பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, September 22, 2013

மோடி தான் அடுத்த பிரதமர் - எஸ்.வி.சேகர்

நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதால், பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. மத்தியில் காங்கிரஸ் கட்சியைத் தவிர்த்து மாற்றுக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே மேலோங்கியிருப்பது பாஜகவுக்கு கூடுதல் பலம்.

நரேந்திர மோடி சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்ற பிரசாரத்தை வைத்து பாஜகவை வீழ்த்த முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் பல மதக் கலவரங்கள் நடைபெற்றுள்ளன என்பதை அனைவரும் அறிவர்.

குஜராத்தில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் நரேந்திர மோடியைத் தான் ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை.

இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே அரசியல் கட்சி சார்ந்தவர்கள். மீதமுள்ள 70 சதவீதம் பேர் எந்தக் கட்சியும் சாராதவர்கள். இதில், சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள். இளைஞர்களின் விருப்பம் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதாகவே உள்ளது. இதன்மூலம் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ளது. பாஜகவுக்கு வெற்றி உறுதி என்றார் எஸ்.வி. சேகர்.

நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோவிலில் உள்ள வைத்தியநாதசுவாமி கோயிலுக்கு நடிகர் எஸ்.வி. சேகர் தனது குடும்பத்தினருடன் சனிக்கிழமை வழிபாடு மேற்கொண்டார். அப்போது இந்த தகவலை சொன்னார்.

அவருக்கு உண்டான நாடியை பார்த்ததில் அவர் எந்த கட்சியில் இருக்கிறார் என்று தெரியாமல் போய்விட்டது !

9 Comments:

crazypaja said...

"" இந்தியாவின் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேர் மட்டுமே அரசியல் கட்சி சார்ந்தவர்கள். மீதமுள்ள 70 சதவீதம் பேர் எந்தக் கட்சியும் சாராதவர்கள். இதில், சுமார் 50 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இளைஞர்கள்
""

ஹலோ ...இந்த புள்ளி விவரம் எல்லாம் கேப்டன் பேச வேண்டிய டயலாக் ஆச்சே ???

போங்க சார் ....எப்பப்பாத்தாலும் காமடி பண்ணிக்கிட்டு ...

Thamil said...

Dream that will never come true.

dr_senthil said...

ஓலை சுவடி நாடி அல்ல மக்கள் இதய நாடி, மோடி தான் அடுத்த பிரதமர் என்பதில் தெளிவாக இருக்கிறது.

jaisankar jaganathan said...

எஸ். வீ. சேகர் சார்,

நீங்க ராமதாஸ் கிட்ட டியூஷன் படிச்சீஞ்க்களா? கட்சி அவ்ளோ சீக்கிரம் தாவுறீங்க

Anonymous said...

சின்ன வயசிலேருந்தே எஸ் வி சேகர் , சனிக்கிழமைகளில் உண்மையே பேசுவதில்லை

Anonymous said...

சில கருநாக்கு சனியன்கள் வாயைத் திறந்து நல்லது சொன்னாலும் அது நாசமாப் போயிடும். இவர் கருத்து சொல்லலேன்னு யார் கேட்டா.தமிழக பாஜகவில வேட்பாளர்களே இல்லை அதன்னல் தனக்கு வாய்ப்பு குடுப்பாங்கன்னு நெனைக்கிறார் போலிருக்கு. அம்மா கட்சியுடன் தேர்தல் கூட்டு வரும் இவர் மீண்டும் குப்பை தொட்டியில் வீசப்படுவார்

Anonymous said...

Tiruchi

http://www.youtube.com/watch?v=41TNoU9M1fA&feature=share

http://youtu.be/qdVUQ46QNxM

Anonymous said...

Shri Narendra Modi speech at BJP Youth Conference in Trichy, Tamilnadu: 26.09.2013

http://youtu.be/k-v4DOI9RM0

devadass snr said...

மோடி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகமாட்டார் என்பது தெரிந்துவிட்டதல்லவா.அப்புறம்
யார் என்ன எழுதினால் என்ன?மோடியைக் கண்டுகொள்ளாமல் விட்டால் போதுமே.அவரை வெற்றிபெற வைக்க வேறு யாரும் வேண்டியது இல்லை.அவரைத் தவறான நபர் என சித்தரிக்க முயல்பவர்கள்தான் அவரை வெற்றி பெற வைக்க கடும் முயற்சி செய்கிறார்கள்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்