பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 27, 2013

நான் ஸ்டாப் நான்சென்ஸ்


எடிட் பண்ணதை கட் பேஸ்ட் செய்துள்ளேன்
தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு அடுத்த தாக்குதல் ராகுல் காந்தியிடமிருந்து வந்திருக்கிறது.

தீவிரவாதிகள் தாக்குதலைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் கடும் எதிர்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசும் போது, "அரசு கொண்டு வந்திருக்கும் இந்த அவசர சட்டம் தவறானது; முட்டாள் தனமானது என்பது எனது கருத்து. இச்சட்டத்தை கிழித்து எறிய வேண்டும்" என்று அவேசமாக கூறினார்.

இதை வேடிக்கை பார்க்கும் நாமக்கு அட சூப்பர் என்று தோன்றினாலும், இது மோடியைவிட ராகுல் மிக நேர்மையானவர் என்று தோற்றத்தை ஏற்படுத்த என்று நினைக்கிறேன்.

நேற்று திருச்சியில் மோடியின் பேச்சுக்கு நானும் களத்தில் இருக்கிறேன் என்று சொல்லும் செயல் தான் இது.

ராகுல் அப்படியே நேர்மையானவர் என்றால், இதற்கு முன் ராபர்ட் நிலவிவகாரம், 2G, நிலக்கரி ஊழல், அதை தொடர்ந்து மறைந்து போன கோப்புகள், விளையாட்டு ஊழல் போன்றவற்றை எல்லாம் ஏன் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்?பாவம் மன்மோகன் சிங் ரூபாயின் மதிப்பு மாதிரி இவர் மதிப்பும் நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே போகிறது.

11 Comments:

Vikram said...

I too feel the same about this...seems to be a stunt to promote this bill (or rather ordinance) only for RG to "condemn" it and give himself a "clean" image....

anyway, one way or other would like to see this quashed

Cauvery said...

1. Pappu sleeps until Ordinance is approved & even sent to President
2. BJP met president not to sign the Ordnance.
3. Rahul got a tip from Presidential sources that he wont sign it
4. Pappu's managers want Pappu to take credit for not passing Ordinance
5. Sudden Pappu Drama in the middle of a Press meet.

dr_senthil said...

உடனடியாக மன்மோகன் தனது ராஜினாமாவை சமர்ப்பித்து சுய மரியாதையை நிருபிக்கவேண்டும் அல்லது தானும் காங்கிரஸ் ஆபீஸு தரை துடைக்கும் ஒரு தொண்டன் என்பது வெட்டவெளிச்சம். தனது கட்சின் அரசு காபினெட் ஒப்புதலுக்கும் தனது தாயின் ஆனைக்கும் செயல்பட்டே இந்த சட்ட திருத்த மசோதா உருவகபடுத்த பட்டது என்பதாவது ராகுலுக்கு தெரியுமா அல்லது சாம்பியன் லீகு கிரிக்கெட் பார்ப்பதில் இதை தவற விட்டாரா தெரியவில்லை.. ஆக மொத்தம் நம் அரசு மந்திரிகள் எல்லோரும் அல்லகைகள் மங்குனி மந்திரிகள் என்பது மற்றுமொருமுறை நிருபணம்.

dr_senthil said...

கலாம் செய்ததை பிரணாப் செய்ய முற்படுவதும்,சோனியா செய்ததை ராகுல் செய்ய முயல்வதும், பத்தாண்டுகளுக்கு முன் நடந்த நாடகத்தை மக்கள் இன்னும் மறக்கவில்லை..காங்கிரஸ்காரர்கள் மறந்துவிட்டார்கள் போலும்

சிவ.சரவணக்குமார் said...

பாத்துக்கிட்டே இருங்க....இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு...மன்மோகன் சிங்கையும் சீதாராம் கேசரி மாதிரி கக்கூசுக்குள்ள வச்சு பூட்டப்போறாங்க......

Anonymous said...

பப்பு எப்பேர்பட்ட பேக்குக் கூ என்று அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தாலும் அவரை ஆதரிக்கும் முட்டாள் ஜனங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காங்கிரஸ் போடும் ட்ராமாக்களில் இதுவும் ஒன்று என்றாலும் பப்பு கொஞ்சம் ஓவர் ஆக்டிங் செய்து காரியத்தை கெடுத்து விட்டார்.

R. J. said...

If any body takes this joker - RG - seriously and votes for Congress, they are definitely stupid. RG assumes that all the Congress leaders and followers are stupid as they stand behind him blindly. MMS has lost the last iota of self respect and if he has any sense left, he should offer to resign on his return from abroad and ask RG to take over the final year of Congress misrule. - R. J.

crazypaja said...

போன் வோயர் பிஞ்சி நாலு நாள் ஆச்சு....இன்னமும் டிராமா போட்டுட்டு...ச்சே ...

Anonymous said...

சில நாட்கள் முன் ஒருவர் இவரை காமெடி அரசர் என்று வருணித்தது மறப்பதற்கு முடியவில்லை.ஜனாதிபதி முகத்தில் கரி பூசும் முன் அவசரமாக இப்படி சொல்வாதாக எண்ணத்தூண்டுகிறது.

Anonymous said...

நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல...

jaisankar jaganathan said...

//நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியல...
//

அனானி நீ இந்த கமெண்ட் தவிர வேற ஒன்னும் போட மாட்டியா? ஏன் இட்லிவடையை கொசுன்னு சொல்லுர