பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 17, 2013

ரிலயன்ஸை அடிபணிய வைத்த மக்கள் சக்தி

வாங்கியவுடன் பழுதடைந்த நுண்ணனு சாதனதுக்காக அலைய நேரும் அவலத்தை நம்மில் பலர் சந்தித்திருப்போம். அதற்காக, அந்த சாதனத்தை விற்ற கடை (ரிலயன்ஸ் டிஜிட்டல், அண்ணாசாலை) வாசலில் குடும்ப சகிதமாக தைரியமாக கொடி பிடித்து தர்ணா செய்து, ஒருவர் நியாயம் பெற்றதை மனதாரப் பாராட்ட வேண்டும். மெல்லிசைக் குழு ஒன்றை நடத்தி வரும் ஸ்ருதி பாலாஜியை, அவர் ரிலயன்ஸில் ரூ.9999 கொடுத்து வாங்கிய, வாங்கியவுடன் பழுதான டேப்லட் வகை கைபேசியைக்கு (வாரண்டி காலத்தில்) மாற்று தராமல், ரிலயன்ஸின் விற்பனைப் பிரதிநிதி, பல முறை அலைக்கழித்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியதோடு, கேலி பேசியது வேதனையான விஷயம்.

ஆனால், பலர் போல பாலாஜி சும்மா இருக்கவில்லை! ஒரு பெரிய கடைக்கு எதிராக கொடி பிடித்து போராடி, மீடியா மற்றும் போலீஸ் கவனத்தை ஈர்த்து நியாயம் பெற்றிருக்கிறார். சம்பந்தப்பட்ட விற்பனைப் பிரதிநிதி அந்த டேப்லட் வகை கைபேசியை மாற்றித் தராமல் சமீபத்தில் தான் மார்க்கெட்டில் அந்த சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டதால், குறைகள் சகஜம் என்றும், வாடிக்கையாளர் அபிப்பிராயங்கள் அதை மேம்படுத்த உதவும் என்றும் வியாக்கியானம் பேசியது பாலாஜியை கடுப்படித்திருக்கிறது. உழைத்துச் சம்பாதித்த அவரது பணத்துக்கு பங்கம் வராமல் இருக்க பாலாஜி மேற்கொண்ட நடவடிக்கை நிச்சயம் தேவையான ஒன்று. இல்லாவிட்டால், ரிலயன்ஸ் டிஜிட்டல் போன்ற ஒரு பெரிய ஸ்தாபனத்துக்கு எதிராக, சாதாரண வழிமுறைகளில் அவருக்கு நியாயம் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

- எ.அ.பாலா

நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்

6 Comments:

Anonymous said...

IF Veerappa Moily comes to know of this he will come to the rescue of this show room and help Ambani..

Anonymous said...

நமது நாட்டில் வாடிக்கையாளர் என்பவர் பொருளுக்கு பணம் தரும்வரைதான் மரியாதை பெறுவார். பணம் தந்து விட்டு கடையை விட்டு வெளியேறிவிட்டால் வாடிகையளார் என்பவர் ஒரு பிச்சைக்காரனுக்கு சமம்.நாம் என்ன கதறினாலும் மிரட்டினாலும் கடைகளோ மற்ற விற்பனையளர்களோ மசியமாட்டர்கள். எங்கேயும் போய் முட்டிக்கொள் என்று நம்மை விரட்டுவார்கள்

Anonymous said...

boss yellow comment enga ??

வல்லிசிம்ஹன் said...

உண்மையே. வாங்கும் வரைதான் நாம் எஜமானர்கள்.
பிறகு...சொல்லவேண்டாம். எல்லாத் துறைகளிலும் இது இருக்கிறது.

T.N.MURALIDHARAN said...

இப்படி நான்கு பேர் கிளம்பினால் நுகர்வோரை மதிக்கக் கற்றுக் கொள்வார்கள்.
தைரியப் பெண்மணிக்கு வாழ்த்துக்கள்

Ranjani Narayanan said...

காசு கொடுத்து வாங்கியதில் குறை இருப்பினும் எப்படி சொல்வது என்று தயங்கும் என்னைப்போன்றவர்களுக்கு ஒரு வழியைக் காட்டியிருக்கிறார் பாலாஜி. வாழ்த்துக்கள்!