பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 07, 2013

கூட்டு களவாணிகள்

கிட்டத்தட்ட 20 வருடம் ஆன பிறகு ஊழல் வழக்கில் லாலுவிற்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், 25 லட்சம் அபராதமும் தண்டனையாக கிடைத்தது.

இதற்கிடையில் அவசர சட்டம் அமல் ஆகாமல் போனதற்கு ஜனாதிபதியே மூல காரணம் என்று அத்வானி முதல் பலர் சொன்னார்கள்.

நேற்று சிறையில் உள்ள லாலு பிரசாத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி நேற்று மாலை சந்தித்துள்ளார். வெளியே வந்த அபிஜித் முகர்ஜி மரியாதை நிமித்தமாக தனிப்பட்ட முறையில் அவரை சந்தித்ததாக கூறியுள்ளார்.

தினமும் எல்லைப் பாதுகாப்பில் இருக்கும் நம் வீரர்கள் பலர் உயிர் இழக்கிறார்கள், அவர்களை எல்லாம் ஜனாதிபதியின் மகன் போய் பார்ப்பதில்லை. ஆனால் ஊழல் குற்றவாளியை போய் பார்ப்பதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்று வாசகர்கள் ஊகிக்கலாம்.


தீபாவளிக்கு வீட்டுக்கு வர ஏற்பாடு செய்தாலும் செய்திருப்பார்.

8 Comments:

dr_senthil said...

ஜனாதிபதியின் தன்னில்லை விளக்கத்தை அவர் தாம் கையறுநிலையில் இருப்பதையும் தூது விட்டு இருப்பார்

R. J. said...

Highly condemnable. It is not being just irresponsible but being audacious to openly make a 'courtesy' visit to condemned criminal by the close relative of the President. Pranab should pull his son and make him apologise or the President shall disown his son.

Can we now expect the family and relatives of the high court and Supreme court judges to make similar visits to jail?

-R. J.

Anonymous said...

u guys have just dont have the intention or guts to write about jaya. she is no less than a fraud than lalu.

kothandapani said...

லாலுவை ஜனாதிபதி மகன் தானே பார்த்துள்ளார். ஜனாதிபதி சென்று பார்க்கவில்லையே. இன்னும் அந்த நிலமை வரவில்லை என்று சந்தோஷப்பட்டு கொள்ளலாம்.

சிந்திப்பவன் said...

லாலு குற்றவாளி!
உங்களுக்கு ஜெயாவைப்பற்றி எழுத துணிவில்லை.
ஜெயா குற்றவாளி!
உங்களுக்கு கருணாவைப்பற்றி எழுத துணிவில்லை.
கருணா குற்றவாளி!
உங்களுக்கு சோனியாவைப்பற்றி எழுத துணிவில்லை.
சோனியா குற்றவாளி!
உங்களுக்கு மம்தாவைப்பற்றி எழுத துணிவில்லை.
மம்தா குற்றவாளி!
உங்களுக்கு முலாயம்பற்றி எழுத துணிவில்லை.
ஐயோ என்ன விட்டுடுங்க நான்தான் குற்றவாளி
ஆங் இப்போதான் உண்மைபேசறீங்க!
யாருப்பா அங்கே? இவருட்ட statement ஒண்ணு வாங்கிகிட்டு லாக்அப்பில் தள்ளுங்க!

சிவ.சரவணக்குமார் said...

அத்வானிதான் தேரை இழுத்து தெருவில் விட்டுவிட்டார்.......அவசரச்சட்டம் வாபஸ் ஆனதற்கு ஜனாதிபதிதான் காரணம் என்று சொல்லிவிட்டார்.....அப்படியெல்லாம் ஒன்னுமில்லைங்க ...... நானும் உங்களை மாதிரி ஆளுதான் என்று சொல்வதற்காக மகன் அனுப்பப்பட்டிருக்ககூடும்.........

R.Gopi said...

அத்வானி சொல்றத எல்லாம் கணக்குல எடுக்காதீங்க.... நான் என்றுமே உங்களில் ஒருவன் தான் என்று சொல்வதற்கு மகனை அனுப்பி இருக்கார் பிரணாப் முகர்ஜி....

Crazypaja said...

மரியாதை நிமித்தமா ? ஊர்ப்பணத்தை அடித்தவருக்கு என்ன மரியாதை தேவை ?