பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, June 04, 2013

'புது' வசந்தம் - ஒரு பேட்டியின் கதை

ஒரு வாரமாக சுஜாதா பேட்டி பற்றி FBல் வந்துக்கொண்டு இருக்கிறது. பல இட்லிவடை வாசகர்கர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அதனால் அவர்களுக்கு உதவும் வகையில் இந்த தொகுப்பு. தொகுக்க உதவிய அந்த நல்ல உள்ளத்துக்கு நன்றி.

எச்சரிக்கை: பதிவு கொஞ்சம் பெரிசு. டைம் கிடைக்கும் போது படிக்கவும் !


பகுதி 1:
கே. என். சிவராமன் என்பவர் தினகரனில்

வரும் ஞாயிறு (02.06.2013) அன்று வெளிவரும் தினகரன் நாளிதழின் இணைப்பான வசந்தம் இதழில் அந்த பேட்டி வெளியாகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் காலமான பிரபல தமிழ் எழுத்தாளரின் மனைவி இந்த நேர்காணலை அளித்திருக்கிறார். ஒருவகையில் முதல் முறையாக அவர் மனம் திறந்து பேசியிருக்கிறார் என்று சொல்லலாம்.

’’அவரை விட்டு பிரியணும்னுதான் நினைச்சேன்... அம்மா மடில படுத்து பல நேரம் அழுதிருக்கேன்... அவரோட வாழ பிடிக்கலைனு கதறியிருக்கேன்... ஆனா, குழந்தைகளோட ஒரு பொண்ணு தனியா வாழறது நல்லதுக்கில்லைனு அம்மா தடுத்துட்டாங்க... அவங்களை சொல்லி குற்றமில்லை. அந்தக் காலம் அப்படி. இந்தக் காலம் மாதிரி சமூக சூழல் இருந்திருந்தா நிச்சயம் அவரை விட்டு பிரிஞ்சிருப்பேன்...’’

-----------

‘’அவரோட எழுத்துக்களை நான் படிச்சா திட்டுவாரு... சொல்லப் போனா புத்தகங்களை பெண்கள் படிக்கறதே அவருக்கு பிடிக்காது... சமையலறை, குடும்பத்தைத் தாண்டி பெண்கள் வெளிய வரக் கூடாதுங்கிறது அவர் கொள்கை...

----------

‘’அக்கிரகாரத்துல தன் பாட்டி வீட்லதான் அவர் வளர்ந்தாரு. அதனால அக்கிரகாரத்தை தாண்டி அவர் சிந்தனை வளரவேயில்லை. கடைசி காலம் வரைக்கும் அவருக்குள்ள இருந்தது அந்த அக்கிரகார சிறுவன்தான்...’’

இப்படி பல விஷயங்களை போட்டு உடைத்திருக்கிறார். தமிழகமே அந்த எழுத்தாளரின் நடைக்கு இன்றும் மயங்கியிருக்கிறது. அப்படிப்பட்டவரின் இன்னொரு முகத்தை முதல் முறையாக பதிவு செய்திருக்கிறார் அவர் மனைவி.

சக பயணியான Priya Kannan அவரை தேடிப் பிடித்து பேட்டி எடுத்திருக்கிறார்.

இந்த நேர்காணலை எப்படியெல்லாம் தமிழ்ச் சமூகம் புறக்கணிக்கப் போகிறது என்று அறிய ஆவல்.

பார்க்கலாம்.


பகுதி 2:
இந்த Teaser வந்த பிறகு பிரபலங்களின் மறுமொழிகள் சில


ஞாநி : யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் இவை எதுவும் புதிய தகவல்களல்ல. சக எழுத்தாளர்களுக்கும் கொஞ்சம் இதழாளர்களுக்கும் அவரை ஆராதிக்கும் உள்வட்டத்தினருக்கும் தெரிந்தவைதான். தனிப் பேச்சில் இப்படிப் பலரைப் பற்றி பலரும் பகிரும் செய்திகள் பல உள்ளன. என்றாலும் எழுத்தாளனும் சாதாரணன்தான் என்று தெரிந்துவிட்டால், இதர சாதாரணர்களிடம் குரைக்கும் உரிமையும் அதிகாரமும் போய்விடுமே என்ற அச்சத்தாலும் இனப்பாசத்தாலும் இதை பகிரங்கமாகப் பேசத் தய்ங்குவார்கள். மேற்படி கட்டுரை வெளியானபின்னர், நிச்சயம் எழுத்தாளனை, படைப்பு மனதை, எப்படி அதைப் புரிந்துகொள்ளவே முடியாத ஜன்மங்கள் மனைவியாகவும் உறவினராகவும் வந்து வாய்த்து சித்ரவதை செய்கின்றன என்பது பற்றிய தொடர் கட்டுரைகளையும் வாதப் பிரதிவாதங்களையும் எதிர்பார்க்கலாம்.

பகுதி 3:
மனுஷ்யபுத்திரன் பொங்கி எழுகிறார்

தமிழகத்தின் முன்னணி இதழ் ஒன்றில் வெளிவரப்போகும் பேட்டியை முன்கூட்டியே அந்தப் பத்திரிகையில் பணிபுரிகிறவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டு கடும் விவாதம் நடந்துகொண்டிருக்றது. சம்பந்தபட்ட நிர்வாகம் அவர் மேல் கடும் நடவடிககை எடுக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இது போல பத்திரிகை சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் நாளை முன்கூட்டியே வெளியே போகக்கூடாது அல்லவா?

விவாதத்தில் வாசகர்களுக்கு மனுஷ் பதில்கள் சில :

1. ஒரு பத்திரிகையின் ப்ரோமோஷனை அதன் நிர்வாகம்தான் செய்ய வேண்டும். வசந்தம் இந்தழுக்கு அவர்களது தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் விரிவான் விள்ம்பரங்கள் வருகின்ற்ன. சிவராமன் போன்ற ஒரு நபர் அவர்களுக்கு எதற்கு? இந்த நபர் செய்திருப்பது சம்பதப்பட்ட எழுத்தாளர்மீது செய்திருக்கும் அவதூறு என்று கேள்விப்படேன்.

2. சம்பந்தபட்டவர்கள் அப்படி ஒரு பேட்டியை தாங்கள் கொடுக்கவே இல்லை என்று என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். அநேகமாக சிவராமன் அவதூறு வழக்கை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. தனது கேவலமான எழுத்து அரசியலுக்காக் தினகரன் போன்ற ஒரு இதழை சிவராமன் பயன்படுத்த முயற்சிக்கிறார்.

3. ஒரு பத்திரிகையின் ப்ரோமோஷனை அதன் நிர்வாகம்தான் செய்ய வேண்டும். வசந்தம் இந்தழுக்கு அவர்களது தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் விரிவான் விள்ம்பரங்கள் வருகின்ற்ன. சிவராமன் போன்ற ஒரு நபர் அவர்களுக்கு எதற்கு? இந்த நபர் செய்திருப்பது சம்பதப்பட்ட எழுத்தாளர்மீது செய்திருக்கும் அவதூறு என்று கேள்விப்படேன்.

ஒரு வாசகரின் கேள்வி:

/-- சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்கிற ரீதியில் மனுஷ்யபுத்திரன் போடும் மிரட்டல் நிலைத்தகவல்கள் சுஜாதாவின் பிம்பத்தை கட்டிக்காக்கும் பெருமுயற்சியாகத்தான் தோற்றமளிக்கின்றன. --/

சுஜாதா தானே அவருடைய ப்ராடக்ட். அதன் பரிசுத்தத்தை இழக்க மனுஷ துணிவாரா..!

பகுதி 4:
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் அப்டேட் செய்கிறார்...


திருமதி சுஜாதா அவர்கள் தனிமையிலும் மிகுந்த மன அழுத்தத்திலும் இருக்கிறார்.

தமிழ் எழுத்துலகப் பிதாமக பிரபல புருஷன் மறைந்து விட்ட பிறகு, அவருக்கென்று சில தனிப்பட்ட பிடிமானங்கள் இன்னமும் சரியாக வாழ்க்கையில் அமையவில்லை. அது ஒரு துரதிர்ஷ்டமே. இதெல்லாம் அவரவர் தனிப்பட்ட கொடுப்பினை.

இப்படிப்பட்ட நிலையில், பிரபலமாக இருந்த கணவன் மறைந்துபோய் 'நம் கதி இப்படி ஆகிவிட்டதே' என்கிற சுய பரிதாபமும், பச்சாதாபமும் சுரப்பது வழக்கமே.

அந்த 71 வயது மூதாட்டியைப் பேட்டி என்கிற பெயரில் 'ஆஃப் தி ரெகார்ட்' சொல்லப்பட்ட சில பல பர்சனல் விஷயங்கள் தினகரனின் 'வசந்தம்' இதழில் வரும் ஞாயிறன்று பூதாகாரமாக எழப் போகின்றன என்பது கேட்டு அதிர்ந்து போய் அவர்களை பெங்களூரிலிருந்து தொடர்பு கொண்டேன்.

நான் தூக்கத்திலும் மறந்துபோகாத அதே போன் நம்பர். அதே உற்சாகமான வெண்கலக்குரல்.

ஆனால் "என்னதான் நடந்தது?" என்று நான் கேட்கக் கேட்க, குரல் உடைந்து அழவே ஆரம்பித்தார்.

சுஜாதா மன்னி எப்போதுமே பயங்கர வெகுளி. எதை எப்போது யாரிடம் பேசுவது என்பது தெரியாத சூது வாது தெரியாத ஜென்மம். ஒரு விஷயத்தில் சொல்லப்போனால் அசடும் கூட. நான் இதை மிகுந்த உரிமையுடன் என் அக்காவைக் கண்டிப்பதுபோல் சொல்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி.

"எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" அதையும் சொன்னார். அப்படிப்பட்டவர்.

ரைட்டர் சுஜாதாவோடு நாங்கள் பல முறை சந்தித்திருக்கும்போதே திருமதி சுஜாதா கொஞ்சம் 'அப்படி இப்படி' ஆனால் நகைச்சுவையாகப் பேசியவர்தான். மடியில் கனமில்லாமல், மனதில் களங்கமில்லாமல், சரளமாக ஜாலியாகப் பேசக்கூடியவர். புருஷன் பக்கத்தில் இருக்கும்போது என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம்.

ஆனாலும், ஒருவிதமான மன அமைதியில்லாமல் இப்போது தவிக்கும் மூதாட்டியை இப்படியெல்லாம் பேட்டி என்ற பெயரில் அசிங்கப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எழுத்தாளர் சுஜாதா பிராமின் என்பதால் இப்படிச் செய்கிறார்களா? அல்லது கேட்பார்தான் யாருமில்லையே என்று அவர் மீதும் அவர் குடும்பத்தார் மீதும் சேற்றை வாரி இறைக்கிறார்களா?

தெரியவில்லை. ஆனால் மனசு கனக்கிறது.

"நான் தான் அடுத்த சுஜாதா" என்று இணையத்தில் பல பேக்குகள் பெனாத்திக் கொண்டிருக்கின்றன. எனக்குத் தெரிந்தவரை ஒரே ஒரு சுஜாதா தான். அது என் குரு தான். குருவிடம் எதெல்லாம் தப்பு என்று ஆராயும் அளவுக்கு நான் ஒரு முட்டாள் சிஷ்யன் இல்லை. நாங்களெல்லாம் சுண்டைக்காய் என்றால், அவர் ஒரு எவரெஸ்ட்.

அவ்வளவுதான்.

சுஜாதா நினைவை பூஜிக்காவிட்டாலும், அசிங்கப்படுத்தாமல் இருக்கும் அளவுக்குக்கூட நமக்கு கலாசாரம், பெருமை, அறிவு இல்லையா?

வெட்கம்.

வரவர தமிழில் எழுதவே வெட்கப்படவேண்டும்போல் இருக்கிறது ;-(

திரும்பவும் ஞாநி
//சுஜாதா மன்னி எப்போதுமே பயங்கர வெகுளி. எதை எப்போது யாரிடம் பேசுவது என்பது தெரியாத சூது வாது தெரியாத ஜென்மம். ஒரு விஷயத்தில் சொல்லப்போனால் அசடும் கூட. நான் இதை மிகுந்த உரிமையுடன் என் அக்காவைக் கண்டிப்பதுபோல் சொல்கிறேன். வீட்டுக்கு வீடு வாசப்படி..எந்தப் பத்திரிகை, என்ன பேட்டின்னு கூட சரியா விசாரிக்காம சும்மா பேசிண்டிருந்தேன், கொஞ்சம் உளறவும் செஞ்சேன்" அதையும் சொன்னார். அப்படிப்பட்டவர்.// - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.
அன்புள்ள ராம், ஒரு பத்திரிகைக்கார் பேட்டிக்கு வந்திருக்கும்போது எதையும் உளறிவிடக் கூடாது என்ற அனுபவ அறிவு சுஜாதாவுக்கு அவரது கணவர் எழுத்தாளர் சுஜாதா என்கிற ரங்கராஜனுடன் உடன் இருந்த காலங்களிலேயே நன்றாகத்தெரிந்திருக்கக்கூடிய அளவுக்கு அவர் அறிவுக் கூர்மை உடையவர்தான். இப்போது தன்னை மறந்து ஏதேனும் சொல்லியிருந்தாலும் கூட அடுத்த சில மணி நேரத்திலேயே சில நாட்களிலேயே அதை உணர்ந்துவிடக் கூடியவரும்தான். அந்த பத்திரிகையாளரை அழைத்து சில விஷயங்கள் மட்டும் ஆஃப் தி ரிகார்ட் என்று சொல்லத் தேவையான அறிவு உடையவர்தான் அவர். நிஜமாகவே அவர் தான் சொன்ன சில விஷ்யங்கள் அச்சில் வரத்தேவையில்லை என்று உங்கள் போன் காலுக்குப் பின்னர் நினைத்தாலும் கூட, உடனே அந்தப் பத்திரிகைக்கு போன் செய்து அது அப்படி வெளிவரக் கூடாது என்று சொல்ல முடியும். அப்படி எதுவும் அவர் செய்யாதபட்சத்தில் எல்லாம் அறியாமை என்று எளிதாக ஒதுக்கிவிடமுடியாது. நீங்கள் சுஜாதா என்கிற ரங்கராஜன் மீது வைத்திருக்கும் மதிப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. உங்கள் அன்பும் மரியாதையும் அவருடைய எழுத்துத்திறன் உங்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம். அவர் மனைவியின் கருத்துகள் என்னவாக இருந்தாலும், அவை அவரை ஒரு மனிதராக அவர் மதிப்பிட்டிருக்கும் விதத்தின் வெளிப்பாடு. உலக அளவில் பொது வாழ்வில் இருப்போரின், குறிப்பாக படைப்பாளிகளின் படைப்பு காட்டும் உலகத்துக்கும் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை காட்டும் உலகத்துக்கும் இருக்கும் ஒற்றுமைகள், முரண்பாடுகள் எப்போதும் பகிரங்க ஆய்வுக்கு உட்டபடுத்தப்பட்டே வந்துள்ளன. இதற்கு தமிழ் எழுத்தாளர்களும் விதிவிலக்கல்ல. சுஜாதா என்கிற ரங்கராஜனை நான் எழுத்தாளராகவும் அறிவேன் மனிதராகவும் அறிவேன். பல இதர எழுத்தாளர்களைப் போலவே அவருடைய இரு முகங்கள் பற்றியும் எனக்கு சில வியப்பும் மரியாதைகளும், சில கடும் விமர்சனங்களும் உண்டு. இது குறித்து பதைபதைக்க தேவையில்லை. யாரைப் பற்றியும் உண்மைக்குப் புறம்பானவை வெளியானால் மட்டுமே நாம் கண்டிக்க வேண்டும். அன்புடன் ஞாநி.

//பேசிட்டு சொன்னேன் இதெல்லாம் பெர்சனலா சொன்னது .எழுதவேண்டாம்ன்னு சொன்னேன்.எழுதிட்டாப் போல இருக்கு.என்று வருத்தப் படுகிறார்.பேட்டி எடுத்தவர் பிரியா கண்ணன்//- சுப்ரஜா ஸ்ரீதரன்.
இது உண்மையானால் பத்திரிகை அறத்துக்கு விரோதமானது. பிரியா கண்ணன்தான் தன் தரப்பு நியாயத்தை விளக்க வேண்டும். பேட்டியாக இருந்தால்தான் இந்த அறம் செல்லுபடியாகும். பல வாழ்க்கை சரித நூல்களில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் இல்லாமலே பல சர்ச்சைக்குரிய் செய்திகளை மெய்யானவை என்று ஆய்வாளர்கள் தமக்கு உறுதிப் படுத்திக் கொண்டு எழுதும் வழக்கம் உலக அளவில் உண்டு. எம்.எஸ். பற்றிய வரலாற்று நூலை எழுதிய டி.ஜே.எஸ் ஜார்ஜ், எம்.எஸ்சின் இளமைக்கால( நிறைவேறாத) காதல் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார். - ஞாநி

வாசகர் ஒருவரின் கமெண்ட்
/-- சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்கிற ரீதியில் மனுஷ்யபுத்திரன் போடும் மிரட்டல் நிலைத்தகவல்கள் சுஜாதாவின் பிம்பத்தை கட்டிக்காக்கும் பெருமுயற்சியாகத்தான் தோற்றமளிக்கின்றன. --/

சுஜாதா தானே அவருடைய ப்ராடக்ட். அதன் பரிசுத்தத்தை இழக்க மனுஷ துநிவாரா...!பகுதி 5
ஜெயமோகன் சும்மா இருப்பாரா அவருடைய பங்கு இதோ... வழக்கம் போல வாசகர் கேள்வி பதில்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம்..

திருச்சியில் தங்களை சந்தித்த பின் இப்போது தான் பேசுகிறேன்.. நலமா?

சமீபமாக எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் எப்படியெல்லாம் புறக்கணிக்கப்படுகிறான் என்பது குறித்து பல்வேறு கருத்து மோதல்கள் இணையம் எங்கும் தெறிக்கின்றன.. உங்கள் கருத்துக்களுடன் நான் முற்றிலும் உடன்படுகிறேன்.. பல மனிதர்கள் அறிஞர்களை அல்லது ஏதேனும் ஒரு துறை வல்லுனரை சந்திக்கும் வேளையில் தங்களுக்கு தெரிந்த அச்சு பிச்சு தகவல்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு நகரவே முயல்கின்றனர்.. உண்மை..

சிறிது நாட்களுக்கு முன் சுஜாதா குறித்த பதிவுகளும், பதில்களும் அளித்திருந்தீர்கள்.. சுஜாதா தீவிர இலக்கியம் படைப்பதற்கான அத்தனை தகுதிகள் இருந்தும் அதை முயலவில்லை என்றீர்கள். சுஜாதாவின் எழுத்து காலம் தாண்டி நிற்குமா என்பது குறித்து நான் பேச போவதில்லை..

அவரது வாசகனாக சொல்கிறேன்.. சுஜாதா ஒரு கதாநாயகன் போல் எல்லோர் மனதிலும் இருந்தார்.. இதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. எழுத்தாளர் என்றவுடன் பலரும் அறிந்த மிக சில தமிழ் எழுத்தாளர்களில் அவரும் ஒருவர்..

வெகுஜனம் விரும்பும் படைப்பை நோக்கியே தன்னை திருப்பிக்கொண்டவர். அவர் படைத்த சினிமாக்களில் கூட அந்த பட இயக்குனரை தாண்டி சுஜாதா டச் இருப்பதை நாம் உணரலாம். அத்தகைய ஆளுமையை பற்றி அவர் மனைவி அளித்த பேட்டி இந்த வாரம் வெளியாக உள்ளது..


......வரும் ஞாயிறன்று இந்த பேட்டி தினகரனில் வெளியாகிறது.. இது என்ன? ஒரு எழுத்தாளர்.. அதுவும் இறந்து ஐந்து ஆண்டு ஆனா பின் நொந்துகிடக்கும் அவர் மனைவியிடம் பேட்டி எடுத்து மக்கள் அவர் என கருதி வைத்துள்ள பிம்பத்தை உடைக்க ஏன் இந்த ஆசை?உங்கள் பதிவொன்றில் சுஜாதா மரணத்தை எதிர்கொண்ட விதம் பற்றி சொல்லி இருந்தீர்கள்.. அதை படித்து விட்டு தூங்க முயன்றும், முடியவில்லை,.. அவரது தீவிர ரசிகன், வாசகன் என்ற முறையில் நான் வைக்கும் விண்ணப்பம் இது.. சுஜாதா என்னும் ஆளுமை வரும் ஞாயிறன்று நொறுங்க போவதை நினைத்தால் மனம் கனக்கிறது..

இலக்கியவாதியோ இல்லையோ.. சுஜாதா ஒரு தலைமுறை நாயகன் அல்லவா? அவருக்கு இப்படி நம் கண் முன் ஒரு அவமானம் நிகழ வேண்டுமா? இதை சக எழுத்தாளர்கள் தடுக்க முடியுமா? சங்கங்கள் இதை கவனிக்குமா?

- ஸ்ரீகாந்த்

அன்புள்ள ஸ்ரீகாந்த்,

நீங்கள் மிகவும் இளைஞர். ஆகவேதான் இந்தப்பதற்றம். யோசித்துப் பாருங்கள். இந்த வயதில் நீங்கள் வாழ்க்கையைப்பற்றி கொண்டுள்ள ஏராளமான நம்பிக்கைகள் வரும் வருடங்களில் அழியப்போகின்றன. விளைவாக நீங்கள் உடைந்து மறு ஆக்கம் பெறுவீர்கள். அந்த நிகழ்வுகள் மூலமே உங்களுடைய உண்மையான ஆளுமை உருவாகி வரப்போகிறது. அரசியல் நம்பிக்கைகள், ஒழுக்க நம்பிக்கைகள், தத்துவங்கள் பற்றிய மன உருவகங்கள் எல்லாமே மண்ணில் கால் பதிக்கப் போகின்றன. அதன் வழியாக நீங்கள் மதிக்கும் பலர் மதிப்பை இழப்பார்கள். பலர் புதிய வெளிச்சத்தில் கண்களுக்குத் தெரிவார்கள்

நம் இளமையில் கையை விட்டு சைக்கிள் ஓட்டும் ஒரு மாமாவை கண்டு வியந்து அவரை ஆதர்ச புருஷராக நினைத்திருப்போம். இன்று அப்படி இல்லை அல்லவா? இதுதான் வாழ்க்கையின் பரிணாமம். ஆகவே பிம்ப உடைவுகள் பற்றி பதற்றம் வேண்டாம். அது ஓர் இயல்பான நிகழ்வு

சுஜாதா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவரது பிம்பம் ஒன்று உங்கள் மனதில் உருவாகி வந்துள்ளது. அதை கொஞ்சம் அவர் உருவாக்கினார். கொஞ்சம் ஊடகங்கள் உருவாக்கின. கொஞ்சம் நீங்களே உருவாக்கி கொண்டீர்கள் அது உடையாமல் இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள். அப்படி உடையாமல் அதை பார்த்துக்கொள்ள வேண்டியது உலகத்தின் கடமை என நினைக்கிறீர்கள், இல்லையா? நடக்கிற காரியமா அது?

ஓர் இலக்கிய வாசகனாக நீங்கள் உண்மையின் பக்கம் நிலைத்திருக்க வேண்டும் இல்லையா? உண்மையை வழிபட வேண்டும். உண்மையை தேடவேண்டும் இல்லையா? பிறிதொருவர் பற்றிய உண்மையை இந்த அளவுக்கு அஞ்சும் நீங்கள் எப்படி உங்களைப் பற்றிய உண்மையை தேடிச்செல்ல முடியும்? எப்படி அதை எதிர்கொள்ள முடியும்? அப்படி முடியாவிட்டால் நீங்கள் வாசிக்கும் இலக்கியத்திற்கு என்னதான் அர்த்தம்?

நான் சில மாதங்கள் முன்பு ஒரு கட்டுரையில் சுஜாதாவின் வீட்டுக்குச் சென்றபோது அவர் பெரிய நாமம் தரித்து வந்ததைக் கண்டதாக எழுதியிருந்தேன். அப்போது இணையத்தில் பலர் என்னை வசைபாடினர். அவதூறு செய்கிறேன் என்றும், சுஜாதா மிக நவீனமானவர் என்றும் வாதாடினர். ஆதாரம் காட்ட முடியுமா என்று கூவினர். அவர்கள் இப்போது ஒன்றும் சொல்லப்போவதில்லை. நான் எந்நிலையிலும் மனசாட்சிக்கு தெரிந்த உண்மைகளை மட்டுமே சொல்கிறேன் என்று இப்போது சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் அது என் இலக்கியக் கடமை. அதைச்சொல்ல தைரியமில்லா விட்டால் இந்த வேலையை எதற்காகச் செய்ய வேண்டும்?

நானறிந்தவரை சுஜாதா மிக ஆசாரமானவ்ர். தென்கலை அய்யங்காராக மட்டுமே தன்னை உணர்ந்தவர். அது ஓர் உண்மை. அதை எதிர்கொள்ள ஏன் அஞ்சவேண்டும்? இப்போது அவரது மனைவி அவரைப்பற்றிச் சொல்லும் எல்லாமே உண்மையாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் என் அப்பா அப்படித்தான் இருந்தார். சுஜாதா அவரது தலைமுறை. அவரது தலைமுறையில் அப்படி இல்லாதவர்கள் மிகமிக அபூர்வம். அதற்காக நான் என் அப்பாவை வெறுத்துவிட்டேனா என்ன? அவரை ஆராதிப்பதை விட்டுவிட்டேனா என்ன? அப்படி வெறுக்க ஆரம்பித்தால் சென்ற தலைமுறையில் எத்தனை பேர் நமக்குத் தேறுவார்கள்?

தலைமுறைகள் தோறும் மதிப்பீடுகள் மாறுகின்றன. நம்முடைய அடுத்த தலைமுறைக்கு நாம் பிற்பட்ட மதிப்பீடு கொண்டவர்களாகத்தான் தெரிவோம். மனிதர்களை அவர்கள் வாழ்ந்த காலச்சூழலை வைத்துப் புரிந்து கொண்டால் இத்தகைய மனக்குழப்பங்களில் இருந்து தப்ப முடியும். எனக்கு சுஜாதா ஒரு பழைமைவாதி என நன்றாகவே தெரியும். அது எனக்கு அவர் மீதிருந்த மதிப்பை சற்றும் குறைக்கவில்லை. எனக்கு அவர் இலக்கியவாதி அல்ல, ஆனால் ஒரு வகையில் அவர் என் ஹீரோதான்.

அப்படியென்றால் சுஜாதாவின் நவீனத்துவ முகம் என்ன நடிப்புதானா? இல்லை. இலக்கியவாதியின் அகம் செயல்படும் விதமே அதுதான். படைப்புகளில் சுதந்திரப் போராட்டத்தை கிண்டலடித்த புதுமைப்பித்தன் நிஜ வாழ்க்கையில் சுதந்திரப் போரில் ஈடுபட விரும்பினார் என அரை நூற்றாண்டுக்குப்பின் அவரது மனைவி வெளிபடுத்திய கடிதங்கள் [கண்மணி கமலாவுக்கு ]காட்டின . சுதந்திரப்போரில் ஈடுபட முடியாமல் அவரை வாழ்க்கையும் நோயும் கட்டிப்போட்டன. ஆகவே அவர் அதை தன் ஆக்கங்களில் நக்கலாக மாற்றி வெளிப்படுத்தினார்

ஒழுக்கவாதியான சுந்தர ராமசாமி ஒழுக்க மீறல்கள் மீது ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தார். ஒழுக்க மீறலை வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜி.நாகராஜனின் அகம் ஒழுக்கம் மீதே படிந்திருந்தது. குறத்தி முடுக்கை அப்படித்தான் புரிந்து கொள்ள முடியும். எழுத்தாளனின் எழுத்து அவனை அப்படியே காட்டுவதில்லை. அவனுடைய ஆசைகளை, கனவுகளை, எதிர்பார்ப்புகளைக்கூடத்தான் அது காட்டுகிறது

நம் முந்தைய் தலைமுறையில்தான் அறிவியல் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது என்பதை காணலாம். இன்று எழுபது, எண்பது வயதானவர்களிடம் இந்த இரட்டைநிலையைக் காணலாம். அவர்களுக்கு அவர்கள் வளர்ப்பு காரணமாக சாதி மதம் சார்ந்த ஆசாரவாத நோக்கு இருக்கும். கூடவே நவீன அறிவியல் வழிபாட்டு நோக்கும் இருக்கும். பிள்ளைகள் ‘சயன்சும் கணக்கும்’ படிக்க வேண்டுமென விரும்புவார்கள். சுஜாதாவின் அகம் ஆசாரமான சூழலில் உருவாகி நவீனத்துவம் நோக்கி எம்ப முயன்றது என்று சொல்லலாம். அவர் விஞ்ஞானியாக ஆக முயன்ற ஆசார வைணவர்.

இத்தகைய இருபாற்பட்ட ஊசலாட்டமே எந்த படைப்பாளியையும் உருவாக்குகிறது. அதுவே அவரை நுணுக்கமாக அவதானிக்கச் செய்கிறது. திண்ணையில் ஏறி நின்று ஊர்வலம் பார்ப்பதைப்போல என்று சொல்லலாம். ஊர்வலத்தில் செல்பவர்களுக்கு அதைப்பார்க்கும் கண் இருப்பதில்லை. சுஜாதா ஏறி நின்ற திண்ணை வைணவம். அவர் அவதானித்த ஊர்வலம் அறிவியல்.

எழுத்தாளனிடம் எழுத்தை எதிர்பார்க்க பழகுங்கள். அவனுடைய எழுத்தைப் புரிந்து கொள்ள அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை கவனியுங்கள். அந்தரங்க வாழ்க்கையை வைத்து எழுத்தாளனை மதிப்பிடாதீர்கள். அப்படி மதிப்பிடப்போனால் உலகில் மிக மிகச் சில எழுத்தாளர்களே எஞ்சுவார்கள். எழுத்தாளனின் அகம் கொந்தளிப்புகளும் ஊசலாட்டங்களும் நிறைந்தது. அவனுடைய நிலையின்மையே அவனை எழுத்தாளனாக ஆக்குகிறது என்று புரிந்து கொள்ளுங்கள்

கலைஞர்களை தத்துவவாதிகளுடன் ஒப்பிடக்கூடாது. தத்துவஞானியின் ஒருமையும் தர்க்க ஒழுங்கும் கொண்ட நோக்கு அவனிடம் இருக்காது. கலைஞனை அரசியல் செயல்பாட்டாளர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒற்றை நோக்கும் அர்ப்பணிப்பும் தைரியமும் இருக்காது. கலைஞர்களை சாதாரணமான நல்ல மனிதர்களுடன் ஒப்பிடக்கூடாது. அவர்களிடம் சாதாரண மனிதர்களின் எளிய வாழ்க்கை நோக்கு இருக்காது

கலைஞனிடம் மேலே சொன்ன எவரிடமும் இல்லாத ஒரு விஷயம் இருக்கிறது. மொழியைக் கருவியாக்கி ஆழ்மனதுக்குள் செல்லும் நுட்பம். ஆகவேதான் அவர்கள் எவரை விடவும் கலைஞன் காலத்தில் வாழ்கிறான். சமூகத்தின் ஆழ்மனம் கலைஞன் வழியாகவே முன் செல்கிறது. கலைஞன் மட்டுமே ஒரு சோற்றுப்பதம் கொண்டு ஒரு பானைச்சோற்றை மதிப்பிட முடிகிறது. அதற்காகவே நாம் இலக்கியத்தை வாசிக்கிறோம்

நாம் எழுத்தாளர்களிடம் அவர்கள் எழுத்தை விட்டுவிட்டு என்ன செய்தார்கள் என்பதையே பார்க்கிறோம். சுதந்திரப்போரில் ஈடுபட்டார், ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். அரசியல் போர்களில் முன்னணி வகித்தார், மக்கள் சேவை ஆற்றினார், ஆகவே நல்ல எழுத்தாளன் என்கிறோம். முற்போக்குச் சிந்தனையாளர், நல்ல மனிதர், பழகுவதற்கு இனியவர் ஆகவே நல்ல எழுத்தாளர் என்கிறோம். இவையெல்லாம் அல்ல எழுத்தாளன். எழுத்துதான் எழுத்தாளன்.

இந்த அடிப்படைகள் இலக்கியம் வாசிப்பவனுக்கு இயல்பாகவே பிடி கிடைக்கும். உலக இலக்கியவாதிகளில் சிலரையேனும் அவதானித்திருப்பவனுக்கு புரியும் . மலையாளம் போன்ற சூழல்களில் இதை மீண்டும் மீண்டும் பேசி நிறுவிய விமர்சகர்களும் இலக்கிய இதழாளர்களும் உண்டு. தமிழில் நமக்கு இலக்கிய அடிப்படைகளை எவருமே சொல்லித் தருவதில்லை. நாமே புரிந்துகொள்ளும் அளவுக்கு வாசிப்பும் இல்லை. ஆகவேதான் எழுத்தாளனை நோக்கி ‘நீ என்ன சமூக சேவை செய்தாய்?’ என்றெல்லாம் கேட்கும் கோழிமுட்டை மொண்ணைத்தனம் நமக்கு வாய்த்திருக்கிறது

சுஜாதாவின் மனைவி வெளிப்படுத்தியிருக்கும் இந்தச் செய்திகளினால் என்ன ஆகப்போகிறது? சுஜாதா தமிழின் உரைநடையை நவீனப் படுத்திய முக்கியமான நடையாளர் என்பது இல்லை என்றாகி விடுமா? இல்லை அவர் எழுதிய நல்ல சிறுகதைகளும் நாடகங்களும் மோசமானவை ஆகிவிடுமா? இல்லை அவர் தமிழின் பெரும் பத்திரிகை சூழலில் அறிவியலை அறிமுகம் செய்தவர் என்பது மறைந்து விடுமா?

நான் அவரை என் நாயகனாகவே இன்றும் வைத்திருக்கிறேன். அதற்குக் காரணம் அவரது எழுத்துக்கள். அவரது எழுத்துக்கள் உள்ளவரை அவர் அப்படித்தான் நீடிப்பார். அவர் அவற்றை எழுதவில்லை சமையற்காரன் தான் எழுதினார் என்று நிரூபிக்கப் படுமானால் அதை மறுபரிசீலனை செய்வேன்

ஜெ

பகுதி 6:
எழுத்தாளர் சுஜாதா மனைவி பேட்டி பலருக்கு ஆச்சரியம், சிலருக்கு எமாற்றம்!

 

 


பகுதி 7:
கே. என். சிவராமனின் நன்றியுரை...


ஆனால், கவிஞர் மனுஷ்யபுத்திரன் இல்லையென்றால் இந்த நேர்காணல் சாத்தியமாகியிருக்காது. அவருக்கு நன்றி.

நாளை (02.06.13) ‘தினகரன்’ நாளிதழுடன் வெளியாகும் ‘வசந்தம்’ இதழில் திருமதி சுஜாதாவின் பேட்டி வெளியாகிறது.

குறிப்பிட்ட தேதியில் வேறொரு வேலை வந்துவிட்டதால் மறுநாள் வரச் சொன்னார் திருமதி சுஜாதா. புகைப்பட கலைஞருடன் சொன்ன நேரத்துக்கு சென்றார் ப்ரியா.

இயல்பான புன்னகையுடன் வரவேற்றவர், புகைப்படம் எடுக்கவும் அனுமதித்தார். ஒளிவு மறைவின்றி தன் வாழ்க்கையை நேர்காணலாகவும் அளித்தார்.

ஆஃப் த ரிக்கார்ட் ஆக எதையும் அவர் பேசவில்லை. பேசியதை எழுத வேண்டாம் என வலியுறுத்தவும் இல்லை.

திருமதி சுஜாதா அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பும் என்பதால் எங்கள் எம்டி-யிடமும், கதிர் சாரிடமும் முழு விவரமும் சொன்னோம்.

திருமதி சுஜாதாவே மனம் திறந்து பேசியிருப்பதால், பிரசுரிக்கலாம் என்றார்கள்.

அதன் பின்னரே எடுத்த பேட்டியை ப்ரியா எழுத ஆரம்பித்தார். பல இடங்கள் கடுமையாக இருந்தன. எனவே தொலைபேசியில் திருமதி சுஜாதாவை தொடர்பு கொண்டு, ‘மேடம், நேர் பேச்சில் நீங்கள் பேசியதை அப்படியே பிரசுரம் செய்தால் உங்களுக்கு சிக்கல் வரும். பரவாயில்லையா?’ என்று கேட்டிருக்கிறார்.

சட்டென்று சிரித்துவிட்டவர், ‘பரவாலம்மா... நான் என்ன பேசினனோ அதை அப்படியே எழுது...’ என்றார்.

அப்படியும் சில சொற்கள் கடுமையாக இருக்கவே, திருமதி சுஜாதாவை மீண்டும் தொடர்பு கொண்டு அவரது ஒப்புதலுடன் வார்த்தைகளின் வீரியத்தை குறைத்திருக்கிறார். ஆனால், பொருள் மாறவில்லை.

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல. ஏழெட்டு முறை அவரிடம் பேசி, திருத்தி, அதன் பின்னரே லே அவுட் ஆரம்பமானது.

அச்சுக்கு செல்வதற்கு முன்னர் கூட அவரிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது.

இவ்வளவையும் இங்கு குறிப்பிட காரணம், இது கற்பனை பேட்டி அல்ல என்பதை வலியுறுத்தத்தான். தவிர, 14 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் விற்பனையாகும் ‘தினகரன்’ இதழில் அப்படியெல்லாம் கற்பனையில் ஒரு பேட்டியை பிரசுரித்து விடவும் முடியாது.

இது புரியாமல் ஒருவர் முகநூலில் பொங்கியிருந்தார். இவரது அச்சத்தை புரிந்து கொள்ள முடிகிறது. தனது பிழைப்பே கெட்டு விடுமோ என அந்த மனிதர் பயந்ததில் வியப்பொன்றும் இல்லை.

எனவேதான் ’இப்போதுதான் அவரிடம் பேசினேன். தான், அப்படியொரு பேட்டியே தரவில்லை என்று சொல்லியிருக்கிறார்...’ என்று ஆவேசத்துடன் அந்த மனிதர் மறுமொழி எழுதியிருந்ததை பார்த்து புன்னைக்க முடிந்தது.

அதேபோல் வரவிருக்கும் இதழில் இடம்பெறும் பேட்டியை குறித்து முன்கூட்டியே சிவராமன் டீசர் வெளியிட்டிருப்பது தவறு. இப்படி செய்வது அறமல்ல. அலுவலக ரகசியங்களை இதுபோல் வெளியே சொன்ன பலர், வேலையை விட்டு நீக்கப்பட்டிருக்கிறார்கள். சிவராமனின் வேலையும் போகப் போகிறது. அவதூறு வழக்கை எதிர் கொள்ள போகிறார்...

என்றெல்லாம் நிமிடத்துக்கு ஒரு ஸ்டேட்டஸை அவர் இட்டபோதும் ரசிக்க முடிந்தது.

இந்த ரசனையும், புன்னகையும் மறுநாளே மனம் விட்டு சிரிக்கும் விஷயமானது. இதற்கு வித்திட்டவரும் அதே ஸ்டேட்டஸ் ஆசாமிதான்.

ஒரு வார இதழில் பத்தி ஒன்றை இவர் எழுதி வருகிறார். அந்த வார இதழும் தினகரன் குழுமத்தை சேர்ந்ததுதான். வாரம்தோறும் திங்களன்று வெளியாகும் இதழ் அது. அதில், வரும் இதழில், தான் எதைக் குறித்து எழுதியிருக்கிறோம் என்பதை ஸ்டேட்டஸ் ஆக போட்டிருந்தார்! அதுவும் இதழ் வருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு!!

இதன் பெயர் டீசர் அல்ல!! இப்படி செய்ததும் அறத்துக்கு புறம்பானதல்ல!!!

இதைப் பார்த்த பிறகு வடிவேலுவின் ரத்தம் - தக்காளி காமெடிதான் நினைவுக்கு வந்தது.

இன்னொருவர், ‘அசடு’, ‘ஜென்மம்’, ‘தனிமையின் விரக்தியில் புலம்பியதை பேட்டியாக்கியிருக்கிறார்கள்...’ என்றெல்லாம் சகட்டுமேனிக்கு திருமதி சுஜாதா மீது புழுதி வாரி இறைத்திருக்கிறார். அவருக்கு ஒரு வார்த்தை. ஒருவரை உயர்த்தி பேச வேண்டும் என்பதற்காக அடுத்தவரை தாழ்த்தாதீர்கள்.

டீசர் வெளியான அன்றும் திருமதி சுஜாதாவிடம் பேசினோம். ‘காலைலயே தகவல் வந்துடுச்சும்மா... ஒண்ணும் பிரச்னையில்லை...’ என்றார்.

இதுதான் திருமதி சுஜாதா.

நாளை அவரது பேட்டியை படித்துவிட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

குறிப்பாக உங்கள் நன்றியை கவிஞர் மனுஷ்யபுத்திரனுக்கு தெரியப்படுத்துங்கள். சம காலத்தில் வாழும் அறச்சீற்றமிக்க கவிஞர்களில் இவரே முதன்மையானவர். சமூக அவலங்களின் மீதான கோபத்தை விருப்பு, வெறுப்பு இன்றி விமர்சனம் செய்வதையே தன் வாழ்நாள் கடமையாக கொண்டிருக்கிறார். இதற்காகவே நாள்தோறும் தொலைக்காட்சிகளில் தோன்றி விவாதிக்கவும் செய்கிறார்.

இவரால்தான் இந்த பேட்டி சாத்தியமானது. இவரால்தான் திருமதி சுஜாதா வாழ்ந்த வாழ்க்கை முதன் முறையாக வெளிச்சத்துக்கும் வருகிறது.

தனது ‘உயிர்மை’ பதிப்பகம் சார்பில் இவர் வெளியிட்டுள்ள ’என்றும் சுஜாதா’ நூல்தான் இப்படியொரு நேர்காணலை செய்ய வேண்டும் என்ற விதையையே விதைத்தது.

‘நீங்க எல்லாருக்கும் ரொம்ப நல்லவர் - உங்க மனைவிக்கும், குழந்தைகளுக்கும் தவிர என்று அண்மையில் ஒருமுறை அவள் சொன்னது உண்மைதான்...’ (பக்கம் 23).

‘வீட்டுக்குனு, குழந்தைகளுக்குனு எதிர்கால திட்டம் எதுவும் அவருக்கு கிடையாது...’

‘நான் ஒரு துருவம்... அவர் ஒரு துருவம்தான்...’ (பக்கம் 29).

என்றெல்லாம் பல விஷயங்களை அந்தப் புத்தகம் நேர்மையாக பதிவு செய்திருக்கிறது. மனுஷ்யபுத்திரன் பதிப்பாளராக இருப்பதாலேயே இது சாத்தியமானது.

இதற்கு பின்னால் என்ன இருந்தது என்பதைதான் திருமதி சுஜாதா வசந்தம் இதழில் விளக்கியிருக்கிறார்.

பெரும் கோபமும், பெரும் கருணையும் கொண்ட கவிஞர் மனுஷ்யபுத்திரன் வாழும் காலத்தில் நாங்களும் பத்திரிகையாளர்களாக இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம். — with Priya Kannan.


யாராச்சும் சோடா கொடுங்க ப்ளீஸ்...மூச்சு வாங்குது :-)

21 Comments:

Anonymous said...

இட்லி வடை...
உமக்கும் சமஸுக்கும்
என்னவோ தொடர்பு இருக்கிறது. நீ என்ன எழுதுகிறீரோ அதே விஷயம் தொடர்பாக சமஸும் எழுதுறார். பெண்கள் ஆண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்று சமஸ் எழுதின கட்டுரை இது. சுஜாதா ஏதோ ஒரு ரூபத்துல தான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டார்னு தோணுறது.
http://writersamas.blogspot.in/2013/06/blog-post_2.html

Anonymous said...

I see no controversies in this interview. This could be any "big" man's wife's words.
LARam (you too)and manush have played too much.
-Surya

R. J. said...

நாம் சுஜாதாவை அறிந்தது அவர் படைப்புகள் முலம் தான், நம் புகழ்ச்சியும் மரியாதையும் அவரின் எழுத்துத் திறமைக்குத் தான். அவர் தன வீட்டில், ஆபீசில் எப்படி இருந்தார், மற்றவர்களை எப்படி நடத்தினார் என்பது சம்பத்தப் பட்டவர்களுக்கே தெரியும், வாசகர்களுக்கு அவசியமில்லை. இதையும் தாண்டி திருமதி சுஜாதா பத்திரிகையில் வெளிவரும் என்று தெரிந்தே பேட்டி கொடுத்திருக்கிறார் என்றால் அது சுஜாதாவின் இன்னொரு பக்கம் நாம் தெரிந்துகொள்ளத்தான். இதில் வாசகர் ஒன்றும் செய்ய முடியாது. அதுவும் சுஜாதா இல்லாத இந்த சமயத்தில். முடிந்தால் திருமதி சுஜாதா இனி அவருக்கு பிடித்த வாழ்க்கையை வாழ அருளுமாறு இறைவனை வேண்டுவோம். இப்போதைக்கு முந்திய தலைமுறை வரை தென்னிந்திய பிராமண குடும்பங்களில் ஆண்கள் இப்படித்தான் பெரும்பாலும் இருந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. பாரதி என்ன தான் தேச பக்தி சிறந்த கவிஞன் என்றாலும் தன மனைவியை கொஞ்சி காதல் பாடல்கள் எழுதியிருந்தாலும், அவரின் வாழ்க்கை சுகமாக இருக்க ஏதும் செய்யவில்லை என்பதும் உண்மைதானே?

k .N . சிவராமனின் விளக்கம் போதும்.

- ஜெ

R. J. said...

திருமதி சுஜாதாவின் ஆதங்கம் இப்போதுதான் முதலில் வெளிப்படுவதாக எண்ண வேண்டாம். ஜனவரி புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்ட விகடனின் 'சுஜாதா மலரிலே'யே தன பெட்டியில் இப்படி சொல்லியிருக்கிறார். - ஜெ.

IdlyVadai said...

//உமக்கும் சமஸுக்கும்
என்னவோ தொடர்பு இருக்கிறது. //

சமஸுக்கும் இட்லிவடைக்கும் தொடர்பு இல்லை என்று சொல்ல முடியாது. சமஸ் சாப்பாடு பற்றி எழுதுவார்:-) இட்லிவடை கருத்து எதுவும் சொல்லவில்லை. என்ன நடந்தது என்று கட் & பேஸ்ட் அவ்வளவு தான்.

Anonymous said...

இதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. சுஜாதாவின் எழுத்தை ஆழ்ந்து படித்தவர்களுக்கு அவரது தனிப்பட்ட குணாதிசயங்கள் (வைணவச் சார்பு, பிராமண இட ஒதுக்கீடு, உயர்வு மனப்பான்மை, ஆச்சாரம் ) எல்லாம் நன்கு புரிந்திருக்கும். அப்படிப் புரியவில்லை என்றால் அவர்கள் சுஜாதாவை மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும்.

கல்யாணமான புதிதில் டெல்லியில் திருமதி சுஜாதா ஒரு பல்பை உடைத்து விட்டு கணவர் திட்டுவாரோ என்று பதைபதைப்போடு காத்திருக்க, ஆபிஸ் விட்டு வந்த ரங்கராஜன் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும், மனைவி அதைப் பற்றிக் கேட்டதற்கு, “இன்னொன்னு வாங்கிண்டா போச்சு” என்று அசால்டாகச் சொன்னதிலிருந்து அவர்கள் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. புரிஞ்சுதுன்னா சரி.

ஜெயக்குமார் said...

முதலில் இந்த பேட்டியில் அப்படி என்னதான்யா சொல்லிட்டாங்க அந்தம்மா.. தப்பா ஏதும் சொல்லலியே.. அன்பைக் காட்டத்தெரியலைன்றது அவ்வளவு பெரிய கொலக்குத்தமாய்யா? அவனவன் நெஞ்சைக் கேட்டாத் தெரியும் எந்த்தனை பேரு பொண்டாட்டிக்கு புரியுற மாதிரி அன்பைக் காட்டுறாங்கன்னு.. மேலும் இந்தம்மா சுஜாதா டெய்லி என்னைய சூடு வைப்பாரு, குடிச்சிட்டு வந்து அடிப்பாருன்னா சொல்லி இருக்காங்க.. அவர்பாட்டுக்கு அவர் உலகில் வாழ்ந்திட்டிருப்பார்னு சொல்லி இருக்காங்க.. இதுக்கு இவ்வளவு பெரிய ஹைப்... எனக்கென்னமோ சிவராமன்ல ஆரம்பிச்சு, மானா.புனா, எல்லேராம், எல்லோரும் சேந்து நடத்துன நாடகமோன்னு ஒரு சந்தேகம் வருது.. பழைய பாட்டிகள் உங்க தாத்தாவுக்கு மட்டும் வேற எவளாச்சும் வாச்ச்சிருந்தா என்னிக்கோ விட்டுட்டு ஓடியிருப்பா என்ற வகை அங்கலாய்ப்புதான் இந்த பேட்டி.. எந்தக் கெளவிட்ட வேனும்னாலும் கேட்டுக்கங்க.. தாத்தாவப் பத்தி இப்படி சொல்லுதா இல்லையான்னு.. அது மாதிரிதான் இதுவும்.. அம்புட்டுதேன்..

jaisankar jaganathan said...

//யாராச்சும் சோடா கொடுங்க ப்ளீஸ்...மூச்சு வாங்குது :-)//

இட்லிவடை, உங்களுகு சோடா மட்டும் இல்லை. இளநிரே வாங்கி தரேன். என்சாய்

டகிள் பாட்சா said...

வாழ்நாளில் ஒருமுறையாவது ‘இவனை(ளை) போய் கல்யாணம் பண்ணிக்கொண்டோமே, பிரிந்து போய்விடலாமா என்று நினைக்காத கணவன் (அ)மனைவி இந்த உலகத்தில் யார்? பெண்கள் வாழ்வது உணர்ச்சி மயமான தனி உலகம். எத்தனை வருடம் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்ந்தாலும் ஒரு சில பெண்மணிகளே கணவரது பெருமைகளை முற்றிலும் அறிந்து கொள்கிறார்கள்.பல ஆண்டுகளுக்கு முன் கணித மேதை ராமானுஜத்தின் வயதான் மனைவியை AIRல் பேட்டி கண்டு ஒலிபரப்பினார்கள். ‘அவரால என்ன ப்ரயோஜனம். ஓயாம மூலைல உக்காந்துண்டு நோட் புக்குல ஏதாவது கிறுக்கிண்டு உக்காந்திருப்பார். குடும்பத்தை பத்தி அவர் அக்கறைப்பட்டதே இல்லை. அவரை கல்யாணம் பண்ணிண்டு நான் சுகப்படவே இல்லை’ என்று சொன்னார்.

பெண்களுக்கு ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. அதுவும் வயசான காலத்தில் சொல்லவே வேண்டாம். இது தனி மனித குற்றமில்லை. காலத்தின் விதி. வயதான காலத்தில் rational thinking ஐ எல்லாரிடமும் எதிர்பார்க்கமுடியாது. Older Woman have so many pressures. We should empathize with them and not exploit their old age irrational feelings.

இதே திருமதி சுஜாதாவை 1980ல் நான் அவரது BEL Colony, Bangalore வீட்டில் சந்தித்திருக்கிறேன். மதிய வேளையில் சென்ற போது திரு.ரங்கராஜன் வீட்டில் இல்லை. பெரிய எழுத்தாளராச்சே ரொம்ப கூட்டமா இருக்குமோ என்று நினத்து சென்றவனுக்கு அவர் வீட்டில் யாரும் visitors இல்லாதது சற்று சந்தோஷமாக இருந்தது - அவருடன் தொந்தரவில்லாமல் நிறைய பேசலாமே என்று. திரு. சுஜாதா ஆஃபீஸில் இருப்பதாகவும் மதிய உணவிற்கு இன்னும் அரை மணியில் வந்து விடுவாரென்றும் அது வரை காத்திருக்கலாம் என்றும் திருமதி. சுஜாதா சொன்னார். அந்த அரை மணி நேரம் அவர் என்னுடன் உ்ரையாடும்போது திரு. ரங்கராஜனை பற்றி உயர்வாகவும் பெருமையாகவும் பேசியது இன்னும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. சில போட்டோக்களை கொண்டு வந்து காண்பித்து அவரது வாழ்க்கை சந்தோஷத்தை நினைவு கூர்ந்தார். (especially their photo with Taj Mahal in background during their New Delhi Days) அவர் எப்போது கதைகளை எழுதுவார், பத்திரிக்கை அலுவலர்கள் இவரது அவசர கையெழுத்து பல சமயம் புரியாமல் திண்டாடியதால், எப்படி தமிழ் டைப்ரைட்டருக்கு மாறினார், எப்படி பல பத்திரிக்கைகளுக்கு ஒரே சமயத்தில் confusion இல்லாமல் தொடர்கள் எழுதுகிறார் என்று ஒரே கணவர் பெருமைதான்.

திரு.சுஜாதா அவர்கள் வந்ததும் அவருடன் சேர்ந்து சாப்பிட சொன்னார்கள். ‘ பஸ் ஸ்டாண்டில் இருந்து இவ்வளவு தூரம் நடந்தாப்பா வந்தே?’ என்று கேட்டார். தான் அதிகம் பேசாமல் நான் பேசுவதை ரொம்ப கவனமாக கேட்டு கொண்டிருந்தார். நானும் பல பத்திரிக்கைகளில் எழுதிக் கொண்டிருப்பதையும், திரு. சாவி எனது தூரத்து சொந்தம் என்று நான் சொன்னதை கேட்டதும், ’அப்படியா! good என்று உற்சாகப்படுத்தி விட்டு திரு. சாவி அவர்களது நிர்வாகத்திறனையும், நகைச்சுவை உணர்வையும் பற்றி சிறிது சொன்னார். அவரது பேச்சு அவரின் கதை நடையை போல இல்லாமல் சாதாரணமாக இருந்ததை எண்ணி எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சின்னப் பையனானதால் உடனேயே எனது ஏமாற்றத்தை சொல்லி விட்டேன். அவர் அதற்கு புன்னகை செய்து விட்டு ‘ வாழ்க்கை என்பது வேறு’ என்று சொன்னார். பிறகு என்னை அவரது காரில் (FIAT என்று நினைவு) பஸ் ஸ்டாண்டில் drop செய்தார். போகும்போது ‘ You are an Engineer, in a very good job. Don't take writing as a full time profession. அப்புறம் ரொம்ப ஏமாற்றமாயிடும்’ என்றார். அவரது வாக்கு எனக்கு வேதவாக்கு. I sincerely love him and his writing till this date. எனவே fulltime writer ஆகும் எண்னத்தை கைவிட்டு, எனது லைனில் focus செய்து இன்று successful ஆக இருக்கிறேன். பிழைத்தது எழுத்துலகம்.

என்னை பொறுத்தவரை திரு. சுஜாதா ஒரு Genius. தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரஸாதம். அவரை குறை கூற அவரது மனைவிக்கு கூட உரிமை இல்லை. வயதான காலத்தில் நினைவு பிசகி ஏதோ சொல்கிறார் என்று அவரை மன்னித்து விடலாம்.
தினகரன் போன்ற பத்திரிக்கைகள் ‘ காலமாகிப் போன மேதைகளின் கல்லறைகளை நோண்டி காறித் துப்ப முயற்சிப்பது காலித்தனமான செயல். Let good sense prevail

Anonymous said...

I had been a very regular visitor of ur blog and enjoy ur posts.. Jus wanna comment on your yellow comment ...

Type panna idlyvadaikkey moochu vaangudhuna.. engala maari bloga padichavanga kadha enna aagum..

!!!

Vishweshwaran R said...

I thought the interview is going to kick up a huge furore. I am happily disappointed.

I don't see her interview points no different than my own present life. (I am a hardcore fan of Sujatha). I need to explore myself.

I strongly believe many career oriented professionals have to face the same criticism from their spouses for not spending enough time with their children, not planning for the future etc etc.

And, he was a man born in 1935. (My grandpa in physical age and probably my uncle in my mental age, around late 40s and early 50 yrs)

Instead of focusing on what he did or did not do to his wife, lets enjoy his writings and leave it at that.

There can be only two scenarios possible.

1. Rangarajan being a loyal husband adored by his wife and children, and his identity as a retired BEL engineer thaatha. or

2. Rangarajan being Sujatha.

To achieve either of this, one has to lose the other one.

Thatz life.

sidtharth said...

/*There can be only two scenarios possible.

1. Rangarajan being a loyal husband adored by his wife and children, and his identity as a retired BEL engineer thaatha. or

2. Rangarajan being Sujatha.

To achieve either of this, one has to lose the other one.
*/

Disagree...

Look at Karunanithi. He balanced both his career and his families..

Kannan said...

பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் சம்பந்தம் இல்லாமலும் இருக்கலாம் என்று எப்போது புரிந்து கொள்ள போகிறார்கள். எந்த காலத்தில்லாவது கேப்டன்-ஒ அல்லது விஜய்-ஒ பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழித்தது உண்டா?

Anonymous said...

இதனால் சுஜாதாவுக்கு எந்த இழுக்கும் இல்லை (இருவருக்குமே).

கே.என். சிவராமன் போன்றவர்கள் இது மாதிரி எதாவது செய்தால் மட்டுமே யார் கவணத்தையாவாது பெறமுடியும். இல்லாவிட்டால் குமாஸ்தா மாதிரி எதாவது எழுதிக்கிட்டு கிடக்க வேண்டியது தான். யார் சீந்தப் போறா !

சிவ.சரவணக்குமார் said...

no man is a hero to his wife.......இதற்கு சுஜாதா ரங்கராஜன் மட்டும் விதிவிலக்கா என்ன?

R. J. said...

//Look at Karunanithi. He balanced both his career and his families..// Really? Did he manage his 'families'! Ask his second wife Dayalu ammal what she went through when the man married one more - Rajathi. Does his children live in peace - think of MKMuthu. The old man thinks of his lady love he couldn't marry! This man was self centred all his life, now at the fag end doen't want the billions to go into somebody else who didn't work for it and thus needs family peace. I think,Vishweshwaran was right on his statement despite his youth. - R. J.

Anonymous said...

//Look at Karunanithi. He balanced both his career and his families..//


..
வீழ்ச்சி என்பதன் முழு படிமம்.
கோட்டையில பொறந்தாலும் விதி போட்ட புள்ளி தப்புமா ?
குழந்தையாய் இருக்கும்போது தாயை இழந்து சிறுவனாய் இருக்கும்போது தாயற்ற பிள்ளை அப்பா மீட்டிங் பேசி விட்டு படுக்கும்போது பாட்டியாலும் மாறன் தாயாராலும் வளர்க்கப்பட்ட முத்துதிருவாரூரில் அப்பா அசதி தீர கால் பிடித்து விடுவார. அப்பா அந்த காலத்தில் நூறு ரூபாய் தருவார். முக முத்து சேட்டை செய்தால் அடிக்க கூட தெரியாது. தூசி தட்டுவது போல் இவர் உடம்பில் தட்டி ' சீ ராஸ்கல் ! ராஸ்கல் சீ ' என்பார் !
..
பைபிளில் கெட்ட குமாரன் என்று ஒரு கதை உண்டு .
ஒரு வழியாக அவருடைய வனவாசம் முடிந்து வீடு திரும்பிய நிகழ்வை சில மாதங்களுக்கு முன் தமிழ் பத்திரிக்கைகள் அனைத்தும் கொண்டாடின.திருந்திய கெட்ட குமாரன்!
..


http://rprajanayahem.blogspot.in/2012/09/blog-post_1.html

Kayal said...

இறந்தவர்களை பற்றி அவதூறு பேச கூடாது என்கிற நாகரிகம் கூட இல்லாத தினகரன் எல்லாம் ஒரு பத்திரிக்கையா? எழுத்துலகில் அழியா புகழ் பெற்ற சுஜாதாவை பற்றி தவறா பேச அவர் மனைவி சுஜாதாவிற்கு கூட உரிமை இல்ல. - Kayal

Lakshmi Narayanan said...

I Agree with Jayakumar....
There is no controversy at all in the interview

gnr said...

படைப்பாளிகளின் படைப்பை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர சொந்த வாழ்கையை பற்றி பேட்டி எடுத்தோ எழுதியோ காசு பார்ப்பது கேவலம்

gnr said...

படைப்பாளிகளின் படைப்பை மட்டும் விமர்சனம் செய்ய வேண்டுமே தவிர சொந்த வாழ்கையை பற்றி பேட்டி எடுத்தோ எழுதியோ காசு பார்ப்பது கேவலம்