பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 29, 2013

இட்லிவடை - பத்தாண்டுக் கலைச் சேவை

இட்லிவடை ஆரம்பித்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த சமயத்தில் இட்லி வடை வாசகர்களுக்கு (இன்னும் இருந்தால்) மிக்க நன்றி.

இந்த வருஷம், அதுவும் கடந்த சில மாதங்களாக கடையைச் சரியாக கவனிக்க முடியவில்லை. வேலை அதிகம் என்று சொன்னால் நீங்கள் நம்பப் போவதில்லை. வீட்டில் சமையல் வேலை செய்யும் அம்மணிகள் எல்லாம் அரசியல் ஸ்டேட்டஸ் போடும் போது உனக்கு என்ன கேடு? என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது.

பலர் (அப்படித்தான் சொல்ல வேண்டும்) அரசியல் பற்றியும் இலக்கிய சர்ச்சை பற்றியும் ஏன் அவ்வளவாக இப்ப எல்லாம் பதிவுகள் போடுவதில்லை? ஜெ பற்றி வேண்டாம் அட்லீஸ்ட் கலைஞர் பற்றியாவது ஏதாவது நக்கல் அடிக்கலாமே என்று சாட்டிலும், கமெனண்டிலும் கேட்டுள்ளார்கள்.

சண்டேனா ரெண்டு, மண்டேனா ஒன்று என்று எழுதிக்கொண்டு இருந்த பெரியவர்கள் எல்லாம் பிஸியாகிவிட்டார்கள். அதே போல சரக்கு மாஸ்டரும் பிஸி.. !

வாசகர்களுக்கு ஒரு கெட்ட செய்தி. இனிமேல் இட்லிவடை அப்டேட் ரெகுலராகத் தொடரும். (பரீட்சையில் மார்க் கம்மியாக வாங்கும் போது அப்பா அம்மாவிடம் சூளுரைப்பது இல்லையா?).

இதற்கு எடுத்துக்காட்டாக ஸைடு பாரில் கை வைத்துள்ளேன்.

வரும் நாட்களில் பல நல்ல கட்டுரைகள் வருமென்று உங்களை போல நானும் எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு
இட்லிவடை

கைதட்டல்கள் தான் கலைஞனுக்கு உண்மையான சம்பளம் - கமல் ஹாசன்.. அதனால்... :-)

20 Comments:

ராமுடு said...

We will bear the pain.. Start music

ஸ்ரீராம். said...

காத்துக் கொண்டிருக்கிறோம்.

Sundupluseli said...

All the best .
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துகள் அண்ணாச்சி..!

என்னைய மாதிரி சின்ன பிளாக்கர்களுக்கு முன்னோடி நீங்கதான்.. பக்கங்கள் அதிகமா இருந்தாலும் மேட்டருக்கு ஏத்தாப்புல எழுதறதுல தப்பில்லைன்னு உங்களை பார்த்துதான் நானும் கத்துக்கிட்டேன்..!

உங்களுடைய அரிச்சுவடில உங்க கண் பார்வைல நானும் ஒரு ஓரமா இங்கன குந்தியிருக்கிறதை நினைச்சா ரொம்ப பெருமையாயிருக்கு..!

தமிழ் வலையுலகில் இட்லிவடைதான் முன்னோடி.. இதில் சந்தேகமேயில்லை..!

வாழ்க வாழ்க வாழ்க..!!!

kg gouthaman said...

எங்கள் வாழ்த்துகளும் .... வாழ்க பல்லாண்டு வளமுடன், நலமுடன், வம்பு தும்புகளுடன், சண்டை சச்சரவுகளுடன்!

Anonymous said...

10 varushama, iyyooo, ippadaiye poykitte irukkumnu ninaichen.

அதிஷா said...

வாழ்த்துகள் இட்லிவடை.

தொடர்ந்து எழுதுங்க

ஃபேஸ்புக்குக்கும் வரலாமே கும்மி அடிக்க ஜாலியாக இருக்கும்

Anonymous said...

10 Years. Congrats.
Please avoid tension party Bala's posts.

பாரதி மணி said...
This comment has been removed by the author.
பாரதி மணி said...

யோவ்.....நாங்கள்ளாம் இருக்கோம்யா!தமிழர் தினசரி மெனுவில் நீரும் இருந்தாகணும்!

எத்தனை வருடங்கள் சாப்பிட்டாலும் சலிக்காத மெனு!

சீனு said...

// இந்த சமயத்தில் இட்லி வடை வாசகர்களுக்கு (இன்னும் இருந்தால்) மிக்க நன்றி.//

அதான் இருக்கோம்ல...

Jeyakumar said...

The Heart Beat of Internet Tamils is Idly vadai and I wish you all the very best to many more years to come..

ஜெ. said...

ஒரு பத்தாண்டு கடந்ததற்கும் பல நூற்றாண்டு கடக்கவும் வாழ்த்துக்கள். சில வாசகர்கள் இ.வ. படிப்பதை நிறுத்தினாலும் பல புதிய வாசகர்கள் கூடி இருப்பது கண்கூடு! புதுப் புது விருந்தினர் பதிவுகள் இலையில் அதைக பதார்த்தங்களைப் போல் சுவைக்கின்றன. விடாப்பிடியாக சில நட்பு பதிவர்களைப் போற்றி எழுத அனுமதிக்கும் இ. வ. வின் loyal friendship புல்லரிக்க வைக்கிறது!

என்னைப் போன்ற அனாமதேயங்களும்,பல பிரபலங்களும் விடாமல் படித்து பின்னூட்டம் இடுவதும் இ.வ.வின் புகழுக்கு சான்று!

'கெட்ட செய்தி'யை தவறாமல் பின்பற்றவும்! - ஜெ.

dr_senthil said...

IAM WAITING

Anonymous said...

congrats...

Anonymous said...

I'm waiting :-)

Sai

Anonymous said...

//தமிழ் வலையுலகில் இட்லிவடைதான் முன்னோடி.. இதில் சந்தேகமேயில்லை..!
//
நல்லாத் தானே இருந்தார் உண்மைத் தமிழன் அண்ணாச்சி... ஏன் இந்த காமடி ;)

இவ முன்னோடியும் இல்ல பின்னோடியும் இல்ல. பிரபலமா ஆனதற்கு இருப்பதற்கு காரணம்:

கொஞ்சம் அரசியல் நகைச்சுவை .. அவ்வப்போது வரும் நல்ல இடுகைகள்.. சைட்பார் சேட்டைகள் ..அனானிகளின் அட்டகாசம் .. இவ அனானியா இன்னும் இருப்பது -- இது ஆர்வத்தை தக்க வைத்திருக்கிறது.

இட்லிவடை 20 பெர்சண்ட் தேறும் 80 பெர்சண்ட் டைம்பாஸ் சாரி டைம் வேஸ்ட் மொக்கை.. சோஷியல் நெட்வொர்க்கிங் என்பதே 80 பெர்சண்ட் வேஸ்ட் தானே, அதனால் இட்லிவடையால் பெரிய நட்டமில்லை.

----------உண்மைத்தமிழனின் நண்பர்

Anonymous said...

வாழ்த்துக்கள் ! பத்தாண்டுகள் பிரமிப்பான விடயம், தமிழில் தொடர்ந்து நீண்டகாலம் இயங்கும் வலைப்பதிவு உங்களுடையது தானோ? :)

Anonymous said...

வாழ்த்துக்கள் ! பத்தாண்டுகள் பிரமிப்பான விடயம், தமிழில் நீண்டகாலம் தொடர்ந்து இயங்கும் வலைப்பதிவு உங்களுடையது தானோ? :)

Anonymous said...

வாழ்த்துக்கள் ! பத்தாண்டுகள் பிரமிப்பான விடயம், தமிழில் நீண்டகாலம் தொடர்ந்து இயங்கும் வலைப்பதிவு உங்களுடையது தானோ? :)