பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 30, 2013

இட்லிவடையின் ஸ்லீப்பர் செல்கள் - சுபத்ரா

அப்பம் எனக்கு பதினாறு வயசிருக்கும், அதாங்க.. இட்லிவடை ஆரம்பிச்சப்பம். அதுக்கப்புறம் பத்து வருஷமாகிருச்சாம். நம்பவே முடியல. என்னது, இப்பம் எத்தனை வயசாச்சா? எனக்கு அதே வயசுதான் ஆகுது. ஆனா இட்லிவடைக்குத் தான் இது 11த் ஹப்பி பர்த்டேவாம். (அக்டோபர் 27) உடனே தீபாவளிக்குப் பட்டாசு வெடிச்சு கொண்டாடுற மாதிரி இதுக்கும் பட்னா குண்டுவெடிப்புக்கும் எதுவும் சம்பந்தம் இருக்கானு எல்லாம் ஆராய்ச்சி பண்ணாதீங்க. இட்லிவடை ஒரு அப்பிராணி.அதென்னவோ தெரியல, இ.வ.வில் நான் எழுத ஆரம்பிச்சப்றம் பயங்கர பிஸியாகிட்டேன். ‘கெடக்கறத எல்லாம் போட்டுட்டு கெழவிய தூக்கி மனையில வெச்ச’ கதையா இருந்த வேலைய எல்லாத்தையும் விட்டுட்டு இப்பம் படிச்சிட்டு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் முடிச்சிட்டு இட்லிவடையின் முழுநேர ‘எழுத்தாளர்’ ஆகிறலாமானு யோசிச்சேன். ஆனா நான் எழுதுறதயெல்லாம் நீங்க படிச்சாதான் எனக்குச் சம்பளம்ங்கறதுனால அந்த எண்ணத்தை உடனே கைவிட்டுட்டேன். எப்படி இந்த விபரீத எண்ணம் வந்துச்சினு சொல்றேன்.(பரீட்சையில் மார்க் கம்மியாக வாங்கும் போது அப்பா அம்மாவிடம் சூளுரைப்பது இல்லையா?).இது இட்லியோட வாசகம். இதப் படிச்ச கொஞ்ச நேரத்துக்கு எனக்குப் புரியவேயில்ல. அப்பா எதுக்காகப் பரீட்சை எழுதணும்? மார்க் ஏன் கம்மியா வாங்கனும்? அம்மாகிட்ட எதுக்குச் சூளுரைக்கணும்?”. அப்புறம்தான் புரிஞ்சது அப்பா-அம்மா அங்க சேர்ந்து வரணும்ங்கறது. (அதுதான் தமிழ்நாட்டுல சாத்தியமே இல்லையே). அதாவது இ.வ. இனிமேல் ரெகுலரா அப்டேட்ஸ் தர்றதா நம்மகிட்ட சூளுரைக்கிறாராம். அதனால நாமளும் ஒன்னு ரெண்டு போஸ்ட்ஸ் எழுதி அவருக்கு அப்பப்போ ப்ரேக் கொடுக்கலாமேனு தான் எனக்கு அந்த ‘எழுத்தாளர்’ எண்ணம்.மேலும் இ.வ.வின் ஸ்லீப்பர் செல்ஸை எல்லாம் இப்போ அவ்வளவா பார்க்கமுடியல. அர்ஜூன் அம்மா அஞ்சலி அம்மாவாகவும் விசாம்ரூபம் எடுத்ததுக்கப்புறம் ஆளையே காணோம். மத்தவங்களும் அரசியல் அப்டேட்ஸ்ல பிஸியாகிட்டாங்கனு இட்லிவடை சொல்றார். சூப்பர் குழந்தை சீரீஸ் வேற வந்த வேகத்துல முடிஞ்சிருச்சு. முனிக்கு லெட்டர் எழுதி முழுசா அஞ்சு மாசமாச்சு. சன்டேனா ரெண்டு இன்பா கட்டுரை பார்த்து பல சன்டேஸ் ஓடிருச்சு. காதல்-கள்ளக்காதல் கவிதைகள் வரைக்கும் இட்லிவடையில் போஸ்ட் பண்ணியாச்சு. கிட்டதட்ட ஒரு வருஷத்துக்கு அப்புறம் யதிராஜனும் இப்பதான் எழுத ஆரம்பிச்சிருக்கார். பத்ரியும் எ.அ.பாலாவும் மட்டும் அப்பப்போ சிக்ஸர் அடிச்சிட்டு இருக்காங்கனு நினைக்கிறேன். இந்த லிஸ்ட்ல ட்ராப் ஆன ஒருத்தர்தான் இட்லிவடைனு நீங்க நினைச்சா அதுக்கு கம்பேனி பொறுப்பேற்காது.சரி பர்த்டே பேபிகிட்ட வருவோம். வருஷா வருஷம் இ.வ.வைப் புகழ்ந்து புகழ்ந்து போர் அடிச்சுப்போச்சு. அதனால இந்த தடவை அவர்கிட்ட சில (பத்து) பொது அறிவுக் கேள்விகள் கேட்கலாம்னு தோனுது..மைடியர் இட்லிவடை,1. பாடிகாட் முனீஸ்வரனுடன் உங்களுக்கு என்ன பிரச்சனை?

இவ-பதில்: சரக்கு அடிக்கும் போது வந்த பிரச்சனை இன்னும் முடியலை

2. “நதி பாயும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் இலக்கியம் படைப்பதில் ஆச்சர்யமில்லை”னு புது எழுத்தாளர் ஒருத்தர் சொல்லியிருக்காரே? அது உங்களைத் தானா?

இவ-பதில்: கூவம் கூட நதி தான் என்றால் நானும் எழுத்தாளன் தான். கூவம் வாசனை பிடிக்கும். 

3. அது கிடக்கட்டும், போனமுறை நான் உங்க வீட்டுக்கு வந்தப்பம் மாமி கொடுத்த காபியில் சர்க்கரை போடலயே, ஏன்?

இவ-பதில்: ஸ்வீட்டுக்கு பிறகு காபி குடித்தால் அப்படி தான் இருக்கும். 

4. Ones, Tens, Hundreds, Thousands, Ten Thousands, Lakhs, Ten Lakhs.. Hits இப்படியே போனா சைட் பார்ல இடிச்சுக்காது?

இவ-பதில்: கருப்பு பணத்தைவிட இது கம்மி தான். விடுங்க. 

5. சைட் பார்னு சொன்னவுடனே தான் ஞாபகம் வருது. ஒரு தலை ராகம் பார்த்து என் அப்பா கஷ்டப்பட்டு எனக்கு வெச்ச பெயரை ஒரே செகண்ட்ல சைட்பார்ல ஏத்தியாச்சு, சரி. அதுக்கு ஏன் வயசான அந்த மாமி படம்? :(

இவ-பதில்: ஸ்பெல்லிங்கை பாருங்க அது நீங்க இல்லை. 

6. அப்புறம், பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் கேட்கும் அந்தப் பழைய இலை எங்க? சாப்பிட்டதும் தூக்கி எறிஞ்சாச்சா?

இவ-பதில்: டைட்டில் அடிக்கடி மாறும். மாற்றம் தான் நல்லது. ஆனால் திரும்ப இலை வந்துவிடும். கவலையை விடுங்க

7. ‘எனக்கு இட்லி ரொம்ப பிடிக்கும்’னு சொன்ன ஹன்சிகாவே ஓவர், அதென்ன வடை பிடித்த நடிகைகள் வேற?

இவ-பதில்: நோ கமெண்ட்ஸ் 

8. முக்கியமான கேள்வி, இ.வ.வின் ஆதர்ஸ ‘repeatu’ கமெண்ட் எழுத்தாளரை எங்க ஆளைக் காணோம், நாடு கடத்திட்டாங்களா?

இவ-பதில்:  ஜெயமோகனின் கடைசி சொற்பெழிவுக்கு பிறகு அவரை காணோம். எனக்கும் கவலையா தான் இருக்கு.திருந்திவிட்டாரா ?

9. போன வாரம் உங்க நண்பர்கள் சட்னி, சாம்பாரோட முருகன் இட்லிகடையில் ஜிகர்தண்டா குடிச்சிட்டு பில் கொடுக்காம போயிட்டீங்களாமே, ஏன்?

இவ-பதில்: காரில் கட்சி கொடி இருந்ததை பார்க்கவில்லையா ? 

10. இப்படி இட்லிகிட்ட கேள்வி கேட்டுட்டு உட்கார்ந்திருக்கேனே, நான் பரீட்சையில பாஸ் பண்ணிருவேனா?

இவ-பதில்: ரிசல்ட் வந்தா தான் தெரியும்.  நான் ஆரம்பம் படத்தை பற்றி சொன்னேன்.அதனால போதும். பதினொன்றாம் வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் iVadai-க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். ஸ்லீப்பர் செல்ஸ்க்கும் தான்! Keep rocking.


பின்குறிப்பு: இட்லிவடை யார்னு இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பவர்களுக்காக - அவரது பெயரின் முதல் எழுத்து இந்தப் பதிவிலேயே இருக்கிறது. கண்டுபிடிச்சிக்கோங்க :-)​

இட்லிவடையின் ஸ்லீப்பர் செல்கள் எல்லாம் இப்ப ஸ்லீப்பிங் செலாகிவிட்டார்கள்!

11 Comments:

kg gouthaman said...

ஆரம்பிச்சுட்டாங்கப்பா குழப்பறதுக்கு.

Anonymous said...இவ பிரபலமா ஆனதற்கு இருப்பதற்கு காரணம்:

கொஞ்சம் அரசியல் நகைச்சுவை .. அவ்வப்போது வரும் நல்ல இடுகைகள்.. சைட்பார் சேட்டைகள் ..அனானிகளின் அட்டகாசம் .. இவ அனானியா இன்னும் இருப்பது -- இது ஆர்வத்தை தக்க வைத்திருக்கிறது.

இட்லிவடை 20 பெர்சண்ட் தேறும் 80 பெர்சண்ட் டைம்பாஸ் சாரி டைம் வேஸ்ட் மொக்கை.. சோஷியல் நெட்வொர்க்கிங் என்பதே 80 பெர்சண்ட் வேஸ்ட் தானே, அதனால் இட்லிவடையால் பெரிய நட்டமில்லை.

----------உண்மைத்தமிழனின் நண்பர்

s suresh said...

வாழ்த்துக்கள்!

kothandapani said...

அப்பா... IV யாருன்னு இப்ப தெளிவா தெரிஞ்சு போச்சு ... சுபத்திரா அவர்கள் கொடுத்த தெளிவான clue க்கு

நன்றி .
பின்குறிப்பு: இட்லிவடை யார்னு இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பவர்களுக்காக - அவரது பெயரின் முதல் எழுத்து இந்தப்பின்னூட்டத்திலியே இருக்கிறது. கண்டுபிடிச்சிக்கோங்க :-)​

kothandapani said...

அப்பா... IV யாருன்னு இப்ப தெளிவா தெரிஞ்சு போச்சு ... சுபத்திரா அவர்கள் கொடுத்த தெளிவான clue க்கு

நன்றி .
பின்குறிப்பு: இட்லிவடை யார்னு இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பவர்களுக்காக - அவரது பெயரின் முதல் எழுத்து இந்தப்பின்னூட்டத்திலியே இருக்கிறது. கண்டுபிடிச்சிக்கோங்க :-)​

Anonymous said...

//ஆனால் திரும்ப இலை வந்துவிடும்//

வந்தா தமிழ்நாட்டுக்கு நல்லது தானே..?

jaisankar jaganathan said...

////ஆனால் திரும்ப இலை வந்துவிடும்//
//

இலை வந்தா தமிழ்நாடு காஞ்சு போயிடும்

Anonymous said...

சுபத்ராஜி,

இவ ஆண்டு நிறைவுக்கு எத்தனையோ கட்டுரைகளைப் பார்த்திருக்கிறேன். இப்படி நெத்தியடியாய் ஒன்றைப் பார்ககவில்லை இதுவரை.

எப்படி உங்களால் மட்டும் எல்லாத்தையுமே கவிதையாக எழுதிவிட முடிகிறது. இவ-ன் ஸ்லீப்பர் செல்கள் என்ற கவிதை உங்கள் கவிதைகளில் ஒரு மைல் கல்.

மேலும் நல்ல கவிதைகளை எழுத வாழ்த்துக்கள்.

எ.அ.பா ரசிகர் சேனை

jaisankar jaganathan said...

//எ.அ.பா ரசிகர் சேனை//

வல்லாரைக்கீரை சாப்பிடுங்க

dr_senthil said...

இட்லி வடை யாருன்னு தெரிஞ்சு என்ன நடக்கபோகிறது ... கோழி குருடா இருந்தாலும் கொழம்பு ருசிய இருக்கானு பார்க்கணும் அவ்வோளுவுதான்
பத்தாண்டுகளாக இட்லிவடை .. அதே பத்தாண்டுகளாக காங்கிரஸ் மன்மோகன் அரசாங்கம்.. எட்டு வித்தியாசங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கவும்.. முதலில் 1. யார் அரசாங்கத்தை/ இட்லிவடையை நடத்துரங்கனு தெரியாது 2. மதசார்பின்மை கிலோ என்ன விலை 3. சந்தர்ப்ப கூட்டணி 4. சூரியனும் வேண்டும் இலையும் வேண்டும் 5. மோடியா /அத்வானியா இன்னும் குழப்பம்
மீதியை கண்டுபிடிங்க மக்களே

Bala Subra said...

வாழ்த்துகள்!