பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 19, 2013

'இந்து' தங்கமீன்கள்தந்தைப் பெரியாரிடம்,“ஆங்கிலப் பத்திரிக்கை ஆரம்பிக்க சொல்கிறீர்களே அய்யா…செய்திகளுக்கு எங்கே போவது?” என ஒருமுறை கேட்டார்களாம்.அதற்கு அவர், ‘செய்திக்கா பஞ்சம்…? இன்னத்த ‘இந்து’ பேப்பர் வாங்கீட்டு வா…அதுல அவன் எதையெல்லாம் சரின்னு போட்டிருக்கானோ, அதையெல்லாம் தப்புன்னு எழுது…எதத் தப்புன்னு போட்டிருக்கானோ
அதையெல்லாம் சரின்னு எழுது…’ என்றாராம்.

அதுதான் இன்றைக்கும் சரி போலிருக்கிறது.

அதே “தி இந்து” இப்போது தமிழில்.

“தி இந்து”

இந்து என்கிற மதத்தின் பெயரை தாங்கி வரும்
செய்தித்தாளை என்றும் வாங்கக் கூடாது
என்ற என் உறுதி இன்று இல்லாமல் போனது.
இன்று என் சொந்தப்பணம் ரூபாய் 4 ஐ
நான் செலவளித்து வாங்கும்படி செய்தது
தி இந்து. அதன் இந்த தந்திரத்திற்கு
என்னுடையப் பாராட்டுகள்.

தங்கமீன்கள் வெளிவந்து மூன்று வாரம்
கழித்து அது குறித்தும் என்னைக் குறித்தும்
எழுத வேண்டியக் கட்டாயத்தை
ஒரு பத்திரிக்கைக்கு ஏற்படுத்தி இருக்கிறது
இந்தத் திரைப்படம் என்பது தான் இதன் வெற்றி.

புதிதாகத் தொடங்கப்பட்டப் பத்திரிக்கையின்
வியாபாரத்திற்கும் பரபரப்பிற்கும் ”தங்கமீன்கள்”
தேவைப்படுகிறது என்பதுதான் அதன்
ரசிகர்களுக்கு கிடைத்த வெற்றி.

தி இந்து நம்மை நம் படைப்பை
பாராட்டி எழுதினால்தான் நாம்
நம் படைப்பு மீது சந்தேகம்
கொள்ள வேண்டி வரும்.
நம் படைப்பை அவர்கள் இகழும் போதும்,
தூற்றும் போதும் தான் நம் படைப்பு
நேர்த்தியானது என்பது உறுதியாகிறது.
அதை உறுதி செய்த ”தி இந்து” விற்கு நன்றிகள்.
ஆறு வருடத்திற்கு முன்பு வந்த ”கற்றது தமிழ்”
திரைப்படத்திற்கும் விமர்சனம் செய்வீர்களாக என்று
வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.

படைப்பைக் குறித்த விமர்சனத்திற்குத்தான் நாம்
பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தனி நபர் எள்ளல்களை நாம் சட்டை செய்வதில்லை.

பிரியங்களுடன்

ராம்
(என்ன செய்ய நான் அந்த ராமில்லை)

( தகவல் உதவி: இயக்குனர் ராம் பக்கம் )

மனிதர்களில் இந்து எப்படியோ அதே மாதிரி மீன்களில் தங்கமீன்கள்

9 Comments:

s suresh said...

நல்லா நக்கலாவே திருப்பிக் கொடுத்திருக்காரு ராம்! பகிர்வுக்கு நன்றி!

ப்ரதிவாதி பயங்கரம் said...

ராம் என்ற பெயரை இவர் ரஹ்மதுல்லா என்று மாற்றிக்கொள்ளட்டும். டைரக்டர்ன்னா கொம்புன்னு நெனப்பு இந்த சினிமாக்காரனுங்களுக்கு. என்ன பெரிய ரிலையன்ஸ் கம்பெனி டைரக்டரா என்ன? படம் ஊத்தி மூடிச்சுன்னா இந்த கொழுப்பெல்லாம் சுண்டிப் போகும்.

Anonymous said...

தி ஹிந்து -- தமிழ் ..... நல்ல கவனிப்பா

Anonymous said...

ராமுடைய கவலை படம் அரங்குகளை விட்டு தூக்கிய பிறகு ஏன் இந்த மாதிரி விழுந்து பிடுங்கவேண்டும் என்பதே. மற்றவர்கள் இதை தலையில் வைத்து கூத்தாடிய பிறகு ஏன் இப்படி சங்கு ஊத வேண்டும். சந்தடி சாக்கில் இந்து வார்த்தை வைத்து ஒரு சிலம்பம் ஆடினால் மற்ற "மத நடு நிலையளையாளர் " ஓரிரண்டு லைக் போடலாம்.

பாலாஜி said...

தமிழ் ஹிந்து படித்தது விகடன் படித்தது போல் ஒரு உணர்வு...

Nagaraj Venkatesan said...

Hindu articleku Link podunga...click panna open agala and pic to small to read..

Anonymous said...

it is sad that RAM is not able to stand genuine criticism.
IF IT IS PRAISE THEY WELCOME IT. THEY HAVE GONE TO THE EXTENT OF USING KUMUDAM'S REMARK" TAMILIL ORU IRANIYA PADAM" IN THEIR ADS.
ALL PEOPLE WHO APPRECIATE THE FILM ALSO EQUALLY CONDEMN THE LITTLE GIRLS SUICIDAL TENDENCIES. EVEN KUMUDAM HAS CRITICISED THIS.
HE BOUGIEE WEEKS IS NOTHT THE HINDU TAMIL VERSION TO SEE IF THEY HAVE PRAISED HIS MOVIE.HAD THEY DONE SO HE WOULD HAVE QUOTED THAT IN HIS NEXT AD.
THREE WEEKS IS NOT A BIG TIME FOR A GOOD MOVIE. PERHAPS RAM DID NOT EXPECT HIS MOVIE TO RUN FOR THREE WEEKS.
NOW A DAYS IT HAS BECOME A FASHION TO QUOTE PERIYAR EVEN FOR WRONG THINGS.
HE WAS HIGHLY CIVILIZED AND GAVE HIS CRITICS AND OPPONENTS FULL HEARING AND FREEDOM.EVEN IN FRONT OF HIM PEOPLE CAN CRITICISE HIM.
'VIDUTHALAI' AND 'MUROSOLI'HAVE QUOTED SEVERAL TIMES THE HINDU FOR ITS AUTHENCITY AND CREDIBLITY.
EVEN THE WORST CRITIC/ENEMY OF HINDU WILL NOT ACCUSE IT OF COMMUNAL BIAS BECAUSE ITS NAME.
IT IS MORE PRO MUSLIM THAN EVEN PURE MUSLIM PRESS. ITS ANTI MODI ANTI RSS STAND IS UNIVERSALLY KNOWN.
SEVERAL MUSLIM LEADERS INCLUDING ARCOT NAWAB QUOTE FROM IT. IN MANY MUSLIM HOUSES HINDU IS THE ONLY DAILY BOUGHT.
A PESON WHO SAYS HE IS AGAINST PERSNAL CRITICISM CAN NOT STOOP DOWN TO THIS LEVEL OF CRITICISING A NEWS PAPERT FOR ITS NAME WITHOUT KNOWING ITS HERITAGE.
FIRST SIGN OF GROWTH IS ACCEPTING CRITICISM BOTH POSITIVE AND NEGATIVE.

Dwarak R - Aimless Arrow said...

//தமிழ் ஹிந்து படித்தது விகடன் படித்தது போல் ஒரு உணர்வு...விகடன்ல வேலை பார்த்த பாதி பேர் இப்போ ஹிண்டுல

Anonymous said...

the following line is written by Jeyashree Govindarajan

இந்து என்கிற மதத்தின் பெயரை தாங்கி வரும்
செய்தித்தாளை என்றும் வாங்கக் கூடாது
என்ற என் உறுதி இன்று இல்லாமல் போனது.
இன்று என் சொந்தப்பணம் ரூபாய் 4 ஐ
நான் செலவளித்து வாங்கும்படி செய்தது
தி இந்து. அதன் இந்த தந்திரத்திற்கு
என்னுடையப் பாராட்டுகள்.

Which i read in Facebook.

How come Ram copys others message and showing as if he wrote...