்ததில் தவறில்லைதான். இவருக்கு கொடுக்காமல் அவருக்கு கொடுத்துவிட்டார்கள் என்ற அங்கலைப்பு தேவையில்லை. செஸ் ஆனந்துக்கு தமிழக அரசு எதிர்/எதிரி கட்சிகள் இணைத்து பரிந்துரை செய்யவேண்டியது கடமை, அவ்வாறு நடந்தால் ஆனந்துக்கும் கிடைக்கலாம் ஆனால் கோபாலபுரத்து தாத்தா தனக்கு கிடைக்காத எதையும் மற்றவருக்கு கொடுப்பார என்பது சந்தேகம்தான்

Anonymous said...

Dear Bala, I am your dear "Moron" speaking, sorry writing. This article is very good. Thank you. It reflects the sad reality and still does not offend anyone.

யதார்த்தம் said...

//I'm not sure what is the common metric here to compare Anand and Sachin and how did that scale came up to show Anand is greater than Sachin. It is beyond my understanding. But Bharat Ratna here is not to make sachin happy, but a mere show of our gratitude.//

Anand's achievement is much greater as the author has clearly pointed out. Achievement in sport is the common metric.... Only difference is cricket is a popular spectator sport but that alone cant be the basis for awarding Bharath Ratna to Tendulkar.

You look like a Sachin fanatic overwhelmed by his cricketing skills. That is fine. Fact is Sachin did play for individual records also more than anyone else we know of, in a team game. There are many examples.

You can show your gratitude but kindly dont ask others to show since Sachin made lots and lots of money with his cricketing skills. Please read the comment by SUBBU THATHA above to get more enlightenment.

No grudge on Sachin getting Bharath Ratna. Simple point is Anand should have got that first.

Venky said...

What did people who deserve loose?: The best award and recognition in India, in today's political drama, is to not get one. When people who don't deserve an award get one, then people who deserve shouldn't get the same.

What did UPA gain?:UPA might get few thousands votes from hard core Sachin fans in coming lok sabha elections, nothing apart from that.

What did govt loose? Nothing!! Credibility, Integrity, etc etc could be lost if the govt had any. So the loss is NIL (Kapil Sibal will be happy)

What in Latha Mangeshkar's Mind?: Oh poor Sachin, you cannot talk in favour of any BJP leaders, the award will be taken back.

Ratan said...

south India = 4 States + 1 UT
total in India = 35
so, south India is just 15% of total India...

And we got 23% of total awards...

சிந்திப்பவன். said...

அவாளுக்கு கிடைக்கலேன்னு இவாளுக்கு வர கோபத்தை பார்த்தால்
பாவமா இருக்கு.எதுக்கும் அவாளுக்கு கொடுக்கலாமா கூடாதா என்று தாத்தா தலைமையில் ஞாநி,கமல்,ஜெயமோகன் உள்ளிட்ட குழு விவாதித்து தங்கள் முடிவை சோனியா தலைமையில் உள்ள ராகுல்,சிதம்பரம்,ஜி.கே.வாசன் குழுவிற்கு பரிந்துரை செய்யலாம்!

Anonymous said...

SOMEBODY WROTE ABOUT IMRAN KHAN.
HE VISITED ALL MIDDLE EAST COUNTRIES. HE GOT HUGE DONATION.
INDIAN EMBASSY SCHOLL STUDENTS WERE ALSO COMPELLED TO GIVE DONATION.
SO MANY PAKISTANIS COLLECTED DONATION FOR HIM.
HE DID NOT START ANYTHING FROM HIS OWN MONEY.
PLEASE DONT COMPARE IMRAN KHAN AND TENDULKAR.
EVERYBODY IS HAVING A RIGHT TO HAVE THEIR OPINION ABOUT BHARATHA RATNA AWARD TO TENDULKAR.
BUT IT SHOULD NOT BASED FALSE INFORMATION.

Anonymous said...

surprisingly a thoughtful article from bala, i wish and hope no one points out any plagiaristic content this time....

dr_senthil said...


An academic read of an argument too difficult to ignore.

http://www.livemint.com/Opinion/NJeOT7cwBhzKSa9vmhCdiP/Why-Sachin-shouldn8217t-get-the-Bharat-Ratna.html

Anonymous said...

I think , this is purely a political move from congress party for elections.
CT

Venkat said...

I'm not a fanatic. I have nothing against Anand. I would celebrate if Anand is awarded with Bharat Ratna. But we are trying to undermine Sachin here by citing reasons related to Anand and Government. Why can't we celebrate this moment instead of blaming someone. Sachin deserves this award if sportpersons can be given Bharat Ratna. Let us talk about that another day and be happy for sachin now. If we are not celebrating this moment now, we may continue to do this for every award announcement by saying that the other person deserves more than who received the award now. Are we not going to celebrate anything? Why do we need to be like this?

யதார்த்தம் said...

Venkat,
//
Venkat said...

I'm not a fanatic. I have nothing against Anand. I would celebrate if Anand is awarded with Bharat Ratna. But we are trying to undermine Sachin here by citing reasons related to Anand and Government. Why can't we celebrate this moment instead of blaming someone. Sachin deserves this award if sportpersons can be given Bharat Ratna. Let us talk about that another day and be happy for sachin now. If we are not celebrating this moment now, we may continue to do this for every award announcement by saying that the other person deserves more than who received the award now. Are we not going to celebrate anything? Why do we need to be like this?
//
Your point taken! Someone like the author needs to point out that Anand has the credentials to be conferred with the Bharat Ratna. Thanks....

Anonymous said...

//

சிந்திப்பவன். said...

அவாளுக்கு கிடைக்கலேன்னு இவாளுக்கு வர கோபத்தை பார்த்தால்
பாவமா இருக்கு.
//

சிந்திப்பவன் என்று பேர் வச்சுண்ட அம்பி துளிக்கூட சிந்திக்கவே மாட்டேங்கறதே, ஈஸ்வரா :) அவாள் செய்த சாதனையை முன் வச்சு தானே இவாள் விருது தரலாம்னு சொல்றா

Anonymous said...

GOVT./TENDULKAR HAS BELITTLED THEMSELVES BY CONFERRING/ ACCEPTING AN AWARD HE DID NOT DESERVE.
AS SUBBU THATHA SAYS HE WAS FABULOSELY PAID IN MILLIONS. HE DID NOT PLAY FREE. HE WAS NEVER A MATCH WINNER. LOT OF BOWLERS INCLDING Shoaib Akhtar WERE TELLING THAT IT WAS VERY EASY TO GET TENDULKAR OUT . OUR PRESS IMMEDIATELY MADE IT A INDIA/PAK ISSUE AND SILENCED HIM.
RAHUL DRAVID WAS A TEAM BUILDER AND HE SHOWED IT WITH RAJASTHAN ROYALS WHEREAS TENDULKAR WAS OF NO USE TO MUMBAI INDIANS
MANNY VISITING TEAMS NEVER PLANNED FOR TENDLKAR AFTER 2007. HIS BATTING WAS POOR AND HE KEPT ON FOR ADVERTISEMENT REVENUE.
BUT FOR HIS POLITICAL CLOUT WITH SHARAD PAWAR HE WOULD HAVE BEEN DROPPED LONG LONG AGO.
HE WAS THE ONLY PLAYER KEPT IN THE TEAM AFTER REPEATED FAILURES.
LRT THATBE. CRICKET IN INDIA WAS MORE A BUSINESS THAN SPORT. THAT IS WHY IN OUR COUNTRY CRICKET BOARD CHAIRMANS ARE BUSINESS TYCOONS /POLITICIANS, SO THEY CAN KEEP SOMEONE WHO GIVES THEM MONEY EVEN AFTER REPEATED FAILURES. BUT THE HIGHEST CIVILIAN AWARD HAS DIFFERENT PARAMETERS.
THE NATION AS A WHOLE HAS LOWERED IMAGE BY SHOWING IT TO THE WORLD THAT WE ARE MORE EMOTIONAL THAN RATIONAL IN CONFERRING THE HIGHEST AWARD OF THE NATION.

VVhome said...

Is the only way to praise one person's achievement is to belittle another? The premise of the article is misplaced. And, why drag the south Indian v north Indian thing in to this. Sachin neither a south Indian nor a north Indian; neither is Anand. They are Indians. This narrow-minded commentary only goes to demonstrate the tunnel vision and sectarian thinking ingrained in all Indians. This only typifies the Indian crab mentality, where if we we take pleasure in dragging people down if we can not scale the heights they do. Shameful.

Nandu` said...

Sachin is not qualified to get this award for one simple reason- he did not play cricket for the nation, but for a private club called BCCI, period!

VVhome Fan said...

//This narrow-minded commentary only goes to demonstrate the tunnel vision and sectarian thinking ingrained in all Indians. This only typifies the Indian crab mentality, where if we we take pleasure in dragging people down if we can not scale the heights they do.
//
we are sure you as a patriotic Indian have that crab mentality! Nobody needs preachers in the IV blog for Godsake....

//Is the only way to praise one person's achievement is to belittle another? The premise of the article is misplaced.
//
Article has not belittled Sachin. It says Anand, a Tamilian, South Indian, deserved it more for his achievements. What is wrong in that?

Anonymous said...

This is a news in Rediff.com today

Case filed against Bharat Ratna award to Tendulkar

The government’s decision to award the Bharat Ratna to Sachin Tendulkar was drawn to a court in Bihar on Tuesday, with a petitioner challenging the Centre's decision to bestow the honour on the just-retired cricketer, alleging a 'conspiracy' to ignore hockey legend Dhyanchand.

Muzaffarpur advocate Sudhir Kumar Ojha, in his petition filed in Chief Judicial Magistrate S P Singh's court, named Prime Minister Manmohan Singh, Home Minister Sushil Kumar Shinde, Sports Minister Bhanwar Jitendra Singh and the secretary to the union home department, besides Tendulkar, as accused for selecting the batting icon for the honour in a 'conspiratorial manner' soon after his retirement from all formats of the game.

He brought charges against them under sections (offences relating to cheating and dishonesty) 419 (punishment for cheating by personation), 417 (punishment for cheating), 504 (intentional insult with intent to provoke breach of peace) and 120(B) (punishment of criminal conspiracy) of the Indian Penal Code.

Ojha alleged in his petition that the government has cheated the people and hurt their sentiments by going back on its own earlier decision to give the highest civilian honour to Tendulkar and Dhyanchand taking into account a raging debate on the issue and recommending only the cricketer.

he alleged that soon after the 'Master Blaster' bid adieu to the game, they conspired to select him for the award for his contributions to the sport and ignore Dhyanchand.

The petition said none of the distinguished persons like former prime minister Atal Bihari Vajpayee, socialist leader Ram Manohar Lohia or other cricketers who had brought glory to the country were considered for the award.

"But a millionaire like Sachin Tendulkar has been given the award under a conspiracy," the petition said.

Ojha has made JD(U) MP Shivanand Tiwari, who spoke out against the Centre on the issue on Monday , a witness in the case.

The CJM admitted the case and fixed December 10 for hearing in the matter.

The Centre had announced the decision to confer the Bharat Ratna on Tendulkar within hours of him bidding adieu to cricket during his farewell Test, against the West Indies in Mumbai last week.