பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 14, 2013

பீட்சா 2 - வில்லா - FIR

த்ரில்லர் படத்துக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று அதனுடைய கதையை சொன்னால் பிறகு எனக்கு யாராவது பில்லி சூனியம் வைத்தாலும் வைத்துவிடுவார்கள். அதனால் நோ கதை.

பிட்சா-1 வெற்றிக்கு பிறகு பிட்சா-2 எடுக்க போகிறேன் என்று கிளம்பிய போது என்ன எடுக்க போகிறார்கள் என்று நினைத்தேன். (பில்லா-1க்கு பிறகு பில்லா-2... இப்படி நிறைய படங்கள் பார்த்த effect. )ஆனால் படம் ஆரம்பித்த 10 நிமிடங்களில் நம்மை உள்ளே எழுத்துக்கொண்டு அந்த வில்லாவில் உலாவ விட்டுவிட்ட்டார் இயக்குனர் தீபன்.

த்ரில்லர் படத்துக்கு பலமே அதன் திரைக்கதை தான். படத்தில் எங்கும் தொய்வு இல்லாமல் ஆனந்த்– கார்ல்சென் செஸ் விளையாடுவது போல காட்சிகளை நகர்த்தியுள்ளார்கள்.

இடைவேளி வரை படத்தில் பேய் பிசாசு எதுவுமே இல்லாமல் நமக்கு ஒரு திகிலூட்டும் அனுபவத்தை நமக்கு தந்து அசத்திவிட்டது பிட்சா-2 டீம்.  இந்த படத்துக்கு மிகப் பெரிய பலம் - அசோக் செல்வன் நடிப்பு, இசை மற்றும் ஒளிப்பதிவும்.

கடைசியில் சில காட்சிகளில் நம்மை 'அட' போட வைத்து, நல்ல படம் பார்த்த திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்புகிறார்கள்.

பிட்சா-3யை எதிர்பார்க்க வைக்கும் படம்.

இட்லிவடை மார்க் - 6.5/10


முக்கிய குறிப்பு: ஏதோ பேய் படம் என்று நினைத்து குழந்தைகளை வீட்டில் வீட்டு விட்டு போக வேண்டாம். பயமே இல்லாத நல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் !

1 Comment:

கானகம் said...

என்னய்யா ஆச்சு மக்களுக்கு.. இந்த விமர்சனத்தை திரும்பிக்கூட பார்க்கவில்லை? படம் சூப்பர்னு எல்லோரும் சொல்றாங்க..