பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, November 01, 2013

இரும்பு மனிதருக்கு சிலை தேவையா ?

சர்தார் வல்லபாய் படேலின் 138–வது பிறந்த தின விழாவை தற்போது குஜராத் மாநில அரசு சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இது நல்ல விஷயம் ஆனால் மோடியும் ஒரு சராசரி அரசியல் தலைவர் மாதிரி அவருக்கு பெரிய சிலை வைக்க போகிறேன் என்று கிளம்பியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலுக்கு இதனால் மேலும் புகழ் வருமாம்.

இந்த சிலைக்கு செலவு ரூ2074 கோடி என்று சொல்லுகிறார்கள். குஜராத் நர்மதா நதிக்கரையில் சர்வோர் அணைக்கட்டுக்கு மிக அருகில் உள்ள சாதுபேட் தீவில் அந்த சிலை வர இருக்கிறது. 


இரும்பு மனிதர் என்ற பெயர் பெற்ற அவரை முன் உதாரணமாக கொண்டு வாழ்ந்து காட்டினால் தான் மக்களுக்கு பலனுண்டு என்று மோடிக்கு யாராவது உபதேசித்தால் நல்லது.

5 Comments:

kothandapani said...

'ஆனால் மோடியும் ஒரு சராசரி அரசியல் தலைவர்'......... இவளோ நாள் ஆச்சா IV க்கு புரிய .. பத்து வருஷ்மா இல்லாத படேல் பற்று, திடீர்னு மோடிக்கு இப்போ எப்படி வந்ததோ . நம்ம ஊர் அரசியல்வாதிகளுக்கு இலங்கை தமிழர் மீது அப்பப்போ பாசம் வருமே அந்த மாதிரியா

Anonymous said...

Jayalalitha'ku than periya silai vaikanum! Amma soru, Amma thanni...

R. J. said...

If we can have statues all over our State and the World can have monumental statues / structures, then why Gujarat cannot have the imposing statue of a towering personality which every Indian - including Congress man - should be proud of. - R. J.

Anony8 said...

Obvious Balancing act by IV.

Anonymous said...

nadunilai vakikraangalam :)