பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, November 11, 2013

காமன்வெல்த் கூத்து

இலங்கைத் தலைநகர் கொழும்பில் வரும் 15ஆம் தேதி தொடங்கவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் தம்மால் பங்கேற்க இயலாது என்று தெரிவித்து இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார் என்ற செய்தி வந்த பிறகு தமிழர் அமைப்புக்கள், தமிழக அரசியல் கட்சிகள் கொண்டாட தொடங்கியுள்ளார்கள்.

அந்த கடிதத்தில் ஏன் வர முடியாது என்ற காரணத்துக்கு "various reasons" என்று குறிப்பிட்டு காரணங்களை சொல்லாமல்,  தொலைப்பேசியில் கூப்பிட்டு பேசுகிறேன் என்றும் கடிதம் எழுதியுள்ளார் நம் பிரதமர்.

தமிழர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு விட்டார், எங்களுக்கு வெற்றி என்று எல்லோரும் தமிழ்நாட்டில் கூத்தடிக்க ஆரம்பித்துவிட்டாகள். இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது ?

பிரதமர் தன்னுடைய கடிதத்தில் தமிழர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து என்று கூறியிருக்கிறாரா ? உண்மையான காரணம் வரும் "பாராளுமன்ற தேர்தல்" என்று எல்லோருக்கும் தெரியும் இருந்தும் ஆனந்த கூத்தாட தமிழர்களுக்கு சொல்லியா தர வேண்டும் ? நக்கீரன், ஜூவி, ரிப்போட்டரில் கவர் ஸ்டோரி எழுத தான் இந்த ஸ்டண்ட் உதவும் மற்றபடி பிரதமர் போயிருந்தால் சிறைப்படுத்தியுள்ள மீனவர்களாவது விடுவிக்க முயற்சி எடுத்திருக்கலாம். .


முன்னதாக, இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங்கை எப்படியும் பங்கேற்கச் செய்துவிட வேண்டும் என்பதில் இலங்கை அரசு மிகவும் ஆர்வம் கொண்டிருந்தது. இதற்காக, அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் தில்லியில் பிரதமரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் பிரதமர் அதை ஒழுங்கான காரணம் இல்லாமல் தட்டிக்கழித்துவிட்டார். இப்படி அண்டை நாடுடன் பகைமை வளர்ந்தால் இலங்கை அடுத்த பாகிஸ்தான் ஆக ரொம்ப நாளாகாது.

தமிழ் நாட்டு கட்சிகளும், சமூக அமைப்புகளும் அரசியல் கட்டாயங்களுக்காக இப்படி பேச தேவை இருக்கலாம், ஆனால் பிரதமர் ? தேச நலனை கருத்தில் கொள்ள வேண்டும். இதே காமன்வெல்த் மாநாடு இலங்கை அல்லாது வேறு ஒரு நாட்டில் நடந்திருந்தால், பிரதமர் அங்கே சென்று நவாஸுடன் கைகுலுக்கியது போல ராஜபட்சவுக்கும் கைகுலுக்கியிருப்பார். அப்போது இந்த தமிழ் கும்பல் சும்மா இருந்திருக்கும். பிரச்சனை இலங்கை செல்வது தான்.இந்த சூழ்நிலையில் நரேந்திர மோடி என்ன செய்திருப்பார் என்று யோசிக்க வைக்கிறது.

12 Comments:

Anonymous said...

Yellow comment bayangaram...!

BalajiS said...

"Why I am attending CHOGM – David Cameron" - Explaining why he goes to attend CHOGM Meet.

http://www.tamilguardian.com/article.asp?articleid=9102

Anonymous said...

idly vadai should have thought and written about both rahul gandhi and narendra modi 's possible stands. only then manjal comment will get a worthy space in comments section.

Nanban said...

Very well thought written article. I am not sure why Tamil Nadu politicians are celebrating at all because Mr. Singh never said the reason for not attending, Canada was more open and brave in stating why it's not attending.

As you have rightly pointed out, our regional political parties should think in the National context and not in small time politics.

dr_senthil said...

காங்கிரஸ் கட்சிக்கு தமிழர் மீதான வலிமிகுந்த வன்மம் உண்டு அதே சமயம் ஓட்டு வங்கி அரசியல் காரணமாக அதை வெளிச்சம் போட்டு காட்ட முடியாத நிலைப்பாடு.. இங்கிலாந்து பிரதமர் போல எத்துணை மத இன வேறுபாடு கொண்ட நாடாக இங்கிலாந்து இருபினும் தேச நலனுக்காக தெளிவான முடிவை எடுத்து அதை வெளிபடையாக சொல்லவும் தெரிந்த மனிதராக என்னால் மன்மொஹனை கனவிலும் நினைத்து பார்க்க இயலவில்லை.
தாமரை கட்சிக்கு, மோடிக்கு இந்த பிரச்சனை இல்லை கட்டாயம் அவர் இலங்கை சென்றிருப்பார் என்றே எண்ணுகிறேன். மேலும் தமிழர் உணர்வை மாநாட்டில் பதிவும் செய்திருப்பார்

Anonymous said...

இந்தியாவிலிருந்து எந்த அரசியல்வாதி போனாலும், இலங்கைத் தமிழர் நலத்துக்காகா ஒண்ணும் கழட்டப் போவதில்லை... கழட்டவும் முடியாது. அதனால் இதில் இந்தியா கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் எதுவும் குடிமுழுகிப் போகாது..

Anonymous said...

BOTH OUR REGIONAL PARTIES AND MANMOHAN SJNGH ARE ADOPTING DOUBLE STANDARDS AND FOOLING TAMILIANS.
WHEN IT IS SHIVSENA EVEN MATCHES WILL NOT BE PLAYED WITH PAKISTAN IN MUMBAI. EVEN NOW IN IPLS NO PAKISTAN PLAYER IS ALLOWED THOUGH IPL IS PURELY PRIVATE AND COMMERCIAL.
FOR TWO ITALLIANS WHO KILLED KERALA FISHERMEN THE ENTIRE KERALA STOOD AS ONE FORCING GOVT. OF INDIA TO BRING BACK THE MARINES. ITALY WAS WARNED OF EVEN DIPLOMATIC CUT OFF.
WHEN KERALITES WERE INVOLVED IAF EVACUATED PEOPLE FROM BAHRIN. WHEN BIHARIS WERE THRETENED IN MUMBAI ALL BIHAAR STOOD AS ONE FORCING CENTRAL GOVT. TO GIVE PROTECTION TO BIHARIS AND ISSUE AN ARREST WARRANT AGAINT THACKERY'S NEPHEW WHICH IS HISTORY IN MUMBAI. TILL TODAY NOT A SINGLE BIHARI IS THREATENED IN MUMBAI.
FOR A COMMON/STATE CAUSE ALL OTHER STATE POLITICIANS WILL ACT UNITEDLY AND BRING PRESSURE.
IN THE CASE OF TAMILNADU POLITICIANS THE TRUTH IS DIFFERENT. FOR THEIR PERSONAL GAINS THEY WILL STOOP TO ANY LEVEL AND MORTGAGE THE INTEREST OF TAMILS.
PLEASE COME TO DELHI AND HEAR WHAT THE PRESS, OTHER STATE POLITICIANS AND AND MPS TELL ABOUT TAMILNADU POLITICIANS PARTICULARLY ABOUT KARUNANIDHI AND CHIDAMBARAM.
CAN KARUNANIDHI EVEN NOW SAY HE WILL NOT ALLY WITH CONGRESS UNLESS ACTION [S TAHEN FOR WAR CRIMES; PRABHAKARAN WAS FIGHTING.AGREED. WHAT ABOUT INNOCENT TAMILS WHEN THEY WERE BEING KILLED CONGRESS GOVT. WAS AT THE MRECY OF DMK.
EVEN LATER KARUNANIDHI SURRENERED TO CONGRESS FOR A RAJYA SABHA SEAT FOR HIS DAUGHTER.
CHIDAMBARAM IS NOW TALKING ABOUT TAMILS BECAUSE HE FEARS HE CANNOT FACE ELECTIONS IN TAMILNADU IN 2014. HE WAS THE HOME MINISTER WHEN LANKA WAS GIVEN ALL HELP TO FIGHT LTTE. ALL SINHALESE KNOW MANMOHANSINH IS JUST PLAYING A DRAMA TO PLEASE CERTAIN FANATICS WITH ELECTION IN MIND BUT WILL ONLY SUPPORT RAJAPAKSHE AND HIS GOVT. ALREADY THE LANKAN PRESS IS WRITIG LIKE THIS.
THIS IS REAL MOCKING OF TAMIL SENTIMENTS. IN A WAY RAJAPAKSHE IS BETTER. ATLEAST HR DOES THIGS OPENLY
THE WAR AGAPNST LTTE COULD NOT HAVE BEEN WON WITHHOUT INDIA'S SUPPORT. RAJAPAKSE OPENLY THANKED INDIA IN LANKAN PALIAMENT'
NOW WE CAN OMLY HELP IN REBUILDING/REHABLITATING THE BALANCE TAMILS. THAT CAN HAPPEN ONLY WHEN ALL TAMILS UNITE WITHOUT SELFISHNESS, WE HAVE TO MAKE DELI AND OTHER STATES UNDERSTAND WE CANT BE PURCHASED. WE WILL NEVER COMPROMISE OUR PEOPLE'S INTERESTS.

jk22384 said...இந்தியாவிலிருந்து எந்த அரசியல்வாதி போனாலும், இலங்கைத் தமிழர் நலத்துக்காகா ஒண்ணும் கழட்டப் போவதில்லை... கழட்டவும் முடியாது. அதனால் இதில் இந்தியா கலந்து கொண்டாலும் கலந்து கொள்ளாவிட்டாலும் எதுவும் குடிமுழுகிப் போகாது..
November 12, 2013 1:15 PM
AFREE TOTALLY

JAYAKUMAR

fa daf said...

இந்தே வெட்டி கிளப் வேண்டாம் என்று மோடி காமன்வெல்த் கிளப் மூடி இருபபார்

fa daf said...

இந்தே வெட்டி கிளப் வேண்டாம் என்று மோடி காமன்வெல்த் கிளப் மூடி இருபபார்

வீரராகவன் said...

காமன்வெல்த் அமைப்பு என்பதே ஒரு பிரயோஜனமில்லாத அமைப்பு. ஐ.நா அளவுக்கு கூட எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது. இலங்கையை அமைப்பிலிருந்து தற்காலிகமாக விலக்குவதற்குக்கூட பெரும்பான்மை கிடைக்க மிகுந்த பிரயாசைப்பட வேண்டும்.
1. கூட்டப் பொருள் தவிர வேறு எந்தவித விஷயமும் பேசக்கூடாது என்று தெளிவாக தெரிவித்த பின்னர் பிரதமர் உட்பட யார் கலந்து கொண்டாலும் எவ்வித பாதிப்பும் இலங்கைக்கு இல்லை. குர்ஷித் இலங்கை சென்று தனியேதான் புலம்பி விட்டு திரும்ப முடியும் என்பதை நாசுக்காக அங்கே விவாதிக்க செல்லவில்லை. கூட்டத்தில் கலந்துவிட்டு வந்துவிடுவேன் என்று கூறிவிட்டார்.
இதற்கு போகவே வேண்டியதில்லை என்றுதான் அனைத்து தமிழ் உணர்வுள்ள மனிதர்கள் கேட்கிறோம்.
2. மாகாணத் தேர்தல் முடிந்து தமிழர் பதவி பிரமாணம் வெவ்வேறு இடங்களில் (ஏன் அவர்கள் வீட்டிலேயே) ஏற்ற விதமே அங்குள்ள தமிழ் அமைப்புகளில் ஒற்றுமை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இப்படி அங்கு தமிழர் நிலை இன்னும் கேவலமாகத்தான் உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதால் அவர்களுக்கு எவ்வித நன்மையும் இல்லை. குர்ஷித் அங்கே யாருடன் போய் பேசப்போகிறார்? அவருக்கே தெரியாது.
3. பத்து சதவீத தமிழர் இருக்கும் மொரிசியஸ் நாட்டிற்கு இருக்கும் தெளிவு இந்திய அரசிற்கு இல்லை என்றுதான் உரக்க கூறுகிறோம்.
4. இராஜபக்சேவை தூக்கி வைத்து கொண்டாடி லாபி செய்து காமன்வெல்த் அமைப்பிற்கு தலைவராக்கிய மன்மோகன் சிங்கின் காங்கிரசுக்கு கூடிய சீக்கிரமே மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள். அப்போது கூட ராகுல்ஜியின் பொன்மொழிகளை கேட்டு உள்ளம் பூரிப்பான் காங்கிரஸ்காரன்.
5. தமிழக அரசியலுக்கு இலங்கை விவகாரத்தை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன என்பது உண்மை.
ஆனால் இதையே காரணம் காட்டி நமது கண்டனத்தை காட்டாவிட்டால் இலங்கை ராஜபக்சே திருந்த வாய்ப்பே கிடையாது.
மெல்ல சாகும் தமிழினம் அங்கே.

கரும்பு தோட்டத்தில் துன்புறும் தமிழனுக்காக மட்டுமல்ல இங்கி4ருந்து மீன் பிடிக்க சென்று இரவில் எல்லை தாண்டி உயிர்விடும் தமிழனுக்காகவும் (கடற்படை தளபதியின் தமாஷ்)பாரதி மீண்டும் பிறக்கத் தான் வேண்டும்.

Anonymous said...

Engal Ethirppukalai pathivu seikirom.

Sekar
Maveeran Veerrahavan Rasigar Mantram
Saidapet BR