பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, July 06, 2013

சிங்கம்-2 FIR

சிங்கம்-2 விளம்பரம் போன வாரம் முழுக்க பலரை ரீசார்ஜ் செய்தது. காலை ஷோ போயிருக்க வேண்டும் ஆனால் என் மேனேஜர் முக்கியமான வேலை என்று என்னை படுத்தி எடுத்துவிட்டார். அந்த கடுப்பிலேயே மாலை தியேட்டர் பக்கம் போன போது கேண்டீன் பசங்களிடம்
'சிங்கம் எப்படி?" என்று கேட்டேன்.
"சூப்பர் சார்"

அப்ப நம்மிடம் இருக்கும் சுரேஷ் கண்ணன் மூளையை கழட்டிவைத்துவிட்டு படம் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு உள்ளே சென்றேன். 

பெண் பார்க்கும் போது சாதாரணமான இருக்கும் பெண் கல்யாணத்தின் போது சூப்பராக இருக்கும். காரணம் அவளுக்கு போடும் மேக்கப். சிங்கம் படமும் அப்படியே சாதாரண கதைக்கு கொஞ்சம் நன்றாக மேக்கப் போட்டுள்ளார்கள். படத்தின் நீளம் 2.46நிமிடங்கள். அதை கொஞ்சம் வெட்டியிருந்தால் சிங்கம்-3 கூட எடுத்திருக்கலாம்.



படம் முழுக்க நாம் என்ன நினைக்கிறோமோ அதை சூர்யா செய்கிறார். வில்லனை அடிக்க வேண்டும் என்று நினைத்தால் உடனே அடிக்கிறார், அனுஷ்கா, ஹன்சிகாவுடன் பாட வேண்டும் என்று நினைத்தால் உடனே பாடுகிறார். மூன்றே நாளில் வெளிநாட்டுக்கு சென்று வந்துவிடுகிறார். தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் காக்க அவர் மழையில் வேட்டியுடன் போடும் சண்டையில் உண்மையான தமிழ் 'கலைஞர்' தெரிகிறார். சபாஷ் சூர்யா!

சிங்கத்தை காட்டுல பார்த்திருக்கிற... என்று சிங்கம்-1 வரும் வசனம் போல இதிலேயும் நிறைய அடுக்கு வசனம் வருகிறது. ஆபரேஷன்-D என்ன என்று விளக்கும் போது 10 ரூல் பேசுகிறார். 4 ரூலுக்கு பிறகு டைரக்டருக்கே போர் அடித்திருக்கும் என்று நினைக்கிறேன் உடனே மூயூட் செய்துவிட்டு 10வது ரூலுக்கு ஜம்ப் செய்துவிடுகிறார்.

துத்துக்குடி என்றால் உடனே ஓர் இருவர் சிலுவை மாட்டிக்கொண்டும், சிலர் 'பாய்' என்றும் வந்துவிட வேண்டும் என்பது தான் நியதி. இதில் அப்படியே. சந்தானம் காமெடி செய்கிறார் வழக்கம் சில வசனம் சிரிக்கவும், சில முகம் சுழிக்கவும் வைக்கிறது. - விஸ்வரூபம் காமெடி படத்துடன் ஒட்டாமல் சும்மா ஜாலிக்கு. விவேக் ? வந்துவிட்டு போகிறார்.

ஒரு போலீஸ் படத்துக்கு என்ன என்ன தேவை என்பதை நாம் சிவாஜி, எம்.ஜி.ஆர்... அர்ஜூன், விஜயகாந்த் படங்களில் பார்த்திருக்கிறோம் - தேசிய கீதத்துக்கு மரியாதை, ஸ்கூல் மாணவர்களை ஒழுங்கான பாதையில் வழி நடத்த வேண்டும், போதை மருந்து கடத்தல், வெளிநாட்டு வில்லன், போலீஸ் ஸ்டேஷன் உடைத்துக்கொண்டு வில்லன் தப்பிப்பது, வில்லனின் மச்சினியோ தங்கையோ போலீஸுக்கு உதவி செய்வது, வில்லன் பத்து-பதினைந்து வெள்ளை கார்களில் வருவது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பீரோ, மேஜை உடைவது... இவை எல்லாம் ஒழுங்கான முறையில் கலந்து தந்திருக்கிறார்கள்.

ஒரு ஜாலியான படம் பார்க்க விரும்பும் எல்லோரும் பார்க்கும் விதமாக இருக்கிறது படம்.

இட்லிவடை மார்க் - சிங்கம்1-2

கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்



இதில் வரும் அந்த சிங்கம், வசனம் பேசி, டியூயட் பாடினால் அது தான் சிங்கம்-2 படம் :-)

14 Comments:

kanavuthirutan said...

Nice review... thanks..

R. J. said...

Got IV's name - Suresh Kannan! Await a photo - that's all, the IV mystery will be over!! The video is gory at the end.- R. J.

Saikrishna said...

We can watch this movie for Suriya. What an action man... nice job.. Movie as such is a typical masala movie but it doesn't bore you even in a single scene. I think that is the success of Hari & team. Don't care much about the logic and you will enjoy the movie for sure. Worth watching it one time.

R. J. said...


Just wanted to know if it feels as if one is watching the Singam (I) again or feel afresh? (Surya and his stunts in the teasers seem to be the same as in part 1 to me!) - R. J.

Lalitha said...

You shoul have avoided such a video link. Quite disturbing.

crazypaja said...

எங்கய்யா பிடித்தீர் இந்த டிஸ்கவரி சானல் கிளிப் ??
படம் முழுக்க உதை .கடைசியில் பார்க்கும் நாம் கைமா தான் என்று எச்சரிக்கிறீர்களா?
நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு ...ஓங்கி அடித்தால் எவ்ளோ வெய்ட் வேணா இருக்கட்டும்.
மேலும் ,பார்த்த எல்லாரும் லாஜிக் மறந்து பார்க்கும்படி எச்சரிக்கை விடுகின்றனர் .லாஜிக் மறந்து பார்க்க இது ஒண்ணும் ஐபிஎல் மேட்ச் அல்ல!ஆளை விடும் .
வரும் பொங்கலுக்கு,இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக , சன் டிவியில் பார்த்துக்கொள்கிறேன்.

Anonymous said...

இது ஒரு மோசமான விமர்சனம். ஒரு ஆரம்ப பிளாக்கர் கூட இதைவிட நன்றாக எழுதிவிடுவார். கொஞ்சம் கூட பொருந்தாத வீடியோ ... just in bad taste. இவ, why this complacency?

Surya Hari said...

சிங்கத்தை காட்டில பாத்திருக்கே ! கூண்டில பாத்திருக்கே !! வெறித்தனமா வேட்டையாடி பாத்திருக்கே !!! ஆனா, கக்கூசுல பேண்டு பாத்திருக்கியா!!!!.. ஒக்காந்து பேண்டா , ஒண்ணரை டன்னுக்கு பேளும் ...தெரியுமா???

Anonymous said...

என்னாது இ.வ சுரேஷ் கண்ணனா? நல்லா பூ சுத்தறாங்கய்யா. இலவச ராஜேஷ், எ.அ.பாலா, பத்ரி சேஷாத்ரி என்கிற ஐயங்கார் திரிமூர்த்திகள்தான் இ.வ. ஆசிரியர்கள் என்பது உலகத்துக்கே தெரியுமே. இந்த தென்கலைகள் இ.வ என்பதற்கு பதிலாக ‘புளியோதரை’ என்று பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்

Anonymous said...

Halo sir,

my name is mallikarjunan, i have 2 brothers and 1 sister.

i read, that you are giving singam 2 cinema ticket free for family.

please tell where to collect tickets.

please 4 tickets....

thanks you sir.

your idli vadai blog is super sir,

idlivadai is very wonderful sir.

idlivadai blog is the world super

idli vadai is tomorrow world sir.

Anonymous said...

ஏதோ சர்கஸ் ஷோ பார்த்த மாதிரி பீலிங்

jaisankar jaganathan said...

//idli vadai is tomorrow world sir.
//

தம்பி மல்லி டுமாரோ நெவர் டைஸ் படம் பாத்தியா?

R. J. said...

//Halo sir,

my name is ...// I can 'see' the halo behind IV's head! - R. J.

//என்னாது இ.வ சுரேஷ் கண்ணனா?...// I believe that 'Suresh Kannan' can also be a Thenkalai Iyengar! - R. J.

Dhas said...

Is this shop getting closed?