பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 17, 2013

பிரதமர் வேட்பாளர் என்று உண்டா? - ஞாநி

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைத் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று பாரதிய ஜனதா கட்சி அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. பிரதமர் வேட்பாளரை 1998-லிருந்தே ஒவ்வொரு மக்களவைத் தேர்தலின்போதும் இப்படி அறிவித்துவருவதாக அந்தக் கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்பு அறிவித்த எந்த அறிவிப்பும் இந்த முறை மோடியை அறிவிக்க அந்தக் கட்சி செய்த ஆயத்தங்களுக்கு நிகராகாது. ஏறத்தாழ ஓராண்டுக்கும் மேலாக மோடிதான் தங்கள் பிரதமர் வேட்பாளர் என்று நிறுவுவதற்கு அக்கட்சியின் பல பிரமுகர்களும் ஆர்.எஸ்.எஸ். அனுதாபிகளும் விதவிதமான முயற்சிகள் செய்துவந்திருக்கின்றனர். மோடிக்கு எதிராக உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்று அறிவிக்க முடியுமா என்று காங்கிரஸ் கட்சியைத் தொடர்ந்து சீண்டியும் வந்துள்ளனர். காங்கிரஸ் இதுவரை அந்த வலைக்குள் சிக்கவில்லை என்பது சற்றே ஆறுதலான விஷயம்தான்.

ஏனெனில், பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும். பெரும் அனைத்திந்திய கட்சிகளில் ஒரு கட்சி அப்படிச் செய்வது என்பது ஆபத்தான போக்கு.

இந்திய அரசியல் சட்டப்படியும் நாடாளுமன்ற, சட்டமன்ற நடைமுறைகள், மரபுகள்படியும், பிரதமர் வேட்பாளர் என்றோ முதலமைச்சர் வேட்பாளர் என்றோ ஒருவர் மக்களிடம் நேரடியாக வாக்குக் கேட்க இடமே கிடையாது. மக்களிடம் வாக்குக் கேட்டுத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் மக்களவை உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் மட்டும்தான். நான் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் என்று சொல்லித்தான் தேர்தலில் நின்று ஜெயித்து வந்திருக்கிறேன். என்னைப் பிரதமர் பதவி ஏற்கும்படி குடியரசுத் தலைவர் அழைக்க வேண்டும் என்று எந்த மக்களவை உறுப்பினரும் தனியே அவரிடம் கோர முடியாது. “நீங்கள் மக்களவை உறுப்பினர் பதவித் தேர்தலில் ஜெயித்திருக்கலாம். ஆனால், உங்கள் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. தனிப் பெரும் கட்சியாகவும் ஜெயிக்கவில்லை. அப்படியே தனிப் பெரும் கட்சியாகவோ, அறுதிப் பெரும்பான்மையோ பெற்றிருந்தாலும்கூட, இப்போது உங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உங்களைத் தங்கள் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்தால்தான் நான் உங்களைப் பிரதமர் பதவிக்குப் பரிசீலிக்க முடியும்” என்றே குடியரசுத் தலைவர் பதில் சொல்ல முடியும்.

எனவே பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை ஒரு கட்சி அறிவித்து தேர்தலில் நிறுத்தச் சட்டத்தில் இடமே இல்லை. அப்படி அறிவித்து நிறுத்துவதன் பின்விளைவுகள் தேவையற்ற சிக்கல்களையும் ஏற்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, நரேந்திர மோடி ஜெயிக்கிறார், பா.ஜ.க-வுக்குத் தனிப் பெரும் கட்சி நிலைகூடக் கிட்டவில்லை என்று வைத்துக்கொள்வோம். மோடி பிரதமராக முடியாது. அவர் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லி ஜெயித்திருந்தாலும் பிரதமராக முடியாது என்றால், என்ன அர்த்தம்? தனி நபர் வெற்றி அடிப்படையில் பிரதமர் பதவி தரப்பட மாட்டாது என்ற சட்டப்படியான நிலையை மறைத்துத் தேர்தலைச் சந்திப்பது எப்படி நியாயமாக முடியும்? அடுத்து, நாங்கள் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களைப் பெற்றால் மோடியைப் பிரதமராக்குவோம் என்றுதான் சொல்கிறோம் என்று வாதாடலாம். இதுவும் தவறானது. தேர்வாகி வரும் சுமார் 252 பா.ஜ.க. உறுப்பினர்களில் பெரும்பாலோர் மோடி பிரதமராகக் கூடாது என்று, அத்வானியோ சுஷ்மாவோதான் ஆக வேண்டும் என்றும் அப்போதுகூட மாற்றி முடிவு செய்யலாம். அரசியலில் அப்படியெல்லாம் நடக்காது என்று எதையும் சொல்ல முடியாது.

அப்படிச் செய்தால், மோடி பிரதமராவார் என்று சொல்லித்தானே என் ஓட்டை வாங்கினீர்கள், அத்வானி, சுஷ்மா என்றால் நான் உங்கள் கட்சிக்கு ஓட்டே போட்டிருக்க மாட்டேனே என்றுகூட வாக்காளர்கள் கருதலாம். இன்னொரு சாத்தியமாக, கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தாலும், மோடி மட்டும் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டால், வேறொருவரைத்தான் பிரதமராக்க வேண்டியிருக்கும். ஆறு மாதத்துக்குள் வேறு தேர்தலில் நிற்கவைத்து அவரை ஜெயிக்க வைக்கலாம் என்று தோற்றவரைப் பிரதமராக்க முயற்சித்தால் அது தார்மிகமாகாது.

இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை இப்போதுள்ள சட்டங்களின்படி தனிநபரை முன்னிறுத்துவதல்ல. கட்சியை முன்னிறுத்தியே விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் கட்சிகளில் ஒரு கட்சியைப் பெரும்பான்மைக்குரியதாகத் தேர்வு செய்கிறார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தங்கள் தலைவரை அதன் பின் தேர்வு செய்யலாம் என்பதே இந்த நடைமுறை.

இதை மாற்றித் தனிநபரை பா.ஜ.க. முன்னிறுத்த முயற்சிப்பது ஏன்? பெருவாரியான மாநிலக் கட்சிகளும் இப்படித் தனிநபரையே மாநில அளவில் முன்னிறுத்துகின்றன. அதையே மத்திய அரசுக்கும் விரிவுபடுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது. கட்சியைவிட தனி நபரே கவர்ச்சியானவர் என்று காட்டுவதுதான் பாசிஸத்தின் ஆதார வேர். தவிர மாநில அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் இந்திய அளவில் ஒருவரை முன்னிறுத்துவதற்கும் வேறுபாடுகளும் உள்ளன.

தனிநபரை முன்னிறுத்தும் போக்கு, இந்திய அளவில் அனைத்திந்திய கட்சிகளுக்கு மட்டுமே சாத்தியமானது. மாநிலக் கட்சிகள் தங்கள் தலைவர்களை இந்திய அளவிலான தலைவர்களாக முன்னிறுத்துவது கடினம். ஆனால் கட்சியின் கொள்கை அடிப்படையில் ஒரு மாநிலத்தில் என்னவெல்லாம் சாதித்தோம், மத்தியிலும் வாய்ப்பு வந்தால் என்ன செய்வோம் என்று கட்சியாக தன்னை முன்னிறுத்துவது சாத்தியமானது.

அது மட்டுமல்ல, பிரதமர் வேட்பாளர் என்று தனிநபர் சார்ந்த போக்கைச் சட்டவிரோதமாக மக்களவைத் தேர்தலின்போதே ஊக்குவிப்பது வேறு வகையிலும் ஆபத்தானது. இந்த அடிப்படையை எல்லாக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டால், வி.பி.சிங், குஜ்ரால், தேவ கவுடா, சந்திரசேகர், நரசிம்மராவ், மன்மோகன்சிங் ஆகிய நபர்கள் ஒருபோதும் பிரதமராகியிருக்கவே முடியாது. பண பலம் உள்ள தனிநபர் வழிபாட்டை ஊக்குவிக்கும் சக்திகள் மட்டுமே வலிவடையும்.

அமெரிக்க அதிபர் தேர்தல் முறையை இந்தியாவிலும் ஏற்படுத்த விரும்பும் கட்சிகளில் பா.ஜ.க-வும் ஒன்று. நாடாளுமன்றத்தில் போதுமான பலம் இல்லாவிட்டாலும்கூட, அதிபராகிவிட்டால், சில அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்பது அமெரிக்க அதிபர் அமைப்பின் விசித்திரங்களில் ஒன்று. அப்படிப்பட்ட தனிநபர் அதிகாரத்தை இப்போதுள்ள இந்திய முறைக்குள்ளேயே புகுத்தும் முயற்சியாகவே பிரதமர் வேட்பாளர் அறிவிப்பைக் கருத வேண்டும். இது நம் ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.

ஞாநி, மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர். தொடர்புக்கு: gnanisankaran@gmail.com

நன்றி: தி இந்து - தமிழ்
நட்சத்திர விழா என்று போட்டு விட்டு சகல நடிகர் நடிகை படங்களையும் போட்டு டிக்கெட் விற்று விட்டு கடைசியில் குள்ள மணி, உசிலை மணி, தவக்களை, அங்கமுத்து போன்ற நடிக நடிகைகளை வைத்து ஷோ நடத்தி ஏமாற்றும் மோசடிக் கும்பல் போல ஏமாற்ற வேண்டும் என்று ஆசைப் படுகிறார் - திருமலை ராஜன்

36 Comments:

இரா முருகன் said...

தப்பு. அது ഇഡ്ഡലി വട

ப்ரதிவாதி பயங்கராச்சாரி said...

ஞானி என்னும் மொட்டைப் பாட்டி!

இந்த ஞானி போன்றவர்களுக்கு எதையாவது ஒண்ணுமில்லாத விஷயத்தை நோண்டி நோண்டி எழுதி எப்போதும் லைம் லைட்டில் இருக்க வேண்டும்.வீட்டின் ஒரு மூலையில் உக்கார்ந்து கொண்டு யாரையேனும் எதையேனும் விமரிசித்து சதா முணு முணுத்துக் கொண்டிருக்கும் மொட்டை பாட்டிக்கும் வெட்டி விமரிசன ஞானி போன்றவர்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

இவரது கருத்தை எவனும் மதித்து ஓட்டு போட முடிவு செய்வதில்லை. அவரது வயிற்று பிழைப்பு அவர் என்னமோ எழுதுகிறார்.அட போய்யான்னு நாமும் ignore செய்து விட்டு just move on பண்ணுவதுதான் சாலச் சிறந்தது.

Anonymous said...

ஞாநியின் இந்தப் பதிவில் உள்ள 'நியாயம்" மெய் சிலிர்க்க வைக்கிறது.அரசியலமைப்புச் சட்டத்தின்படி இது குற்றம் என்று சொல்லப்படவில்லை. இலவசங்கள் தருகிறேன் என்று சொல்லி மக்களை சோம்பேறிகளாக்கும் திட்டங்களை முன் வைத்து ஒட்டு கேட்பது சரி, ஆனால் ஒரு மாநிலத்தின் முன்னோடியான தலைவர் தனது நல்ல திட்டங்களைச் செயல் படுத்துவார் ஆகவே அவரை முன்னிறுத்துகிறோம் என்று சொல்வது தவறு என்று எந்தப் "பகுத்தறிவு" சொல்கிறதோ தெரியவில்லை. எதிர்க்கவேண்டுமே என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசிவிடுவதா?

Anonymous said...

ஐயோ பாவம்!
ஞாநி வெறும் அஞ்ஞாநி!
பேத்தல்களின் விஞ்ஞாநி!!


ஞாநி ஏதோ வயிற்றுப் பிழைப்புக்கு உளறி வைத்துக் கொண்டிருக்கிறார். போய்த் தொலைகிறார் விடுங்கள்.

Sankar Dass said...

Appreciate the crooked intelligence of this "Intellectual". Need a couple of more such intellectuals to find fault with everything on Modi and BJP , so that the people rush in large number to poll booths and vote for BJP candidates and Modi takes the responsibility. Gnani ... keep it up. You can do more ....

kg gouthaman said...

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தேழில், காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகள் எல்லாம் சேர்ந்து ஜனதா கட்சிக்கு விழுந்தன. நாடாளுமன்றத்தில், பிரதமரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்னும் நிலை வந்த பொழுது, 'ஒன்றா இரண்டா!' அரை டஜன் மக்கள் பிரதமர் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டார்கள். ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலையிட்டு, மொரார்ஜி தேசாயை ஒருமனதாக (அல்லது அரை மனதாக) தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. அப்போ உதவிப் பிரதம மந்திரியாக ஒருவரை அறிவித்து, அவர் அரசாங்கத்தையே கவிழ்த்து, ஜனதா அரசாங்கம் மிகவும் தர்மசங்கடங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தது. கடைசியில் கவிழ்ந்தது. வோட்டுப் போட்ட மக்களும் நொந்து போய், அடுத்த தேர்தலிலேயே, இந்திரா காங்கிரசுக்கு மீண்டும் ஆதரவு அளித்து வோட்டுப் போட்டனர். மக்களின் வெறுப்பு ஓங்கியதற்குக் காரணம் பிரதம மந்திரி நாற்காலிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் அடித்துக் கொண்டதுதான்.

அதே நிலைமை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது, காங்கிரஸ் எதிர்ப்பு வோட்டுகளை ஒன்று திரட்ட வேண்டும்; இன்னார்தான் பிரதமர் என்று முன்பே அடையாளம் காட்டிவிட்டால், பிறகு தேர்தல் முடிந்ததும் பதவிச் சண்டைகள், கால் வாரல், கவிழ்த்தல் என்ற அயோக்கிய நாடகங்கள் நடக்காமல் இருக்கும். இதை மனதில் கொண்டே, பா ஜ க இந்த திசையில் பயணிக்கின்றது. இது சரியான திசைதான்.

மற்றபடி, பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்துவிட்டாலே தேர்தல் முடிந்ததும், ஜெயித்தாலும், தோற்றாலும், பெரும்பான்மை பெற்றாலும், பெறாவிட்டாலும் போய், ஜனாதிபதி வீட்டுக் கதவைத் தட்டி, 'நாங்க ஏற்கெனவே அறிவிச்சிட்டோம் அதனால் இப்போ இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வை' என்று கேட்க இயலாது என்பது வீதியில் செல்கின்ற விரல் சூப்பிப் பையனுக்குக் கூட தெரிந்திருக்கும்.
இதை சொல்ல எந்த ஞானியும் / ஞானமும் வேண்டியதில்லை!

R. J. said...

Gnani's point is right as per our constitution. But all of us know how a leader is elected by the MPs / MLAs! KGG has responded well. At least now the voting public will know who will lead the country if BJP wins a working majority. I feel that is for the same reason Congress is delaying the announcement of Rahul as their PM candidate! I am 100% sure the man on the wall will not support Congress if rahul is projected as the PM nominee. - R. J.

Anonymous said...

பொருளாதரத்தில் பிற்பட்ட பார்வர்ட் க்ளாசிக்கு ஜெனரல் கோட்டாவில் ஏன் உள் ஒதுக்கீடு இல்லை என்று கேட்ட போதே ஞானி அவர்களின் ஞானம் பட்டொளி வீசிப் பறந்தது...... இன்னுமா உலகம் இவரை நம்புது..... அய்யோ...... அய்யோ..!

ஆராவமுதன்

Anonymous said...

//Anonymous R. J. said...
Gnani's point is right as per our constitution.//

அவருதாம் எதோ உளருதாறுன்னு நீரும் அதுக்கு ஜால்ரா தட்டுதீரு....ஞானி எழுதின கன்ஸ்டியூஸன்லே மட்டும் தான் அது தூக்கு தண்டனைக்குரிய குற்றம்

தந்தி டி.வி யில் செய்தித்தாள் புரட்டுகிற ஆசாமிக்கும் ஞானிக்கு பெரிய வித்தியாசம் கிடையாதுன்னேன்.

Pavila Dolaki said...

Gnani had to wait for 1.5 years, ever since the debate started to point out this wrong trend...2 days after the announcement is made. Next he will have issues with Modi's beard. He must be able to pick up something communal about it.

dr_senthil said...

அரசியல் சட்டப்படி இவ்வாறு யார் பிரதமர் என்று சொல்லி அல்லது முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பது சரியோ தவறோ ஆனால், தமது கட்சியின் சாதனை தமது வேட்பாளரின் தகுதி, கட்சி பெரும்பான்மை பெரும் பட்சத்தில் யார் அதன் நாடாளுமன்ற தலைவர்/பிரதமர் என தெளிவு படுத்துவது ஒவொவொரு கட்சிகளின் கடமை மட்டுமின்றி அதுஒரு ETHICS.ஜெயிப்போமா என்று தெரியாது ஜெயித்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பதுதான் அரசியல் சட்டமா? இலவசங்களை தேர்தலுக்கு தேர்தல் வாரி இறைப்பது அதனால் ஏற்படும் கடன்/வரி சுமையை மக்களின் மேல் ஏற்றுவது சட்டப்படி சரியா? தன்னை சுற்றி ஊழல் நடப்பதை கண்ணிலாதவன் போல தனக்கு அதற்கும் சம்பந்தம் இல்லாததை போல அமர்திருக்கும் பிரதமர் சட்டப்படி சரியா? அது மக்களை ஏமாற்றுவதற்கு ( கொலையை செய்யவில்லை,ஆனால் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும் போல )சமமல்லவா ? அது சட்டப்படி சரியா ? கீதையில் சொன்னப்படி நடப்பது நடந்தே தீரும் ..யார் தடுத்தாலும்.. மோடி பிரதமர் ஆனவுடன் செய்ய வேண்டியது மன்மோகன் அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி அவர் அமைசர்கள் செய்த அணைத்து ஊழல்களுக்கும் தண்டனை வாங்கியே தரவேண்டும் அதுவே மக்களை பத்தாண்டுகள் ஏமாற்றியதற்கு தண்டனையாக.

Anonymous said...

ஞானிக்கு இப்போதே ஏன் காய்ச்சல் வந்து விட்டது?

சிந்திப்பவன் said...

"கோட்சே தன கையில் முஸ்லிம் பெயரை பச்சை குத்தியிருந்தான்"என என்று ஞாநி பச்சையாக புளுகினாரோ, அன்றே அவர் பூட்ட கேஸ்!
அவருக்கு போய் நீங்கள் அரை பக்கம் ஒதுக்கி...

சிந்திப்பவன் said...

dr senthilum,kg kothamanum இட்டுள்ள பின்னூட்டங்கள் மிக அருமை.அதற்கு மேல் யாரும் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.என் தாழ்மையான கருத்து.

Anonymous said...

All parties in Tamilnadu are projecting their leader as the CM candidate. Gnani never voiced an opinion about that.

Anonymous said...

//தந்தி டி.வி யில் செய்தித்தாள் புரட்டுகிற ஆசாமிக்கும் ஞானிக்கு பெரிய வித்தியாசம் கிடையாதுன்னேன்//

எங்க ஊரில் தந்தி டிவி தெரியாது... யாருங்க அது...

இவ்வளவு கேவலமா சொல்லியிருப்பதைப் பார்த்தால் அந்த ஆசாமி கண்டிப்பாக ”சாரு” வாகத்தான் இருக்கனும்.

k.rahman said...

gnani, why do you write something against modi and earn brickbats and personal abusive comments?

just follow the example of other mainstream tamil and english media and say 'jai modi'. you will be showered with accolades.

சிவ.சரவணக்குமார் said...

இந்திராவே இந்தியா...காலத்தையெல்லாம் அஞ்ஞாநி மறந்துட்டார் போலருக்கு.......

சிவ.சரவணக்குமார் said...

இந்திராவே இந்தியா...காலத்தையெல்லாம் அஞ்ஞாநி மறந்துட்டார் போலருக்கு.......

Anonymous said...

இது என்னாங்க டுபாக்கூராக் கீது! ஞானிக்கு ஒரு அறுபது வயசு இருக்கும். நேரு, இந்திரா, ராஜீவ், அட வாஜ்பேயி எல்லாரையும் முன்னால வச்சு நடந்த தேர்தலுங்க போது எங்கியாவது வெளிநாடு போயிருந்தாரா? அட கருணாநிதி விட்டா எம்ஜிஆர் விட்டா ஜெயலலிதா தேர்தலுங்களக் கூட அவர் பாத்ததில்லியா?

என்.ராமதுரை / N.Ramadurai said...

பிரிட்டன் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளிலுமே நாடாளுமன்ற ஜனனாயக முறை பின்பற்றப்படுகிறது. பிரிட்டனில் நாடாளுமன்றத்துக்கு நடைபெறுகின்ற தேர்தல்களில் போட்டியிடும் பிரதான கட்சிகள் தங்களது பிரதம்ர் வேட்பாளரை அறிவித்து விட்டுத் தான் போட்டியிடுகின்றன.ஆகவஏ பிரிட்டனைப் போலவே நாடாளுமன்ற ஜனனாயக முறையைப் பின்பற்றுகின்ற இந்தியாவில் ஒரு கட்சி தனது பிரதமர் வேட்பாளரை முன்கூட்டி அறிவித்து அவரை முன்னிறுத்தி தேர்தலில் போட்டியிடுவதில் தவறு ஏதும் இல்லை.எல்லாக் கட்சிகளுமே இப்ப்டிச் செய்யலாம். ஜெயித்தால் நம்மை ஆளப் போகும் பிரதமை யார் என்று மக்களுக்கு முன்கூட்டித் தெரிவது நல்லது தான்.

Anonymous said...

IN ALL ELECTIONS AFTER 1952 CONGRESS WAS PROJECTING NEHRU AS THE PRIME MINISTER.
IN 1971, IT WAS KARUNANIDHI WHO TOLD 'NEHRUVIN MAGLE VARUGA NILAYANA AATCHI THARUGA'. AT THAT TIME INDRA GANDHI WAS ONLY PROJECTED AS PRIME MINISTER. TILL HER DEATH SHE WAS ONLY PROJECTED AS PM.
THE 1991 ELECTION WAS FACED BY CONGRESS PROJECTING RAJEEV GANDHI AS THE PM. IT WAS ONE OF THE REASONS FOR HIS KILLING SINCE LTTE THOUGHT HE WILL AGAIN SEND IPKF AND TRY TO IMPLEMENT THE INDO LANKA ACCORD.
THE CHARISMA OF NEHRU,INDRAAND RAJEEV MADE CONGRESS PROJECT THEM.
EVERYONE KNOWS ABOUT RAHUL AND HIS CHARISMA. INFACT CONGRESS IS SCARED OF ANNOUNCING RAHUL SINCE IT WILL MEAN LOSS OF VOTES ONLY.THEY HAVE NOT FORGOTTEN UP OR BIHAR.
FURTHER MORE, PROJECTING SOMEONE IS A SIMPLE STRATEGY. DURING THE INITIAL DAYS THERE WAS NO NEED FOR PROJECTION SINCE THERE WAS NO OPPOSITION WORTH ITS NAME AND SO THE CONGRESS ONLY WILL FORM GOVT.
EVEN THE COMMUNISTS WANTED TO ROJECT ONLY JYOTHI BASU ASTHE THIRD FRONT LEADER LAST TIME. HE WAS NOT WILLING.
EVEN TODAY COMMUNISTS FEEL WITHDRAWAL OF JYOTHI BASU AS CM IS THE MAIN REASON FOR THEIR DEFEAT.
BRITISH DEMOCRACY THE OLDEST ONE PROJECTS THIR LEADER AS FUTURE PM. THEY FACE POLLS THAT WAY ONLY. YOU CANT CALLTHEM FACIST.

என். ராமதுரை said...

பிரதமர் வேட்பாளர் என்பது நிச்சய்ம் உண்டு.கடந்த தேர்தல்களில் நேருவுக்கு வோட்டு போட்டார்கள். இந்திரா காந்திக்கு வோட்டுப் போட்டார்கள். அவர்கள் பிரதமர் வேட்பாளர்களாகவே தேர்தலில் நின்ற்னர்.
மானிலங்களைப் பொருத்தவரை காமராஜருக்கு வோட்டுப் போட்டார்கள். பின்னர் நடந்த தேர்தல்களில் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் முதல்வர் வேட்பாளர்களாக்வே தேர்தலில் நின்றார்கள்.
அமெரிக்காவில் இருப்பாது அதிபர் பாணி ஆட்சி முறை. இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறை. இதை மனதில் வைத்துக் கொண்டு ஞானி எழுதியிருக்கிறார்.
நாடாளுமன்ற ஜனநாயக முறையிலும் பிரதம்ர் வேட்பாளர் இருக்க முடியும் பிரிட்டனில் நாடாளுமன்ற ஜனநாயக முறைதான் உள்ளது.
ஆனால் பிரிட்டனின் தேர்தலில் நிற்கிற கட்சிகள் முன்கூட்டி பிரதம்ர் வேட்பாளரை அறிவித்து விட்டுத் தான் தேர்தலில் போட்டியிடுகின்றன. மிக நீண்டகாலமாக இது இருந்து வருகிறது.ஆக்வே நாடாளுமன்ற ஜன நாயக் முறையிலும் பிர்தமரை முன்னிறுத்தும் ஏற்பாடு சாத்தியமே.
தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றினால் நம்மை ஆளப் போவது யார் என்று மக்களுக்கு முன் கூட்டித் தெரிந்திருப்பது நல்ல ஏற்பாடே. இது வரவேற்கத்தக்க ஒன்றே.
இந்தியாவில் ஒரு சமயம் எட்டு அல்லது பத்து பேர் சேர்ந்து இன்னார பிரதமர் என்று முடிவு செய்து அவரப் பிரதமர் ஆக்கினர்.அப்படி ஏற்படாமல் இருக்க பிரதம்ர் வேட்பாளரை முன்கூட்டி அறிவிக்கும் முறை நல்லதே

Venky said...

Telling Modi is BJP's PM candidate is to tell the People that if BJP will win the elections, they will make Modi the PM. (Its bull sh*t to ask if all the MPs will support Modi after victory. Its a party and all the members of party will obviously listen to their party leader)

Its nothing illegal to announce the party's PM candidate, its just a strategy.

Mr. Gnani (don't know if you have any), if you go to see, then Alliance is also illegal as per the your point, isn't it?

What the law tells? An MP with the support of 252 MPs can become the PM. Those 252 can be from more than one party, so it indirectly implies that there can be alliance between two or more parties to support a candidate as a PM after victory. A strategy made by the alliance parties.

The same way, it is totally acceptable to announce who the party's would be PM will be, if in case the party gets a majority in elections.

The political parties are telling they would give free mobile phones, free mixie, free laptop to voters if they vote for them. I feel this is more illegal and more anger raising statements than announcing a PM candidate. People with Gyan will understand, which I cannot expect from you Mr. Gnani, you carry on with your bull sh*t.

Sankar dass said...

@K.Rahman , your comments about english or mainstream media praising Mr.Modi is a big joke. In fact , it is the media , which was responsible for campaign against Modi in the last two Gujrat elections. Or running talk shows on some event on Modi's action or his comment. First of all , Modi is not a god and people are not goats.It is the media which projected him like a devil and burnt their fingers .... now also they do it happily , because for them Modi is a Marketing hook. In the current context of Congi looting the nation and eroding accountability , the only hope for most people appears to be the example set by Modi in Gujarat administration. A healthy democracy should evaluate the options available in a given period and choose the most appropriate party led by an individual with demonstrated capabilities. Modi scores here. Period.

Anonymous said...

Congress only will win in the elections. The pm candidate will be selected by Sonia only. It is not the duty of 272 MPs. It is correct as per constitution.
even in assembly elections, if congress wins, Sonia only will select CM. Gulam Nabi Azad, Ahmed patel, George, Antony will ensure the win of secular congress.
I sincerely wish, shariyat law will be enforced in our country within 25 years. we paray for that.

poovannan said...

ஞானி சாரின் கட்டுரை பா ஜ க விற்கு ஆதரவாகவும் இட்லி வடையின் மஞ்சள் கமெண்ட் பா ஜ க வை நக்கல் செய்வது போலவும் இருப்பது விந்தை தான்
பா ஜ க துவங்கியதில் இருந்து செய்து வருவதை எவ்வளவு அழகாக மஞ்சள் கமெண்ட் விளக்குகிறது.


பா ஜ க பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்த மாநிலங்களின் அழகை பார்ப்போமா
உத்தர்ப்ரதேசம்- இந்தியாவிலயே அதிக மக்கள் தொகையை,எம் பி,எம் எல் ஏ இடங்களை கொண்ட மாநிலம்.
அங்கு ஆட்சி செய்த ஐந்து ,6 ஆண்டுகளில் மூன்று முதல்வர்கள்.மக்களின் முன் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட கல்யான் சிங்,ஹிந்துத்வாவின் மூன்றாவது தூண் நிலையில் இருந்தவர் தூக்கப்பட்டு குப்தா மற்றும் ராஜ்நாத் சிங் முதல்வர் ஆனார்கள்.
ஹிந்துத்வாவின் பரிசோதனை கூடமான குஜராத்தில் அவர்களின் பெரும்சாதனையான 2002 குஜராத் கலவரங்கள் நடைபெறுவதற்கு முன் musical chair ஆடிய முதல்வர்கள் கேசுபாய்,சுரேஷ் மேஹ்தா ,வகேலா (ஆர் எஸ் எஸ் இல் பல ஆண்டு காலம் பயிற்சி பெற்றாலும் மோடியின் குழிபறிக்கும் வேலைகள் பொறுக்காமல் கட்சியையே உடைத்து கட்சி எம் எல் ஏக்களின் துணை கொண்டு முதல்வர் ஆனவர்).கலவரம் மோடியின் பெருமையை பரிவாரங்களுக்கு உணர்த்தியதால் அவரை தவிர மற்ற அனைவரையும் பரிவாரம் கை கழுவி விட்டது.ஆனால் மோடி முதல்வர் ஆனா கதையை விட மஞ்சள் கமெண்டுக்கு பொருத்தமான எடுத்துக்காட்டு வேறு இருக்க முடியாது

poovannan said...

டெல்லியில் ஒரு முறை தான் ஆட்சியில் இருந்தார்கள்.அங்கு மக்கள் முன் முதல்வர் வேட்பாளராக முன் நிருதப்படுபவர் குரானா.ஆனால் musical ஷேர் பா ஜ கா வின் /பரிவாரத்தின் முக்கிய விளையாட்டு ஆயிற்றே -5 வருடத்தில் மூன்று முதல்வ்ர்கள்-குரானா ,சாஹீப் சிங் வர்மா மற்றும் பெரும்பான்மை பலம் பெற்ற எதிர்க்கட்சி தலைவியாக பதவி வகித்தவர் பிரதமர் ஆனால் மொட்டை அடித்து கொண்டு விதவைகள் போல பதியசாப்பாடு சாப்பிட்டு கொண்டு வாழ்வேன் என்று சூளுரைத்த சுஷ்மா.
மத்ய பிரதேசம்-பெரும் வெற்றி பெற முக்கிய காரணம் முதல்வராக முன் நிறுத்தப்பட்ட உமா பாரதி,ஆனால் சில மாதங்களுக்குள் musical chair ஆரம்பித்து உமா போய gaur வந்தார் டும் டும் டும் .கௌர் போய சௌவான் வந்தார் டும் டும் டும் தான்.
உமா பாரதி கட்சியை விட்டு பிரிந்து தனி கட்சி துவங்கி வெற்றி பெற்று விடுவாரோ என்ற பயத்தால் சௌவான் musical chair ஆட்டத்தில் இருந்து இதுவரை தப்பித்து விட்டார்.ஆனால் அவர் மோடியை எதிர்த்த பாண்டாவின் கதியை பார்த்து விட்டு ரொம்ப உஷாராக இருப்பது அவருக்கு உதவுகிறது.
உத்தர்கந்த் மாநிலம்-அங்கு பிரிந்த பிறகு கட்சியினரால்,மக்களால் முதலவர் ஆவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட கொஷியாரி ஆகவில்லை.நித்யானந்த் சுவாமி முதலவர் ஆனார். ஆனால் தேர்தலில் அவரை வைத்து வெற்றி பெற முடியாது என்பதால் 6 மாதத்திற்கு முதலவர் ஆக்கப்பட்டார்.
அடுத்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றது..அதற்க்கு அடுத்த தேர்தலில் யாரையும் முன் நிறுத்தவில்லை.அங்குள்ள சாதி போட்டி தான் அதற்க்கு காரணம்.பா ஜ க வெற்றி பெற்ற பிறகு ஜெனரல் கந்தூரி முதலவர் ஆனார். துவங்கியது MUSICAL CHAIR .கந்தூரி போய் போக்ரியால் வந்தார் டும் டும் டும் ,போக்ரியால் போய் மறுபடியும் கந்தூரி வந்தார் டும் டும் டும்
எதுக்காக அவரை தூக்கினார்கள்,எதற்காக மறுபடியும் அவரை தேர்தலுக்கு முன் முதல்வர் ஆக்கினார்கள் எனபது மக்களுக்கு தெரியாத ஆனால் பரிவாரத்தை யக்கும் சக்திகளுக்கு தான் வெளிச்சம்.
ஜார்க்ஹாந்து மாநிலம்- மக்களிடம் காட்டிய முகம் பாபுலால் மாரண்டி.ஆனால் பரிவாரத்திற்கு கலவரம் எதுவும் நடத்தி சாதிக்காத முதலவர் என்றால் அரிக்க ஆரம்பித்து விடுமே
அதனால் அவரை தூக்கி விட்டு கரிய முண்டா

ராஜஸ்தானில் வசுன்டரே ராஜே கட்சியை விட்டே சென்று விடுவேன் என்று மிரட்டும் நிலையும் பரிவாரங்களின் கைங்கரியத்தால் நடந்தது.அவரை விளக்கி விட்டு ஆர் எஸ் எஸ் இல் ஊறிய ஒருவரை தலைவர் ஆக்கியதும் நடந்தது
அவர்கள் கை வைக்காத ஒரே மாநிலம் சத்தீஸ்கர் தான்.
ஆனால் சத்தீஸ்கரிலும் அவர் முதல்வரான 2003 தேர்தலில் மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் என்பதாலும்,காங்கிரஸில் அஜீத் ஜோகி முதலவர் ஆக இருந்த காரணத்தினாலும் யாரையும் முதல்வராக முன் நிறுத்தவில்லை முதல்வர் ராமன் சிங் நாட்டு வைத்தியர் என்பதால் அவர் மீது கை வைக்கவில்லை போல.

மக்களின் வோட்டுக்கு அவ்வளவு மதிப்பு கொடுக்கும் கட்சி நம்ம பா ஜ க

நாளை பாராளுமன்ற தேர்தலில் பா ஜ க வெற்றி பெற்று மோடி பிரதமர் ஆகிறார் என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம்.ஒரு வருடத்திற்குள் திடீரென்று நீக்கப்பட்டு சுரேஷ் சோனி /ராம் மாதவ் என்று யாரவாது பிரதமர் ஆனால் அது தான் மக்கள் போட்ட வோட்டுக்கு மதிப்பா
அது போல முதல்வர் ஆனவர் தான் மோடியும்.திருடனுக்கு தேள் கொட்டியது போல அவர் ஏதாவது அதை எதிர்த்து சொல்ல முடியுமா

பரிவாரத்தின் தாதாக்களான நாக்பூர் தாத்தாக்களுக்கு இரண்டு நாள் கக்கா வரவில்லை என்றால் அதற்க்கான காரணத்தை கண்டுபிடிக்க சோழி போட்டு பார்ப்பார்கள்.
அதில் யாரவது மாநில முதலவர்,கட்சி தலைவரின் மச்சானின் சகலையின் பேரன் ஜின்னா என்ற பெயருடையவருக்கு facebook இல் friend request அனுப்பி இருப்பது தெரிந்தால்,
ஏதாவது மாநில முதல்வரின் மனைவியின் பெரியப்பா மகளின் வீட்டில் இயேசுவின் புகைப்படம் இருப்பது தெரிந்தால் உடனே அந்த முதல்வரை பதவி விலக வைத்து விடுவார்கள்.இது தான் அவர்கள் மக்கள் முன் தலைவராக காட்டும் முகத்திற்கு,மக்களின் வோட்டுக்களுக்கு தரும் மதிப்பு.இதை எவ்வளவு அழகாக மஞ்சள் கமெண்ட் விளக்குகிறது.

Sridharan said...

Ada p poyya...indha aalukku oru maruppu comment veraiya...

Anonymous said...

திரு ஞானி - தனி நபரை முன்னிறுத்துவது Fascism என்று கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். தனி நபரை முன்னிறுத்தாமல் கொள்கையை மட்டுமே தெரிவித்து எந்த ஒரு விஷயத்துக்கும் ஆதரவு திரட்டுவது சாத்தியமே கிடையாது.

ஆதரவை ஈர்க்கவும், நம்பிக்கை வைக்கவும் ஒரு tangible reference தேவை. கடவுள் இல்லை என்று முழங்கும் புத்த மதத்தினருக்கு புத்தர் ஒரு icon; உருவ வழிபாடு மூடத்தனம் என முழங்கும் முசுலிம்களுக்கு காபா இருக்கும் திசை ஒரு அடையாளம். இந்திய சுதந்திரப் போராட்டம் ஒரு வழிமுறைப் படுத்தப் பட்ட போராட்டமாகத் திகழ்ந்ததற்கு காந்தி, படேல், நேரு என நிதர்சன முகங்கள் முக்கிய காரணம்.

தேர்தல் சமயத்தில் உறுதி மொழிகளை அள்ளி வீசுவதில்லையா? அவையெல்லாம் அடையாளங்கள் தாமே? அவற்றுக்கு மட்டும் தேர்தல் சட்டம் இடமளிக்கிறதா என்ன? நல்லது செய்வதாக உறுதியளித்துத் தானே வோட்டு வாங்கினீர்கள்? ஏன் இந்த அராஜகம் என்று பதவி விலகச் செய்ய முடியுமா? அடுத்த முறை வோட்டளிக்கும்போது கவனமாக இருத்தல் வேண்டும்.

ஒரு நபரைக் காட்டி மட்டுமே வோட்டு வாங்கும் நிலையில் இருக்கிறீர்களே என்று வேண்டுமானால் அரசியல் கட்சிகளைச் சாடலாம். உங்கள் எண்ணப்படி பாஜக வைச் சாடலாம்! ஆனால் மன்மோகன் சிங் பெரிய திறமை சாலி என்று ஏமாந்த மக்கள் மத்தியில் அவர் முகத்தைக் காட்டி மட்டுமே 2009 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது நினைவிருக்கிறதா?

ஏன், உங்கள் எழுத்துக்களை உங்கள் பெயரில்லாமல் பிரசுரியுங்களேன் பார்க்கலாம்!

Anonymous said...

LIKE POO VANNAN EVERYBODY SHOULD SUPPORT SONIA AND MK. THESE TWO ARE THE ONLY CORRECT PERSONS AND THESE TWO PARIES ONLY HAVE NOT DONE ANYTHING AGAINST DEMOCRAZY.
SONIA AND MK ARE BETTER THAN MODI ATLEAST 186000 + 200000 LAKHS CRORE TIMES. RAHUL GANDHI IS THE ONLY HOPE FOR INDIANS. HE IS NOT LIKE MODI WHO WORKED IN TEA SHOP DURING COLLEGE DAYS. I THINK HE GOT HIS EDUCATION IN EUROPE ONLY AND GOT HIS PHD. MOREOVER FOREIGNERS ARE HAVING MORE KNOWLEDGE THAN THE DIRTY INDIANS.(MANGO PEOPLE) HENCE EVERYBODY SHOULD SUPPORT CONGRESS AND DMK, AS POO VANNAN DOES.

Anonymous said...

@sankardass

2002 gujarat riots has always got the attention it deserved in the media and rightly so.
however apart from this media has always overblown the achievements(eg. claiming that billions of fdi were invested in gujarat when actually a very miniscule percentage of fdi materialized!!) of modi and underplayed the inefficiency (eg .gujarat's poor record of malnutrition among women and children) of gujarat govt.
many social/economic indicators point out that gujarat is not as much a successful state as it claimed to be. it lags behind tn, kerala, haryana, punjab, bihar and even mp.

check google for India State Hunger
Index rank - kr

poovannan said...

உச்ச நீதிமன்றத்தின் இன்றைய வாக்கு பதிவு செய்யும் போது இருக்க வேண்டிய none of the above தீர்ப்பு ஞானி அவர்களின் கட்டுரையில் உள்ள பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன்னிறுத்தப்படுவது தவறு என்பதை நிரூபிக்கும் தீர்ப்பு என்றும் கூறலாம்.
நம் தேர்தல் முறை நேரிடை தேர்தல் முறை கிடையாது.நாம் தேர்ந்தெடுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஒருவரை பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள்.எம் பி க்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமை அது.
மக்கள் போடும் none of the above குறிப்பிட்ட தொகுதியை சார்ந்த வேட்பாளர்களை எதிர்த்த,இல்லை பிரதமராக முன்னிருதப்படுபவரை,படுபவர்களை எதிர்த்தா என்பதை புரிந்து கொண்டால்,பிரதமர் வேட்பாளர் என்று முன் நிறுத்தப்படுவது சட்டப்படி தவறு எனபது புரியும்
மோடி எனக்கு வேண்டாம் என்று none of the above என்ற பொத்தானிற்கு விழும் வோட்டுக்களை எடுத்து கொள்ள முடியுமா.அப்படி எடுத்து கொள்வது சரி என்றால் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை முன் நிறுத்துவதை நம் அரசியல் சாசனம் அனுமதிக்கிறது என்று கூறலாம்.எதிராகவோ ,ஆதரவாகவோ விழும் வோட்டுக்கள் குறிப்பிட்ட தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள அரசு நிறுவனங்களில் தொழிற்சங்க தேர்தல்களில் அந்தந்த பகுதிகளுக்கான உறுப்பினர்களை வாக்குசீட்டின் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமை பணியாளர்களுக்கு உண்டு.அப்படி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி அவர்களுக்குள் ஒரு தலைவரை தேர்வு செய்வார்கள்.இதே தான் நம் நாட்டின் சட்ட அமைப்பின் கீழ் பிரதமரை தேர்ந்தெடுக்கும் முறையும்
பிரதமர் மீது திடீரென்று அவர் கட்சிக்காரர்களே கூட அதிருப்தி கொண்டு அவரை நீக்கி விட்டு இன்னொருவரை பிரதமராக பதவியில் அமர்த்தலாம்.மக்களிடம் என்னை பிரதமர் என்று சொல்லி வோட்டு கேட்டீர்கள்.அதனால் நீங்கள் என்னை நீக்க முடியாது,கட்சியை உடைக்க முடியாது,வேறு ஒருவரை பிரதமர் பதவிக்கு ஆதரிக்க முடியாது என்று யாரும் கூற முடியாது.
தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது

காய் வண்ணன் said...

//தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது//
ஆமாம் ஆமாம், இன்னும் சற்று ஆராய்ந்து பார்த்தால், இதன் மூலம், அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டது கூட சட்ட விரோதம் என்று வலியுறித்தியிருப்பது கூட தெரிய வரும்!

Anonymous said...

" தன தொகுதியை சார்ந்த வேட்பாளரை வேண்டாம் என்று சொல்லும் உரிமையை வழங்கி இருப்பதன் மூலம் பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது சட்ட விரோதம் என்பதையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி இருக்கிறது" -

இது எப்படி பிரதமர் வேட்பாளரை நிராகரித்ததாக ஆகும்? உங்கள் வியாக்கியானப் படி, அந்தத் தொகுதி வேட்பாளரை அறிவித்ததே சட்ட விரோதம் என்று வேண்டுமானால் சொல்லலாம்!

poovannan said...

எம் பி /எம் எல் ஏ தான் ஆளுமை வாய்ந்த பதவிகள்.அவர்கள் ராஜினாமா செய்தால்,பதவி நீக்கம் செய்யபட்டால்,மரணமடைந்தால் மறு தேர்தல் தான்.
ஆனால் நம் அரசியல் அமைப்பு சட்டத்தின் கீழ் பிரதமர் பதவி அப்படி ஒரு ஆளுமை இல்லாத பதவி.ஒருவர் போனால் இன்னொருவர்.இன்னொருவரை தேர்ந்தெடுக்கும் உரிமை 543 எம் பி க்களுக்கு தான்.தனி மனிதனின் உரிமை தன் தௌகுதியின் எம் பி யை தேர்ந்தெடுப்பதோடு முடிந்து விடுகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பில் உச்சநீதிமன்றமும் தனி மனிதனின் தன் தொகுதி எம் பி யை நிராகரிக்கும் உரிமையை தான் வழங்கி இருக்கிறது.
உனக்கு உன் தொகுதி எம் பி வேட்பாளரை பிடிக்காமல் போகலாம்.ஆனால் அவர் நிற்கும் கட்சியின் வேட்பாளர் உனக்கு பிடிததமானவர் என்பதால் இவருக்கு படும் வோட்டு அவருக்கு தான் என்பதால் வேட்பாளராக நிற்கும் தனி மனிதர்களை மறந்து விட்டு அவர்களின் கட்சியை பார்த்து/அவர்களால் முன் நிறுத்தப்படும் வேட்பாளருக்காக உங்கள் வாக்கை பதிவு செய்யுங்கள் என்று சொல்லவில்லை.
குறிப்பிட்ட தொகுதியில் நிற்க்கு யாரையும் எனக்கு பிடிக்கவில்லை ,அவர்களுக்கு வோட்டு போட எனக்கு மனம் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் ஆதரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
தனி வாக்காளனின் முன் உள்ள உரிமை/கேள்வி அவன் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் யாருக்கு வோட்டு போடுவது தான் என்பதை வலியுறுத்தும் தீர்ப்பு தானே இது.