பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 29, 2013

ஐயோ பாவம் நிதீஷ் குமார்!

நரேந்திர மோதி கலந்து கொண்ட பாட்னா பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக கிட்டத்தட்ட அனைவருமே கருத்து சொல்லிவிட்டனர். நாமும் ஏதேனும் கருத்து சொல்லவில்லையென்றால் இணைய இலக்கிய உலகிற்கு மாபெரும் இழப்பேற்படும் என்பதால் இப்பதிவு. அதென்ன இணைய இலக்கிய உலகிற்கு என்ற கேள்வி எழலாம். இப்போதெல்லாம் பொதுவாக எழுதுவதெல்லாமே இலக்கியம் என்றாகிவிட்டதால், இதுவும் ஒரு விதமான இலக்கியம்தான் என்று சொல்லிக் கொள்வதில் தவறில்லையென்றே எண்ணுகிறேன். இனி விஷயத்திற்குச் செல்லலாம்.

இன்றைய தேதியில் இந்தியாவிலும், பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இந்தியாவில் செயல்படுகின்ற அனைத்து தீவிரவாதிகளின் முதல் குறியாக நரேந்திர மோதி இருக்கிறார். பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இதுவரை நிகழ்ந்திராத திருச்சியிலேயே அவர் மீது ஒரு கொலை முயற்சி எடுக்கப்படவிருந்தது என்று ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்ட தமிழக "செக்யூலர்வாதிகளே" இதற்குச் சான்று. வட இந்தியாவில், குறிப்பாக, பிஹார் போன்ற பின்தங்கிய, மோதியைத் தனது ஜென்ம விரோதியாகக் கொண்டுள்ள ஒருவர் ஆளும் மாநிலத்தில் இத்தகைய ஒரு முயற்சி நடந்தேறியிருப்பதில் வியப்பேதும் இல்லையென்ற போதிலும், அதற்குப் பின்னர் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய நபர்களின் அலட்சியமான போக்கு மிகுந்த அதிர்ச்சி மற்றும் கவலையளிப்பதாக இருக்கிறது.

பிஹாரில், புத்தகயாவில் வெகு சமீபத்தில்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. அதுவும், நரேந்திர மோதி பிஹாருக்கு விஜயம் செய்த மறுதினமே! தற்போதும் நரேந்திர மோதி விஜயம் செய்வதற்கு சில மணித்துளிகள் முன்பாக. அப்போதும் சரி, இப்போதும் சரி, தாக்குதலுக்கு சில தினங்கள் முன்பாகவே உளவுத்துறை எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டு, அவை அப்பட்டமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. அதையும் மீறி, உளவுத்துறை எவ்வித தகவலும் கொடுக்கவில்லை என்ற அண்டப் புளுகுகள் வேறு. காங்கிரஸ், நிதீஷுடன் கூட்டணிக் கனவில் இருப்பதால், அவரின் அண்டப் புளுகுகளைக் கண்டிக்காவிடினும், கண்டு கொள்ளாமல், கொடுத்துவிட்டோம், தெரியவில்லை, என்ற அளவில் நழுவிக் கொண்டது. இப்போதும் நிதீஷ் குமார் மறுபடியும் அதே பொய்யைக் கூறினார், ஆனாலும் எடுபடவில்லை. உடனடியாக உளவுத்துறைத் தரப்பிலிருந்து மறுப்பு வந்துவிட்டது, 23 ஆம் தேதியே எச்சரிக்கை கொடுத்ததாகவும், குறிப்பாக, நரேந்திர மோதி குறிவைக்கப்படலாம் என்று ஸ்பெஸிஃபிக்காகவே எச்சரிக்கை கொடுத்ததாகவும் கூறி, நிதீஷ் குமாரை மிகப்பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆக, உளவுத்துறை எச்சரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன. காரணம்?? நரேந்திர மோதி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற ஹேஷ்யங்கள் கிளம்பிய வினாடியிலிருந்தே, நிதீஷ் குமார் அவர் மீதான தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை உரம் போட்டு வளர்க்கத் துவங்கிவிட்டார். பிறகு பாஜகவுடன் இருந்த கூட்டணியையும் முறித்துக் கொண்டு தனது செக்யூலரிஸத்தை நிலைநாட்டினார், அதற்கு முக மஞ்சள் துண்டிற்குக் கொடுத்த வ்யாக்யானங்கள் போல் பல விளக்கங்கள். அடுத்ததாக நரேந்திர மோதி பாட்னாவில் பொதுக் கூட்டம் என்றதும், கண்டது ஜுரம் அஸ்தியில். ஆனால் அன்றைய தினம் ஜனாதிபதி ப்ரணாப் அவர்களும் பாட்னா விஜயம் செய்யவிருந்ததால், எப்படியும் ப்ரோட்டோகாலைக் காரணம் காட்டி மோதியின் விஜயத்தை ரத்து செய்துவிடலாம் என்ற கனவு, ப்ரணாப் அவர்கள் தனது விஜயத்தை பாஜகவின் வேண்டுகோளிற்கிணங்க ஒத்திப் போட்டது நிதீஷின் வயிற்றெரிச்சலை மேலும் அதிகப்படுத்தியது.

விளைவு, பாதுகாப்பில் அலட்சியம்! என்ன நடந்தாலும் நடந்துவிட்டுப் போகட்டும், யார் என்ன செய்து விடமுடியும் என்ற ஆணவம். ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், ஒரு கண்டனம் தெரிவித்தால் போதாதா? அதுதானே நடைமுறை?

கடைசியில் நிகழ்ந்தேவிட்டது. தொடர்ச்சியாக ஏழு குண்டுவெடிப்புகள். இதுவரை ஆறு மரணங்கள், நூறு பேர் படுகாயம். குண்டுவெடிப்பு நிகழ்ந்த மறுநொடியே, இது தீவிரவாதிகள் கைவரிசை என்று உடனே சொல்லிவிட முடியாது, காவியுடுப்பினரே விளம்பரத்திற்காக செய்திருக்கலாம் என்று திக்விஜய் சிங் முதல், கிட்டத்தட்ட அதே பாணியில், இவர்களாகவும் இருக்கலாம், அல்லது அவர்களாகவும் இருக்கலாம் என்று ஞானி உட்பட அனைத்து அறிவுஜீவிகளும் தத்தங்கள் இயங்கும் தளங்களில் கருத்துகளை அள்ளி வீசி மோதிக்கெதிரான தங்களது மனோபாவத்தைப் பதிவுசெய்து அன்றைய இரவு தூக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். கடைசியில், இதுவும் இந்தியன் முஜாஹிதீன் கைவரிசையென்று உறுதியாகிவிட்டது. முதலில் கருத்துதிர்த்த, திக்விஜய் சிங்கை அதற்குப் பிறகு வழக்கம்போல் காணோம்.

விசாரணை, கைதுகள், கண்டனங்கள் என்ற சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. நடப்பவை எல்லாமே, இனியும் எவ்வளவு நடந்தாலும் திருந்த மாட்டோம் என்ற மத்திய அரசின் மெத்தனத்தையே மறுபடியும் மறுபடியும் தோலுரிக்கிறது. மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, அரசாங்கத்திலுள்ளவர்களே தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் இங்கு மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது. சிறுபான்மை சமூகத்தினரைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரிலும், மதச்சார்பின்மை என்ற பெயரிலும், ஒரு சமூகத்தினரை ஒட்டுமொத்தமாக கேலிக்குரியதாக்கும் அவலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர், ஒருசில புல்லுருவிகளைக் காக்கும் நோக்கில்.

தன்னுடைய மாநிலத்திற்கு வந்த, சக முதல்வருக்கு ஒரு அசம்பாவிதம் ஏற்படவிருந்ததற்கு, தன்னுடைய அரசாங்க யந்திரத்தின் அப்பட்டமான அலட்சியம் காரணமாக அமைந்துவிட்டது என்ற ப்ரக்ஞை சிறிதும் இல்லாமல், ஒரு மாபெரும் பொய்யை அவிழ்த்த நிதீஷ் குமார், ஒரு நாகரிகத்திற்காகக் கூட நரேந்திர மோதியை தொலைபேசியில் அழைத்துப் பேசாதது அரசியல் காழ்ப்பை அவர் எவ்வளவு தூரம் பாராட்டுகிறார் என்பதைக் காட்டுகிறது. பாஜக வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி, காங்கிரஸிற்கு அவர்கள் அறிவிக்காவிடினும், ராகுல் காந்தி., மூன்றாவது அணியிலும் நிதீஷ் குமார் இல்லை என்ற நிலையில் நிதீஷ் குமாரின் பிரதமர் கனவு அம்போ என்றாகிவிட்டது. இந்நிலையில் அரசனை நம்பி, இருக்கின்ற புருஷனையும் கைவிடப் போகிறார்.
- யதிராஜ்

8 Comments:

ஜெயக்குமார் said...

நாமிருப்பது காங்கிரஸ் எனும் தேசவிரோத சக்தியின் ஆட்சியில். இன்றைக்கு உண்மையான பயங்கரவாதிகள் யாரெனில் காங்கிரஸும் அதன் தலைவர்களும் மட்டுமே.

அடுத்த தேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம், மோடியை இல்லாமல் ஆக்கிவிட்டால் தொடர்ந்த பொய்ப்பிரச்சாரத்தின்மூலம் பா.ஜ.க.வையே குற்றவாளியாக்கி மீண்டும் எப்படியும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என கேவலமாக திட்டம்தீட்டி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது காங்கிரஸ். அதற்கு அரசியலில் தாங்கள் எல்லாம் பிரதமர் பதவிக்கு மட்டுமே லாயக்கானவர்கள் என நம்பும் ஒரு கூட்டமும் இந்த சதிகளுக்கு உடந்தை.

ஆனால், காங்கிரஸால் அவமானப்படுத்தப்பட்ட, விரக்தியின் விளிம்பில் இருக்கும் மிஸ்டர்.பொதுஜனம்தான் ஓட்டுப்போடப்போகிறது, அவர்களுக்கு காங்கிரஸின் இந்த கேவலமான தந்திரம் எல்லாம் தெரியாது என காங்கிரஸ் நம்பிக்கொண்டிருப்பதுபோல தெரிகிறது. ஒரு மாநில முதல்வராக இருக்கும் நிதீஷ்குமார் இவ்வளவு தூரம் கேவலமாக இறங்கி பொய் சொல்கிறார், அந்த கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் கூட தாங்காமல் மறுதினமே வெளிப்பட்டு மானங்கெட்டுப்போய் நிற்கிறார். இவர்களெல்லாம் பிரதமரானால் இந்தியாவை என்னவெல்லாம் செய்வார்கள்?

Sunduplseli said...

ஊருக்கும் வெக்கமில்லை இந்த உலகுக்கும் வெக்க்மில்லை யாருக்கும் வெக்கமிலை இதில் அவருக்கு வெக்கமென்ன

ஜெ. said...

நிதீஷ் பா.ஜ.க.உடன் ஆட்சி செய்தவர். ஒரு தனிப்பட்ட தலைவரை - மோடியை - மட்டும் எதிர்த்து கூட்டணியைக் கலைத்தார். தன் நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார். இது பொறாமையால் ஏற்பட்ட தீய விளைவு. - ஜெ.

kg gouthaman said...

நச்.

சிவ.சரவணக்குமார் said...

நெற்றியடி.....மோடியின் வெற்றியை அரசியல் ரீதியாக இனி தடுக்கமுடியாது என்பது அவர் எதிரிகள் [ பெரும்பாலும் தேசவிரோதிகள் ] தெரிந்துகொண்டுவிட்டனர்....... எப்படியாவது அவர் ஒழிந்தால் சரி என்ற மன நிலைக்கு வந்துவிட்டனர்..... ஞாநியின் முந்திரிகொட்டை விளக்கமும், தவறு என்று தெரிந்தபின்பும் குறைந்தபட்சம் வருத்தம் கூட தெரிவிக்காத அநாகரீகமும் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது......

இந்த தேசத்துக்கும் இன்னமும் நல்லகாலம் இருக்கிறது என்று நம்புகிறேன்.......எனவே இந்த கொலைகாரகளையும் , அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவி என்னும் முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் தேசவிரோதிகளையும் மீறி மோதி கடவுள் அருளால் காப்பாற்றப்படுவார்......

சிவ.சரவணக்குமார் said...

நெற்றியடி.....மோடியின் வெற்றியை அரசியல் ரீதியாக இனி தடுக்கமுடியாது என்பது அவர் எதிரிகள் [ பெரும்பாலும் தேசவிரோதிகள் ] தெரிந்துகொண்டுவிட்டனர்....... எப்படியாவது அவர் ஒழிந்தால் சரி என்ற மன நிலைக்கு வந்துவிட்டனர்..... ஞாநியின் முந்திரிகொட்டை விளக்கமும், தவறு என்று தெரிந்தபின்பும் குறைந்தபட்சம் வருத்தம் கூட தெரிவிக்காத அநாகரீகமும் அதைத்தான் சுட்டிக்காட்டுகிறது......

இந்த தேசத்துக்கும் இன்னமும் நல்லகாலம் இருக்கிறது என்று நம்புகிறேன்.......எனவே இந்த கொலைகாரகளையும் , அவர்களை ஆதரிக்கும் அறிவுஜீவி என்னும் முகமூடிக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் தேசவிரோதிகளையும் மீறி மோதி கடவுள் அருளால் காப்பாற்றப்படுவார்......

Anonymous said...

இதுவே பப்புவின் மீடிங்கில் நடந்திருந்தால், இன்னொரு அழுகாய்ச்சி தொடர் பாத்திருக்கலாம். பாட்டி, அப்பா அப்புறம் நான் ..ஓஓஓஓஓஓஓ

vinoth kumar said...

Super.....