பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 29, 2013

காங்கிரஸின் நியாயமான கோரிக்கை

மத்திய பிரதேச மாநில காங்கிரசார் நேற்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் அவர்கள் மத்திய பிரதேசத்தில் குளத்தில் பூத்துள்ள தாமரைகளை திரை போட்டு மறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாமரை பூக்களை மறைக்கும் கோரிக்கை பேத்தல் என்று சொல்ல முடியாது. ஏன் என்றால் எங்கே தேர்தல் கமிஷன் மறைத்துவிடுமோ என்ற பயத்தில் பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் தேர்தல் நடந்த போது மாயாவதியின் சின்னமான யானை சிற்பங்கள் எல்லாம் துணி போட்டு மூடப்பட்டன. அது போல தாமரை பூக்களையும் மூட வேண்டும் என்கிறார்கள்.
நாளைக்கு பெரிய துணிக்கொண்டு சூரியனை மறைக்கவும், மரத்திலிருக்கும் எல்லா இலைகளையும் மறைக்கவும் ஏற்பாடுகள் நடந்தாலும் நடக்கலாம்.

யானையையே மறைத்த தேர்தல் கமிஷனுக்கு தாமரை எல்லாம் ஜூஜூபி! காங்கிரஸ் கேட்பதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது!

முன்பு யானையும், இப்போது தாமரையும் மறைத்தால் அது ஹிந்து மதத்துக்கு எதிரானது.

6 Comments:

ஜெ. said...

//நாளைக்கு பெரிய துணிக்கொண்டு சூரியனை மறைக்கவும், மரத்திலிருக்கும் எல்லா இலைகளையும் மறைக்கவும் ஏற்பாடுகள் நடந்தாலும் நடக்கலாம். // ஹா..ஹா..!

யானனியை மறைக்கலாம், தாமரையை மறைக்கலாம், இந்த அரசியல்வாதி முதலைகளை மறையவைக்க முடியுமா?

-ஜெ.

Anonymous said...

Congress symbol is "Hand". The entire population should conceal their hands or cut it down. But how congress people will receive their Moola in all the deals?

அரவிந்த் said...

எல்லார்கிட்டேயும் 'கை' இருக்குங்களே? என்ன செய்யலாம்?

Anonymous said...

Also please cut or cover everyone's palm - which is Congress's logo.

dr_senthil said...

அப்ப இரண்டு கைகளையும் பேன்ட் பாக்கெட் அல்லது வேட்டிக்குள் விட்டுக்கொண்டு காங்கிரஸ் பிரமுகர்கள் வோட்டு கேட்கட்டும்

சென்னை பித்தன் said...

எல்லார் கையையும் வெட்டிட வேண்டியதுதான்!