பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 24, 2013

ஜெகனும் ஜாமீனும்... !

சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ கைது செய்து கடந்த 16 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டியை சி.பி.ஐ. நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தது.

மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சு வருகிறது. ஜெகனின் குடும்பம் அதை மறுக்கவில்லை. காங்கிரஸுக்கும் இவருக்கும் ரகசிய ஒப்பந்தம் என்று சொல்லுகிறார்கள்.

ஜெகன் உத்தமர் இல்லை, YSR சேர்த்து வைத்த சொத்தை பாதுகாக்க அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்வார் என்று நினைக்கிறேன்.

7 Comments:

சிந்திப்பவன் said...

அவரை பாருங்கள்..ஒரு பதினாறு மாதம் சிறையிலிருந்தவர் போலவா இருக்கிறார்?ஏதோ சிறையில் உள்ள ஒருவரை போய் பார்த்து விட்டு ஒரு மணி நேரத்தில் திரும்பும் பிரமுகர் போலல்லவா இருக்கிறார்!

dr_senthil said...

நாயுடு மோடிக்கு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாக கசிந்த செய்தி, செய்த மாயம் தான் ஜெகன் விடுதலை.. மற்றும் குடும்ப ஊழல் சொத்தை காக்க காங்கிரஸ் போன்ற அபரீதமான பாதுகாவல் வேறு ஏதும் இல்லை. தெலுங்கான எதிர்ப்பு பிரச்சாரத்தில் இனி எந்த முகத்தை வைத்து கொண்டு ஜெகன் தொண்டர்களை சந்திப்பார்? சரி அரசியலில் மானம் ஏது ? வெட்கம் ஏது?

Anonymous said...

Mann Mohan needs Jagan Mohan's support to survive. So it is natural justice in our country.

dr_senthil said...

போட்டோவை பார்த்தல் பேச்சு வார்த்தை சுமூகமாக முடிந்தது , இரு தரப்புக்கும் சந்தோஷமான முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிகிறது

சிந்திப்பவன் said...

A யின் சொத்துக்களை அபகரித்து விட்டதாக B மேல் G வழக்கு போட்டு B யை சிறையிடுகிறார்.2 வருட தண்டனைக்குப்பிறகு B விடுதலை ஆகி வரும்போது A அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்,
இதில் A,வாக்காளர்கள்
B YSR jagan
G Govt அரசு

Anonymous said...

he want to protect the corrupted money not a earned asset from hos father.

R. J. said...

// B விடுதலை ஆகி வரும்போது..// He is out on bail only!