பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, June 29, 2013

பரிதிஇளம்வழுதி அதிமுகவில் ஐக்கியம்
2011ல் பரிதிஇளம்வழுதி அளித்த பேட்டியில் திமுக தலைமையை கடுமையாக விமர்சனம் செய்தார்.


அப்போது கலைஞர் பரிதிஇளம்வழுதி பற்றி அளித்த அறிக்கை

தி.மு.க.வுக்கு 62 வயது ஆகிறது. 1976-ல் “நெருக்கடி நிலை அறிவித்தபோது தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். கட்சி இனி எழுந்திருக்காது என்றார்கள். ஆனால் அதன் பிறகு சுடர் கொண்டு எழுந்தது. தி.மு.க. பிறந்த காலம் முதல் இதை அழிப்பதற்கு நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

துரோக சிந்தனை கொண்டவர்கள் தமது சுகவாழ்வு ஒன்றை மட்டுமே மனதிலே கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதை போல செயலாற்ற முனைகின்றனர். கையிலே காசு இல்லாத போது கழகத்துக்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள், காசு சேர்த்த பிறகு அதை கட்டிக் காத்திடுவதற்காக கழகத்தையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்.

நமது விரோதிகள் நம்மை தாக்க முயலலாம். நமக்கு எதிரான விமர்சனங்கள் நம்மை எதிர்க்கலாம். துரோகிகள் நம்மை நிலை குலைய செய்ய எத்தனிக்கலாம். கொல்ல வரும் பகையை, தொல்லை தரும் துரோகத்தை நமது கழகம் வெற்றி கண்டாக வேண்டும். எதிரிகள் வெறியோடு செயல்படுகிறார்கள். அவர்களை எதிர் கொண்டு நாம் வெற்றி பெற்றிட உழைப்போம்.

தி.மு.க. பரிதிஇளம்வழுதி முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.க.,வில் நேற்று ஐக்கியம். 
இவருடைய ராசி என்னவாக இருக்கும் ?

10 Comments:

jaisankar jaganathan said...

பரிதி காலில் விழும் சீனை நினைச்சு பாத்தாலே கலங்குது

Lalitha said...

//கையிலே காசு இல்லாத போது கழகத்துக்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள், காசு சேர்த்த பிறகு//

He accepts that they had increased their wealth after joining the party. They are corruptionist!!

R. J. said...

Parithi enjoyed all positions of power in DMK - as a minister, dy.speaker and dy.general secretary. He perhaps was arrogant in treating his partymen in his constituency and lost the 2011 elections. An ungrateful man and also he didn't learn any lesson from his defeat in the elections. Now, joining ADMK he says he will be happy to be a simplw party worker. These are the politicians who bring down our State and the Country into disrepute. - R. J.

kg gouthaman said...

அட! பன்னிரண்டு இராசி பலன்களும் ஒத்துப் போகின்றனவே! 'பரிதி இளம்வழுதி' என்கிற பெயருக்கு 'பன்னிரு இராசி' எதுகை மோனையாகப் பொருந்துகிறதே!

kg gouthaman said...

:-)

சுப்பு said...

வேற என்ன ரிஷப இராசிதான் அதுதானே ஜெயம்.

Subramanian M said...

வேற என்ன ரிஷப இராசிதான் அதுதானே ஜெயம்.

Anonymous said...

//கையிலே காசு இல்லாத போது கழகத்துக்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள்//

yes, party workers are in the party only to earn by hook or crook. That is the reality. after amassing wealth they have to safeguard it. Even party leaders are also amassing so much wealth and then they want to protect it.

Anonymous said...

//கையிலே காசு இல்லாத போது கழகத்துக்கு நேர்ந்த கொடுமைகளை சந்திக்க முன் நின்றவர்கள்//

yes, party workers are in the party only to earn by hook or crook.

vanila said...

எந்த / என்ன காலெண்டர்'ங்க இது.. எல்லா ராசிக்கும் பாசிடிவ் ஆகவே போட்டுருக்காங்க.