பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 04, 2013

சாதா குழந்தை To சூப்பர் குழந்தை-13

உங்கள் குழந்தையின் ஐ.க்யூ என்ன?
மேற்கூறிய ஒற்றைக் கேள்விக்கான விடையை அறிய , நான்கு ஆப்சன்களைக் கொண்ட கேள்விகள் இருபதைக் கேட்டு, அதில் எத்தனை கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கிறதோ, அதைக் கொண்டு உங்கள் குழந்தையின் ஐ.க்யூ வைக் கணக்கிடுவது எல்லாம் பழைய பஞ்சாங்கமாகி விட்டது.
இன்டலிஜன்ஸ் எனப்படும் அறிவுத் திறத்தைப் பற்றி இரண்டு தவறான அனுமானங்கள் நிலவின.
1.பிறப்பு முதல் இறப்பு வரை நம் அறிவுத் திறனானது ஃபிக்ஸ் செய்யப் பட்ட ஒன்று.அது மாறவே மாறாது.
2.ஒரே ஒரு இண்டலிஜென்ஸ் தான் நமக்கு உள்ளது.
மேற்கூறிய இரண்டு அனுமானங்களுமே தவறென்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.
நம் புத்திக் கூர்மையை கற்றலின் மூலமும், பயிற்சியின் மூலமும் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு பட்டை தீட்டுகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது வளர்ந்து கொண்டே இருக்கிறது,

Nature and Nurture எனப்படும் இரண்டு விஷயங்கள் தான் , அதாவது பாரம்பரியமாக நமக்குக் கடத்தப் படும் நமது ஜீன்களும்,( Nature) நாம் வளர்கிற சுற்றுப் புற சூழலும் (Nurture) தான் நம் அறிவுத் திறனை நிர்ணயிப்பதற்கான காரணிகள்.
Gardner என்னும் அறிவியல் அறிஞர், theory of multiple intelligences என்னும் கோட்பாட்டை முதல் முறையாக முன்வைத்தார்.

Linguistic ("word smart")

Logical-mathematical ("number/reasoning smart")

Spatial ("picture smart")

Bodily-Kinesthetic ("body smart")

Musical ("music smart")

Interpersonal ("people smart")

Intrapersonal ("self smart")

Naturalist ("nature smart")

மனித இனமானது பல்லாயிரக் கணக்கான வருடங்களாக மேற்கூறிய இந்த எட்டு வகை அறிவுத் திறன்களின் மூலமே சிந்தித்து வருகிறது என்றும் இவ்வகை இண்டலிஜென்ஸ்களை சிந்தனை உறுப்புகள் (mental organs) என்றும் கார்டனர் உருவகித்துள்ளார்;
நம் கல்வி முறையும், குழந்தை வளர்ப்பு முறையும் Linguistic மற்றும் Logical-mathematical intelligence க்கு மட்டுமே அதிகபட்ச முன்னுரிமை கொடுத்து மற்ற அறிவுத் திறன்களுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

Multiple intelligence என்னும் கான்செப்டைப் புரிந்து கொண்டால், நாம் நம் குழந்தைகளைப் பார்க்கும் விதமும், அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் விதமும் நிச்சயமாக மாறுபடும்.

எல்லாக் குழந்தைகளும் ஒரு சில இன்டலிஜென்ஸில் அடி தூள் கிளப்பும். ஒரு சிலவற்றில் மீடியமாக , இன்னும் சிலவற்றுள் மிகக் குறைவான திறனுடன் விளங்கும் இவற்றுள் எந்தெந்தத் திறன்களெல்லாம் பட்டை தீட்டப்பட சூழலும், வாய்ப்பும் கிடைக்கிறதோ, அவைகளெல்லாம் வளர்ந்தோங்கும். முறையான பயிற்சியினால் இந்த மல்டிபிள் இண்டலிஜென்ஸ் எல்லாவற்றையுமே நம் குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க முடியும்.தொடர்ந்த கவனிப்பின் மூலம் எந்த இண்டலிஜென்ஸை நம் குழந்தை விரும்பி செய்கிறானோ (ளோ), அதையே அவர்களது கேரியராக தெரிவு செய்வதற்கு நாம் உதவி செய்யலாம். Interpersonal intelligence ல் இல் சிறந்து விளங்கும் குழந்தையானது தெரபிஸ்ட், கன்சல்டண்ட், சைக்காலஜிஸ்ட், அரசியல்வாதியாகவோ சிறந்து விளங்க முடியும். இயல்பாக தனக்குப் பிடித்த ஒரு விஷயத்தையே தன் பணியாகத் தேர்ந்தெடுத்தால், அதில் நம் குழந்தைகள் ஒரு இளையராஜா போல, ஒரு டெண்டுல்கரைப் போல லட்டு சாப்பிடுவதைப் போல சாதனைகளைச் செய்வர்.
மல்டிபிள் இண்டலிஜெண்ஸ் கான்செப்ட் மூலம் கற்றுக் கொடுப்பது, குழந்தையின் விருப்பத் தேர்வை முறையாக அறிந்து கற்பித்தலை சாத்தியமாக்குவதால் கற்றல் ஒரு இனிய நிகழ்வாக அமைகிறது.

இனி இந்த மல்டிபிள் இண்டலிஜென்ஸ் ஒவ்வொன்றைப் பற்றியும் அதை நம் குழந்தைகளிடம் எப்படி வளர்ப்பது என்பதைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
Linguistic intelligence: (Word Smart)
Word Smart ஆகத் திகழும் நபர் வார்த்தைகளைத் திறம்பட உபயோகிப்பதில் வல்லவராக ( பேச்சில் என்றால் கதை சொல்பவரைப் போல, பேச்சாளரைப் போல, அரசியல்வாதியைப் போல ) (எழுத்தில் என்றால் கவிஞராக, ஸ்க்ரிப்ட் ரைட்டராக, ஜர்னலிஸ்டாக, எடிட்டராக) விளங்குவர்.

Word Smart ஆகத் திகழும் குழந்தையானது, புத்தகங்களை வாசித்தல், பாடங்களை எழுதுவது மற்றும் படிப்பது, கதைகளைக் கேட்பது, வேர்டு கேம்ஸ் எனப்படும் வார்த்தை விளையாட்டுகள், ரைம்ஸ் சொல்லுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காண்பிக்கும்.

வில்லியம் ஷேக்ஸ்பியர், ஒபாமா, ஒப்ரா வின்ஃப்ரே, கண்ணதாசன், போன்றோர் Word Smart ஆளுமைகளுக்கு எடுத்துக் காட்டு.

Linguistic intelligence இல் சிறந்து விளங்கும் குழந்தைகள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு துறைப் பணியை வெற்றிகரமாக செய்வர்.

ஆசிரியர், அரசியல்வாதி, தொழில்முறைப் பேச்சாளர், கவிஞர்,ஜர்னலிஸ்ட், காப்பி ரைட்டர், எடிட்டர், நாவலாசிரியர், கதை சொல்லி.

உங்கள் குழந்தையை (Linguistic)" • உரையாடலுக்கும், கலந்து பேசுவதற்கும் வாய்ப்பளித்தல்
• சக பள்ளி மாணவர்களை அழைத்து அவர்களிடம் தங்கள் அனுபவங்களைப் பகிரச் சொல்லுதல்
• பாடங்களை, கதைகளை வாய் விட்டு வாசிக்கச் செய்தல்
• வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட வைத்துப் பயிற்றுவித்தல்
• ஒரு அனுபத்தைப் பற்றிப் பேச, எழுத வாய்ப்புக் கொடுத்தல்
• புதிய நபர்களை அழைத்து வந்து அவர்களைப் பேசச் சொல்லுதல்
• நாடகம் போன்ற படைப்பூக்க நிகழ்ச்சிகளின் மூலம் குழந்தைகள் தங்களை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுத்தல்
பயிற்சிக்கான இடங்கள்:
• நூலகம்
• பேச்சுப் போட்டி
• கட்டுரைப் போட்டி
• கவிதைப் போட்டி
• கதை சொல்லும் நிகழ்ச்சிகள்
• மொழி வளர்ப்புப் பயிற்சிக் கூடங்கள்
• நாடகப் பட்டறை
• ஜர்னலிச வகுப்ப்புகள்

பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரியில் குழந்தைகளுக்கான கதை சொல்லும் பயிற்சி, வாசிப்புப் பயிற்சி, கவனிக்கும் பயிற்சி,(Listening skills) கட்டுரைப் பயிற்சி போன்றவைகளுக்கான பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடைபெறுகின்றன.
அடுத்தடுத்த தொடர்களில் மற்ற இண்டலிஜன்ஸ்களைப் பற்றியும், அவைகளை எப்படி நம் குழந்தைகளிடம் வளர்ப்பது என்பதைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

டாக்டர் பிரகாஷ்
www.rprakash.in

4 Comments:

sidtharth said...

Good Article. Thanks Prakash.

"Copy Paste Intelligence" - Example. Idli vadai :-)

Loganathan Natarajan said...

Thanks for the article, was expecting this article .. after long delay it has come

R. J. said...

Thanks Dr Prakash. As I requested earlier, if this series is also available in English, I can pass it on to my son and daughter in law who have a one year old daughter. I see that they are already bringing her up nicely - much better than I did to my children! - R. J.

கானகம் said...

நல்ல நெடுந்தொடர்.. இட்லிவடையின் உருப்படியான பதிவுகளில் இதுவும் ஒன்று..