பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 16, 2013

சோ ஏன் சந்தித்தார் ?

ஏதோ பெரிய கண்டு பிடிப்பு மாதிரி எல்லா பத்திரிக்கையும் சோ ஏன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று எழுதுகிறார்கள்.

கலைஞர் மோடிக்கு ஆதரவு இல்லை என்று சொன்னவுடனே சோவிற்கு பாதி வேலை குறைந்துவிட்டது!.

பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார் அவருக்கு ஆதரவு கேட்க தான் சோ சென்றுள்ளார்.

ஜெயலலிதா இந்த ஆண்டு தொடக்கத்தில் மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டியிடும் என்று சொல்லியுள்ளார். இந்த முடிவு என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும்... மாற்றிக்கொள்வார் என்று எனக்கு தோன்றவில்லை

அம்மா தனியாக நின்றாலும் ஜெயிப்பது உறுதி. அதற்கு பிறகு மொடிக்கு ஆதரவு தருவார் என்று நினைக்கிறேன்.

11 Comments:

dr_senthil said...

துணை பிரதம மந்திரி அல்லது உள்துறை போன்ற வலுவான தூண்டில்/இலக்கு அம்மாவிடம் இருக்கலாம் அதற்கு ஒப்புதல் தரும் பட்சத்தில் மோடியை ஆதரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அதற்கு முதலில் குறைந்தபட்சம் 30-35 இடங்களில் வெற்றிபெற்றாக வேண்டும் , தனித்து போட்டி இடுவதே அதற்கு ஒரே வழி

Anonymous said...

தனக்குதான் பிரதமர் பதவி என்று மோடிக்கே ஆப்பு வைக்கக் கூடிய ‘iron lady' எங்கள் அம்மா அவர்கள்.

jaisankar jaganathan said...

//அம்மா தனியாக நின்றாலும் ஜெயிப்பது உறுதி. அதற்கு பிறகு மொடிக்கு ஆதரவு தருவார் என்று நினைக்கிறேன்.
//

ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

IdlyVadai said...

புதிர் அனுப்பிய நபருக்கு - ஏற்கனவே வந்த புதிரை போடுவதில் சுவாரஸியம் இல்லை என்பதால் போடவில்லை.

dr_senthil said...

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் காங்கிரஸ் ஏன் தயக்கம் காட்டுகிறது ? ஜெயிக்காத குதிரையின் மேல் பணம் கட்ட தயக்கமா ? அல்லது குதிரையே தாம் ஜெயிக்க முடியாது என்று உணர்ந்து ஊட தயக்கம் காட்டுகிறதா ? பதினஞ்சு நாள் நாராயணசாமி விளக்கம் தரவேண்டும்

வழிப்போக்கன் said...

அத்தைக்கு மீசை முளைக்கட்டும். சித்தப்பா என்று கூப்பிடுவதற்கு.

Anonymous said...

/அம்மா தனியாக நின்றாலும் ஜெயிப்பது உறுதி. அதற்கு பிறகு மொடிக்கு ஆதரவு தருவார் என்று நினைக்கிறேன்.
//

ஆசை இருக்கு தாசில் பண்ண. அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

hehehehe.

suppamani said...

WHEN HE GOT THE RAJYA SHABA MP POST FROM BJP SOMTIMES BACK HE LOST ALL THE HOPE OF HIS FOLLOWERS AND HIS GOOD MAGAZINE FACED DISRESPECT FROM HIS READERS AND FACED AND GAVE A SHOCK TO HIM BY DWELLING OF SALES FIRST TIME FROM BROUGHT OUT;

suppamani

Anonymous said...

கருணாநிதி ஆதரவு இல்லை என்றதுமே நல்ல சகுனம், நல்ல நேரம் ஆரம்பம் என்று தெரிகிறது. சனிப்பார்வை விலகினால் நல்லதே. குரு ( சோ) பார்வை அனுகூலம். குருவும் சுக்கிரனைப் ( ஜெயா) பார்த்திருக்கிறார். இனி குருவும் சுக்கிரனும் சேர்ந்து மோடி மீது பார்வை வீசினால் அவர் இடம் பெயர்ந்து பாக்யஸ்தானம் தில்லி சென்றடைவார். உஷண கிரகங்கள் ராகு ( சாரி ராகுல் ) மற்றும் கேடி ( சாரி கேதுவான சோனியா ) விலகி க்ஷீண தசையில் சஞ்சரிப்பதால் விரைவில் நல்லது நடக்கும் என்று தெரிகிறது.

Anonymous said...

அம்மா ஜெய் ஹோ

Anonymous said...

அசட்டு அம்மாஞ்சி go and take one plate curd rice.