பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 30, 2013

இட்லிவடை - 10 வருடம் - பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

கடந்த 10 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் ஒரு மென்பொருள் சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றிய போது எங்கள் நண்பர் இட்லிவடை பிளாக்கைப் பற்றி எடுத்துரைத்தார். அன்று முதல் இன்று வரை தினமும் இட்லிவடை பிளாக்கை நாம் பார்க்காமல் இருந்தது இல்லை.


ஆனால் ஒன்று இட்லிவடை பிளாக்கைத் தொடர்ந்து பின்பற்றி வருபவர்களுக்குத் தெரியும். இப்போது எழுதுபவர் இட்லிவடை இல்லையென்று.

ஒரு முகமூடி போட்டுக் கொண்டதன் விளைவு, இட்லிவடையை கடைசி வரை பார்க்க இயல்வில்லை.

பா.ரா, பத்ரி போன்ற பலரிடம் நீங்கள்தான் இட்லிவடையா? என கேட்ட காலமுண்டு.

எஸ்.வி.சேகர் பிரச்சனை, திடிரென்று இட்லிவடை ஐடியை ஹேக் செய்தது, எங்களது முதல் ராசிபலன் வெளியானது, 2009ம் ஆண்டு மக்களவை தேர்தல் கருத்துகணிப்பு, இலக்கியம் சார்ந்த விடயங்கள், அரசியல், நாட்டு நடப்புகள் போன்ற பலவிதமான சரமான பதிவுகளை மறக்க இயலாது.


10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இட்லிவடைக்கு வாழ்த்துக்கள்.

குறிப்பு: எம்மை பிளாக் எழுத தூண்டியவர்கள், 2 நபர்கள்.
[1] இட்லிவடை - முகமூடி அணிந்த பிளாக்கர்
[2] நிலாரசிகன் - எம் பள்ளித் தோழர்

வேண்டுகோள்:
[1] முதலில் உங்கள் பழைய இலை படத்தையேப் போடவும்.
[2] தினமும் ஒரு பதிவு போடவும்.
[3] பழைய காரசாரம் வேண்டும்.


ஜோசியம் பார்த்து தினமும் பதிவு வருமா என்று சொல்லுங்க :-)

3 Comments:

இராஜராஜேஸ்வரி said...

10ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இட்லிவடைக்கு வாழ்த்துகள்.

middleclassmadhavi said...

வாழ்த்த வயதில்லை! வணங்குகிறேன்!! :-))))

நீச்சல் காரன் said...

2008ல் நானும் பதிவுலகிற்கு வர ஆர்வமும் ஊட்டிய ஒரு தளம் இட்லிவடை.
முதலில் இட்லிவடை போல டீக்கடை என்று ஒரு தளம் ஆரம்பித்து அரசியல்வாதிகளைக் காய்ச்சலாம் என்று கூட நினைத்ததுண்டு அதன் பிறகு வந்த காய்ச்சல் நமக்கு அரசியல் வராது என முடிவுக்குத் தள்ளியது. வாழ்க உம்பணி!

அண்மையில்தான் தமிழ் விக்கிப்பீடியாவும் பத்தாண்டை நிறைவு செய்தது.