பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 29, 2013

சின்ன இலை பெரிய விளக்கம்

ஏன் 'இட்லிவடை' முகப்பில் இருக்கும் இலையை காணவில்லையே என்று பலர் கேட்க தொடங்கிவிட்டார்கள். இலை பசுமையின் அடையாளம் அதை எடுக்க காரணம் இருக்கு.

மினி பஸ்ஸில் இலைச் சின்னம் இருப்பதற்கு திமுக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசு மினி பஸ்ஸில் உள்ள இலைகள் பசுமையின் அடையாளமே தவிர அதிமுக அரசின் கட்சி சின்னம் அல்ல என்று தமிழக அரசு பதில் அளித்துள்ளது.   இட்லிவடையில் இருக்கும் இலைக்கும் ஏதாவது பிரச்சனை வந்தாலும் வரலாம் அதனால் தற்காலிகமாக எடுத்துவிட்டேன். அதிமுகவினர் மாதிரி விளக்கம் அளிக்க முடியுமா ? 

அதிமுகவினர் அளித்த விளக்கம் "வீட்டிற்கு விருந்தாளி வந்தால் உணவு தர படைப்பது வாழை இலை, உணவில் வாசத்தை ஏற்படுத்துவது கருவேப்பிலை, உணவாகவே சமைக்கப்படுவது கீரை இலை, சாப்பிட்ட பிறகு போடுவது வெற்றிலை, வீட்டு வாசலில் அலங்கரிப்பது மா-இலை, மனிதனின் நோய் போக்குவது துளசி இலை, இப்படி நம் வாழ்வில் இரண்டற கலந்தது இலை. செடியில் இலை, கொடியில் இலை, மரத்தில் இலை என எங்கும் இலை, எதிலும் இலை. இப்படி, மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இலையின் அலை..." என்று அடித்து சொல்லுகிறார்.

இலைகள், செடிகள் பிழைத்திருப்பதற்கு சூரியன் வேண்டும் என்று கூடவே இலைக்கு மேலே சூரியனின் ஓவியம் வரைந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும்.

வாழை இலை சாப்பிட்ட பின் தூக்கி எறிய வேண்டும். வெற்றிலை போட்ட பிறகு துப்ப வேண்டும்...!

7 Comments:

dr_senthil said...

திடீர் சூரிய பாசம் எடுத்தால் "வேப்பிலை" அடிக்கவேண்டும்.

dr_senthil said...

திடீர் சூரிய பாசம் எடுத்தால் வேப்பிலை அடிக்கவேண்டும்

Kadavul said...

enna sir, dhideernu ADMK mela veruppu ?? Thappacheyy !!

ஹரன்பிரசன்னா said...

எனவே இட்லிவடையை யாரும் படிப்பது இலை.

ஜெ. said...

//வாழை இலை சாப்பிட்ட பின் தூக்கி எறிய வேண்டும். வெற்றிலை போட்ட பிறகு துப்ப வேண்டும்...!// அதான் இங்கு 5 ஆண்டுக்கு ஒரு தடவை ஆட்சி மாறுகிறது!!

Anonymous said...

idlyvadaiyaa idhu?

Madhavan Srinivasagopalan said...

// இலைகள், செடிகள் பிழைத்திருப்பதற்கு சூரியன் வேண்டும் என்று கூடவே இலைக்கு மேலே சூரியனின் ஓவியம் வரைந்தால் பிரச்சனை தீர்ந்துவிடும். //

But, 'Rising sun' alone not useful to ANYONE unless it sweeps through 180 degree everyday.. (irrespective of any sweep over 234)