பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 28, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - FIR

முதல் காட்சியில் நடுரோட்டில் ஒருவர் அடிப்பட்டு கிடக்க மங்கலான காட்சி அமைப்பில் என்ன என்று நமக்கு ஆவலை ஏற்படுத்தி அதை கடைசி காட்சி வரை எடுத்து செல்கிறார் மிஷ்கின்.

த்ரில்லர் படம் என்றால் அமைதியான காட்சியில் ஒரு பூனையை கத்தவிடுவது, அல்லது யாராவது அலறுவது என்று தமிழ் சினிமாவி ஃபார்முலா இதில் இல்லை.

திரைக்கதை, எடிட்டிங், இசை இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களின் நடிப்பு ஆகியவை இந்த படத்தின் பலம்.

யுத்தம் செய் படத்தில் இருந்த அதே விறுவிறுப்பு இந்த படத்திலும். ஆனால் கடைசில் மிஷ்கின் சொல்லும் ஓநாயும் ஆட்டுக்குட்டி கதை எவ்வளவு பேருக்கு புரியும் என்று தெரியாது. இவ்வளவு விறுவிறுப்பான படத்துக்கு இந்த  பிளாட் சுமார் தான். நல்ல ப்ளாஷ் பாக் காட்சிகளாக சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். படம் முழுவதும் பல கேள்விகள் நமக்கு வருகிறது அதை எல்லாம் ஒரு நீதி கதை மூலம் சொல்லும் போது பார்ப்பவர்களுக்கு அந்த Impact வருவது ரொம்ப கஷ்டம். இந்த மாதிரி ஒரு கதைக்கு ஒரு நல்ல heavy ஆன ப்ளாஷ் பாக் இல்லாதது ஒரு பெரிய குறை.

பழைய நீதிக்கதையை கொஞ்சம் இந்த காலத்துக்கு மாற்றி ஒரு த்ரில்லர் கொடுக்க முடியும் என்று நிருபித்திருக்கிறார் மிஷ்கின்.

கடைசியில் அந்த மார்ஷல் ஆர்ட்ஸ் கத்தி சண்டை எல்லாம் அட போங்கப்பா இதுவும் சினிமா தான் என்று சொல்ல தோன்றுகிறது.

நிச்சயம் பார்க்கலாம். இரண்டாவது தடவை பார்த்தால் புரியாத இடங்கள் புரியும் !

இட்லிவடை மார்க் 6.5/10

மஞ்சள் கலர் புடவை டான்ஸ் இல்லை !

6 Comments:

பாலமுகுந்தன் said...

அட போங்கைய்யா.. நான் கூட ஏதோ நம்ம சின்ன தலைவர் பேசினதை வச்சு, உள்குத்து போஸ்ட் போலன்னு நினைச்சேன்...

crazypaja said...

இது ஏதும் நேஷனல் ஜாக்ரபி படமா ?? பயமா இருக்கே!

R. J. said...

We may understand the movie if we see it twice, but I couldn't understand your review even after reading it twice! What do you want to say - the film is good or not?

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

but மஞ்சள் comment !!! IDLY VADAI SPL.

dr_senthil said...

எங்கே படத்தை பார்த்தீர்கள் ? கோபாலபுரதில்லா?

Anonymous said...

மஞ்சள் கமெண்ட் வருத்தத்தில் எழுதியதா ?