பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 20, 2013

அவர்கள் யார் என்னை அழைக்க?

தமிழ் சினிமாவில் தன் வசனங்களால் பெரும் மாறுதல்களை உண்டாக்கியவர் என்ற பெருமை மு கருணாநிதிக்கு உண்டு. ஒரு படத்தின் ஹீரோவுக்கு நிகராகப் பேசப்பட்டவை அவரது நெத்தியடி வசனங்கள்.

இந்த தமிழ் சினிமாவுக்கு, எம்ஜிஆருக்குப் பிறகு அதிக நன்மைகள் செய்தவர் என்றால் அது கருணாநிதி ஒருவர்தான். பட்டியலிட முடியாத அளவுக்கு சலுகைகள். அடிமட்ட சினிமாக் கலைஞர் கூட நினைத்தால் முதல்வராக இருந்த கருணாநிதியைப் பார்த்துவிட முடியும். அந்த அளவு சினிமாக்காரர்களுக்கு இடம் கொடுத்தார் கருணாநிதி. அட, அவர்களுக்காக தனி வாரியமே அமைத்தார். பொதுமக்களுக்கே வெறுப்பு வரும் அளவுக்கு அவர் சினிமாக்காரர்களைக் கொண்டாடினார் என்பதையும் மறுப்பதற்கில்லை.

அப்படிப்பட்ட கருணாநிதியை இன்று சினிமாக்காரர் ஒருவரும் திரும்பிப் பார்க்கவும் தயங்குகின்றனர். அன்று பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா எடுத்த பார்ட்டிகள், இப்போது கருணாநிதி என்ற பெயரைச் சொல்வதையே தவிர்க்கின்றனர். காற்றில் வசனக் கத்தி வீசிய வெத்து ஹீரோக்கள் பெட்டிப் பாம்பாய் ஒடுங்கிக் கிடக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 70 நெடிய ஆண்டுகள் எழுத்தாளராக, தயாரிப்பாளராக இருக்கும் கருணாநிதியின் குடும்பத்தினர் பலரும் இன்று திரையுலகில் முன்னணியில் உள்ளனர். இத்தனை சிறப்பு இருந்தாலும், இன்று இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவுக்கு கருணாநிதிக்கு ஒரு அழைப்பிதழ் வைக்க அஞ்சும் நிலை.

இதுபற்றி கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “அவர்கள் யார் என்னை அழைப்பதற்கு?” என்று பொட்டிலடித்த மாதிரி பதில் கூறி, அந்தப் பிரச்சினையைக் கடந்து போய்விட்டார் கருணாநிதி. நூறாண்டு காணும் இந்திய சினிமாவின் முக்கிய அங்கமான தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்களிப்பு செய்த கருணாநிதியை அழைக்காததும் சிறப்பிக்காததும் நிச்சயம் கருணாநிதிக்கு இழுக்கல்ல.. தமிழ் சினிமாவுக்குதான் பெரும் தலைகுனிவு!

19 Comments:

kothandapani said...

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுகின்றதாம் ..........

Vikram.. said...

just for a moment, let's imagine the opposite - if DMK were in power and planned to host this - would JJ have been invited?
she too was a "star" in her acting days - though her contribution to tamil cinema is not as significant as MK's...

anyway what is happening now is not right - think we should come above the "political barrier" - sadly i dont see it happening anytime soon....

(by the way - "aadu nanajings - why onai crying??!!")

Anonymous said...

enna idly neengalum kathchi thaava arambichuteenga pola iruku ..??

sidtharth said...

ஒன் கொஸ்டின் ! " இட்லி வடையை " வீரமணிக்கு வித்துட்டீங்களா ? காத்து வேற பக்கம் வீசுது ?

Sankar Dass said...

If MK was a significant contributor to Tamil cinema in his growing days , he was equally a big destroyer of tamil cinema in recent years. The film industry faced frustrating pressure including threats to life for key people due to the practices of SUN TV and those related to MK. Remember the talk by Actor Ajith in front of MK on a stage and Rajni's standing ovation for that talk ? Latter , Ajith was summoned to MKs house to take a lesson !! MK further added agony to the industry with his own script writing and forcing people to see those horrible films !!

Anonymous said...

Copy paste from thatstamil.com. Just add "Courtesy: thatstamil.com"

dr_senthil said...

கழக பிரச்சார வசம் எழுதி கடவுள் மறுப்பு நாத்திகம் பேசி ஆட்சிக்கு வந்து பின்னர் தாம் எழுதியதற்கும் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லாமல் வாழ்ந்து பின்னர் வனவாச காலத்தில் மீண்டும் திரைபட வசம் எழுதி காலம் தள்ளிய கோமான்,தன் பேர பிள்ளைகள் மூலம் திரையுலகில் தன் குடும்பத்தை தவிர வேறு யாரும் வாழ்ந்திட கூடாது என வித்திட்டவர் ...சினிமாவிற்கு வாகை சந்திரசேகரின் பங்களிப்பு கழக தலைவரை விட அதிகம் என்பேன் . அவரையாவது அழைத்தார்களா?

சிந்திப்பவன். said...

என்னது காந்திய சுட்டுட்டாங்களா?
எப்போ?
யாரு?

நீச்சல்காரன் said...

அரசியலுக்கு அப்பாற்பட்டு முன்னாள் முதல்வரை ஒரு படைப்பாளி என்கிற நோக்கில் பார்க்கும் போது அவரின் திரைத்துறை பணிக்கு மரியாதை கொடுத்திருக்கலாம்.

Anonymous said...

அழைக்காதவரை நல்லதே.

எ.அ.பா பறக்கும் மன்றம்
திருவேற்காடு

Anonymous said...

புண்ணாக்கு விவகாரத்துக்கு இவ்வளவு நீட்டி முழக்கணுமா? பொது ஜனங்களை உருப்படாம அடிக்கறதுலயும் ஒழுக்கக் கேட்டை வளக்கறதுலயும் சினிமாவின் பங்கு ரொம்பப் பெரிசு. இதுக்கு ஒரு விழா; இதுல முதல் மரியாதைக்குப் போட்டியப் பாரு! புள்ள குட்டிகளப் படிக்கச் சொல்லத் துப்பு கிடையாது! என்னா கேவலமோ எழவோ?

Anonymous said...

புண்ணாக்கு விவகாரத்துக்கு இவ்வளவு நீட்டி முழக்கணுமா? பொது ஜனங்களை உருப்படாம அடிக்கறதுலயும் ஒழுக்கக் கேட்டை வளக்கறதுலயும் சினிமாவின் பங்கு ரொம்பப் பெரிசு. இதுக்கு ஒரு விழா; இதுல முதல் மரியாதைக்குப் போட்டியப் பாரு! புள்ள குட்டிகளப் படிக்கச் சொல்லத் துப்பு கிடையாது! என்னா கேவலமோ எழவோ?

Anonymous said...

Nadunilaiyana karuththu.
Intha mathiri sinthanai ovvoru saatharanamana tamilarukkum vundu.

( Karunannithi ethirppu kazhaga nanbargal mannikka vendukiren )

Anonymous said...

BTW, MK was finally personally invited and he sent his wishes!

I agree with Shankar Dass and dr_senthil.

Anonymous said...

The below is a comment from thatstamil...
-----------------------------

வசனகர்த்த கருணாநிதி சாதனைகள் ??? அது என்னவென்று சொல்லுங்களேன் ... ஒரு 3 அல்லது 4 அரும் படைப்புகளை சொல்லுங்களேன் ... அதை தான் நா திரும்ப திரும்ப கேட்கிறேன் ... அப்படிபட்ட சாதனையாளரை க்லௌட் நைன் , ரெட் ஜயண்ட் மூவீஸ் ஏன் பயன்படுத்தவில்லை ?? இப்போ சும்மா தானே இருக்கான் ...

கருணாநிதி எழுதியுள்ள தமிழ் படைப்புக்கள் .

"மறக்க முடியுமா" என்று ஒரு படம்.. அந்த படத்தில் அக்காளையே தம்பி...பாலியல் இச்சைக்கு ஆட்படுத்துவது .. .

கருணாநிதியின் முதல் கதை "வான்கோழி". அந்த கதையில் முதலாளிக்கு ஆண்மை இல்லாததால், வேலைக்காரன் மூலம் முதலாளியம்மாவிற்கு குழந்தை பிறப்பதாக கதை.. அதுவும் முதலாளியின் சம்மதத்தோடு இருட்டில் நடக்கும் சமாசாரம்.. குழந்தை பிறக்கும்பொழுது விஷயம் தெரியவந்த முதலாளியம்மா உயிரை மாய்த்துகொள்வது முடிவு..

கருணாநிதியின் தமிழ் படைப்பில் ஒன்று "வாழ முடியாதவர்கள்" ....

காவலராக இருக்கும் தந்தை மகளுடன் உறவு கொள்வது என்பது தான் கதை ...

இப்படி எண்ணற்ற பொக்கிஷங்களை நமக்கு அளித்துள்ளார் என்பதற்கு என்ன மாதிரியான விருது தரலாம் என்பதை நீங்களே சொல்லுங்கள்

மேற்கத்திய ஞானி ´ஜேம்ஸ் ஆலன்´ சொன்னது போல், "அவனது சிந்தனை அவனது வாழ்க்கையின் வெளிப்பாடு"

jaisankar jaganathan said...

எஙகியாவது கருணாநிதிய திட்டி வந்திருந்தா போதுமே அனானிகளுக்கு,

அதை வெட்டி ஒட்டி பேஸ்ட் பண்ணி ஜெராக்ஸ்போட்டு ஊருக்கே வெளிச்சம் போட்டு கலக்கலைன்னா சாப்பாடு இறங்காது.


சொந்தமா யோசிங்க நண்பரே

jaisankar jaganathan said...

//மேற்கத்திய ஞானி ´ஜேம்ஸ் ஆலன்´ சொன்னது போல், "அவனது சிந்தனை அவனது வாழ்க்கையின் வெளிப்பாடு"//

கலைஞரின் எண்ணற்ற படைப்புகளில் இதுதான் உங்கள் கண்ணுக்கு படும் என்றால் உங்கள் கண்ணோட்டம் தவறு

Anonymous said...

its ok sir.

Anonymous said...

jj saar,

Antha movies/stories post copy-paste endru fb'yil irukkum anaivarukkum therithirukkum. Aaanaalum, unmai athuvendraal, solvathil thavarillayea?