பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 13, 2013

செகுலரிசமும் மோதியும் - பத்ரி

(1) செய்து காட்டுவார் மோதி

(2) பாஜகவின் கூட்டாளிகள்

தினம் தினம் மோதியா என்று அலுத்துக்கொள்ளாதீர்கள். சில கேள்விகள் எழுப்பப்படும்போது அவை பற்றி எனக்கே தெளிவு ஏற்படுத்திக்கொள்வதற்காக இந்தப் பதிவுகள். இன்னமும் நிறையக் கேள்விகள் கேட்கப்படுகின்றன. எனவே தொடர்ந்து மேலும் சில பதிவுகளும் அவ்வப்போது வரும்.

ஐக்கிய ஜனதா தளம் ஒரு செகுலர் (மதச்சார்பற்ற) கட்சி என்று கருதப்படுகிறது. பாஜக ஒரு மதச்சார்புள்ள கட்சியாகவே அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்துத்துவம் அவர்களுடைய நோக்கங்களில் ஒன்று என்று அக்கட்சியைச் சேர்ந்த பலருமேகூடச் சொல்கிறார்கள். சிவ சேனை ஓர் இந்துத்துவக் கட்சியாகவே காணப்படுகிறது. அது தவிர, அகாலி தளம் என்ற கட்சி, சீக்கியம் என்கிற மதத்தின்மீதாகக் கட்டப்பட்டுள்ளதால் அதுவும் மதச்சார்புள்ள கட்சிதான்.
அதுதவிர முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் மதச்சார்புள்ளவையே. வெளிப்படையாகக் கிறிஸ்தவ மதச்சார்பை வெளிப்படுத்தும் கட்சிகள் என்று ஏதும் இந்தியாவில் இல்லை. மிச்சமுள்ள அனைத்துக் கட்சிகளும் என்ன சொன்னாலும் செய்தாலும், அவர்கள் அனைவருமே, காங்கிரஸ் உள்பட, செகுலர் கட்சிகளாகவே அறியப்படுகிறார்கள்.இந்துத்துவ அரசியலின் அடிப்படையே, ‘பெரும்பான்மையான இந்துக்கள் ஏதோ ஒருவிதத்தில் வஞ்சிக்கப்படுகிறார்கள்; சிறுபான்மையினர், அதுவும் முக்கியமாக முஸ்லிம்கள், சலுகைகளாகப் பெற்றுத் தள்ளுகிறார்கள்’ என்ற கருத்து. இதற்கு முற்றிலும் மாறாக, முஸ்லிம்கள், தாங்கள் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கிறார்கள். எந்த ஒரு செகுலர் கட்சியாலும் தங்களுக்கு இதுகாறும் நன்மைகள் கிடைத்ததில்லை என்கிறார்கள். இப்போது கொடுக்கப்படும் சலுகைகள் போதவே போதா என்கிறார்கள். முஸ்லிம்கள் தொடர்ந்து பின்தங்கிய வகுப்பினர்களாகவே இருந்துவருவதாக அவர்கள் புள்ளிவிவரங்களோடு எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாஜகவுக்கான எதிர்ப்பு முஸ்லிம்களிடமிருந்து மட்டும் வருவதில்லை. மூன்று முக்கியமான இடங்களிலிருந்து வருகிறது. (1) முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினர். (2) தலித்துகள். (3) திராவிடவாதிகள் (அல்லது) நாத்திகவாதிகள்.

முஸ்லிம்களின் எதிர்ப்பைப் புரிந்துகொள்வது எளிது. இது பாபர் மசூதி தாண்டியது. குஜராத் கலவரம் தாண்டியது. தாம் சிறுபான்மையினராக இருக்கும் நாட்டில் தமக்குப் பாதுகாப்பு வேண்டும்; தம்முடைய வளர்ச்சிக்கு ஊக்கங்கள் வேண்டும்; தம்முடைய வழிபாட்டுமுறைக்கு எந்தக் குந்தகமும் வரக்கூடாது; தம்முடைய பின்தங்கிய நிலை மாறவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது மிக நியாயமானதே. இந்த மாற்றங்கள் எவையும் பாஜகவிடமிருந்து கட்டாயமாக வர முடியாது என்ற கருத்து முஸ்லிம்களிடம் ஆழமாக உள்ளது. அப்படிப்பட்ட ஒரு கருத்தை யாராலும் புறந்தள்ளிவிட முடியாது. பாஜகவைவிட காங்கிரஸ் அல்லது மூன்றாவது அணியிடம் தங்களுக்கு அதிக சலுகைகள், வாய்ப்புகள் கிடைக்கும் என்று முஸ்லிம்கள் சொன்னால் அதை எப்படி மறுக்க முடியும்?

பாஜகவில் உள்ள ஒரு சில டோக்கன் முஸ்லிம் அரசியல்வாதிகள் (ஷாநவாஸ் ஹுசைன், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா, இறந்துபோன சிக்கந்தர் பக்த்) தாண்டி சமீபத்தில் குஜராத்தில் சில புதிய இளம் முஸ்லிம் தலைவர்கள் உருவாகியுள்ளனர். இவர்களுடைய கருத்து: ‘மோதியின் ஆட்சியில் முஸ்லிம்கள், இந்துக்கள் என்று அனைவருமே முன்னேறுகிறார்கள்; இதுதான் உண்மையான வளர்ச்சி; அடையாள அரசியல்தான் ஆபத்தானது; இந்த அடையாள அரசியலால்தான் முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்களைப் பின்தங்கியவர்களாகவே வைத்துள்ளனர்.’ ஆனால் இந்தக் கூற்றுகளை இன்று ஒரு செகுலர் நபர் எளிமையாக ஒதுக்கிவிட முடியும். ஏனெனில் நம் கருத்துகள் நம் நம்பிக்கையிலிருந்தே உருவாகின்றன. தெளிவான சான்றுகளிடமிருந்து அல்ல. நாம் சான்றுகளைத் தேடிப் போவதில்லை. அதற்கான நேரமோ வலுவோ நம்மிடம் கிடையாது.

இன்று முஸ்லிம் கட்சிகளும் தனிப்பட்ட முஸ்லிம்களும் பாஜகவுக்கு, அதுவும் முக்கியமாக மோதிக்கு, வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. இத்தனை ஆண்டுகள் கழித்துத்தான் அத்வானிக்கு ஸ்பெஷலாக செகுலர் முத்திரை கிடைத்துள்ளது. இதற்குமுன் வாஜ்பாயிக்குக் கொஞ்சமாகக் கிடைத்தது. எனவே மேலும் பத்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மோதிக்கும் இந்த முத்திரை கிடைக்கலாம். அல்லது கிடைக்காமலேயே போகலாம்.

மோதி முஸ்லிம்களின் ஆதரவு என்ற முத்திரையைப் பெற்றபிறகுதான் பிரதமர் ஆகலாம் என்ற வீட்டோ இருந்தால் அவரால் என்றுமே இந்தியாவின் பிரதமர் ஆக முடியாது. இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டம் அப்படிப்பட்டதல்ல. உண்மையில் பாஜகவில் யாருக்குமே - ஏன் நாளை ஷாநவாஸ் ஹுசைன் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டாலுமேகூட - இந்த முத்திரை கிடைக்காது. இன்றைய நிலையில் பாஜகவுக்கு வெகு சில முஸ்லிம்களே வாக்களிப்பார்கள். மோதி தலைவராக இருந்தாலும் சரி, தலைவராக இல்லாவிட்டாலும் சரி.

இந்தக் காரணங்களாலேயே மோதி ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொல்லிவிடலாமா? அமெரிக்காவை எடுத்துக்கொண்டால் பொதுவாக கருப்பினத்தோரின் (ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்) வாக்குகள் டெமாக்ரடிக் கட்சிக்குத்தான் கிடைக்கும். இது ஒபாமா இப்போது வந்ததால் அல்ல. டெமாக்ரடிக் கட்சி சிறுபான்மையினர் நலனை முன்வைக்கும் என்ற கருத்து அங்கே உள்ளது. ரிபப்ளிகன் கட்சி ஒருவிதத்தில் அடிப்படைவாதம் பேசக்கூடியது. தீவிரவாத எவாஞ்செலிகல் கிறிஸ்தவர்களின் ஆதரவு கொண்ட கட்சி அது. அதேபோல லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோரும் பொதுவாக டெமாக்ரடிக் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள். தம் நலன் பொதுவாக டெமாக்ரட்டுகள் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கும் என்ற காரணத்தாலேயே ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் லத்தீனோக்கள், ஆசியர்கள் ஆகியோர் தொடர்ந்து டெமாக்ரட்டுகளுக்கே அதிக வாக்கை அளித்துவருகின்றனர். ரிபப்ளிகன் கட்சியிலும்கூட இந்தக் குழுவினரிலிருந்து சில டோக்கன் ஆட்களைப் பார்க்கலாம். எப்படி பாஜகவில் சில டோக்கன் முஸ்லிம்கள் இருக்கிறார்களோ, அப்படி.

ஆனாலும் ரிபப்ளிகன் கட்சி அவ்வப்போது ஜெயித்துக்கொண்டுதான் வருகிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வீட்டோ ஏதும் கிடையாது. எப்போது பெரும்பான்மை அமெரிக்கர்கள் ஒட்டுமொத்தமாக ரிபப்ளிகன் கட்சி வேட்பாளருக்கு வாக்களிக்கிறார்களோ அப்போது அவர் வெற்று பெறுகிறார். எனவே முஸ்லிம்கள் ஓட்டு விழாவிட்டாலும்கூட அல்லது மிகக் குறைவாக விழுந்தாலும்கூட பாஜகவும் மோதியும் வெல்ல முடியும்.

பாஜகவுக்கு தலித்துகளிடமிருந்தும் திராவிடவாதிகளிடமிருந்தும் எதிர்ப்பு உள்ளது என்று சொல்லியிருந்தேன். இதற்கான காரணங்கள் வேறானவை.

பாஜகவும் அதன் ஆத்மாவாக இருக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும் உயர்சாதி, பிராமணியக் கருத்துகளை முன்வைக்கும் அமைப்பு என்பது பொதுவான இடதுசாரி லிபரல் சிந்தனையாளர்களின் கருத்து. இதில் உண்மை இல்லை என்று சொல்லிவிட முடியாது. பாஜக என்ற அரசியல் கட்சி காங்கிரஸுடன் ஒப்பிடும்போது இளம் கட்சிதான். அது ஒரு குறிப்பிட்ட சித்தாந்தப் பார்வையிலிருந்து ஜன சங்கமாக உருவாகி, பின் ஜனதாவுடன் ஐக்கியமாகி, பின்னர் மீண்டும் பாரதிய ஜனதாவாக மறு உருவெடுத்தது. அதன் சித்தாந்தப் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக inclusive-ஆக மாறிவருகிறது என்றே நான் கருதுகிறேன். இக்கட்சியில் பிற்படுத்தப்பட்டவர்களின், தாழ்த்தப்பட்டவர்களின் பிரதிநிதித்துவம் என்ன என்று கணக்கு எடுக்கக்கூடிய நிலையில் இப்போது நான் இல்லை. ஆனால் இது ஒரு சுவாரசியமான ஆய்வாக இருக்கும்.

இன்று காங்கிரஸ் கட்சியில் பாஜகவைவிட அதிகமான எண்ணிக்கையில் மேல்மட்டத்தில் பிற்படுத்தப்பட்டவர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். ஆனால் நரேந்திர மோதியே பிற்படுத்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவர்தான் என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பழங்குடியினருக்கும் சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு இருக்கும் ஒரே காரணத்தால்தான் அவர்களால் இன்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்தச் சட்டம் இயற்றும் மன்றங்களுக்குச் செல்ல முடிகிறது. இன்றும்கூட பொதுத் தொகுதியில் நிற்பதற்கு இந்தச் சாதிகளைச் சேர்ந்தோருக்கு பெரும் அரசியல் கட்சிகளிடமிருந்து பெரும்பாலும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டோர் தம் எண்ணிக்கை காரணமாகவும் தம் அரசியல் வலு காரணமாகவும் ஆட்சியில் தமக்குரிய இடத்தை வெகுவாகப் பிடித்துவிட்டனர். சொல்லப்போனால் இன்றைய இந்திய அரசியலில் மிக முக்கியமான பங்கைச் செலுத்திக்கொண்டிருப்பது இடைநிலைச் சாதிகள் என்று சொல்லப்படுவோரே.

தலித்துகள் தனியாக பாஜகமீது பயம் கொள்வார்களா, பாஜகவை ஒதுக்குவார்களா என்று தெரியவில்லை. இன்றைய default நிலையில் அவர்கள் பாஜகவைப் பெரிதாக ஒன்றும் ஆதரிக்கவில்லை. எனவே பாஜக இதற்கும் கீழே போய்விட முடியாது. மாறாக, பாஜக அவர்களுடைய ஆதரவை எதிர்காலத்தில் அதிகமாகப் பெறக்கூடும்.

இறுதியாக திராவிடவாதிகள். பொதுவாக இந்துமதத்தை எதிர்க்கும் இவர்களுக்கு இந்துத்துவவாதம் பேசுவோரை எதிர்ப்பதுதான் default position. திமுக சிறிதுகாலம் பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது என்றாலும் பொதுவாக பாஜகவுடன் கொள்கைரீதியில் ஒட்டுறவு இல்லாதவர்கள். தமிழ்நாட்டில் பாஜகவுக்குச் சுத்தமாக ஆதரவு இல்லாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் மோதிமீது நிறையத் தமிழர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புகள் காண்பிக்கின்றன. இதனால் பாஜகவால் ஒரு சீட்டுகூடப் பெற முடியாது என்பதுதான் நிதர்சனம். அதற்கான கட்டமைப்பு இன்று பாஜகவுக்கு இல்லை.

கடைசியாக இடதுசாரி லிபரல் கருத்தியல் கொண்டவர்கள். இவர்கள் பாஜகவை எதிர்ப்பதற்கான முதன்மைக் காரணம் பாஜக ஒரு மதவாதக் கட்சி என்பதே. அதற்கு பாபர் மசூதி, குஜராத் கலவரம் ஆகியவை உதாரணமாகக் காண்பிக்கப்படுகின்றன. எனவேதான் அத்வானியும் மோதியும் வில்லன்கள்.
(இப்போது மோதி பெரிய வில்லன். அத்வானி கொஞ்சம் தேவலாம்.)

ஆக, இந்துத்துவத்தை வெறுத்து செகுலரிசத்தை முன்வைக்கும் இடதுசாரி லிபரல்கள், செகுலர் கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே தமக்கு நன்மை என்று நினைக்கும் சிறுபான்மை மதக் கட்சிகள், இந்துத்துவம் என்பது உயர் சாதித்துவம் என்று நினைக்கும் தலித்துகள், இந்து மதம் என்பதே புரட்டு, எனவே இந்துத்துவ பாஜக எதிர்க்கப்படவேண்டியது என்று கருதும் திராவிடவாதிகள். இப்படி இவர்கள் எல்லோரும் எதிர்க்கும்போது பாஜகவை நான் ஏன் ஆதரிக்கவேண்டும்? அதுவும் முக்கியமாக மோதிக்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவேண்டும்?

என் காரணங்கள் தெளிவானவை. நான் என்னை மதச்சார்பற்றவன் என்றே நினைத்துக்கொள்கிறேன். கடவுள் நம்பிக்கை அற்றவன். பாஜக அரசியல்வாதிகளின் விசித்திரமான பல கருத்துகள் எனக்குக் குமட்டலை ஏற்படுத்துபவை. சமீபத்தில் ஒரு மகானுபாவர் உதிர்த்த கருத்துகள் (“கல்யாணம் ஆவதற்குமுன்பு பெண்கள் ஜீன்ஸ் போட்டுக்கொள்ளக்கூடாது. மொபைல் போன் வைத்துக்கொள்ளக்கூடாது.”) போன்று பெரும்பாலும் பிற்போக்கான கருத்துகள் பலவற்றை பாஜகவினரிடம் நான் பார்க்கிறேன்.
மும்பையில், உள்ளாடைகளைப் போர்த்தும் நிர்வாண பொம்மைகளைக் காட்சிக்கு வைக்கக்கூடாது என்பதை முன்மொழிந்த ஜோக்கர்கள், அல்லது வேலண்டைன் டே கொண்டாடக்கூடாது, பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடிக்கக்கூடாது போன்ற முட்டாள்தனமான கருத்துகளை முன்வைப்பவர்கள் இக்கட்சியில் அல்லது கூட்டணியில் உள்ளனர். அடிப்படைவாதத் தூய்மைவாத உணர்வு என்பது மிக அபாயமானது என்பது என் கருத்து. ஆர்.எஸ்.எஸ்மீது எனக்கு மிகுந்த சந்தேக உணர்வு உண்டு.
வி.எச்.பி போன்ற அமைப்புகள்மீது கடும் வெறுப்பு உண்டு.

என் கருத்துகள் பொருளாதாரத் தளத்தில் வலதுசாரிப் பார்வை கொண்டவை. நாட்டின் பாதுகாப்பு, தேசத்தின் தன்மானம், தேசத்தின் கௌரவம் ஆகியவையும் எனக்கு முக்கியம். ஆனால் சமூகத் தளத்தில் அதிகபட்ச தனிநபர் சுதந்தரம் வேண்டும் என்று நான் நினைக்கிறேன். கலாசாரப் போலீஸ்களைக் கடுமையாக வெறுக்கிறேன். என் பார்வையில் என் கருத்துகளுடன் முழுமையாக ஒத்துப்போகும் அரசியல் கட்சி ஏதும் இல்லை. எனவே நான் சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிலையில் இருக்கிறேன்.
சமூகத் தளம் முக்கியமா, பொருளாதாரத் தளம் முக்கியமா என்று சிந்திக்கவேண்டிய நிலையில் இருக்கிறேன்.

காங்கிரஸின் பொருளாதாரப் பார்வை எனக்கு ஏற்புடையதாக இருந்து (நரசிம்ம ராவ்-மன்மோகன் சிங்), அதன் உட்கட்சி ஜனநாயகம் சிறப்பானதாக இருந்து, ஊழல் குறைவாக (அல்லது இல்லாததாக) இருந்தால் நான் கட்டாயம் அக்கட்சியையே ஆதரிப்பவனாக இருந்திருப்பேன். ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்று இல்லை. என்முன் இருக்கும் வாய்ப்புகள் என்ன என்று பார்க்கும்போது, மோதி தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கை அளிக்கிறது. கவனியுங்கள், பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று நான் சொல்லவில்லை; மோதியின் தலைமையிலான பாஜக அதிக நம்பிக்கையளிக்கிறது என்று சொல்கிறேன். வலுவான தொழில் வளர்ச்சி, வலிமையான பொருளாதாரம், தொலைநோக்குள்ள உள்கட்டமைப்பு, அழுத்தங்கள் அற்ற கல்விக்கொள்கை போன்றவற்றை முன்வைக்கும், தனிநபர் சுதந்தரத்தைக் கட்டிக்காக்கும் ஓர் அமைப்பாக, அதே நேரம் உலக அரங்கில் இந்தியாவுக்குச் சிறப்பான ஓரிடத்தைப் பெற்றுத்தரும் ஓர் அரசை மோதியால் அமைக்க முடியும் என்றும் நான் நம்புகிறேன். இந்த அமைப்பின்கீழ் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். கலாசார போலீஸ்கள் கட்டுப்பாட்டில் வைக்கப்படுவர் என்று கருதுகிறேன்.
அப்போதும்கூட தினம் கருத்து முத்துகளை ஆர்.எஸ்.எஸ் ஆசாமிகளும் பாஜக அரசியல்வாதிகளும் உதிர்த்துக்கொண்டிருப்பர். அது எனக்குப் பிரச்னை இல்லை. அது என் வாழ்வையோ பிற குடிமக்களுடைய வாழ்வையோ பாதிக்கக்கூடாது. அமெரிக்காவின் அதி தீவிர கிறிஸ்தவ வலதுசாரிக் கருத்துகள் எப்படி அமெரிக்கப் பொதுமக்களுடைய வாழ்க்கையை பாதிக்காதவகையில் எதிர்க்கப்படுகின்றனவோ அதைப்போல பாஜக/ஆர்.எஸ்.எஸ் அல்லது பிற அதிதீவிர அடிப்படைவாதிகளின் தூய்மைவாதக் கருத்துகள் கட்டுக்குள் வைத்திருக்கப்படும் என்று நம்புகிறேன்.

இந்த என் நம்பிக்கை ஓர் இந்துவாக, ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான் எனக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்று ஒருவர் கருதக்கூடும். அவரை நான் குற்றம் சொல்ல முடியாது. ஒரு முஸ்லிமாக, ஒரு தலித்தாக மோதியின் ஆட்சியிடமிருந்து என்னதான் பெற்றுவிட முடியும் என்பதை அவரவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ மோதியிடமிருந்து மோசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெறுவார்கள் என்ற கருத்து தவறானது என்பது மட்டும் எனக்கு உள்ளுணர்வில் தோன்றுகிறது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு தலித்துக்கும் சமமாகவே கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.

அந்த நம்பிக்கை உள்ளவரையிலும் நான் மோதியை ஆதரிப்பேன்.

வாசகர்கள் கேள்வி கேட்கலாம், பத்ரி பதில் சொல்லுவார் என்று நினைக்கிறேன் :-)

19 Comments:

Anonymous said...

Our Modi Indhiyaavai maatra mudiyumaaa???

Mudiyaadhu!!!

Naam ippodhu Modiyai aadharippom. Adutha electionil Congressai aadharippom.

enRenRum-anbudan.BALA said...

முத்தாய்ப்பா அனானி அழகா சொல்லிட்டாரு !

"ஜொலிக்கும் இந்தியா" (Shining India), 2004-ல் பிஜேபியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர முடியாததையும் பார்க்க வேண்டும். ஊழல் பல புரிந்தும், காங்கிரஸ் 2009-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததையும் பார்க்க வேண்டும். பாவம், 3வது முறையாக பிஜேபிக்கு ஆப்பு உறுதி என்று தான் தோன்றுகிறது

எ.அ.பாலா ரசிகர் said...

ஏதோ ஒரு போஸ்டிங் நல்லா இருக்குன்னு வாசகர்கள் சொல்லப் போய் டாக்டர் ஒரு பக்கம் குழந்தைகளை வச்சு கன்னித் தீவாட்டம் அறு அறுன்னு அறுக்கறார்னா, இப்ப இந்த மாமேதை பத்ரி மோடியை வச்சு அறுக்க ஆரம்பிச்சுட்டார். இவரது பெனாத்தல்களை விஜய் TV நீயா நானாவுல பாத்து நாங்க தலையில அடிச்சுக்கறது போதாதா? ரெண்டு பேரும் கொஞ்சம் நிப்பாட்டுங்கப்பா!

இப்படிக்கு

எ.அ.பாலா ரசிகர்

கொடும்பாவி-Kodumpavi said...

படிக்க பிடிக்கலைனா மூ...ணும்.. இப்ப ஏன் குழந்தைகள் பற்றிய தொடரை இங்க நோன்டணும்?
ஏன் இந்த காண்டு?
படிச்சு புரிஞ்சிக்க முடியலைன்னா? அல்லது ..?!?
.. அரசியல் .. சினிமா.. அடுத்தவர் பற்றி கோள் மூட்டுதல் .. அவதூறு செய்தி படித்து .. அவரவர் சிறங்கிலேயே சொறிந்து இன்பம் காணும் ஜன்மங்கள் இருக்கும் வரை நல்ல விஷயம் எதுவும் ஏறாது இவர் புத்தியில்.
-கொடும்பாவி

சி. சரவணகார்த்திகேயன் said...

மோடியை முன்வைத்து பத்ரிக்கு சில கேள்விகள் - http://www.writercsk.com/2013/06/blog-post_13.html

Anonymous said...

2002 கலவரங்களை மோதி முன்னின்று நடத்தினாரா என்பதை விட்டுவிடுவோம்; அப்போதுகூட 2000 பேர் கொல்லப்படுவதைத் தடுக்க முடியாத, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த திறமையற்ற முதல்வர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்றுவரை அந்தக் கலவரங்களுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.

மோதி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும்-- ஆனால் எது சட்டம், எது ஒழுங்கு என்பது அவர் முடிவு செய்வது மட்டுமே.

இந்தியா போன்ற, பல்வேறு சாதி, மதம், மொழி, கட்சிகளைக் கொண்ட நாட்டில் எல்லோரையும் அரவனைத்துச் செல்பவர்தான் பிரதமராகத் தாக்குப்பிடிக்கவே முடியும். சொந்தக் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிகளிடையிலுமே இவ்வளவு விரோதப் போக்கை சம்பாதித்திருப்பவரால் எதிர்க்கட்சி அல்லது பிற கட்சிகளுடன் இனைந்து பணியாற்றுவது பற்றி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.

தண்டகாரண்யக் காடுகளைக் கார்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்க்க, அவர் பழங்குடிகள்மேல் விமானப்படையை அனுப்பி குண்டுபோடச் சொன்னாலும் ஆச்சரியமில்லை. குறைந்தபட்சம் நக்சலைட் வேட்டை என்ற பெயரில் ஆளற்ற ட்ரோன்களையாவது அனுப்புவார் என்று எதிர்பார்க்கலாம்!

குஜராத் மாடல் -குஜராத்தின் 'வளர்ச்சி' பற்றிப் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன - குஜராத்திற்கே சரிப்பட்டுவரும். அந்த 'வெற்றியை' ஒட்டுமொத்த இந்தியாவில் நிகழ்த்த முடியாது என்று விரைவில் மோதி புரிந்துகொள்வார். உதாரணமாக டாஸ்மாக்கையும், இலவசங்களையும் மையமாகக் கொண்ட தமிழக அரசியலை அவரால் விளங்கிக்கொள்ளவே முடியாது. அத்துடன் அவர் சாயம் வெளுத்துவிடும். ஊடகங்கள் இன்னொரு நம்பிக்கை நட்சத்திரத்தைத் தேட ஆரம்பிப்பார்கள். இன்று மோதி பற்றிப் புகழ்பாடும் இதே விதத்தில்தான் 90 களில் சந்திரபாபு நாயுடு பற்றியும் ஊடகங்கள் புகழ்பாடின என்பதை நினைவுகூரலாம். இன்று நாயுடு எங்கே என்று தேடவேண்டிய நிலையில் இருக்கிறார்.

சரவணன்

Anonymous said...

Congress can be construed as a cristianic one b coz Sonia is heading. Robert vadra is also a christian, so basically congress is cristianic.

R. J. said...

//ஒரு தலித்தோ, ஒரு முஸ்லிமோ மோதியிடமிருந்து மோசமான ஒரு எதிர்காலத்தை மட்டுமே பெறுவார்கள் என்ற கருத்து தவறானது என்பது மட்டும் எனக்கு உள்ளுணர்வில் தோன்றுகிறது. எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் ஒரு முஸ்லிமுக்கும் ஒரு தலித்துக்கும் சமமாகவே கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்.// I second this whole heartedly as I believe the same.

மோடியின் ஆட்சியில் கோத்ரா கலவரம் நடந்தது - அது ஒரு spontaneous reaction of the mob என்பதை ஒத்துக்கொள்ளாதவர்கள் தான் மோடியிடம் சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்காது என்று பிரச்சாரம் செய்கிறார்கள். 'முதல்வன்' சினிமாவில் வருவதைப் போல் யாராவது ஆடியோ / வீடியோ சாட்சி சமர்ப்பித்தால் ஒழிய அது தவறு. எப்போதாவது மோடி முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசி இருக்கிறாரா?

தாழ்த்தப் பட்டவர்களாவது அவர்களது முந்தைய தலைமுறை மோசமாக நடத்தப் பட்டது காரணமாக இந்துக் கட்சியை எதிர்க்கலாம். முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்திய சரித்திரப் படி இந்துக்கள் தான் அவர்களால் ஒடுக்கப் பட்டிருக்கிறார்கள்; கோயில்கள் சூரையாடப் பட்டன. இட ஒதுக்கீடு, மற்ற சலுகைகள் கேட்பவர்கள் வைக்கும் நியாயம் என்ன? அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்துக்காக அரசாங்கத்தால் ஒடுக்க முடியுமா? அது முடியாது என்பது நம் constitution உறுதி செய்கிறது. பா.ஜ.க. எந்தக் காலத்திலும் அதை மாற்ற முடியாது. இப்படி இருக்கும்போது சலுகைகள் ஏன்?

நாட்டுக்குத் தேவை ஊழலற்ற நேர்மையான ஆட்சி. அதை மோடி தருவார் - மற்ற கட்சிகளால் முடியாது என்பது என் எண்ணம். போன பதிவிலும் என் கருத்தை எழுதிஉள்ளேன்.

-ஜெ.

Anonymous said...

Nachunu blog la sonnenga..
Intha chekooolar vyathigaluku gili aarambichaachu...
Namo Namo!!

Anonymous said...

ஜெ.ஜெ.முதன் முதலா உங்களுக்கு ரசிகர் மன்றம் திறந்தாங்க...இப்ப பாருங்க..

வெங்கிட்டு

mak said...

Master stroke by Mr.Nitish Kumar in forging a front with BJD and TMC - because these 2 parties were seen as potential NDA allies. Everyone rooting for Mr.Modi - needs to realise that he is the most unacceptable leader to all political parties (including his own !).
The only way BJP can strengthen NDA is to project a moderate leader as the PM candidate instead of the highly controversial Mr.Modi - otherwise it will be hat trick of defeats for them in 2014.
from: Hariharan
The Hindu Posted on: Jun 13, 2013 at 13:47 IST

-----
This is the mentally for all Hindu people (except brahimin).

கௌதமன் said...

இந்தக் கட்டுரையில் காணப்படும் எல்லா கருத்துகளும் சரியே.
பா ஜ க என்றால் ஹிந்தி பேசுபவர்கள் கும்பல், ஹிந்தி வெறியர்கள் என்பது போன்ற ஒரு தோற்றமும் தமிழ்நாட்டில் நிலவி வருகின்றது. ஆனால் சோனியா செம்மொழியில் புலமை பெற்றவரல்ல, மன்மோகன் மருந்துக்குக் கூட தமிழ் அறியாதவர் என்பதெல்லாம் சௌகரியமாக மறந்துவிடுவார்கள்!

kamal said...

"பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடிக்கக்கூடாது போன்ற முட்டாள்தனமான கருத்துகளை முன்வைப்பவர்கள் இக்கட்சியில் அல்லது கூட்டணியில் உள்ளனர்"

கண்னை முடி கொண்டு கூறை சொல்லதிர்கள், பெண்கள் ஆண்களுடன் பாருக்குச் சென்று குடித்த பிறகு தவறு நடக்காது என்பதற்கு எந்த உத் திரவதம் இல்லை,

Anonymous said...

DOes IV allow preferntial comments to balance chekoolar and modi supporters?

Anonymous said...

Why there is no good governance in India ?.

One single reason. People who vote based on religion or caste.

We must understand this basic truth and the reason for it.

Islam, Christianity and Marxism have a fundamental agenda. Conversion of the world to its view and influence and therefore domination. Everything inimical must be destroyed by violence, propaganda, fraud and whatever means required. This has been proved by history. Millions have been massacred.

Narendra Modi is seen as a tall, strong Hindu leader or someone who stands in the way of conversion. Thats why he is hated and the prime target.

Casteism is another demon amongst Hindus.

Once these dangers are eliminated, India will become a paradise. Of course, today's politicians will be out of business and therefore don't want this.

-Rudramurthy

cho visiri said...

Badri said....//ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான்//

And he says he does not believe in God.......

It is a pity.

-- Same name sake, now residing in Modi Land.

cho visiri said...

Badri said....//ஒரு பிராமணனாக நான் பிறந்திருப்பதால்தான்//

And he says he does not believe in God.......

It is a pity.

-- Same name sake, now residing in Modi Land.

Anonymous said...

Nan than adutha PM

Anonymous said...

Useless article in the garb of intelligent analysis. For India to progress, eliminate all reservations. Help should be given to all across the board,to ALL economically backward people,whether one is a Dalit, Muslim or a Brahmin. Vote bank politicis is the curse of this nation.
Funny, the author fails to be NAUSEATED with Islamic polices of the Muslim party. Being politically correct or valuing his neck, I presume!